Advertisment

வாஸ்துவின் வலிமை! -வாஸ்து இராமு

/idhalgal/balajothidam/vaasatauvaina-valaimaai-vaasatau-iraamau

"வஸ்' என்னும் சமஸ்கிருத சொல்லி-ருந்து வாஸ்து என்னும் சொல் உருவானது. வாஸ்து என்பது வசிக்கும் இடம்பற்றி அறிந்துகொள்வதாகும். இளங்கோவடிகள், "கோவலனும் கண்ணகியும் வசித்த ஏழடுக்கு மாளிகை யில் நான்காம் அடுக்கு மாளிகை மயனால் அமைக்கப்பட்டதுபோல் இருந்தது' என சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். வாஸ்து கடவுள் எனப்படும் விஸ்வகர்மாவின் மகனே மயன் ஆவார். வாஸ்து சாஸ்திரம் 2,000 ஆண்டுகளுக்குமுன்பே இயற்றப்பட்டுள் ளது. காஸ்யப வாஸ்து சில்ப சாஸ்திரம், பிருஹத் சம்ஹிதா (குப்தர்கள் காலம்), சமரங்கண சூத்திர தாரண போன்ற வடமொழி நூல்கள்மூலம் இதை அறிந்துகொள்ளமுடியும்.

Advertisment

dd

இறைவன் வாஸ்து தேவர்களை அனுப்பி திருக்கோவில்களை நிர்மா ணிக்கக் கூறியதாக புராணங்கள் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது. வாஸ்து விதிகளைப் பின்பற்றி, ஆகம விதிகள் மாறா மல் கட்டப்பட்ட திருக்கோவில்கள், தற்காலத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ததாலும், வாஸ்து விதிகளைப் பின்பற்றாத காரணத்தினாலும் பஞ்சபூத ஆற்றல்கள் கோவிலுக்குக் கிடைக்காமல் வலுவிழக்க நாமே காரணமாக இருக்கிறோம்.

அந

அந்தவகையில், பலநூறு ஆண்டு களுக்குமுன்பு கட்டப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் 14 திவ்யதேசமுமான திருநறையூர் எனும் நாச்சியார் கோவிலின் அமைப்பைப் பார்ப்போம். இங்குள்ள மூலவருக்கு திருநறையூர் நம்பி, ஸ்ரீனிவாசன், வ்யூகவாசுதேவன், சுகந்த வனநாதன் என்னும் திருநாமங்கள் உள்ளன.

தாயார் திருமணக் கோலத்தில் நின்று அருள்பாலிக்கிறாள். பிரம்மாண்ட புராணத்திலும் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள கல் கருடன் மிகவும் சிறப்புவாய்ந்தது. ஒரு சிற்பி ஆகம விதிகள்படி கருடன் சிலையை மிக தத்ரூபமாக செதுக்கி வந்தார். சிற்பி சிலைக்கு உயிரூட்டும் நிகழ்ச்சி செய்ததும், கருடன் சிலை உயிர்பெற்று மேல்நோக்கிப் பறந்ததாம். இதனால் அச்சமுற்ற சிற்பி தன் கையிலிருந்த உளியை வீசினாராம். அந்த உளியானது கருடன் மூக்கில் பட்டு காயம் ஏற்பட்டதாம். அடிபட்ட கருடன் நாச்சியார் கோவிலில் இறங்கிவிட்டாராம். எம்பெருமான் அருளால் வேண்டினோர் அனைவருக்கும் கருடன் அருள்பாலித்து வருகிறார்.

கருடசேவையின்போது மூலவரான கல் கருடன் வீதியுலா வருகிறார்.

அப்போது முதலில் 4 பேர் மட்டும் சுமந்து வருவர். பின்பு 8 பேர்; பின்னர் 16 பேர்; தொடர்ந்து 32, 64, 128 என எண்ணிக்கை செல்லும். மீண்டும் திரும்பவந்து வைக்கும்போது மேற்கண்டவாறு அதே எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வந்து இறுதியில் நான்கு பேர் மட்டுமே மூலவரை கருவறையில் வைப்பர். திருமங்கையாழ்வார் திருவரங்கனுக்கு மதில் எழுப்பினார். இங்கே திருநறையூரில் மடல் எழுதினாராம். கும்பகோணத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பல்வேறு சிறப்புவாய்ந்த நாச்சியார் கோவிலின் பஞ்சபூத ஆற்றல் குறித்து பார்ப்போம்.

