சந்திரன்
சந்திரன் சுபத்துவம் பெற்றவர்களுக்கு வடக்கு மற்றும் மேற்குப் பார்த்த மனையில் வீடு அமையும். அந்த சொத்து பெண்களின் பெயரிலுள்ள சொத்தாகவோ அல்லது பெண்களிடமிருந்து வாங்கிய சொத்தாகவோ இருக்கும். பெண்களின் உதவியுடன் வீடுகட்டும் சூழ்நிலை உண்டாகும். வீட்டுக்கருகில் நீர்நிலை கள் அமைந்திருக்கும். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வார்கள். மழைக் காலத்தில் மழைநீர் வீட்டுக்குள் வரும் படியாக அமைந்துவிடும். வீட்டில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவு வழங்கி ஆனந்தப்படுவர். அன்றாடம் அழியக்கூடிய பொருட்களை விற்பனை செய்பவர்கள், அலைச்சல் மிகுந்த தொழில் செய்பவர்கள், பயணம் செய்வதில் விரும்பம் உள்ளவர்கள், உணவுப் பிரியர்கள், உணவகம் நடத்துபவர்கள், விவசாயம் செய்பவர்கள், வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புபவர்கள், கதை, கவிதை எழுதுபவர்கள், பெண்தெய்வ வழிபாட்டில் ஆர்வம் மிகுந்தவர்கள் வசிப்பதற்கு ஏற்ற மனையாகும். மேலே கூறிய தொழில் செய்பவர்கள் மேற்கு, வடக்கு சார்ந்த வாசலில் வியாபாரம் செய்தால் அமோகமாக நடைபெறும். பொதுவாகவே சந்திரன் மன சஞ்சலத் தைத் தரும் கிரகமாகும். அதனால் இவர் கள் மாற்றங்களை விரும்பி சொந்த வீடாக இருந்தாலும் அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்வார்கள். நிலை யாக ஒரே இடத்தில் குடியிருக்க விரும்பு வதில்லை.
சந்திரன் பலவீனத்தால் பாதிப்பிருப்பவர் கள் பௌர்ணமி நிலவொளியில் அதிகநேரம் இருக்கவேண்டும். புண்ணிய நதிகளில் அடிக்கடி புனித நீராடல் வேண்டும். மழை பொழியும்பொழுது, மழைநீரில் நன்றாக நனைந்து குளிக்க, உடலிலுள்ள ஆறு சக்கரங்களும் நல்லபடியாக இயங்கி, நேர் மறை சக்திகளைத் தூண்டிவிடும். மழைநீர் பூமியில் விழுவதற்குமுன்பு பாத்திரத்தில் பிடித்து, வீடு முழுவதும் தெளிக்க அல்லது வீட்டைக் கழுவ, வீட்டிற்குள்ளிருக்கும் விரும்பத்தகாத சக்திகளை வெளியேற்றும்.
செவ்வாய்
செவ்வாய் பலம்பெற்றவர்களுக்கு தெற்குப் பார்த்த மனை விருத்தியாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகள் உண்டு. உடன்பிறந்தவர்கள் வீடுகட்ட உதவுவார்கள் அல்லது உடன்பிறந்தவர்களின் சொத்தில் குடியிருப்பார்கள். உடற்பயற்சிக்கூடம், இராணுவம், பாதுகாப்புத்துறையில் பணிபுரிபவர்கள், பல் வைத்தியர்கள், ரத்த பரிசோதனைக் கூடம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், விவசாயிகள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மெக்கானிக், வாகனம் தொடர்பான தொழில் செய்பவர்கள், சிவில் என்ஜினியர்கள் ஜாதகத் தில் செவ்வாய் வலிமையாக இருக்கும். மேலே கூறிய அமைப் புள்ளவர்கள் வீட்டினருகில் இருப்பார்கள். செவ்வாய் பலம்குறைந்து தெற்குப் பார்த்த மனையில் இருப்பவர்களுக்கு சொத்தால் மன உளைச்சல், சகோதர விரோதம், கடன் பிரச்சினை, நோய், அடிக்கடி அறுவை சிகிச்சை செய்யும்நிலை, விபத்து, அண்டை அயலாருடன் தகராறு, வீட்டில் கூச்சல் குழப்பம் நிரம்பியிருக்கும். இவர்கள் முருக வழிபாடு செய்வதுடன், கோவில் கட்டும் இடத்திற்கு செங்கல் தானம் தரவேண்டும். வருடம் இரண்டு முறை ரத்த தானம் செய்யவேண்டும். செம்பு மோதிரம் அணியலாம். உக்கிரமான தெய்வங்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுவதைத் தவிர்த்து, சாந்தமான தெய்வப் படங்களை வழிபடலாம். வீட்டின் முகப்பில் சிவப்புநிற அரளிப்பூ வளர்க்கலாம்.
