வள வாழ்வு தரும் வாஸ்து! - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/vastu-gives-resource-life-0

சென்ற இதழ் தொடர்ச்சி...

ருவரின் பாவ-சாபம் அவரை வெளி யிலிருந்து வந்து தாக்குவதில்லை. அவர் வசிக்கும் வீட்டினுள்ளே, வியாபாரக் கடைகளின் உள்ளே இருந்துகொண்டுதான் பாதிப்பைத் தரும்.

நேர்மையான முறையில் உழைத்துப் பணம் சம்பாதித்துக் கட்டிய வீடு பல தலை முறைக்கு வாரிசுகளை உருவாக்கி நன்மை தரும்வண்ணம் அமைந்துவிடும். ஆனால், பிறரை ஏமாற்றி அரசியலில், அரசு அதிகாரப் பதவிகளிலிருந்து பிறர் பொருளை அபகரித்து, எவ்வளவு பெரிய வீட்டைக் கட்டினாலும், அந்த வீட்டில் அவர்கள் வம்ச வாரிசுகள் நிலையாக வாழமுடியாது. ஏன்- கட்டிய அவர்களே வாழமுடியாமல்கூட போகும் மனிதர்களின் வாழ்வில் அவர்களின் முற்பிறவி பாவ-சாபப் பதிவுகளைக் கணக் கிட்டு, அதற்குத் தகுந்த சிரமம், கஷ்டம், தடைகளைத் தருவது ராகு- கேது கிரகங் களாகும். ஒரு மனிதன் செய்யும் பாவச்செயல் களுக்குண்டான தண்டனையை ராகுவும், பெற்ற சாபத்திற்குண்டான தண்டனை களைக் கேதுவும், தராசு முள்போல் நடுநிலையாகத் தந்து அனுபவிக்கச் செய்வார்கள்.

ராகு- கேதுவின் நீதிமன்றத்தில் தரப்படும் முன்வினைகளுக்குண்டான தண்டனையை தானம், தர்மம், பூஜை, விரதம், அர்ச்சனை, அபிஷேகம், மந்திரம், நாமஜபம், ஹோமம், யாகம் எனப் பணத்தாலோ, பக்தியாலோ மாற்றமுடியாது, தீர்க்கமுடியாது. இது போன்ற ஏமாற்றுச் செயல்களுக்கு ராகு- கேது மயங்காது, மனம் இரங்காத

சென்ற இதழ் தொடர்ச்சி...

ருவரின் பாவ-சாபம் அவரை வெளி யிலிருந்து வந்து தாக்குவதில்லை. அவர் வசிக்கும் வீட்டினுள்ளே, வியாபாரக் கடைகளின் உள்ளே இருந்துகொண்டுதான் பாதிப்பைத் தரும்.

நேர்மையான முறையில் உழைத்துப் பணம் சம்பாதித்துக் கட்டிய வீடு பல தலை முறைக்கு வாரிசுகளை உருவாக்கி நன்மை தரும்வண்ணம் அமைந்துவிடும். ஆனால், பிறரை ஏமாற்றி அரசியலில், அரசு அதிகாரப் பதவிகளிலிருந்து பிறர் பொருளை அபகரித்து, எவ்வளவு பெரிய வீட்டைக் கட்டினாலும், அந்த வீட்டில் அவர்கள் வம்ச வாரிசுகள் நிலையாக வாழமுடியாது. ஏன்- கட்டிய அவர்களே வாழமுடியாமல்கூட போகும் மனிதர்களின் வாழ்வில் அவர்களின் முற்பிறவி பாவ-சாபப் பதிவுகளைக் கணக் கிட்டு, அதற்குத் தகுந்த சிரமம், கஷ்டம், தடைகளைத் தருவது ராகு- கேது கிரகங் களாகும். ஒரு மனிதன் செய்யும் பாவச்செயல் களுக்குண்டான தண்டனையை ராகுவும், பெற்ற சாபத்திற்குண்டான தண்டனை களைக் கேதுவும், தராசு முள்போல் நடுநிலையாகத் தந்து அனுபவிக்கச் செய்வார்கள்.

