கும்ப லக்னத்தில், சனியின் கும்ப ராசியில் சுக்கிர பகவான் இருந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும். அன்னையால் சந்தோஷம் கிடைக்கும். பூமி, மனை வாங்கலாம். ஜாதகர் தர்மத்தைக் கடைப்பிடிப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் நல்ல தோற்றத் தைக் கொண்டிருப்பார். வாசனைப் பொருட்களை பயன்படுத்துவார்.
2-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறது. அதன் காரணமாக நல்ல பணவரவு இருக்கும். பெயர், புகழ் கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பூமி, வாகனம் வாங்கலாம்.
3-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் உடன்பிறந் தோரால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அன்னையால் மகிழ்ச்சி கிடைக்கும். ஜாதகர் தர்மச் செயல்களைச் செய்வார். பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். பணத்தை நன்கு சேமிப்பார்.
4-ஆம் பாவத்தில் சுயராசியான ரிஷப ராசியில் சுக்கிரன் இருந்தால் அன்னையால் சந்தோஷம் இருக்கும். வீடு, பூமி பாக்கியம் கிட்டும். பல வாகனங்கள் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஜாதகர் தர்ம காரியங்களில் ஈடுபடுவார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார்.
5-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் பெயர், புகழுடன் இருப்பார். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் தர்ம காரியங்களில் ஆர்வத்துடன் இருப்பார். தன் அறிவைப் பயன்படுத்தி உயர்வார்.
அன்னையால் சந்தோஷம் இருக்கும். வீடு, மனை வாங்கலாம். மனதில் நினைக்கும் செயல்களை ஜாதகர் முடிப்பார்.
6-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். போட்டியில் வெற்றிபெறுவார். அன்னையால் சிறிய அளவில் சந்தோஷம் கிடைக்கும். பூமி, மனை வாங்குவதில் பிரச்சினை இருக்கும். தர்ம காரியங்களைச் செய்வதில் தடங்கல்கள் இருக்கும். ஜாதகர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு பணத்தைச் சம்பாதிப்பார்.
7-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு மனைவியால் கிடைக்கும் சந்தோஷத்தில் குறையிருக்கும். வர்த்தகத்தில் பல கஷ்டங்களைக் கடந்து வெற்றிகிடைக்கும். வீடு, மனை வாங்குவதில் பல சிக்கல்களைக் கடந்து வெற்றி கிடைக்கும். ஜாதகர் சந்தோஷமாக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். கடுமையாக உழைப்பார்.
8-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைகிறது. அதன் காரணமாக மனதில் அமைதி இருக்காது.
பூர்வீக சொத்து கிடைப்பதில் பிரச்சினை இருக்கும். தாயாருடன் உள்ள உறவில் குறையிருக்கும். வீடு, மனை வாங்குவதில் தடங்கல்கள் இருக்கும்.
9-ஆம் பாவத்தில் சுயராசியான துலா ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் தர்மச் செயல்களைச் செய்வார். தாயால் சந்தோஷம் கிடைக்கும். பூமி, மனை வாங்கலாம். ஜாதகர் சாதுரியமாக செயல்படுவார். பெயர், புகழுடன் இருப் பார். வீட்டில் சந்தோஷ சூழல் இருக்கும். ஜாதகர் மகிழ்ச்சியாக வாழ்வார்.
10-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு தந்தையால் சந்தோஷம் இருக்கும். அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். வர்த்தகத்தில் லாபம் இருக்கும். ஜாதகருக்கு அவருடைய இனத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கிடைக்கும். வீட்டில் ஆடம்பரமான பொருட்கள் இருக்கும். வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும்.
11-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் வருமானம் நன்றாக இருக்கும். ஜாதகர் மிகவும் சாதுரியமாக செயல்படுவார். தர்மச் செயல்களில் ஈடுபடுவார். பெயர், புகழ் இருக்கும். பணவசதி இருக்கும்.
அன்னையால் சந்தோஷம் கிடைக்கும். நல்ல பேச்சாற்றல் கொண்டவராக ஜாதகர் இருப்பார். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
12-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சுக்கிரன் இருந்தால் அதிக செலவுகள் உண்டாகும். வெளித் தொடர்புகளின்மூலம் பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் நன்கு பணம் சம்பாதிப்பார். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்காது. இளம் வயதில் அன்னையால் கிடைக்கக்கூடிய சந்தோஷத்தில் குறையிருக்கும்.
செல்: 98401 11534