வியாபாரத்திலும், வித்தையிலும் உலகத்தின் பார் வையை நம்மை நோக்கித் திசைதிருப்புபவர் சுக்கிரன். ஒருவருக்கு சுக்கிர தசை இளம்வயதில் வந்தால் யோகமே. பெண் ரம்பையைப்போல காட்சியளிப்பாள். ஆண் கவர்ச்சியாக இருப்பார். எல்லா இன்பங்களையும் நுகர்வார். அதேபோல பெருந்தன்மை, ஒற்றுமை, மதிப்பு, மாபெரும் அதிர்ஷ்டம் போன்ற அனைத்துமே சுக்கி ரனால் வருபவை. அசுரர்களின் குருவான சுக்கிரன்தான் சகல கலைகளுக்கும் காரணமானவர். இவர் அழகன். ரசிகன். வினோதன். அனைத்து இன்பங்களுக்கும் வித்தானவர். காதலின் பிரதிநிதி. கற்பனையின் ஊற்று. காவியமானவர், களிப்பூட்டுபவர். மனம், மலர், மங்கை இவர். ஆசையும் இவரே. நாகரிக நடனமணிகளை உருவாக்குபவர். கலைஞர்களைத் தோற்றுவிப்பவர். சலனப் படத்திற்கு ஆதாரமானவர். மெல்லிசைக்கு நாயகர்.
குதிரைகள், யானைகளை விளங்க வைப்பவர். வியாபா ரத்தில் ஆதாயத்தைத் தருபவர். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் அவர் உணவகத் தொழிலில் வல்லவர். இப்படிப் பட்டவர்கள் சமையல் செய் வதில் வல்லவர்கள். இளைஞர் களுக்கு இப்படி ஜாதகம் அமையப் பெற்றிருந்தால் கேட்டரிங் தொழிற்கல்வியை மேற்கொள்வது நல்லது. இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப் பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று கேட்டரிங் தொழில் மூலம் கைநிறைய சம்பாதிப் பார்கள்.
சுக்கிரன் கண்களைப் பிரதி பலிப்பவர். ஜனன உறுப்புகளைக் காப்பவர். சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஊழியரால் உதவி பெற்றுத் தருவார். அணிமணி களால் அழகை அதிகமாக்குபவர். நீர்நிலைகளில் சஞ்சரிப்பவர். உடலில் வீரியம் இவர். புளிப் புச்சுவை இவர். பல நிறமுடையவர். ராட்சச குணத் தோன். வாதம், கபம் இரண்டுக் குமுரியவர். வெள்ளி உலோகத் திற்கு இவரே அதிபதி. பஞ்ச பூதங்களில் நீர். அந்தண இனத் தவர். வைரமும் இவருக்கே உரியது.
பெண் கிரகம் இவர். சுபகிரக மாவார். குருவுக்கு அடுத்த நிலையில் உள்ளவர். நால்வகை உபாயங்களில் சாமத்திற்குரியவர். இவருடைய திசை தென்கிழக்கு.
ரிஷபம், துலாம் சொந்த வீடு. கன்னி நீச வீடு. மீனம் உச்ச வீடு. சனியும் புதனும் நண்பர்கள். குருவும் செவ்வாயும் சமமானவர்கள். மற்றவர்கள் பகை. வெண்தாமரை மலருக்கு சொந்தக்காரர். சுக்கிர பலமிருந்தால் இவ்வுலகில் பெறமுடியாத இன்பமே கிடையாது.
மிருத சஞ்சீவினி மந்திரத்தால் இறந் தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி படைத்தவர். பிருகு மகரிஷிவின் குமாரனான இவர் புலன்களை ஒடுக்கி கடுந்தவம் செய்து, மாதவன், ஈசனால் மந்திரோபதேசம் செய்யப்பெற்றவர். ஒருவர் ஜாதகத்தில் களத்திரகாரகனான இவரது சுப பலத்தைக் கொண்டே வாழ்க்கைத்துணைவி, சுகபோகம் போன்ற முக்கிய அம்சங்கள் நிர்ணயிக்கப்படும். தீட்சிதர், "ஸ்ரீ சுக்கிர பகவந்தம் சிந்தயாமி ஸந்தகம்' என்று தொடங்கும் கீர்த்தனத்தில் சுக்கிரன் மகிமைகளைக் கூறுகிறார். மகா பண்டிதன், நாட்டைக் கொடுப்பவன், சகல சாஸ்திர விற்பன்னன், தத்துவமேதை என்று குறிப்பிடப்படுகிறார். சுக்கிர பகவானின் அருள்பெற கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்துகொள்ளவும்.
பரிகாரம்-1
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நீசம். இவர்கள் சுக்கிர தசை வரும்பொழுது அல்லது வேறு தசைகளில் சுக்கிர புத்தி வரும்பொழுது நல்லபலனைப் பெற, 27 வெள்ளை மொச்சைப் பயறை எடுத்து, வெள்ளைத்துணியில் முடிந்து பூஜையறையில் வைத்து தினசரி வணங்க வேண்டும். தசை முடிவிலோ புக்தி முடிவிலோ அந்த முடிச்சை கிணறு, கடல் தவிர மற்ற நீர்நிலைகளில் போட வேண்டும்.
பரிகாரம்-2
கும்பகோணம் அருகிலுள்ள கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானை வழிபட்டுவர சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
செல்: 94871 68174