Advertisment

வளமான வாழ்வு தரும் வாராகியம்மன் திருநாமங்கள்!

/idhalgal/balajothidam/varagiyamman-thirunamal-which-gives-prosperous-life

க்கிர தெய்வங்களில் ஒருவரான வாராகியம்மன், வராக மூர்த்தியின் அம்ச மாகவே திகழக் கூடியவர். நிலத்திற்கு அதிபதி யாக இருக்கும் இந்த அம்மனை நிலம் தொடர் பான வேலை செய்பவர்கள் அனைவரும் வழிபட வேண்டும். அதனால் அவர்களுடைய தொழிலில் அனைத்துவிதமான நன்மைகளும் உண்டாகு மென்று கூறப்படுகிறது. மற்ற தொழிலைச் செய்பவர்களும் இந்த தெய்வத்தை வழிபடலாம்.

Advertisment

யாரொருவர் முழு மனதோடு இந்த தெய்வத்தை வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வாழ்க்க

க்கிர தெய்வங்களில் ஒருவரான வாராகியம்மன், வராக மூர்த்தியின் அம்ச மாகவே திகழக் கூடியவர். நிலத்திற்கு அதிபதி யாக இருக்கும் இந்த அம்மனை நிலம் தொடர் பான வேலை செய்பவர்கள் அனைவரும் வழிபட வேண்டும். அதனால் அவர்களுடைய தொழிலில் அனைத்துவிதமான நன்மைகளும் உண்டாகு மென்று கூறப்படுகிறது. மற்ற தொழிலைச் செய்பவர்களும் இந்த தெய்வத்தை வழிபடலாம்.

Advertisment

யாரொருவர் முழு மனதோடு இந்த தெய்வத்தை வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

vv

வாராகி நாம வழிபாடு

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான பெயர்கள் இருக்கும். அந்த தெய்வத்திற்குரிய 108 போற்றிகள், 1008 போற்றிகள் என்று பல போற்றிகள் இருக்கும். அம்மன் என்றால் பல அவதாரங்கள் இருக்கும். அந்த அவதாரத்திற்குரிய பெயர் களைக் கூறி வழிபடும்பொழுது நமக் குப் பலன் அதிக அளவில் கிடைக்கும்.

Advertisment

வாராகியம்மனுக்கு உகந்த தினமாகக் கருதப்படுவது பஞ்சமி திதி. பஞ்சமி திதியன்று வாராகியம்மனை மிகவும் எளிமை யான முறையில் வழிபாடு செய்யலாம். தொடர்ந்து எட்டு பஞ்சமிகள் நாம் வாராகியம்மனை ஏதாவது ஒரு வேண்டுதலை நினைத்துக்கொண்டு வழிபாடு செய்ய அந்த வேண்டுதல்கள் நிறைவேறும். விவசாயம் செய்பவர்கள் தங்கள் விளைநிலத்தில் ஒரு அகல் விளக்கை ஏற்றிவைத்து, அந்த அகல் விளக்கை வாராகியம்மனாக நினைத்து வழிபட்டால் விவசாயம் செழிப்புடன் இருக்கும்.

நிலம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர் களும் சரி; சொந்தமாக நிலம் வாங்க ஆசைப்படுபவர் களும் சரி- இந்த அம்மனை தொடர்ச்சியாக வழிபாடு செய்ய, அனைத்து விதமான நன்மைகளும் நடை பெறும். வாராகியம்மனுக்கு தீபமேற்றி வைத்து, மண்ணிற்கடியில் விளையக்கூடிய பொருட்களை நைய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வது சிறப்பு.

விரலிமஞ்சள் மாலைகட்டி அணிவிப்பதும் நல்ல பலனைத் தரும். அப்படி வழிபாடு செய்யும்பொழுது, அந்த அம்மனுக்குரிய நாமங்களையும் சேர்த்து உச்சரித்து வழிபட்டால் நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும். பஞ்சமி தினத்தில் மட்டுமல்லாமல், தினமுமே இந்த நாமங்களை நாம் உச்சரிக்கும்பொழுது வாராகியம்மன் நமக்கு உறுதுணையாக வந்து நம்மைக் காத்து ரட்சிப்பார்.

வாராகியம்மனின் நாமங்கள்

ஸ்ரீ தண்டநாதாயை நமஹ

ஸ்ரீ தண்டநாதேஸ்வரியை நமஹ

ஸ்ரீ சங்கேதாயை நமஹ

ஸ்ரீ சமேஸ்வரியை நமஹ

ஸ்ரீ சமய சங்கேத்தாயை நமஹ

ஸ்ரீ வாராகியை நமஹ

ஸ்ரீ போத்ரின்யை நமஹ

ஸ்ரீ சிவாயை நமஹ

ஸ்ரீ வார்த்தாளி நமஹ

ஸ்ரீ மகாசேனா நமஹ

ஸ்ரீ ஆக்ஞா சக்ரேஸ்வரி நமஹ

ஸ்ரீ அரிக்னியை நமஹ

செல்: 98425 50844

bala081124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe