சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சொந்தமாக ஒரு வீடுகட்டுவதும், ஒரு வாகனம் வாங்குவதும், அனைவருக்கும் பொதுவான ஒரு ஆசையாக உள்ளது. ஜோதிடம் பார்க்கச் செல்லும் ஒவ்வொருவரும் எனக்குச் சொந்தமாக வீடுகட்டும் யோகம் உண்டா? வாகனம் வாங்கும் யோகம் உண்டா என்னும் கேள்விகளை ஜோதிடரிடம் ஆர்வத்துடன் தவறாமல் கேட்பார்கள்.

வேதஜோதிட முறையில் பலன்கூறும் ஜோதிடர் களும், ஏதாவது ஒரு கிரகத்தின் தசை, புக்திக் காலம் வரும் வயதுகளில் வீடு கட்டுவீர்கள், வாகனம் வாங்குவீர்கள் என ஒரு பதிலை உங்கள் மனத்திருப்திக்காகக் கூறி அனுப்பிவிடுவார்கள். அல்லது ஏதாவது ஒரு தோஷத்தைக் கூறி அதற்கு ஒரு பரிகாரம் செய்யச் சொல்லிவிடுவார்கள். ஆனால், ஜோதிடர்கூறிய தசை, புக்திக் காலங்களில் சொந்தமாக வீடு கட்டினீர்களா? வாகனம் வாங்கினீர்களா என்பதை அனுபவத்தில் பார்த்தால், இல்லை என்பதுதான் பலர் கூறும் பதிலாக உள்ளது.

ஒருவருக்கு இப்பிறவியில் சொந்தமாக வீடு, வாகனம் அமையும் யோகம் உண்டா என்பதை அறிந்துகொள்ளும் வழிமுறைகளையும், வீடு, வாகனம் அமையும் காலத்தையும், தமிழ்முறை ஜோதிடத்தில் சித்தர்கள் கூறியுள்ளதை அறிவோம்.

Advertisment

ஒருவர் தன் பிறப்பு ஜாதகத்தினைக்கொண்டு, இப்பிறவியில் தனக்குச் சொந்தமாக வீடு, வாகனம் அமையும் யோகம் உண்டா என முதலில் அறிந்து கொள்ளவேண்டும். பிறக்கும்போதே, இப்பிறவியில் அவர் உழைத்து சம்பாதித்த பணத்தைச் சேமித்து, சொந்தமாக இவற்றை அடையும் யோக அமைப்பில் பிறந்திருந்தால், அவருக்குக் கண்டிப்பாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் சொந்தமாக வீடு, வாகனம் வாங்குவதை எந்த கிரகங்களாலும், பாவ- சாபப் பதிவுகளாலும் தடுக்கமுடியாது என்பது சித்தர்கள் வாக்கு.

பிறக்கும்போதே சொந்த வீடு, வாகனம் அமையும் யோக அமைப்பில்லாத நிலையில் பிறந்திருந்தால், அவர் வீடு அடைந்திட, எவ்வளவு பூஜை, யாகம், மந்திரம், பிரார்த்தனைகள் செய்தாலும், சொந்தமாக வீடு, வாகனத்தை அடையமுடியாது.

vv

Advertisment

ஒருவர் சொந்தமாக வீடு அடையமுடியாமல் போவதற்கு, அவர் முற்பிறவிகளில் தன்னுடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்குச் செய்த பாவத்தால் உண்டான சகோதர சாபமும், கட்டிய மனைவிக்குச் செய்த துரோகத்தால் உண்டான களத்திர சாபமும் தான் காரணம்.

ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்திலுள்ள சுக்கிரன், மனைவி, வீடு, வாகனம், ஆபரணம், சொகுசுப் பொருட்கள், போக சுகம் ஆகியவற்றைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும். சனி கிரகம் தொழில், வருமானம், செல்வநிலை, சேமிப்பு சக்தி ஆகியவற்றைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும்.

