வாஸ்து முறைப்படி கடைகள் அமைந்தால் அங்கு விற்பனை சிறப்பாக இருக்கும். அதுபற்றிய சில குறிப்புகளை இங்கு காணலாம்.
கிழக்கு திசையிலிருக்கும் கடையின் வாயில் வடகிழக்குப் பகுதியில் இருக்க வேண்டும். வடக்கு திசையிலிருக்கும் கடையின் வாயில் அதன் மத்தியப் பகுதியில் இருக்க வேண்டும். மேற்கிலிருக்கும் கடைக்கு அதன் மத்தியப் பகுதியிலும், தெற்கிலிருக்கும் கடைக்கு அதன் மத்தியப் பகுதியிலும் வாயில் இருக்கவேண்டும்.
கிழக்கு திசையிலிருக்கும் கடையின் உரிமையாளர் தென்மேற்குப் பகுதியில் அமரவேண்டும். விற்பனை செய்யப்படும் பொருட்கள் தெற்கு, மேற்கு, வடக்குப் பகுதிகளில் இருக்கவேண்டும். அதேசமயம் கனமான பொருட்களை தெற்கில் வைக்கவேண்டும். எடை குறைவான பொருட்களை வடக்கு, வடகிழக்கில் வைக்கலாம்.
கடையின் தெற்குப் பகுதியில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கக்கூடாது. நீர் பருகும் பாத்திரத்தை வடகிழக்கில் வைக்க வேண்டும். வடகிழக்குப் பகுதியில் குப்பைத் தொட்டியை வைக்கக்கூடாது. கடைக்கு எதிரே தெரு இருப்பது நல்லதல்ல. கடைக்கு சிவப்பு, பச்சை, நீல நிறங்கள் ஆகாது.
வடக்குதிசை நோக்கிய கடையின் உரிமையாளர் தெற்கு மத்தியப் பகுதியில் அமர வேண்டும். குடிநீர் வைக்கப்படும் இடம் வடகிழக்கில் இருக்கவேண்டும். தெற்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் முகம் பார்க்கும் கண்ணாடி இருப்பது கூடாது. கடையின் வடக்குச் சுவரில் சிவப்புநிறம் பூசக் கூடாது. அவ்வாறு பூசியிருந்தால் உரிமை யாளரின் ஜாதகத்தில் செவ்வாய், சனி சரியில்லை என்று பொருள். பொருட்கள் வாங்க சரியாக ஆட்கள் வரமாட்டார்கள்.
வடக்குதிசை நோக்கிய கடையில், வட கிழக்குப் பகுதியில் குப்பைத்தொட்டி வைக்கக் கூடாது. அதுபோல வடமேற்குப் பகுதியில் கனமான பொருட்களையும் வைப்பது நல்லதல்ல. கடையில் கிணறு, ஆழ்துளைக் கிணறு இருப்பதும் கூடாது.
மேற்குதிசை நோக்கிய கடையின் உரிமை யாளர் தெற்குப் பகுதியில், வடக்கு நோக்கி அமர வேண்டும். கடையிலுள்ள பொருட்களை தெற்கு அல்லது மேற்கில் வைத்திருக்க வேண்டும். வடகிழக்கில் தேவையற்ற பொருட்களை சேர்த்துவைக்கக் கூடாது. அங்கு முகம்பார்க்கும் கண்ணாடி வைக்கலாம். அதிக விலைமதிப்புள்ள பொருட்களை வடகிழக்கில் வைப்பது கூடாது.
தெற்கு நோக்கிய கடையின் உரிமையாளர் மேற்கு மத்தியப் பகுதியில் கிழக்கு நோக்கி அமர வேண்டும். பிரதான வாயிலை தெற்கு மத்தியப் பகுதி அல்லது தென்கிழக்கில் அமைக்கலாம். கடையில் பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களைத் தவிர்க்கவேண்டும். வடகிழக்குப் பகுதியில் அவசிய மற்ற பொருட்களை சேர்த்துவைப்பது கூடாது.
வடக்கு மத்தியப் பகுதியில் முகம் பார்க்கும் கண்ணாடியை அமைக்கவேண்டும்.
