வாஸ்து தோஷம் தரும் பெருந்துயர் நீங்க எளிய பரிகாரம்! - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/vastu-dosham-peruntuyar-simple-remedy-you-present-astrologer-i-anandi

வாஸ்து சாஸ்திரம் என்றால் வசிப்பிடம் பற்றிய அறிவியல் என்று பொருள். இயற்கை எனும் சக்தியின் வரையறுக்கப்பட்ட நியதிகளைக் கடைப்பிடித்து கட்டடங்களை உருவாக்குவது வாஸ்து சாஸ்திரமாகும்.

பெரும்பாலானவர்கள் வாஸ்து சாஸ்திரம் வேறு, ஜோதிட சாஸ்திரம் வேறென்று நினைக்கிறார்கள்.

ஜோதிடத்தின் ஒரு பிரிவே வாஸ்து சாஸ்திரமாகும்.

ஒருவருடைய ஜனன ஜாதகத்திலுள்ள கிரக நிலைகள் எப்படி அமைந்துள்ளதோ அதற்கேற்றவாறு அவர் வசிக்கும் வீடு அமையும். எனவே ஒருவருடைய ஜாதகத்தை வைத்தே அவர்களின் வீட்டின் அமைப்பைத் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல் பலரும் பூமிக்கு மேலே உள்ள கட்டட அமைப்புகளான சமையலறை, குளியலறை, படுக்கை யறை போன்றவை சரியான அமைப்புடன் கட்டப் பட்டிருந்தால் வாஸ்து முறையாக உள்ள வீடென்று நினைக்கிறார்கள். ஆனால் நிலத்திற்குக் கீழேயுள்ள காந்த ஓட்ட சக்திகளும், நீரோட்ட சாதக பாதகங்களும் குடியிருக்கும் வீட்டை பாதிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பது பழமொழி. மனிதர் களின் அடிப்படைத் தேவை களான உணவு, உடை, இருப் பிடத்தில், வாழ்வதற்கான வீடு கிடைப்பது சவாலாகி விட்டது. அதுவும் வாஸ்துப்படி அமைவதென்றால் மிகப்பெரிய சாவாலாகி விட்டது. ஒருவருக்கு சொந்த வீடு கிடைப்பது மிகப் பெரிய பாக்கியமாகும். பலருக்கு வீடு கட்டினாலும் அதில் குடியிருக்க முடிவதில்லை.

அல்லது வீடுகட்டிக் குடியேறிய பின் பிரச்சினைகள் துரத்து கின்றன. ஆடம்பரமான மாளி கையோ, ஓலைக் குடிசையோ எதுவாக இருந்தாலும் வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப் பட்டவை மட்டுமே நிலைத்து நிற்கிறது. வாஸ்து முறைப் படி அமையாத எத்தனையோ வீடுகள் வாழ்க்கை நடத் தமுடியாமல் பயனற்றுப் போய்விடுவதை நடை முறையில் பார்க்கிறோம்.

வாழ்நாளில் மனிதன் எவ்வளவு சாதித்தாலும், தன் சந்ததியினர் சுகமாக வாழ தன்னால் முடிந்த சொத்தை சேர்த்துவைக்க வேண்டும் என்பதே மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் லட்சியம், ஆசை, விருப் ப

வாஸ்து சாஸ்திரம் என்றால் வசிப்பிடம் பற்றிய அறிவியல் என்று பொருள். இயற்கை எனும் சக்தியின் வரையறுக்கப்பட்ட நியதிகளைக் கடைப்பிடித்து கட்டடங்களை உருவாக்குவது வாஸ்து சாஸ்திரமாகும்.

பெரும்பாலானவர்கள் வாஸ்து சாஸ்திரம் வேறு, ஜோதிட சாஸ்திரம் வேறென்று நினைக்கிறார்கள்.

ஜோதிடத்தின் ஒரு பிரிவே வாஸ்து சாஸ்திரமாகும்.

ஒருவருடைய ஜனன ஜாதகத்திலுள்ள கிரக நிலைகள் எப்படி அமைந்துள்ளதோ அதற்கேற்றவாறு அவர் வசிக்கும் வீடு அமையும். எனவே ஒருவருடைய ஜாதகத்தை வைத்தே அவர்களின் வீட்டின் அமைப்பைத் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல் பலரும் பூமிக்கு மேலே உள்ள கட்டட அமைப்புகளான சமையலறை, குளியலறை, படுக்கை யறை போன்றவை சரியான அமைப்புடன் கட்டப் பட்டிருந்தால் வாஸ்து முறையாக உள்ள வீடென்று நினைக்கிறார்கள். ஆனால் நிலத்திற்குக் கீழேயுள்ள காந்த ஓட்ட சக்திகளும், நீரோட்ட சாதக பாதகங்களும் குடியிருக்கும் வீட்டை பாதிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பது பழமொழி. மனிதர் களின் அடிப்படைத் தேவை களான உணவு, உடை, இருப் பிடத்தில், வாழ்வதற்கான வீடு கிடைப்பது சவாலாகி விட்டது. அதுவும் வாஸ்துப்படி அமைவதென்றால் மிகப்பெரிய சாவாலாகி விட்டது. ஒருவருக்கு சொந்த வீடு கிடைப்பது மிகப் பெரிய பாக்கியமாகும். பலருக்கு வீடு கட்டினாலும் அதில் குடியிருக்க முடிவதில்லை.

அல்லது வீடுகட்டிக் குடியேறிய பின் பிரச்சினைகள் துரத்து கின்றன. ஆடம்பரமான மாளி கையோ, ஓலைக் குடிசையோ எதுவாக இருந்தாலும் வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப் பட்டவை மட்டுமே நிலைத்து நிற்கிறது. வாஸ்து முறைப் படி அமையாத எத்தனையோ வீடுகள் வாழ்க்கை நடத் தமுடியாமல் பயனற்றுப் போய்விடுவதை நடை முறையில் பார்க்கிறோம்.

வாழ்நாளில் மனிதன் எவ்வளவு சாதித்தாலும், தன் சந்ததியினர் சுகமாக வாழ தன்னால் முடிந்த சொத்தை சேர்த்துவைக்க வேண்டும் என்பதே மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் லட்சியம், ஆசை, விருப் பமாக இருக்கும். அந்த வகையில் ஒருவருக்கு அசையா சொத்து கிடைக்க 4-ஆம் அதிபதி, 4-ல் நின்ற கிரகம், செவ்வாய், சுக்கிரன், சனி சுபத் தன்மையுடன், லக்ன சுபரின் சம்பந்தம் பெற்று இயங்கவேண்டும்.

சுக்கிரன் - வீடு, வாகன, ஆடம்பரப் பொருட்களின் அதிபதி .

செவ்வாய் - பூமிகாரகன்.

சனி - கர்மக் காரகன், விதிப் பயனைப் பெற்றுத் தருபவர்.

ஜனன கால ஜாதகத்தில் நான்காம் பாவகம் எனும் சுக ஸ்தானத்தின் அடிப்படையிலேயே வீடு, வாகன யோகம், பூமி யோகம், கல்வி நிலை, கால்நடை வளர்ப்பு யோகம் கிடைக்கும்.

அதனால் 4-ஆம் அதிபதி நீசம், அஸ்தமனம், வக்ரம் மற்றும் கேந்திராதிபத்திய தோஷம் பெறாமல் இருக்கவேண்டும்.

4-ஆம் அதிபதி 6, 8, 12 போன்ற மறைவு ஸ்தானங்களுடன் சம்பந்தம் பெறாமல் இருக்கவேண்டும்.

4-ஆம் அதிபதி மற்றும் செவ்வாய்க்கு சனி, ராகு, கேது போன்ற அசுப கிரகங்களின் சம்பந்தம் இல்லாமல் இருந்தாலே வாஸ்துக் குற்றமில்லாத சிறப்பான வீடு அமைந்து விடும்.

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் பாவகத்துடன் தொடர்புடைய கிரகங்கள் ஏற்படுத்தும் சொந்த வீடு, மனை யோகங்களைக் காணலாம்.

4-ல் சூரியன் இருந்தால் ஜாதகரின் சுய உழைப்பில் மத்திம வயதிற்குப் பின்பே வீடு யோகம் உண்டு. இவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஒத்து ழைப்பு கிடைக்காது. அதனால் எவ்வளவு நல்ல வீடு அமையப்பெற்றாலும் உடல் ஆரோக் கியத்தில் லேசான பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும்.

4-ல் சந்திரன் இருந்தால் சொந்த வீடு இருந்தாலும் அடிக்கடி இடமாற்றம் ஏற்படும்.

எத்தகைய வீட்டில் வசித்தாலும் சுகபோகங் களும் மிகுதியாகவே இருக்கும்.

4-ல் செவ்வாய் இருந்தால் இளம் வயதிலேயே வீடு, மனை யோகமுண்டு. இவர் களுக்கு மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லும் தன்மை குறைவென்பதால் வீட்டில் குழப்பமும் கலகமும் இருந்துகொண்டே இருக்கும். லக்ன சுபர் அல்லது குருவின் பார்வை இருந்தால் எந்தவித பாதிப்பும் இருக்காது.

அசுப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் வாஸ்துப்படி கட்டப்பட்ட வீடாக இருந் தாலும் அமைதி கிடைக்காது.

4-ல் புதன் இருந்தால் கலை நயமிக்க வீடு வாசல் ஏற்படும். உற்றார்- உறவினர்களால் ஆதாயம் உண்டு. எத்தகைய அமைப்புடைய வீட்டில் வாழ்ந்தாலும் தங்களது புத்திசாலித் தனத்தைப் பயன்படுத்தி மகிழ்சியாக வாழ்வார்கள்.

4-ல் குரு இருந்தால் 50 வயதிற்குமேல் சிறப்பான வீடு, மனை யோகமுண்டு. எத்தகைய அமைப்புடைய வீடாக இருந்தாலும் குலம் தழைக்கும். வாழ்வின் இறுதிக்காலம் சுகமாகவும் அமைதியாகவும் இருக்கும்.

4-ல் சுக்கிரன் இருந்தால் இளம் வயதிலேயே நல்ல ஆடம்பரமான, அழகான வீட்டில் வாழும் பாக்கியம் உண்டு.

இயல்பாகவே நல்ல வீடு, வாகன யோகம் அமையும்.

வீட்டில் நல்ல பழம் தரும் மரங்கள் இருக்கும். வாஸ்து தோஷம் இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு . தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் ஆறாம் அதிபதி என்பதால் 4-ல் உச்சம்பெறும்போதும், மீன லக்னத்திற்கு அஷ்டமாதிபதி என்பதால் 4-ல் நிற்கும் சுக்கிரன் சொத்தால் வம்பு வழக்கையும் தருவார்.

4-ல் சனி இருந்தால் பழைய வீடு, ஆச்சாரக் குறைவுடைய வீட்டில் வசிக்க நேரும். லக்ன சுபர் மற்றும் குருவின் பார்வை இருந்தால் பெரிய பாதிப்பு இல்லாத வீடு, மனை அமைந்தாலும் மன அமைதி கிடைக்காது.

gg

4-ல் ராகு இருந்தால் பிரம்மாண்டமான வீடு, மனை யோகமுண்டு. அண்டை அயலாருடன் கருத்து வேறுபாடு இருக்கும். அடிக்கடி வீடு மாற்றும் நிலையிருக்கும். எப்படி சரிபார்த்துக் கட்டினாலும் வாஸ்துக் குறைபாடு இருந்து கொண்டே இருக்கும். மன அமைதி குறையும்.

4-ல் கேது இருப்பின் பூர்வீக வீடுகளில் வசிக்க இயலாது. இருந்தாலும் இழப்பு ஏற்படும். எளிதில் சொந்த வீடு அமையாது. அப்படி அமைந்தாலும் வாஸ்துக் குற்றமும் பூமி தோஷமும் மிகுதியாக இருக்கும்.

4-ல் மாந்தி இருந்தால் பூமியின் அதிர் வலைகள் சிறப்பாக இருக்காது. மாந்தி நின்ற ராசியாதிபதிக்கு லக்ன சுபர் மற்றும் குருபார்வை இருந்தால் பெரிய பாதிப்பு இருக்காது. மிகுந்த வீடு, மனை ஏற்படும் .

ராகு- கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகத்துடன் மாந்தி சம்பந்தம் பெற்றால் வீடு, மனையானது மயானத்திற்கு அருகிலேயே அமையும். வீட்டில் கொலை, களவு ஏற்படும்.

இந்த கட்டுரையில் சிறிய வாஸ்துக் குறைபாட்டை சரி செய்தால் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படும் என்பதை உதாரண ஜாதகத்துடன் காணலாம்.

ஒரு வீட்டிற்குத் தலைவாசல் என்பது மிக முக்கியம். வீட்டிற்கு மட்டுமல்லாமல் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்துக் கட்டடங்களுக்கும் தலைவாசல் முறையாக இருக்கவேண்டும். தலைவாசல் சரியாக இருந்தாலே பெரிய பாதிப்பின்றி வாழ்ந்து விடலாம். பலருக்கு கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த வீட்டு மனையில் மட்டுமே வாழவேண்டுமென்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. மனை எந்த திசை பார்த்ததாக இருந்தாலும் தலைவாசல் கிழக்கு அல்லது வடக்கு ஒட்டிய உச்சப் பகுதியில் இருந்தால் சுபிட்ச வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நல்ல பலன்களும் தேடி வரும்.

