சென்ற இதழ் தொடர்ச்சி...

ravanan

Advertisment

ன்னுடைய வணிகத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக மகனை வெளிநாட்டில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிக்க வைத்திருக்கிறார் இந்த ஜாதகர். ஏழு வயதிலிருந்தே தன் மகனை விடுதியிலேயே தங்கிப் படிக்க வைத்திருக்கிறார். செவ்வாய், ராகு தசையின் சாரநாதன் சூரியன் ராசிக்கட்டத்தில் 8-ல் நின்றதால் பூர்வீகத்தைவிட்டு விடுதியில் தங்கிப்படிக்க நேர்ந்திருக்கிறது.

பாவக மாற்றத்தில் சூரியன் 9-க்குச் செல்கிறது. 5-ஆம் அதிபதி சூரியன் 9-க்குச் சென்றதால் பூர்வீகத்தைவிட்டுச் சென்றார் என்றும் பலன் சொல்லலாம். 9-ல் சூரியன் காரகோபாவ நாஸ்தி. செவ்வாய், ராகுவின் சாரநாதன் சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம் 8-ல் நின்ற கிரகம் மறைவு வாழ்வை தந்துவிட்டது என்பதை உணர்த்தவே. குரு தசை தொடங்குவதற்கு இரண்டு வருடத்திற்குமுன் வெளிநாட்டில் கிடைத்த வேலையை மறுத்துவிட்டு வியாபாரத்திற்கு வந்திருக்கிறார். இப்பொழுது தந்தை, மகனின் கூட்டுக் கர்மாவைப் பார்க்கலாம்.

தற்போது தந்தைக்குச் செவ்வாய் தசை, செவ்வாய் புக்தி 8-11-2018 வரை நடைபெறுகிறது. செவ்வாயின் சாரநாதன் சுக்கிரன். இயங்கும் பாவகங்கள் - 2, 5, 6, 11, 12. மகனுக்கு (வக்ர) குருதசை, குருபுக்தி 12-2-2019 வரை. சாரநாதன் புதன் இயங்கும் பாவகங்கள் - 3, 4, 6, 9, 12.

Advertisment

இருவருடைய ஜாதகத்திலும் 6, 12 மறைவு ஸ்தானங்கள் இயங்குகின்றன. பல கோடி சொத்து இருந்தும், எந்த அவசரத்திற்கும் விற்கமுடியாததற்குக் காரணம்- தந்தையின் தன ஸ்தானத்தில் மகனின் கேது. மகனின் தன ஸ்தானத்தில் தந்தையின் வக்ர புதன். அதாவது வக்ர செவ்வாய்மேல் வக்ரபுதன். மகனின் குரு தசை தந்தைக்கு பாதகாதிபதி. தந்தையின் செவ்வாய்- தசை மகனுக்கு லக்ன, அஷ்டமாதிபதி. தந்தையின் செவ்வாய் மகனின் வக்ர குரு, கேதுவை 4 -ஆம் பார்வையாகப் பார்கிறது. மகனின் குருவை தந்தையின் கேது பார்க்கிறது. இருவரின் குருவும் சஷ்டாஷ்டகம். தந்தையின் சனியின்மேல் மகனின் ராகு. தந்தையின் சுக்கிரன்மேல் மகனின் கேது.

தந்தையின் வக்ர சனி 17.38 டிகிரி. மகனின் வக்ர குரு 19.38 டிகிரி. இரண்டு வக்ர கிரகம் ஒன்றையொன்று- அதாவது தந்தையின் வக்ரசனியும், மகனின் வக்ர குருவும் சமசப்தமாகப் பார்ப்பது மிக அசுபம். தந்தைக்கு குரு பாதகாதிபதி. மகனுக்கு சனி பாதகாதிபதி. இருவரின் பாதகாதிபதியும் ஒருவரையொருவர் பார்ப்பது சிறப்பல்ல.

மகனின் 10-ஆம் அதிபதி சனி 9-ல் இருப்பதால் இந்த ஜாதகரின் கடன் மகனை பாதிக்கும். பாவக மாற்றத்தில் மகனின் சனி 10-க்குச் சென்றாலும், சூரியன் சாரம் பெற்றதால் 12-2-2019-க்குப் பிறகு வரும் சனிபுக்தியில் மகன் வேலைக்குச் செல்லும் வாய்ப்புள்ளது. செழிப்பாக நடந்து கொண்டிருக்கும் வணிகத்தை நடத்துவதே கடினமான இந்த காலத்தில் கடனை சரிசெய்வது சிறிய வயதினருக்கு தொழில் ஆர்வத்தைக் குறைத்துவிடும். 8-4-2018-க்குப் பிறகு சிறிது சிறிதாக மாறுதல் ஏற்படும் என்று கூறப்பட்டது. ஜாதகருக்கும், மகனுக்கும் எளிய "முடக்குநீக்குப் பரிகாரங்கள்' கூறப்பட்டன. எந்த பரிகாரமும் அவர் செய்ய மாட்டார் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். மறைவு ஸ்தானமான 6-ல் நின்று சந்திரன் தசை நடத்திக்கொண்டிருந்ததே பரிகாரம் செய்யாததற்குக் காரணம். மறைவு ஸ்தானமான 3, 6, 8, 12-ல் நின்று ஒரு கிரகம் தசை நடத்தும்போது ஜாதகரை முடிந்தவரை ஊழ்வினையை அனுபவிக்க வைத்தே தசையை முடிக்கிறது.