எந்த திசை நோக்கிய கடையாக இருப்பினும் உரிமையாளர் வடகிழக்குப் பகுதியில் அமர்ந்து வியாபாரம் செய்யக்கூடாது. முடியாத பட்சத்தில் தெற்கு அல்லது மேற்கு திசையில் அமரலாம். பொருட்களை சேர்த்துவைக்கும் கிடங்கு கடையின் வடமேற்குப் பகுதியில் இருப் பது நல்லது. கடைக்குவரும் வாடிக்கையாளர்கள் நீச திசையிலிருந்து வரக்கூடாது. பிரதான வாயில் நீசப்பகுதியில் அமைவது நல்லதல்ல.
கிழக்கு நோக்கிய கடையில் தென்கிழக்கில் வாயில் இருந்தால், அந்தக் கடையின் உரிமையாளர் வடமேற்கில் அமர்ந்தால் அந்தக் கடை நஷ்டத்தை சந்திக்கும். அங்கு பணிபுரிபவர்கள் பொருட்களைத் திருடுவார்கள். அந்தக் கடையின் தென்கிழக்கில் நீர்நிலை இருந்தால் அங்கு மின்விபத்து ஏற்பட வாய்ப்புண்டு.
ஒரு கடைக்கு கிழக்கு மத்தியப் பகுதியில் பிரதான வாயில் இருந்து, கடையின் உரிமை யாளர் வடக்கு மத்தியப் பகுதியில் அமர்ந்தால், அங்குவரும் வாடிக்கையாளர்கள் கடனுக்குப் பொருட்களை வாங்குவார்கள். பின்னர் சரியாகப் பணத்தைத் திரும்பத் தரமாட்டார்கள்.
வடக்கு நோக்கிய கடைக்கு வடமேற்கில் வாயில் இருந்து, அந்தக் கடையின் உரிமையாளர் தென்மேற்கு அல்லது தென்கிழக்கில் அமர்ந்தால், அவரது வாரிசுகள் கடைக்கு வரமாட்டார்கள். பொருட்களை வடகிழக்குப் பகுதியில் வைத்திருந்தால் அவை சரியாக விற்பனை யாகாது. பல பொருட்கள் பாழாகிவிடும். உரிமையாளருக்குத் தலைவலி ஏற்படும். வடகிழக்குப் பகுதியில் குப்பை சேர்க்கப்பட்டி ருந்தால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும்.
மேற்கு நோக்கிய கடையின் பிரதான வாயில் தென்மேற்கு திசையிலிருந்தால், அந்தக் கடையின் உரிமையாளருக்கு மகிழ்ச்சி இருக் காது. அவர் வட கிழக்கு அல்லது வடக்கு மத்தியப் பகுதியில் அமர்ந்து வியாபாரம் செய்தால் கடனாளியாகி விடுவார். கடையின் தெற்குப் பகுதியில் நீர்த்தொட்டி இருந்தால் உரிமையாளர் பயந்த சுபாவம் கொண்டவராக இருப்பார்.
தெற்கு நோக்கிய கடையின் பிரதான வாயில் தென்மேற்கில் இருந்து, உரிமையாளர் வட கிழக்கு அல்லது வடமேற்கில் அமர்ந்தால், அவர் சூது, போதைப் பொருட்களுக்கு அடிமை யாவார். உரிய நேரத்திற்கு கடைக்கு வரமாட் டார். அந்தக் கடையில் பிரதான வாயிலை மாற்றவேண்டும். இல்லையெனில் வாழ்க்கை யில் தலைதூக்கமுடியாத நிலை உண்டாகும்.
கடையை இரு பாகங்களாகப் பிரித்தால், பின்பகுதி (மேற்கு) சிறிதாக இருக்கவேண்டும். கிழக்கும் வடக்கும் பெரிதாக இருக்கவேண்டும்.
தெருக்குத்தில் கடை இருப்பது நல்லதல்ல. உரிமையாளர் எப்போதும் வடமேற்கில் அமரக் கூடாது. எந்த திசைக் கடையானாலும் தெற்குப் பகுதியில் நீர்த்தொட்டி அமைக்கக் கூடாது.
அடர்த்தியான வண்ணங்களைத் தவிர்க்க வேண்டும்.
செல்: 98401 11534