தினமும் ஏதாவதொரு வங்கியிலிருந்து போன்செய்து, "சார், கடன் வேணுமா? குறைந்த வட்டியில் கடன் தருகிறோம்' என்று கேட்கிறார்கள்.

Advertisment

"இப்போ வங்கியில நிறைய சலுகை இருக்கு. ப்ராசசிங் கட்டணம் கிடையாது. எந்த டாக்குமென்டும் தேவையில்லை. சிபில் ஸ்கோர்கூட தேவையில்லை' என எதையாவது சொல்லிக்கொண்டு அழைப்புவரும்.

அன்பு, உறவு, உழைப்பு என தொடங்கி இறப்பு வரை, எல்லாவற்றையும் பணமாகப் பார்க்கும் இன்றைய உலகில், பொதுவாகப் பாருங்கள்... எல்லாருடைய பிரச்சினைக்கும் அடிப்படையில் இருப்பது ஒன்றுதான்... அதான் "பணம்...'

இன்றையநாளில் பணம் சம்பாதிப்பது என்றதும் பலரும் கைகாட்டுவது பங்குச் சந்தையைதான். "பாருங்க சார்... 50 ஆயிரத்தில் இருந்த சென்செக்ஸ் இப்போ 62 ஆயிரத்தை தாண்டிவிட்டது' என்று நமக்குப் பாடமெடுப்பார்கள்.

Advertisment

சிலர் மியூச்சுவல் பண்டு என்று அந்தப் பக்கம் திரும்பி நிற்பார்கள். நிலம் ரியாட் என்று இன்னொரு பக்கம்- விவசாயம், வியாபாரம் என்று இன்னொரு பக்கம்...

இதைவிட, காலையில் பங்குச் சந்தை, மாலையில் கமாடிட்டி சந்தை, இரவில் கரன்சி சந்தை என ஒருநாளில் இருபத்துநான்கு மணி நேரமும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறதென சொல்வார்கள்.

வாய்ப்பெல்லாம் இருக்கிறது சரி... ஆனால், அந்த வாய்ப்பில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு நமக்கு இருக்கிறதாவென தெரிந்து கொள்ள வேண்டாமா?

Advertisment

உதாரணமாக, குறைந்த விலைக்கு வாங்கிய ஒரு பங்கின் விலை உயர்கிறதென்றால் அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே லாபம் பெற்றுத்தரும். எந்த பங்கை வாங்குவது- எப்போது விற்பது என்பதில் வேறுசிலருக்கு சிக்கல், பொறுமையில்லாத தன்மை, அவசரம், பேராசை என பல கூறுகள்.

இதில் எங்கே சம்பாதிக்க? சில நூறுகளை சம்பாதித்துவிட்டு பல ஆயிரங்களை விடும் புத்திசாலிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று, உங்கள் அனுபவத்தையும் சேர்த்து சொல்லும் "முனகல்' சத்தம் கேட்கிறது.

"சரி; இதற்கு என்ன செய்ய..?' என்பதுதானே உங்கள் கேள்வியாக இருக்கும். கொஞ்சம் இந்த பக்கம் வாருங்கள். சோதிடத்திலுள்ள சில நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

கிரகங்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நகர்ந்து வரும். இந்த அமைப்பைக்கொண்டே கோட்சாரப் பலன்கள் சொல்லப்படுகிறது. இந்த கோட்சாரத்தை நமது பிறப்பு ஜாதகத் துடன் இணைத்து கிரக இணைவுகளைப் படிக்கும்போது, அன்றைய பங்குச் சந்தை லாபம் தருமா என்று சொல்லமுடியும்.

இன்றைய பங்குச் சந்தையில் Intra day-யில் எப்போது வாங்கலாம் என்பதுமுதல் இன்று எந்த Segment-ல் விளையாடவேண்டும் என்பதுவரை சொல்லமுடியும்.

"ஆஹா.. அப்படியா?' என்று கேட்கவரும் உங்கள் ஆர்வம் புரிகிறது. முதலில் ஐந்து அடிப்படைகளைப் புரிந்துகொள்ளுங்கள்.

dd

1. உலகத்தில், எந்தத் தொழிலாக இருந்தா லும் இந்த மூன்று பிரிவில் அடக்கிவிடலாம். அதாவது, உற்பத்தி செய்து தருதல்; அடுத்தது, வாங்கி விற்கும் வியாபார சந்தை; மூன்றாவதாக சேவைத் தொழில்கள். இந்த அடிப்படையில் கிரகரீதியாகப் பிரித்துக் கொண்டுவிட்டால் மற்றது சுலபம். இரும்பென்றால் சனி, தங்கமென்றால் குரு, வெள்ளியென்றால் சுக்கிரன் என்பதுபோல, 2. முழுமையாகப் பங்குச் சந்தையைத் தெரிந்துகொள்ளாமல், "அவர்கள் டிப்ஸ் தருகிறார்கள்; இவர்கள் வாங்குகிறார்கள் என்று வாங்காதீர்கள்.

3. ஒரு நாளைய ஒரு சந்தையிலேயே Intra day, Delivery, F&O, BTST என பல முறைகள் இருக்கின்றன. இது அது என ஓடாமல் ஒன்றை முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள். அதில் விளையாடுங்கள்.

4. Go with FLOW என்று சொல்வதுபோல, சந்தையின் போக்கிற்கேற்ப உங்கள் சந்தை நாளைக் கழிக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். இன்றே சம்பாதிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நாம் உயிருடன் இருக்கும்வரை சந்தையும் இருக்கு மென்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

5. ஆசையையும் தேவையையும் சமன்செய்து, உங்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தராமல் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் உள் மனது சொல்வதைக் கேளுங்கள்.

இது மட்டுமல்ல; ராகுவும், புதனும், சந்திரனும் அன்றைய சந்தை நிலவரத்தை நமக்கு அடையாளம் காட்டும்.

இதில் 2, 9, 11-ஆம் பாவங்கள் பாவாதி பாவம். அதில் தொடர்புடைய கிரகங்கள், அன்றைய கோட்சாரம், இத்துடன் 6, 8 என வரிசையாகப் புரிந்துகொண்டால் முதலை இழக்கவேண்டிய அவசியமில்லை.

அதனால்தான் பாருங்கள்... சந்தை உயர்ந்து வரும்; ஆனால் சிலருக்கு லாபம் உயராது. இன்னும் சிலர் நஷ்டத்தை சந்திப்பார்கள்.

இன்னிக்கே சம்பாதிக்க வேண்டும் என்று அவசியம் இல்லையென்று சொன்னால் ஏற்றுக்கொள்ள சிலர் தயங்குவார்கள்.

தாரா பலன், சந்திர பலன் பார்க்கும் பலர் பங்குச் சந்தை கோணத்தில் அன்றைய நிலவரத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பங்குகளை வாங்கவோ அல்லது அந்தந்த Segment-ல் விளையாடவோ செய்தால், பங்குச் சந்தை உயர்ந்தாலும், குறைந் தாலும் கவலை கொள்ளத் தேவையில்லை.

இதை சரியாகப் புரிந்துகொண்டால், "உங்களுக்கு பணம் சம்பாதிக்கத் தெரியுமோ?' என்று நீங்கள் அடுத்தவர்களைக் கேட்கலாம்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172