வேதமுறை கணித ஜோதிடத்தில் ஒருவரின் பிறப்பு ராசிக்கட்டங்களிலுள்ள, லக்னம், லக்னாதிபதி, 4-ஆமிடங்களின் கிரகநிலையைக் கொண்டு சொந்தவீடு அமையும் யோகநிலையையும், தசை,- புக்தியைக் கணக்கிட்டு வீடு அமையும் காலத்தையும் ஜோதிடர்கள் கூறுவார்கள்.

நாடிமுறை ஜோதிடத்தில் லக்னம், லக்னாதிபதி, பாவாதிபதி என எதனையும் பார்க்கத் தேவையில்லை. பிறப்பு ராசிக் கட்டத்தில் சனி, சுக்கிரன் அமைந்துள்ள ராசிகளின் கணக்கினைக்கொண்டு, வீடுகட்டும் யோகப்பலனை அறிந்து கொள்ள வேண்டும். தமிழ்முறை ஜோதிடம் எளிமையானது, மக்களைக் குழப்பாதது. பிறப்பின் விதி உண்மையைக் கூறுவது.

ஆண், பெண் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் தொழில்காரகன் சனி இருந்தால், அவருக்குச் சொந்தமாக வீடு, வாகனம் அமையும்.

ஆண் ஜாதகத்தில், பிறக்கும் போது சொந்தமாக வீடு, வாகனம் அமையும் யோகமில்லை என்றாலும், அவரின் திருமணத்திற்குப் பின் மனைவியாக வருபவரின் பிறப்பு ஜாதகத்தில் சொந்தவீடு அமையும் யோகமிருந்தால், மனைவியின் யோகத் தால் சொந்தவீடு, வாகனம், ஆபரணம் ஆகியவற்றை அடைவார். பிறப் பிலேயே சொந்தமாக வீடு, யோக அமைப்பில்லாத ஆண்கள், வீடு, வாகனம் அமையும் யோகமுள்ள பெண்களை மணந்து கொள்ள வேண்டும். மனைவி ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் ராசியில் எத்தனை நல்ல கிரகங்கள் உள்ளனவோ, அத்தனை வீடுகள் சொந்தமாக அமையும்.

பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் சொந்தமாக வீடு அமையும் யோகம் இல்லையென்றாலும், அவள் திருமணம் புரியும் கணவனுக்கு அந்த யோக அமைப் பிருந்தால், அவள் வீடு, வாகனம், ஆபரணங்களை அடைந்து, அனுப வித்து வாழ்வாள். சொந்தவீடு அடையும் யோகமில்லாத பெண்கள், வீடு, வாகன யோகமுள்ள ஆண்களை மணந்துகொள்ளவேண்டும்.

பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் சனி இருந்தால், இந்தப் பெண் பிறந்த பிறகு, அவளின் தந்தைக்குச் சொந்தமாக வீடு, வாகனம் அமையும். இந்தப் பெண் திருமணமாகி கணவன் வீடு சென்றால், இவளின் யோகத்தால் கணவன் சொந்தவீடு கட்டுவான்.

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன், சனி பரிவர்த் தனைப் பெற்று, இரண்டு கிரகங்களிலும் ஒன்றுக்கொன்று 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் அமர்ந்தால் பின்வயதில் வீடு, வாகனம் அமையும்.

இன்றைய நாளில் வாஸ்துக்காலம், வளர்பிறை, தேய்பிறை, மேல்நோக்குநாள், முகூர்த்தநாள் போன்று இன்னும்பல கணக்குப் பார்த்து, ஜோதிடர்கள் சொல்லும் நாளில் பூமிபூஜைசெய்து வீடுகட்டத் துவங்குவார்கள். இதுபோன்று நல்லநாள் பார்த்து, தனிநபர்கள் மற்றும் அரசாங்கம் கட்டும் வீடுகளில்கூட சில முழுமையாகக் கட்டிமுடிக்கப்படாமலும், கட்டிமுடிக்க நீண்ட காலமாவதும், வீடுகட்டியவுடன் சில தீமையான நிகழ்வுகள் உண்டாகி தடைப்பட்டுவிடுகின்றன.