ராகு- கேதுவின் நீதிமன்றத்தில் தரப்படும் முன்வினைகளுக்குண்டான தண்டனையை தானம், தர்மம், பூஜை, விரதம், அர்ச்சனை, அபிஷேகம், மந்திரம், நாமஜபம், ஹோமம், யாகம் எனப் பணத்தாலோ, பக்தியாலோ மாற்றமுடியாது, தீர்க்கமுடியாது. இது போன்ற ஏமாற்றுச் செயல்களுக்கு ராகு- கேது மயங்காது, மனம் இரங்காது.

சாபக் கிரகமான கேது அவரவர் முன்வினைப்படி, அவரவர் வசிக்கும் வீட்டினுள்ளே நிழல்போல் சூட்சுமமாக இணைந்திருந்து, எவ்விதப் பலன்களைத் தந்து, அனுபவிக்கச் செய்வார் என்பதை சுருக்கமாக அறிவோம்.

வசிக்கும் வீட்டில் ஜன்னல்கள் சிறியதாக இருந்தால், அந்த வீடு சாபக் கேதுவின் பாதிப்புள்ள வீடாகும். இதுபோன்ற வீட்டில் வசிப்பவர் களுக்குப் புத்திரப் பாக்கியத் தடை உண்டாகும். ஆணிற்கு விந்தணுக் குறைபாடு, பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான குறையுண்டாகும். பூர்வீக சொத்துகளால் நன்மை இராது. பெற் றோருடன் கருத்து வேறுபாடுண்டாகும். இது புத்திர தோஷம், பித்ரு சாபத்தைத் தரும்.

படுக்கையறை நீளமாகவும், அகலம் குறைவாகவும், குறுகலாக சிறியபாதைபோல் செவ்வகமாக நீண்டிருந்தால், அந்த வீட்டில் வசிக்கும்- அந்த அறையில் தூங்கும் பெண் களுக்குத் திருமணத்தடை உண்டாகும். கணவர்- மனைவியிடையே கருத்து வேறுபாடுண்டாகும். கணவருக்கு தாம்பத்திய உறவுகொள்ள நாட்டம் இராது. பெண்கள் வயதுமுதிர்ந்த ஆணையோ, ஏற்கெனவே திருமணமான ஆணையோ மணக்கநேரிடும். விவசாயம் லாபம் தராது. பூமி, நிலம், சொத்து சம்பந்தமான பிரச்சினைகள், கடன்தொல்லை உண்டாகும். சகோதரர், பங்காளிகள் உறவு தடையாகும். இதுபோன்ற படுக்கையறை, பெண்களுக்கு செவ்வாய் தோஷத்தைக் குறிக்கும்..

vv

படுக்கையறையை ஒட்டியோ, அதனுள் ளேயோ கழிப்பறை இருந்தால், அந்த அறையில் தூங்கும் ஆண்களுக்கு ஆண்மைக் குறை வுண்டாகும். பெண்களுக்குத் தாம்பத் தியக்குறைவு, திருமணத்தடை, கணவருடன் கருத்து வேறுபாடு இருக்கும். வீட்டின் முன்வாசலுக்கு எதிரே கழிப்பறை இருந்தால், அந்த வீட்டில் யாரும் நிரந்தரமாக, நீண்டநாள் வசிக்கமுடியாது. நிம்மதியில்லாத வாழ்க்கை அமையும்.

வரவேற்பறை செவ்வகமாக, குறுகலாக இருந்தால், கட்டிய வீடு, வியாபாரக் கடைகள், தோட்டம் ஆகியவற்றில் பிரச்சினைகள் உண்டாகும். கூட்டுத்தொழிலில் ஏமாற்றப் படுவார்கள். அந்த வீட்டில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் காதல் வலையில் வீழ்வார்கள். சிலர் பெண்களால் அவமானத் தையும், பொருள் இழப்பையும் சந்திக்க நேரும். இன்னும் சிலர் காதல் திருமணம் செய்துகொள்வார்கள். இது தாய்மாமன் சாபத்தைக் குறிக்கும்.

.சமையலறை செவ்வகமாக, சிறிய பாதை போல் நீண்டிருக்கும் வீட்டில் வசிப்பவர் களுக்குத் திருமணத்தடை உண்டாகும். மனைவிக்கு தாம்பத்திய உறவில் நாட்டமிராது. கணவன்- மனைவியிடையே பிரிவு, கருத்து வேறுபாடிருக்கும். சோம் பேறிகளாக விரக்தியுடன் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்வார்கள். பணம் சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கும். இது சுக்கிர தோஷ முள்ள அமைப்பு.

