வாஸ்து என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். "வஸ்' என்பது வசிக்குமிடம், உறைவிடமென்று பொருள் படும். வாஸ்து என்பதில் "வஸ்து' என்பது உயிரற்ற பொருட்களான மணல், செங்கல், ஜல்லி, சிமென்ட் போன்றவற்றைக்குறிக்கும். அவற்றைக் கொண்டு கட்டப்படும் வீடுகளையும் குறிக்கும். பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் ஆற்றல் நமது இல்லத்திற்குக் கிடைக்கும் வண்ணம் வீடுகட்ட வேண்டும்.
நீர் என்பது வீட்டிலுள்ள கிணறு, ஆழ்துளைக் கிணறு, சம்ப் ஆகியவற்றோடு தொடர்புடையது. நிலம் வீட்டின் தரையமைப்போடு தொடர்புகொண்டது. நெருப்பு நமது வீட்டின் சமையலறையோடு தொடர்புடையது. காற்றா னது கதவு, ஜன்னல்களோடு தொடர்புகொண்டது. ஆகாயம் என்பது வீட்டின் மையப்பகுதியோடு (பிரம்ம ஸ்தானம்) தொடர்புடையது. இவற்றின் ஆற்றல் வீட்டிற்கு சிறந்த முறையில் கிடைத்தால், அங்கு வசிப்பவர்கள் நல்ல வளர்ச்சிபெற்று வாழ்வார்கள்.
நமது பிறந்த தேதியை நம்மால் மாற்றமுடியாது.
அதுபோல ஜாதக அமைப்பி லுள்ள பலன்களையும் மாற்ற முடியாது. ஜாதக அமைப்பில் கெடுபலன்கள் இருந்தால் அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அதேசமயம் நல்ல வாஸ்துப்படி அமைந்த வீட்டில் குடியிருந்தால் மேற் சொன்ன பாதிப்புகள் குறைவுபடும். ஜாதகப்பலன் நற்பலன் தருவதாக இருப்பின், வாஸ்துப்படி அமைக்கப்பெற்ற வீடுகளில் வசித்தால் இருமடங்கு நற்பலன் கிடைக்கும். நல்ல வாஸ்து அமைப்பி லுள்ள வீடுகளில் குடியிருப்போர் நிம்மதியாக உறங்குவார்கள்.
ஒரு வீட்டில் வசிப்பவர்களின் செல்வவளம், திருமண யோகம், உடல்நல பாதிப்பு, வீண் வழக்கு கள், வாரிசுகள் குறைவுபடுதல், வளர்ச்சிநிலை போன்றவற்றைக் கணித்து அதன் பயனைத் தெரிந்துகொள்ளலாம். தொடர்ந்து ஒரு வீட்டில் ஐந்து வருடங்கள் வசித்துவந்தால் அந்த வீட்டின் பலனைத் துல்லியமாகக் கணித்துவிடமுடியும். அரசியல்வாதிகளின் வீட்டைக் கணித்து வெற்றிவாய்ப்பை அறிந்து கொள்ள முடியும். ஒரு வீடு எவ்வாறு இருந்தால் அங்கு வசிக்கும் அரசியல்வாதிக்கு வெற்றி கிட்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
முதலில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பிறப்பு ஜாதகப் பலனை அறிந்துகொள்ள வேண்டும். அவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு கிரகப் பலனில் இருந்தால், வீட்டில் வாஸ்துப்படி சில மாற்றங்கள் செய்து கொண்டால் நிச்சயம் வெற்றிபெறலாம். ஜாதகப் பலனில் வெற்றிவாய்ப்பு குறைவாக இருந்தால், வீட்டை முழுமையாக வாஸ்துப்படி மாற்றியமைத்து வெற்றியைத் தொடலாம்.