சித்தர் பெருமக்கள் தமிழ்முறை ஜோதிடத்தில் வீடுகட்டத் துவங்கவேண்டிய நல்ல நாட்கள் பற்றிக் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

வீடுகட்டத் துவங்கும் நாளன்று, வீட்டைக் குறிக்கும் உதாரண கிரகமான சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 12-ஆம் ராசிகளில் கோட்சார குரு இருந்தால், வீட்டைத் தடையின்றி கட்டிமுடிக்கலாம்.

வீடு முகூர்த்தம்செய்யும் நாளில் சுக்கிரனுக்கு 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் சனி இருந்தால், சிறிது தாமதமாகும். ஆனாலும், வீட்டை முழுமையாகக் கட்டிமுடித்துவிடலாம்.

முகூர்த்த நாளில் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் முற்பிறவி சாபத்தைக் குறிக்கும் உதாரண கிரகமான கேது இருந்தால், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு வீடுகட்டுவதில் தடைகள் உண்டாகும்.

முகூர்த்த சமயத்தில் சுக்கிரனுக்கு 1, 5, 9, 2-ஆவது ராசியில் முற்பிறவிகளில் செய்த பாவத்தைக் குறிப்பிடும் உதாரண கிரகமான ராகு இருந்தால், வீடுகட்டும்போது விபத்துகள் உண்டாகும். வீட்டின் உரிமையாளருக்கு நோய்நொடிகள், கண்டம், கஷ்டம் உண்டாகும்.

இனி, வாகனங்கள் வாங்க நன்மை, தீமை தரும் நாட்களைப் பற்றி அறிவோம்.

கோட்சார நிலையில் குரு இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் கோட்சாரச் சுக்கிரன் இருக்கும் நாட்களில் வாகனங்கள் வாங்கினால், அந்த வாகனம் நிலையாக நீண்டநாள் நன்மை தந்துகொண்டிருக்கும்.

கோட்சாரக் கேது இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சுக்கிரன் இருக்கும் நாட்களில் வாகனங்கள் வாங்கக்கூடாது. இந்நாட் களில் வாங்கினால், அது விரைவில் கைவிட்டுப் போய்விடும் அல்லது ஏதாவது பிரச்சினைகள், விரயங்களைத் தந்துகொண்டே இருக்கும்.

வாகனம் வாங்கும் நாளன்று கோட்சாரச் சுக்கிரன் இருக்கும் 1, 5, 9-ஆவது ராசிகளில் ராகு இருந்தால், அந்த வாகனம் விபத்திற்குள்ளாகும்.

அதில் பயணம் செய்பவர்கள் பாதிப் படைவார்கள்.

பிறப்பு ஜாதகத்திலுள்ள சுக்கிரனுக்கு 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் கோட்சார நிலையில் குரு, சனி இரண்டு கிரகங்கள் சஞ்சாரம் செய்யும் வருடங்கள் புதிதாக வீடு, வாகனம் அமையும் காலமாகும்.

ஒரு மனிதனின் எதிர்கால வாழ்க்கை யில் உண்டாகும் உயர்வு- தாழ்வு, நன்மை- தீமை, தொழில், திருமணம், செல்வநிலை என அûத்துப் பலன்களும் கிரகதசை, புக்தி, அந்தரம் ஆகியவற்றால் உண்டாக்கப்பட்டுத் தருவதில்லை.

ஒன்பது கிரகங்களும் கோட்சார நிலையில் 12 ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் உண்டாகும் கிரகச்சேர்க்கையால்தான் பலன்கள் தந்து அனுபவிக்கச் செய்கின்றன என்பது சித்தர்கள் வாக்காகும்.

சித்தர்கள் கூறியுள்ள தமிழ்முறை ஜோதிடத்தில், கிரகதசை, புக்தி, அந்தரம், ராசி, லக்னம், பாவம், பாவாதிபதி ஆகியவற்றை வைத்துப் பலன் கூறப்படுவதில்லை. கிரகங்களின் கோட்சார சுழற்சி நிலையைக்கொண்டே பலன் கூறப்படுகின்றன.

செல்: 99441 13267