Advertisment

தந்தைக்கு நான்கு வருடத்திற்கு முன்பு பரிகாரம் கூறப்பட்டது. மகனுக்கு ஒரு வருடத்திற்குமுன்பு கூறப்பட்டது. நான்கு வருடத்திற்குமுன்பு சொன்ன பரிகாரத்தை மூன்று மாதத்திற்குமுன்பு செய்ய ஆரம்பித்திருக்கிறார். விதியை மாற்றமுடியாது என்பது ஜோதிடம். மாற்றமுடியும் என்பது ஆன்மிகம். எதிர்வினைகளான இவை பரிகாரம் என்ற பெயரால் ஒன்றிணைகின்றன.

தமிழ்நாட்டின் குறிப்பிட்டுச் சொல்லும் படியான சில ஜோதிடர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவில் 27-3-2018 அன்று இவருடைய ஜாதகம் ஆய்வு செய்யப்பட்டது. அன்று இவருக்கு சந்திர தசை, சூரியபுக்தி 11-6-2018 வரை இருந்தது. அந்தக் குழுவின் ஆய்வுமுடிவில் கடன்தொல்லை தாங்கமுடியாமல் இவர் 31-3-2018-க்குள் தலைமறைவாவார்;

தன்னையே மாய்த்துக்கொள்வார் என்றெல்லாம் பலன் கூறப்பட்டது.

ஆனால் ஷட்பல நிர்ணயத்தில் ஜாதகரின் லக்னாதிபதி புதன் 12-ல் மறைந்திருந்தாலும் வலிமை குறையவில்லை. லக்னத்தில் 3-ஆம் இடமான புகழைக் குறிக்கக்கூடிய கிரகமான சூரியன் இருந்ததால் மனவலிமையுடன் போராடி தன் முயற்சியைக் கைவிடாமல் தற்போது சிறிது தொழில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.

தந்தையின் பணம், சொத்து, தொழில் முழுவதும் மகனுக்குச் செல்ல வேண்டுமென்றால் தந்தையின் குருவும் சனியும், மகனின் குரு, சனிக்கு 6, 8, 12-ஆக இருக்கக்கூடாது. ஒருவருடைய பாதக, மாரக தசைகள் மற்றவரை பாதிக்கக் கூடாது. 6, 8, 12-ஆம் அதிபதிகள் 6, 8, 12-ல் நின்ற கிரகங்கள் தசை நடத்தக்கூடாது. மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் சரியும்போது தசாபுக்திகள் 6, 8, 12- ஆகவே இருக்கும். மறைவு ஸ்தானங்களில் நின்று தசை நடத்தினால் விபரீதராஜ யோகம் என்று பலர் தவறாக முடிவெடுக்கிறார்கள். ஒரு மறைவு ஸ்தானாதிபதி இன்னொரு மறைவு ஸ்தானத்தில் நின்று தசை நடத்தினால் மட்டுமே விபரீத ராஜயோகம். மற்ற நேரங்களில் அது விபரீத ருணம்.

ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் வக்ரம், நீசம், அஸ்தமனம், ஆட்சி, உச்சம் என எந்த நிலையில் இருந்தாலும், ஷட்பலத்தின்மூலம் கிரகங்களின் வலிமையை நிர்ணயம் செய்யும் போது பலன் 100 சதவிகிதம் துல்லியமாக இருக்கும். ஷட்பல நிர்ணயத்தில் மகனின் குரு, செவ்வாயின் ( லக்னம்) வலிமை குன்றியுள்ளதால் இவருக்கு சொந்தத்தொழிலைவிட அடிமைத்தொழிலே மிகச்சிறப்பு. ஜோதிடர் எப்பொழுதும் நமக்கு சாதகமாகப் பலன் சொல்லவேண்டும் என்று விரும்பக் கூடாது. ஜோதிடர் கூறும் வழிபாட்டுப் பரிகாரமுறைகளை முறையாகக் கடைப்பிடித்துவந்தால் மேலும் சரிவு ஏற்படாமல் ஜாதகரை நிச்சயமாகக் காப்பாற்றமுடியும்.