புதன்
புதன் ஆதிக்கம் நிறைந்தவர்களுக்கு வடக்குப் பார்த்த மனை சிறப்பாக இருக்கும். தாய்மாமன், தாய்மாமன்வழிச் சொத்து உண்டு. அல்லது தாய்மாமன் சொத்தில் வசிப்பார்கள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் கற்பூர புத்தி. வியாபார தந்திரம் உடையவர்கள். பத்திரிகையாளர்கள், கல்வி நிறுவனம் நடத்துபவர்கள், ஆசிரியர்கள், ஆடிட்டர்கள், பத்திரம் எழுதுபவர்கள், ஜோதிடர்கள், கணக்கு வேலை பார்ப்பவர்கள், சீட்டு நடத்துபவர்கள் ஜாதகத் தில் புதன் வலிமையாக இருக்கும். வீட்டினருகில் மேலே கூறிய அமைப்புள்ளவர்கள் குடியிருப்பார்கள் அல்லது அது சார்ந்த நிறுவனங்கள், மகாவிஷ்ணு ஆலயம், கூட்டுறவு வங்கிகள், பூங்கா, விளையாட்டு மைதானம் இருக்கும். எங்கு சொத்து வாங்கினாலும் பக்கத்து இடத்தையும் சேர்த்து வாங்குவார்கள். சொத்துப் பத்திரத்தில் திருத்தம் இருக்கும். தவணை முறையில் சொத்து வாங்குவார்கள். தம்பதிகள் காதலர்களாக- ஆதர்ஷ தம்பதிகளாக காலம் முழுவதும் வாழ்வார்கள். புதன் பலம்குறைந்தவர்கள் வடக்குப் பார்த்த மனையில் வசித்தால் தாய்மாமன் ஆதரவு குறைவுபடும். தோல், நரம்பு மண்டலங்கள் தொடர்பான பிரச்சினை இருக்கும். சீட்டுப்பணம் கட்டி ஏமாறு வார்கள். குழந்தைகள் மந்தமாகப் படிப்பார் கள். வீடுகட்ட வாங்கிய கடன் தொகையை திரும்பச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்படும். இடர்ப்பாடுகளைத் தவிர்க்க புதன்கிழமை மகாவிஷ்ணுவுக்கு துளசிமாலை அணிவித்து, பாசிப்பருப்பு பாயசம் நிவேதனம் செய்யவேண்டும். வீட்டில் துளசி, பவளமல்லி வளர்க்கவேண்டும். வீட்டின் முகப்பில் பச்சைநிற குரோட்டன்ஸ் வளர்க்கவேண்டும். வீட்டிற்கு பச்சை வண்ண பெயின்ட் பூசவேண்டும்.
குரு
ஜனனகால ஜாதகத்தில் குரு பலம்பெற்றவர்கள் வடக்கு மற்றும் கிழக்குப் பார்த்த மனையைத் தேர்வுசெய்யலாம். சமுதாயத் தில் மதிக்கத்தக்கவராக இருப்பார்கள். குடும்பத்தில் மங்களகாரியம் தொடர்ந்து கொண்டே இருக்கும். தான தர்மம் செய்யும் குணம், விட்டுக்கொடுக்கும் தன்மையுண்டு. ஒழுக்கமானவர்களாக- தனவந்தர்களாக இருப்பார்கள். ஆச்சார அனுஷ்டானங் களைப் பாதுகாப்பவர்கள் வசிக்கும் பகுதியாக இருக்கும். மதப்பற்றுடையவர்கள். புகழ், அந்தஸ்தைத் தரும் தொழில்புரிவார்கள். மத போதகர்கள், வங்கி நிர்வாகிகள், கோவில் அர்ச்சகர்கள், வக்கீல், நீதிபதி, புரோகிதர்கள், வேதாந்தம், சித்தாந்தம் பேசுபவர்கள் அருகில் இருப்பார்கள். வீட்டினருகில் அடர்ந்த மரங்கள், கோவில், சீட்டுக் கம்பெனி, நகை அடகுக் கடை, பொது நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், குழந்தைக் காப்பகங்கள் இருக்கும். ராஜயோக வாழ்க்கை, ராஜ சன்மானம் உண்டு. இவர்களின் வீட்டிற்கு வாடகைக்கு வருபவர்கள் சொந்த வீடு கட்டிக் குடியேறுவார்கள். குரு பலம் குறைந்தவர்கள் வடக்கு, கிழக்கு மனையில் வசித்தால் குழந்தைகள் பற்றிய மனக்கவலை இருக்கும். அல்லது காலதாமதமாக குழந்தை பிறக்கும். புகழ், அந்தஸ்து, கௌவரத்தைக் காக்க அதிகம் உழைக்க நேரும். மூளை, கல்லீரல், பித்தப்பை போன்ற உடலுறுப்புகள் பாதிக்கும். குரு பலம்குறைந்தவர்கள் வீட்டில் மூன்று மஞ்சள் செடி, மஞ்சள்நிறப் பூக்கள் மிகுந்த செடி வளர்க்கவேண்டும். வீட்டிற்கு மஞ்சள்நிறம் பூச, குரு ஆதிக்கம் மிகும். அத்துடன் மன வளர்ச்சி குன்றிய குழந்தை களின் பராமரிப்புக்கு உதவவேண்டும். பசு மற்றும் ஜீவராசிகளுக்கு உணவிடவேண்டும். சித்தர்களின் ஜீவசமாதி பீடங்களுக்குச் சென்று லட்டு தானம்தந்து வழிபட வினைப் பயன் நீங்கும்.
சுக்கிரன்
ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்றவர்களுக்கு கிழக்கு மற்றும் தெற்குப் பார்த்த மனை யோகப்பலன் தரும். மனைவி மூலம் வீடு, மனை சீதனமாகக் கிடைக்கும். சிலருக்கு உடன்பிறந்த சகோதரிகள் வீடுகட்ட உதவுவார்கள் அல்லது சித்தி, அத்தைக்கு சொந்தமான வீட்டை விலைகொடுத்து வாங்குவார்கள். வீட்டில் கனிதரும் மரங்களை வளர்ப்பார்கள். அழகு, ஆடம்பரம், சொகுசு மோகம் மிகுதியாக இருக்கும். வாசனை மலர்கள், திரவியங்கள், வெள்ளி, வைரம், வைடூரியம், பட்டுத் துணிகள், அந்தஸ்தான ஆடைகளின் பயன்பாட்டில் நாட்டமுண்டு. பிராணிகள் வளர்ப்பில் ஈடுபாடு உண்டு. சினிமா, நாடகம், நாட்டியக் கலைஞர்கள் அதிகம் வசிப்பார்கள். கணவன்- மனைவி உறவில் அன்பு மிகுதியாகும். அலங்காரமான அம்மன், மகாலட்சுமி வழிபாட்டில் ஈடுபடுவார்கள். பெண்களுக்கு அதிகம் தேவைப்படும் பொருட்கள், கலைநயம் மிகுந்த கைவினைப் பெருட்கள், வாசனை திரவியங்கள், மதுபானங் கள், இசைக்கருவிகள், ஆடம்பர வாகனங் கள், அழகிய ஃபர்னிச்சர்கள் விற்கும் கடைகள் வைத்திருப்பவர்கள் கிழக்கு மற்றும் தெற்குப் பார்த்த இடத்தைப் பயன்படுத்தலாம். சுக்கிரன் பலம்குறைந்தவர்கள் தெற்கு, கிழக்கு வீட்டில் வசித்தால் பொருள் பற்றாக் குறை ஏற்படும். கணவன்- மனைவி கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு காலதாமத திருமணம் நடைபெறும். சிலரின் மனைவி நோய்வாய்ப்படுவார்கள். உடலின் சுரப்பிகளின் செயல்பாடுகள் பாதிக்கும். சுக்கிரன் பலம்குறைந்தவர்கள் வீட்டில் சுவையான கனி தரும் மரங்களையும், வீட்டின் முகப்பில் நறுமணம் வீசும் மலர்களையும் வளர்க்கலாம். தினமும் மாலைவேளையில் ஊதுவர்த்தி ஏற்றலாம். சாம்பிராணி புகை போடலாம். லலிதா சஹஸ்ரநாமம், மகாலட்சுமி அஷ்டோத்திரம் கேட்கலாம்; படிக்கலாம்.