வடக்கு நோக்கிய வாயிலை குபேரவாயில் என்பர். இது பெண்களுக்குரிய வாயில் என்றும் சொல்லப்படும். வடக்கு பார்த்த வீடுகளில் வசிப்போர் எந்தவொரு தொழிலையும் துணிந்துசெய்யலாம். இந்த வீட்டில் வசிக்கும் பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற வாய்ப்புள்ளது. கிழக்கு வாயிலை இந்திரன் திசை வாயில் என்பர். இது ஆண் களுக்கானது. கிழக்கு பார்த்த வீடுகளில் அமைச்சர்கள், நடிகர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் வசித்தால் பெயர், புகழ் அதிகரிக்கும். அதேசமயம் வாயில் அமைப்பு சரியாக இருக்கவேண்டும். ஆண் வேட்பாளர் கள் வெற்றிபெற வாய்ப்புண்டு. மேற்கு நோக்கிய வாயில் வருணன் திசை வாயில் எனப் படும். இது ஆண்களுக்கானது. தலைமை யேற்று நடத்துபவர்கள் இவ்வீட்டில் வசித் தால் நற்பலன்கள் அதிகரிக்கும். இராணு வம், காவல்துறை போன்றவற்றில் பணி புரிவோரும் புகழ் பெறுவர். தெற்குதிசையானது எமன்திசை எனப்படும். இது பெண் களுக்கான வாயில். பெண்களுக்கு சுபச் செலவுகள் ஏற்படும். பெண் வேட்பாளர்கள் போட்டியிடலாம்.
எல்லா திசைகளும் நல்ல திசைகள்தான். ஆனால் கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த வீடுகளில் வசிப்போரின் வீட்டில் வாஸ்து தோஷம் அதிகமாக இருந்தாலும் பாதிப்பு குறைவாக இருக்கும். ஆனால் மேற்கு மற்றும் தெற்கு பார்த்த வீடுகளில் வசிப்போரின் வீட்டில் வாஸ்து தோஷம் குறைவாக இருந்தாலும் பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே மேற்கு மற்றும் தெற்கு பார்த்த வீடுகளில் வசிப்பவர்கள் கண்டிப்பாக வீட்டை வாஸ்துப்படி அமைத்துக்கொண்டு வாழ்வது சிறந்தது.
அரசியலில் புகழ்பெற வேண்டுமென்றா லும், தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்றா லும், பொதுவாக வீட்டுக்கு வடக்கு திசையான குபேரதிசை வெற்றிடமாக இருக்கவேண்டும். கிழக்கு திசையானது குரு திசையைவிட வெற்றிடம் அதிகமாக இருக்கவேண்டும். இந்த இரு திசைகளிலும் வெற்றிடம் அதிகமாக இருந்தால், எந்த திசை பார்த்த வீடாக இருந்தா லும் வெற்றி வாய்ப்புண்டு. மேலும் கண்டிப் பாக வீட்டிற்கு சுற்றுச்சுவர் இருக்கவேண்டும். சுற்றுச்சுவர் இல்லையெனில் தோஷம் ஏற்படும். வெற்றிவாய்ப்பு தடைப்படும். வீட்டின் சுற்றுச்சுவர் வடக்கு, கிழக்குப் பகுதி களில் உயரம் குறைந்தும், தெற்கு, மேற்குப் பகுதிகளில் உயரம் அதிகமாகவும் இருக்க வேண்டும். அல்லது நான்கு திசை சுவர்களும் ஒரே அளவில் இருக்கலாம்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் களின் வீடுகள் கஜப்பிருஷ்ட மனையாக இருக்கவேண்டும். இதை கருட மனை என்றும் கூறுவர். அல்லது கூர்மப் பிருஷ்ட மனையாக இருக்கலாம். கூர்மப் பிருஷ்டம் என்பது கோவில்களின் அமைப்பு கொண்டது. நடுவில் உயர்ந்து சுற்றுப் பகுதி தாழ்ந்திருக்கும். நாகப் பிருஷ்டம், தைத்தியப் பிருஷ்ட மனைகளைத் தவிர்க்கவேண்டும்.