கோவிலின் வடக்கில் பஞ்சபூத ஆற்றலில் ஒன்றான நீராற்றல் வலுவாக உள்ளது. நெருப்பு ஆற்றலோடு தொடர்புகொண்ட மடப்பள்ளியும் உள்ளது. நுழைவு வாயிலுக் கும் காற்றுக்கும் தொடர்புள்ளது. அவ்வாற்றலும் நிறைந்துள்ளது. இக்கோவிலின் அமைப்பு கூர்ம (ஆமை) பிருஷ்ட அமைப்பாகும். கூர்ம பிருஷ்டம் என்பது, கோவிலின் மையப்பகுதி உயர்ந்திருக்கும்; சுற்றிவரும் இடம் தாழ்ந்திருக்கும். அவ்வமைப்பில் கடந்த 200 ஆண்டுகளுக்குமுன்பு தவறாக மாற்றியுள்ளதாகத் தெரியவருகிறது. மையப்பகுதியை பிரம்மஸ்தானம் என்பர். அது வெற்றிடமாக இருக்கவேண்டும். மையப்பகுதி வெற்றிடமாக அமைந்து நற்பலன் அளிப்பதாக உள்ளது. பஞ்சபூதங்களில் நில ஆற்றலை இக்கோவில் இழந்துள்ளதால் வருமானம் தடைப்பட்டு நிற்கிறது. இக்கோவிலுக்கு வழக்குகள் அல்லது வருமானம் தடைப்படுதல் அல்லது இவை இரண்டுமே இருக்கும். அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

திருக்கோவிலின் வடக்கில் குளம் அமைந்துள்ளது. இங்குள்ள மணிமுத்தா புஷ்கரணியில் சோழ மன்னன் தெய்வ வாள் பெற்றதாக வரலாறு உள்ளது. ஸங்கர்ஸன தீர்த்தம், பிரத்யும்ன தீர்த்தம், அனிருத்தன் தீர்த்தம், ஸாம்ப தீர்த்தம் உள்ளன. பல்வேறு தோஷங்களையும் சாபங்களையும் தீர்ப்பதாக இந்த புஷ்கரணி உள்ளது. இந்த புஷ்கரணி வடகிழக்கு குறைந்தும் வடமேற்கு வளர்ந்தும் காணப்படுகிறது. இருப்பினும் நீர் ஆற்றல் வலுவாக உள்ளது.

தென்கிழக்கில் மடப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பழைய மடப்பள்ளி பயன்படுத்தமுடியாத அளவில் உள்ளதால் தென்கிழக்கில் புதிய மடப்பள்ளி செயல்படுகிறது. இதுவும் நெருப்பாற்றல் உள்ள இடமே. இருப்பினும் பழைய மடப்பள்ளி புதுப்பிக்கப்பட்டு அங்கு நெருப்பாற்றல் இருந்தால் நற்பலன் அதிகரிக்கும். வீண் வழக்குகளைத் தவிர்க்கலாம்.

பலநூறு வருடங்களுக்குமுன்பு கட்டப்பட்ட கோவில் என்பதால் சாலை உயர்ந்து விட்டது. கோவில் தரைத்தளம் தாழ்ந்துவிட்டது. கோவிலுக்கும் கிழக்கு மதில் சுவருக்கும் இடையே அலுவலகக் கட்டடம், வாகன அறைகள், திருமங்கையாழ்வார் சந்நிதி உள்ளன. இவையனைத்தும் கடந்த 150 வருடங்களுக்குள்ளாக கட்டப் பட்டதாகத் தெரியவருகிறது. அதன்பின்னரே கோவிலுக்கான வருமானம் குறைந்து கொண்டே வந்திருக்கும். அல்லது வழக்குகள் இருக்கும் அல்லது இவை இரண்டுமே இருக்கும்.

ஏற்கெனவே இருந்ததுபோல் அமைப்பு இருந்திருந்தால் தென்னகத்தின் திருப்பதி திருக்கோவில் இதுவாகத் திகழ்ந்திருக்கும். அவ்வளவு செல்வ வளங் கள் வந்துசேரும் இடமாக இக்கோவில் அமைப்பு முன்பு கட்டப்பட்டிருக் கிறது.

பஞ்சபூத ஆற்றல் வலுவிழந்தால் திருக்கோவிலுக்கும் வருமானம் தடைப் படும். வீட்டிற்கும் இவை பொருந்தும். நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்தின் ஆற்றலை கோவிலுக்கும், வீட்டிற்கும் கொண்டுவந்து வளமோடு வாழ்வோம்.

செல்: 94434 80585

Advertisment
bala190822
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe