சிலர் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்திருப்பார்கள். வருமானம் பல மடங்காகப் பெருகி லாபம் கொட்டோகொட்டென கொட்டி யிருக்கும். வீடுவாசல், நில புலமென்று வாங்கி சந்தோஷமாக வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை அடைந்திருப்பார்கள். இந்த முன்னேற்றத்தைப் பார்க்கும் சிலரின் பார்வையிலிருந்து வெளிவரும் கண் திருஷ்டி யானது மிகமிக மோசமானது.
நம்முடைய நம்பிக்கை, உழைப்பு, திறமை எல்லாவற்றையும் ஒரு நொடிப்பொழுதில் அழிக்கக்கூடிய சக்தியும் கண் திருஷ்டிக்குண்டு. கண் திருஷ்டி நம்மை அண்டாமல் இருக்கவும், மனவுறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழவும் வாராஹி அம்மன் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.
இந்த வழிபாட்டுக்கு நமக்கு ஒரு வெற்றிலையும், ஒரு எலுமிச்சம்பழமும் போதும். வாராஹி அம்மனின் திருவுருவப்படம் உங்கள் வீட்டில் இருந்தாலும் சரி; இல்லையென்றாலும் சரி- இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வாராஹியம்மனின் திருவுருவப்படம் இருந்தால், அந்த படத்தின் முன்பு விளக்கேற்றி வைக்க வேண்டும். திருவுருவப்படம் இல்லையென்றால் தீபத்தை ஏற்றி, தீபச்சுடரை வாராஹியம்மனாக மனதார நினைத்து வழிபாடு செய்யலாம்.
தினமும் காலையில் எழுந்தவுடன் தூய்மையாகக் குளித்துவிட்டு, பூஜையறைக்கு வந்து அமர்ந்து தீபமேற்றி வைத்துவிட்டு, விளக்கிற்கு முன்பாக ஒரு சிறிய தட்டில் வெற்றிலையின்மேல், எலுமிச்சம் பழத்தை வைத்துவிடுங்கள். ஏற்றி வைத்திருக்கும் விளக்கிற்கு முன்பாக அமர்ந்துகொள்ளவேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி வாராஹியம்மனை முழு மனதோடு நினைத்து, "ஓம் மோஹி மோஹின்யை நமஹ' என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரித்து, மனதாரப் பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். வாராஹியம்மனுக்கு நிவேதனமாக கல்கண்டு அல்லது ஏதாவதொரு பழவகையை வைத்தால்கூட போதும்.
மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு கற்பூர ஆராதனை காண்பித்து, பூஜையை நிறைவு செய்து கொள் ளுங்கள். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்களையறி யாமலேயே உங்களைச் சுற்றி ஒரு பாது காப்பு கவசம் வந்துவிடும். மனவுறுதி அதிகரிக்கும். அடுத்தவர்களுடைய கண்பார்வை உங்களின்மீது விழுந்தாலும், அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாது. இதுதவிர செய்வினை, பில்லி சூனியம் போன்ற பாதிப்புகள் அண்டாது. கெட்ட சக்தியால் எந்த காலத்திலும் குடும்பத்திற்குத் துன்பம் வராது.
வாராஹிதேவியை மனமுருகி மேற் சொன்ன மந்திரத்தை உச்சரித்து அழைத் தால், மனம் குளிர்ந்து அந்த அம்பாள் நீங்கள் வைத்திருக்கும் எலுமிச்சம் பழத்தில் அமர்ந்துகொள்வாள். பூஜை நிறைவடைந்த பின்பு அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து, இரண்டாக வெட்டி சாறு பிழிந்து சமையலில் சேர்த்தும் சாப்பிட்டுக்கொள்ளலாம். அல்லது சாறெடுத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரசாதமாகக் குடிக்கலாம்.
தினமும் எலுமிச்சம் பழத்தை உணவோடு சேர்த்துக்கொள்ள முடியாதென்றால், எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி, அதன்மேல் குங்குமத்தைத் தடவி நிலைவாசலில் வைத்துவிடுங் கள். எலுமிச்சம்பழம் காய்ந்தபிறகு அதையெடுத்து கால்படாத இடத்தில் போட்டுவிடலாம். இந்த பூஜையை தினந் தோறும் செய்யமுடியும் என்பவர்கள் செய்யலாம். அல்லது வாரத்தில் இரண்டு நாள் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் மாதந்தோறும் வரக்கூடிய பஞ்சமி திதியன்றா வது வாராஹிதேவியை நினைத்து இந்த பூஜையை வீட்டில் செய்யும்போது உங்கள் குடும்பம் செல்வச் செழிப்போடு, வாராஹியம்மனின் அரவணைப்பில் வளமாக வாழும் என்ற நம்பிக்கையுடன் அந்த அம்பாளை வேண்டிக் கொள்வோம்.
செல்: 98425 50844