தற்போதைய காலகட்டங்களில் வீடு கட்டப்படும் மனைகள் எந்திரம் கொண்டு சமப்படுத்தப்படுவதால், அவை எத்தகைய அமைப்புகொண்ட மனைகள் என்பதை அறியமுடிவதில்லை. இருப்பினும் செயற்கை யாக சமன்படுத்தப்பட்ட நிலத்தில் வீடு கட்டியபின் அந்த மண்ணின் அமைப்பு, மேடு பள்ளங்களைக்கொண்டு அவை எந்த வகையான மனைகள் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.
நாகப் பிருஷ்ட அமைப்புள்ள மனையில் அமைந்த வீடென்றால் மேற்கு திசையும் கிழக்கு திசையும் வளர்ந்து, குபேர திசையான வடக்கும், எமன் திசையான தெற்கும் உயர்ந்து காணப்படும். இவ்வமைப்புடைய வீட்டில் வசிப்பவர்களுக்கு வெற்றிவாய்ப்பு குறைவு. இந்திரன் திசை, குபேர திசை ஆகியவை தாழ்ந்து வருண திசை உயர்ந்திருக்கும் வீட்டில் வசிப்போருக்கு பொருள்விரயம் ஏற்படும். வெற்றி வாய்ப்பு குறைவாகும்.
கஜப் பிருஷ்டம், கூர்மப் பிருஷ்டம் ஆகிய மனைகளில் வசிப்போருக்கு வெற்றி வாய்ப்புண்டு. எமன் திசை, ராகு திசை, வருண திசை உயர்ந்தும், மற்ற இடங்கள் தாழ்ந்தும் காணப்படுவது கஜப் பிருஷ்ட மனை. இயற்கையாக இதுபோல் அமைந்தாலும், செயற்கையாக அமைத்துக்கொண்டாலும் நல்ல பலன் கிடைக்கும். தங்களை எதிர்த்து நிற்பவர் நாகப் பிருஷ்டம் அல்லது தைத்தியப் பிருஷ்ட மனையில் வசித்தால், கஜப் பிருஷ்டம், தைத்தியப் பிருஷ்ட மனைகளில் வசிப்போருக்கு வெற்றிவாய்ப்பு உறுதி.
தெற்கு அல்லது மேற்கு பார்த்த வீடுகளில் வசிப்போரைவிட, கிழக்கு அல்லது வடக்கு பார்த்த வீடுகளில் வசிப்போருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம். தாங்கள் வசிக்கும் வீடு குபேர திசை வெற்றிடமாகவும், இந்திர திசையானது அதைவிட வெற்றிடமாகவும், எமன் மற்றும் வருண திசைகள் மிகக்குறைந்த வெற்றிடம் கொண்டும் இருந்து, சுற்றுச்சுவர் அரண்போல இருந்தால் வெற்றி வாய்ப் புண்டு. இதுபோன்ற அமைப்பு எதிர்த்து நிற்பவருக்கு இல்லாமலிருந்தால் இவர்களது வெற்றி நூறு சதவிகிதம் உறுதி.
சுற்றுச்சுவர் மற்றும் அதன் வாயில் அமைப்பு கொண்டும் வெற்றி வாய்ப்புகளைக் கணிக்கமுடியும். வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த வீடுகளுக்கு குரு திசையிலும், மேற்கு பார்த்த வீட்டுக்கு சந்திர திசையிலும், தெற்கு பார்த்த வீட்டுக்கு சுக்கிர திசையிலும் சுற்றுச்சுவர் வாயில் (கேட்) இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். தங்கள் வீடு குரு திசை வாயிலாக அமைந்து, எதிர்த்து நிற்பவர் சந்திரன் அல்லது சுக்கிர திசை வாயில்கொண்ட வீட்டில் வசித்தால், இவர்கள் வெற்றிபெற வாய்ப்புண்டு.