மேலும் உச்ச பகுதியில் வாசல் வைக்கும்போது வீட்டிற்குத் தேவையான போதிய சூரிய வெளிச்சம், காற்று வீட்டில் கிடைத்து, எதிர் மறை சக்திகள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் அகன்று சுபிட்சமாக சூழல் நிலவும்.

ஒரு மனை அல்லது வீட்டுக்கு உச்சம் மற்றும் நீச பாகங்கள் இருக்கின்றன. மனை அல்லது வீட்டின் குறிப்பிட்ட ஒரு பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரித்தால், அவற்றில் ஒரு பாகம் உச்சமாகவும், மற்றொரு பாகம் நீசமாகவும் அமைகிறது. அதன் அடிப் படையில்...

கிழக்கு திசையில் வாசல் வைக்க வேண்டுமானால், அது வடக்கு திசையை ஒட்டி இருக்கவேண்டும்.

வடக்கு நோக்கி வாசல் வைத்தால் அது கிழக்கு திசையை ஒட்டி இருக்குமாறு வைக்கவேண்டும்.

தெற்கு திசை நோக்கி வாசல் வைக்க வேண்டுமானால், அது கிழக்கு திசையை ஒட்டி இருப்பது அவசியமாகும்.

மேற்கு திசை நோக்கி வாசல் வைக்க விரும்புபவர்கள், அந்த வாசல் கிழக்கு திசையை ஒட்டி இருப்பது அவசியமாகும்.

இப்படி வாசல் வைப்பதை உச்ச வாசல் என்கின்றோம்.

சுமார் இரண்டு வருடங் களுக்கு முன்பு என்னை சந்தித்த இந்த ஜாதகர் மத்திய அரசு உழியர். ஐந்தாம் அதிபதி சூரியன் நான்கில் ஆறாம் அதிபதி புதன் மற்றும் கேதுவுடன் இருந்ததால், ஜாதகர் பிறந் தவுடன் பூர்வீக சொத்து கைவிட்டுப் போனது. சொந்த வீடென்பது இவரின் வாழ்நாள் லட்சிய மாக இருந்தது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் 4-ல் நின்ற கேதுவின் தசையில் கடன்பட்டு சொந்த வீடு கட்டியுள்ளார். வீடுகட்டிச் சென்றதிலிருந்து கடன் பிரச்சினை, குடும்பத்தில் குழப்பம், நிம்ம தியற்ற சூழல் நிலவியது. பல்வேறு முயற்சி செய்தும் வீட்டை விற்க முடிய வில்லை . வீட்டை விற்கமுடியுமா என்ற கேள்விக்காக அணுகினார். அவருடைய ஜாதகத்தை ஆய்வு செய்தததில் 4-ஆம் அதிபதி சந்திரன் பரம நீசம்,4-ல் செவ்வாய் நீசம் என 4-ஆம் இடத்திற்கு நீச கிரகத் தின் தாக்கம் மிகுதியாக இருந்ததது. 4-ஆம் இடத்திற்கு சனியின் பார்வையும் இருந்த தால் ஜாதகரின் வீட்டின் தலைவாசல் நீசப்பகுதியில்இருக்கவேண்டுமென்பது உணரப்பட்டது.

ஜாதகரிடம் விசாரித்தபோது தலை வாசல் நீசப்பகுதியில் இருப்பதை உறுதிசெய்தார். அதை உச்சப் பகுதிக்கு மாற்றியமைக்க பரிந்துரைக்கப்பட்டது.

கட்டமைப்புகளில் உச்சம் மற்றும் நீசப் பகுதிகளை முறையாகஅமைத்துக் கொண்டால், வாழ்க்கை நல்லவிதமாக அமையும். எளிய தீர்விற்கு ஏன் வீட்டை விற்க வேண்டும்? பலர் என்ன பிரச்சினை என்று தெரியாமலே வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒருவருடை சுய ஜாதக அடிப்படையில் மட்டுமே வீட்டின் கட்டமைப்பு உருவாகும். ஜோதிடமும் வாஸ்துவும் இரட்டைப் பிறவிகள். இதுபோன்ற முக்கியமான சுப நிகழ்வுகளுக்கு ஜோதிட ஆலோசனை, வாஸ்து ஆலோசனை மிக அவசியம்.

பரிகாரம்

வாஸ்துக் குறைபாட்டால் மன உளைச் சலை சந்திப்பவர்கள் செவ்வாய்க் கிழமை மதியம் 3.00 மணி முதல் 4.00 மணிவரையிலான சுக்கிர ஓரையும் ராகு வேளையும் இணைந்த நேரத்தில் செவ்வரளிப் பூவால் வாராகி அம்மனை வழிபடவேண்டும்.

செல்: 98652 20406

bala110920
இதையும் படியுங்கள்
Subscribe