பூஜையறை சிறியதாக இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் ஆன்மிகம், இறைவழிபாட்டில் அதிக நம்பிக்கை கொள் வார்கள். வாழ்க்கை உயர்வுக்கான செயல் களைச் செய்யமாட்டார்கள். இவர்களின் பிரார்த்தனைகள் பலிக்காது. குடும்பத்தலைவர் தானும் சிரமப்பட்டு, தன் குடும்பத்தாரையும் சிரமம் அடையச் செய்துவிடுவார்.

வீட்டில் கடவுள் சிலைகள், படங்கள் அதிகமாக இருந்தால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் குடும்ப வாழ்வில் ஈடுபாடு கொள்ளாத நிலை அமையும். செய்யும் காரியம், செயல்களில் பலவிதமான தடைகளும், அனுபவிக்கவேண்டியதை அனுபவிக்கமுடியாத நிலையும் உண்டாகும். மனச்சலனம், பலவிதமான குழப்பத்துடன் வாழ்வர். சுய அறிவு, புத்தி மந்தமாகும்.

இது ஆபிசார தோஷப் பாதிப்பினைக் குறிக்கும்.

கோவில்களைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலுள்ள (மாடவீதி) வீடுகளில் வசிப்பவர்களுக்கு வாழ்வில் பெரிய உயர்வு உண்டாகாது. வாழ்வில் பிரச்சினைகள், குறைகள் உண்டாகும். வேறிடங்களில் வசித்து, தொழில்செய்து, நிறைய செல்வம் சேர்த்து நிம்மதியாக வாழ்ந்தவர்கள் கோவில்களின் சுற்றுப்பிராகார மாடவீதிகளில் சொந்த மாகவோ, வாடகைக்கோ வீடு அமைந்துக் குடியேறி வசித்தால், தொழில், வியாபாரம், செல்வம், செல்வாக்கு குறைந்துவிடும்.

பணம், சேமிப்பு அறை செவ்வக வடிவில் சிறியதாகக் குறுகியிருக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கு நிலையான, திறமைக் கேற்ற, சரியான தொழில் அமையாது. தொழில், உத்தியோக முடக்கம், இழப்புண்டாகும்.

பல தொழில்கள் செய்யும் நிலை ஏற்படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது.

அடிமைத்தொழில் அமையும். எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனை இராது.

பெரிய ஆசைகள் இராது. இது பாமர தோஷத்தால் உண்டான பாதிப்பு.

தெருவிலிருந்து வீட்டின் நுழைவுப் பாதை குறுகிய சந்தாக இருந்தால், அந்த வீட்டின் உரிமையாளருக்கு சொத்து சம்பந்தமான வழக்குகள் உண்டாகும்.

அந்த வீட்டை விற்கும்போதும், வாங்கும் போதும் பிரச்சினைகள், தகராறுகள் உண்டாகும்.

வீட்டிற்கு அருகில் தெற்கு, மேற்கு திசைகளில் ஆறு, கால்வாய், நீரோடை, கிணறு, கழிவு நீர் சாக்கடை இருந்தால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்குப் புகழ், செல்வம் குறையும். தொழில் தடைப்படும். ஏதாவதொரு பிரச்சினை, குறை இருந்து கொண்டே இருக்கும்.

ஒருவர் சொந்தமாக வீடுகட்டும்போது அவரின் பூர்வஜென்ம பாவ-சாப தோஷங்கள் அவரின் புத்தியில் நிழல்போல் புகுந்து, மனதை செயல்படவைத்து தோஷமுள்ள வீடாகக் கட்டவைத்து, அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு பல சிரமம், கஷ்டங்களைத் தந்து, கர்மவினைகளை அனுபவிக்கச் செய்துவிடும்.

இந்த உண்மை தெரியாமல், வாஸ்து சரியில்லை என, கட்டிய வீட்டை இடித்துக் கட்டி மாற்றுவதால்- பரிகாரப் பூஜைகளைச் செய்வதால், எந்த மாற்றமும் நன்மையும் வாழ்வில் உண்டாகாது. வாஸ்துக் குறையும் தீராது. இதனையறிந்து தடுத்துக்கொள்வதால் மட்டுந்தான் வாஸ்துக் குறைகளைத் தீர்க்கமுடியும்.

செல்: 99441 13267

bala310720
இதையும் படியுங்கள்
Subscribe