6, 8, 12 அதிபதிகள், 6, 8, 12-ல் நின்ற கிரகங்களின் தசை வரும்போது 1, 5, 9 வலிமை பெற்றவருக்கு தொழிலை மாற்றிவிட்டு, சைலன்ட் பார்ட்னராக வேடிக்கை பார்த்தால் தப்பிக்கமுடியும்.

ஒரு குடும்பத்தை நடத்துவதில் கணவன், மனைவி இருவருக்கும் பங்கு இருப்பதுபோல் தந்தையின் தொழில், சொத்து, பொருளாதாரத்தை அனுபவிக்கும் பாக்யம் குழந்தைகளுக்கும் இருக்கவேண்டும். ஜாதகம் பார்க்க வருபவரில் பலருக்கு குடும்பத்தில் ஒரு பிரச்சினை என்றால் யாருடைய ஜாதகத்தைப் பார்ப்பது என்ற பெரிய சந்தேகம் உள்ளது. எந்த பிரச்சினை குறித்து ஜாதகம் பார்க்க வருகிறார்களோ அந்த பிரச்சினைக்குத் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவருடைய ஜாதகத்தையும் ஆய்வு செய்யும்போது மட்டுமே தெளிவான தீர்வு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருடைய ஜாதகத்திலும் குறிப்பிட்ட சில கிரகங்களின் மையப்புள்ளிகள் ஒன்றுசேரும்போது சில, பல பெரிய மாற்றம், ஏமாற்றங்களைத் தருகிறது.

ஒரு ஜாதகரின் பணம் குரு பார்க்கின்ற உறவுகளுக்குச் செல்லும். குரு 8-ஆம் இடத்தைப் பார்த்தால் வழக்கு, நோய் இவற்றிற்கு பணம் போகும். குரு லக்னம், லக்னாதிபதியைப் பார்த்தால் ஜாதகரே வரும் வருமானத்தை அனுபவிப்பார். குரு, சுக்கிரன் தொடர்பு லக்னத்திற்கு இருக்கவேண்டும்.

அப்படி இருந்தால்தான் சிறந்த ஜாதகம்.

அதேபோல் ஐந்து, ஒன்பதாம் பாவம் தொடர்பு லக்னத்திற்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் சம்பாதித்த பணத்தை தானே அனுபவிப்பார்.

ஒரு மனிதருடைய வாழ்க்கை அவர் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களைப் பொருத்தே அமைகிறது என்று வேதங்கள் சொல்கின்றன. ஜோதிடம் என்பது வேதங்களில் ஒரு அங்கமே. ஆகவே, மனிதர்கள் இப்பிறவியில் அனுபவிப்பதெல்லாம் அவரவருடைய கர்மப்பலன்களேயாகும். இந்த கர்மப்பலன்களைக் கொடுக்கும் கிரகம் கர்மகாரகன் சனி பகவான். இந்த பலன்களை அனுபவிப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவைக் குறிக்கும் கிரகம் குரு. ஜீவாத்மாவான மனிதருக்கு ஏதாவது ஒரு ஆசை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். ஆசைகளை ஒழித்துவிட்டால் மனம் பரமாத்மாவிடம் ஐக்கியமாகிவிடும். எனவே மனிதராகப் பிறந்தவருக்கு ஏதாவது ஒரு ஆசை இருக்கத்தான் செய்யும். சிலர் நாம் நினைப்பது ஒன்று, நடப்பது வேறொன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். நாம் நினைப்பதுபோலதான் நடக்கும் என்று சிலர் சொல்கின்றனர்.

இந்த முரண்பாடான கருத்துகளுக்கு என்ன காரணம்? ஒருவருடைய விருப்பமும் அனுபவிக்கப்போகும் கர்மப்பலன்களும் ஒன்றாக இருந்துவிட்டால் அவர் நினைப்பதுபோல்தான் அனைத்தும் நடக்கும். வெவ்வேறாக இருந்தால் அவர் நினைப்பதுபோல் நடக்காது. இதற்கு ஜோதிடம் தரும் தீர்வு, இந்த ஜென்மத்தில் உன்னுடைய பாக்கியம் இதுதான் என்பதை உணர்த்துவதே. பாக்கிய பலத்தை நோக்கி நாம் பயணித்தால் வெற்றி நம்மைத் தேடிவரும்.

செவ்வாய் தசை ஆரம்பித்தபிறகு சிறிய தொழில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறுகிறார் இந்த ஜாதகர். செவ்வாய் 11-ல் நின்று, சுக்கிரனின் சாரம் பெற்று தசை நடத்துகிறது. மகனுக்கு குருபுக்தி முடிந்துவிட்டால் தந்தைக்கு இன்னும் சிறப்பாக இருக்கும். செவ்வாய் தசையின் ராகு புக்தி மேலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

செல்: 98652 20406