நெருப்பின் ஆற்றலைக் கொண்டும் வெற்றி வாய்ப்பைக் கணிக்கலாம். வடக்கு அல்லது கிழக்கு நோக்கிய வீடுகளில் அக்னி மூலையில் சமையலறை இருந்தால் வெற்றி வாய்ப்புண்டு. தெற்கு மற்றும் மேற்கு பார்த்த வீடுகளுக்கும் இது பொருந்தும். தங்கள் வீட்டில் அக்னி மூலையில் சமையலறையும், எதிர்த்து நிற்பவர் வீட்டில் வாயு மூலையில் சமையலறையும் இருந்தால், வாயு மூலையில் சமையலறை உள்ளவருக்கு வெற்றிவாய்ப்பு குறைவு. மன்னர்கள் காலத்தில் போருக்குச் செல்லும்போது யாகங்கள் செய்த பின்னரே செல்வர். அக்னியின் ஆற்றலானது எதிரிகளை வலுவிழக்கச் செய்யும்.
நீரின் ஆற்றலும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு வீட்டில் நீரின் ஆற்றல் வலுவாக இருந்தால், அங்குள்ளவர் தவறே செய்தாலும் பெயர், புகழ் வந்துசேரும். மனையின் வளர்ச்சி அல்லது வீட்டில் வளர்ச்சி அல்லது வீட்டின் முக்கிய மூளைகள் குறைவு பெற்றிருந்தா லும், சுக்கிரதிசை வளர்ந்திருந்தாலும் கௌரவத்தை இழக்கும்படி நேரும். தோற்கும் வாய்ப்பும் ஏற்படும். கிரகப் பலன் நன்றாக இருந்தும், பஞ்சபூதங்களின் ஆற்றல்கள் வீட்டிற்குக் கிடைக்காமல் போனால் வெற்றிவாய்ப்பு குறையக்கூடும்.
எந்த மூலையும் அதிகமாக வளர்ந்தோ குறைந்தோ இல்லாமலிருந்தால் வெற்றி வாய்ப்புண்டு. ஈசான்ய மூலை மட்டும் வளர்ந்திருந்தாலும் பாதகமில்லை. வெற்றி வாய்ப்புண்டு. ஆனால் சுற்றுச்சுவர் இருக்கவேண்டும். வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் அதிக வெற்றிடம் கொண்டு இருத்தல் அவசியம். சுக்கிர மூலை குறைந் திருக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறு வடக்கு சார்ந்த ஈசானியம் அல்லது கிழக்கு சார்ந்த ஈசானியப் பகுதியில் அமைவது நன்று.
வெளிவாயில் மற்றும் உள்வாயிலானது வடக்கு சார்ந்த ஈசானியம் அல்லது கிழக்கு சார்ந்த ஈசானியப் பகுதியில் இருக்கவேண்டும். அக்னி மூலையில் சமையலறை இருப்பது நன்று. தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் தரை அமைப்பானது சற்று உயர்ந்தும், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் தாழ்வாகவும் இருப்பது நன்மை தரும். தென்மேற்குப் பகுதியில் உறங்கு பவர்கள் வடக்கு மூலையை தினமும் பயன்படுத்துவார்கள். இவ்வமைப்பில் வசிப்பவர்கள் எளிதாக வெற்றிபெறும் வாய்ப் புண்டு.
மகாபாரதத்தில் மயன் அமைத்த மாளிகையில் வசித்த பாண்டவர்கள் போரில் வெற்றிபெற்ற வரலாறுண்டு. கிருஷ்ண பகவான் வறுமையின் பிடியிலிருந்த தனது நண்பர் குசேலரை, மயன் அமைத்த வீட்டிற்கு மாற்றிய பிறகே குசேலர் பெருஞ்செல்வம் பெற்றார் என்பர். எனவே வேட்பாளர்கள் தங்கள் வீட்டின் அமைப்பிலும் கவனம்செலுத்தி வெற்றிவாகை சூடுங்கள்.
செல்: 94434 80585