ரிஷப லக்னத்தில் சுக்கிரன் சுயவீட்டில் இருந்தால் ஜாதகர் நல்ல தோற்றத்துடன் இருப்பார்.
மனம் உறுதியாக இருக்கும். அவருக்கு சிறிய அளவில் சீதளம் இருக்கும். 6-ஆம் பாவாதிபதியான சுக்கிரன் லக்னத்தில் இருப்பதால், ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். அவரது மனைவி அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். வர்த்தகத்தில் நல்ல லாபமிருக் கும். ஜாதகர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு பணத்தை சம்பாதிப்பார்.
2-ஆம் பாவத்தில் சுக்கிரன் தன் நண்பரான புதனின் மிதுன ராசியில் இருந்தால், குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் நிலவும். ஜாதகர் கடுமையாக உழைத்து, குடும்பத்தைக் காப்பாற்றுவார். புகழ் கிடைக் கும். முன்னோர்களின் சொத்து கிடைப்பதில் தடைகள் இருக்கும். அவ்வப்போது நோயின் பாதிப்பு ஏற்படும். பகைவர்களிடம் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, பணத்தை சம்பாதிப்பார்.
3-ஆம் பாவத்தில் கடக ராசியில் சுக்கிரன் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அண்ணன்- தம்பி உறவில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் தன் தைரியத்தை வைத்துப் பணம் சம்பாதிப்பார். புகழ் பெறுவார். கடுமையாக உழைப்பதால் சில வேளைகளில் உடலில் பிரச்சினைகள் வரும். எனினும், ஜாதகர் தைரியத்தை இழக்கமாட்டார்.
4-ஆம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால், ஜாதகரின் தாயாரது உடல்நலத்தில் சில பிரச்சினைகள் உண்டாகும். நிலம் வாங்குவதில் சில தொல்லைகள் ஏற்படும். ஜாதகர் தன் பேச்சாற்றலால் பல வெற்றிகளைக் காண்பார். பகைவர்களிடம் அமைதியாகப் பேசி தன் காரியங்களை முடித்துக்கொள்வார்.
5-ஆம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால், படிப்பு விஷயத்தில் சில தடைகள் ஏற்படும். குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை இருக்கும். ஏனென்றால் சுக்கிரன் இந்த இடத்தில் நீச மடைகிறார். அவ்வப்போது தலைவலி வரும்.
ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டி ருப்பார். மனதில் குழப்பங்கள் இருக்கும்.
6-ஆம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் சாதுரியத்துடன் செயல்பட்டு தன் எதிரிகளை வெல்வார். உடல்நலத்தில் சில பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். தாய்மாம னால் ஆதாயம் இருக்கும். ஜாதகர் எப்போதும் பெண்களைப் பற்றியே நினைத்துக்கொண்டி ருப்பார்.
7-ஆம் பாவத்தில் சுக்கிரன் செவ்வாயின் வீட்டில் இருந்தால், கணவன்- மனைவி யிடையே கருத்து வேறுபாடு இருக்கும். வர்த்த கத்தில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல புகழ் இருக்கும்.
8-ஆம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் உடல்நலத்தில் பிரச்சினைகள் இருக்கும். சுக்கிரன், குருவின் தனுசு ராசியில் இருப்பதே அதற்குக் காரணம். ஜாதகருக்கு பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். சுக்கிரன் 2-ஆவது பாவத்தைப் பார்ப்பதால், பணவரவு நன்றாக இருக்கும். வயிற்றில் சிறிய பிரச்சினைகள் ஏற்படும். ஜாதகர் தைரியமாகப் பேசமாட்டார்.
9-ஆம் பாவத்தில் சனி பகவானின் வீட்டில் சுக்கிரன் திரிகோணத்தில் இருந்தால் ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். பகைவர்களை வெல்வார். அவரது தலையெழுத்து நன்றாக இருக்கும். தர்மச் செயல்களில் சில தடைகள் ஏற்படும். உடல் நலத்தில் சில பிரச்சினைகள் உண்டாகும்.
10-ஆவது பாவத்தில் சனி பகவான் வீட்டில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு தன் தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். வர்த்தகத்தில் கடுமையான போட்டி நிலவும். கடுமையாக உழைத்து ஜாதகர் வெற்றியைக் காண்பார். எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பார். படிப்படியாக வளர்ந்து பணக்காரராவார்.
11-ஆம் பாவத்தில் சுக்கிர பகவான் மீன ராசியில் உச்சமடைகிறார்.
அதனால் ஜாதகர் மிகவும் சாதுரியமாக செயல் பட்டுப் பணத்தைச் சம்பாதிப்பார். அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். உடலில் அவ்வப்போது சிறிய அளவில் நோய்கள் வரும். அவர் பல தொழில்களைச் செய்வார். வெற்றியைக் காண்பார்.
12-ஆம் பாவத்தில் செவ்வாயின் வீட்டில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு அதிக செலவுகள் உண்டாகும். வெளித்தொடர்பால் லாபம் கிடைக்கும். உடலில் சிறிய பிரச்சினைகள் ஏற்படும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஜாதகர் சாதுரியத்துடன் செயல்படுவார். எதிரி களால் நஷ்டம் ஏற்படும். புத்திசாலித்தனமாக செயல் பட்டு பணத்தை சம்பாதிப் பார்.
செல்: 98401 11534