சனி
ஒருவரின் ஜாதகத்தில் சனி வலிமை பெற்றால் மேற்குப் பார்த்த மனை அமையும். சித்தப்பாவின் ஆதரவுண்டு. சித்தாப்பா வுடன் இணைந்து கூட்டுத்தொழில் செய்வார் கள். கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். அந்த நபர்கள் நல்ல உழைப்பாளியாகவும் எளிமையாகவும் காட்சிதருவார்கள். பகட்டை விரும் பாதவர்கள். எல்லாரிடமும் மரியாதையாக நடந்துகொள்வார்கள். கடமை தவறமாட்டார்கள். நீதி நேர்மை யுடன் நடந்து கொள்வார்கள். உழைக்கும் வர்க்கத்தினர் வாழ ஏற்ற மனையாகும். தொழிற்சாலைகள், எண்ணெய்க் கடைகள், பழைய பொருட்களை வாங்கி விற்பவர்கள், இரும்புக் கடை, நவதானியம் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மேற்கு வாசலைப் பயன்படுத்தலாம். சனி பலம்குறைந்தவர்கள் கூலிவேலை, துப்புரவு, அடிமைத் தொழில் செய்வார்கள். இவர்களை பரம்பரை வியாதி எளிதில் தாக்கும். காவல் தெய்வங்களான அய்யனார், கருப்பசாமியை வழிபட நலமுண்டாகும்.
ராகு
ராகு ஆதிக்கம் பெற்றவர்களுக்கு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பாகத்தில் தெருக்கள் அமைந்திருக்கும். தெருக்குத்து, வாஸ்து குறைபாடான மனை, வீடு அமையும். வசிக்கும் நபர்கள் அனாச்சாரங்களில் ஈடுபடுபவார்களாகவும், ரகசிய நடவடிக்கை உடையவர்களாகவும், அழிவுக் காரியங்கள் செய்பவர்களாகவும் இருப்பார்கள். அந்த வீட்டில் அகால மரணங்கள் நிகழும். தோல்நோய், அலர்ஜி, சொரி சிரங்கு, தீராத புற்றுநோய் உருவாகும். வேற்று மதத்தினரின் தொடர்பால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். சிறை தண்டனை, நாடு கடத்தப்படுதல் போன்ற விரும்பத்தகாத விளைவுகள் உண்டு. இவை மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமல்ல. வாகனப் பழுது நீக்குமிடம், செருப்புக் கடை, பழைய பொருட்கள் விற்கும்- வாங்கும் கடை, இறைச்சிக் கடை, கள்ளுக்கடை, முடி திருத்தகம், தோல் பதனிடும் தொழிற்சாலை, உரக்கடை, பூச்சி மருந்துக் கடை, வெடிமருந்துக் கடை போன்றவை அமைந்தால் சிறப்பு. பாதிப்பைக் குறைக்க உக்ர தெய்வங்களாக காளி மற்றும் பிரத்தியங்கரா தேவியை வழிபடவும். சற்றேறக்குறைய ராகுவுக்குச் சொன்ன அனைத்து பலன்களும் கேதுவுக்கும் பொருந் தும். ராகு ஆதிக்கம் பெற்ற தெருக்கள் அகன்று பெரிதாக இருக்கும். கேது ஆதிக்கம் பெற்ற தெருக்கள் குறுகியதாக- சந்து பொந்துகளாக இருக்கும். பொதுவாக .ராகு- கேதுக்களின் ஆதிக்கம் அசுபப் பலன்களை மட்டுமே மிகைப்படுத்தும்.
சிலர் வாஸ்துக் குறைபாட்டைத் தீர்க்க வாஸ்து பகவானைப் பூஜித்து தகடு எழுதி வீட்டில் வைத்து வழிபடுகிறார்கள். இது தவறாகும். பொதுவாக எந்திர, மந்திரத் தகடுகளால் வாஸ்துக் குறைபாடுகளை சரிசெய்யமுடியாது. முன்பு எந்திரங்களை முறையான அனுஷ்டான விதிமுறை களைக் கடைப்பிடித்து கையினால் எழுதி உருவேற்றி வடிவமைத்தார்கள். தற்காலத்தில் இயந்திரங்களில் நகல் எடுக்கிறார்கள். அந்தத் தகடுகள் வரைபவர்கள் மற்றும் பிரதி எடுப்பவர் களின் மனநிலையை மட்டுமே பிரதிபலிக்கும் என்பதால், குறைபாட்டை சரிசெய்யும் தெய்வவழிபாடே நன்மை தரும்.
செல்: 98652 20406