Advertisment

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (49)

/idhalgal/balajothidam/utalae-una-vaiitau-pautaiya-vaasatau-caasatairama-49

"அனுமிக்க தார ரேகை ஆதித்தன் மேட்டில் ஏறி

பானுமிக்கான் விரலை நோக்கில் பக்குவ பருவ நாளில்

இனமக்கள் கரமை கொள்ள ஏழைக்கு தனம் மிகுந்த

கன மக்கள் ஒருவர் காட்டும் கடிமணம் புரியத்தானே'

பொருள்: களத்திர மேட்டில் தோன்றும் தார ரேகையானது தங்கு தடையின்றி சூரியமேட்டின் மத்திய பாகம்வரை சென்று சூரியவிரலை நோக்கி நின்றால் ஏழைக்கு ஒரு தனவானின் மகள், மனைவியாவாள். அவருடைய வாழ்க்கை நிலைமாறி செல்வந்தராவார்.

பகலும், இரவும் மாறிமாறி வருவதுபோல், சக்கரம் மேலும் கீழுமை சுழல்வதுபோல் வாழ்க்கையின் நிலைகள் மாறிவரும். எதிர்காலத்தை அறியாதவரை, நம் திட்டங்கள், நீரில் எழுதிய எழுத்துகள்போல், நிலையில்லாது போகும். இந்த உலகம், ரகசியம் நிறைந்ததாயும், புரிந்துக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. எதிர்

"அனுமிக்க தார ரேகை ஆதித்தன் மேட்டில் ஏறி

பானுமிக்கான் விரலை நோக்கில் பக்குவ பருவ நாளில்

இனமக்கள் கரமை கொள்ள ஏழைக்கு தனம் மிகுந்த

கன மக்கள் ஒருவர் காட்டும் கடிமணம் புரியத்தானே'

பொருள்: களத்திர மேட்டில் தோன்றும் தார ரேகையானது தங்கு தடையின்றி சூரியமேட்டின் மத்திய பாகம்வரை சென்று சூரியவிரலை நோக்கி நின்றால் ஏழைக்கு ஒரு தனவானின் மகள், மனைவியாவாள். அவருடைய வாழ்க்கை நிலைமாறி செல்வந்தராவார்.

பகலும், இரவும் மாறிமாறி வருவதுபோல், சக்கரம் மேலும் கீழுமை சுழல்வதுபோல் வாழ்க்கையின் நிலைகள் மாறிவரும். எதிர்காலத்தை அறியாதவரை, நம் திட்டங்கள், நீரில் எழுதிய எழுத்துகள்போல், நிலையில்லாது போகும். இந்த உலகம், ரகசியம் நிறைந்ததாயும், புரிந்துக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. எதிர்கால ரகசியங்களை புரிந்து அதற்கேற்றார்போல், நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவுவதே ஜோதிடம்.

Advertisment

vv

விரல் அமைப்பு

சுண்டு விரல் பலன்

சுண்டு விரல் கையின் ஐந்தாவது விரலாகும். கனிஷ்டிகா என்று அழைக்கப்படுகிறது. புதன் மேட்டில் உற்பத்தியாகும். இந்த விரல் ஒருவரின் குணாதிசயங்களையும் மனோ பாவத்தையும் பற்றிய விவரங்களைத் தருகிறது. புதன்மேடும், புதன் விரலும் நன்கு அமைந்தால் கைரேகையில் வேறு குறைபாடுகளிருந்தாலும் அறிவுக்கூர்மையால் வாழ்க்கையை சீராக்கிக் கொள்ளமுடியும்.

* சுண்டு விரலின் அளவும், மோதிர விரல் இரண்டாம் கணுவின் அளவிற்கு இணையாக இருக்கும் அமைப்பு. (மோதிர விரலின் மேல்கோடு அளவிற்கு சமமான அளவில் சுண்டுவிரல் நீளம் இருப்பது)- இதுபோன்ற விரல் அமைப்பை பெற்றவர்கள் சுய சிந்தனையால் வெற்றி பெறுபவர். பொறுமையும், தீர்க்கச் சிந்தனையும் அவர்களுடைய குணங்களாக அமையும்.

* மோதிர விரல் இரண்டாம் கணுவின் கோட்டைவிட (இரண்டாம் அங்குலாஸ்தி) உயரமான சுண்டு விரலைக் கொண்டவர்கள் புதிய எண்ணங்கள் படைப்பாற்றல் மற்றும் கலைத்திறன் மிக்கவர்கள். பெரும்பாலும், விஞ்ஞானிகளாகவோ பலதுறைகளில் ஆராய்ச்சியாளர்களாகவோ விளங்குவார்கள்.

* மோதிர விரலைவிட சுண்டுவிரல் சிறியதாக இருப்பவர் கள், உணர்ச்சிவசப் படுபவர். கருணை உள்ளமும், பிறருக்கு உதவி செய்யும் குணம் உடையவர்கள். பிறரிடம், அன்பை எதிர்பார்த்து ஏமாறுவார்கள்.

* மிகவும் சிறிய சுண்டுவிரல் இருப்பவர்கள் தனிமையை அதிகம் விரும்புவார்கள். புதிய நபர்களுடன் பழகுவதற்கு விரும்பமாட்டார்கள்.அதனால், முன்னேற்றத்திலும் தடை உண்டாகும்.

* சுண்டு விரலின் மேடு சதுரமாக அமைந்தால் தலைமை பொறுப்பை ஏற்கும் குணமுடையவர்கள்.

அஞ்சா நெஞ்சமுடையவர்கள்.

கடின உழைப்பால் தங்கள் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

* சுண்டுவிரல் மேடு கூர்முனையுடன் முக்கோணம் போன்று அமைந்தால் கற்பனை சக்தி அதிகம் கொண்டவர்கள். பெருபாலும், எழுத்தாளர்களாக புகழ்பெற்ற கலைஞர்களாக திகழ்வார்கள். எதையும் எளிதல் புரிந்துகொண்டு செயலில் வெற்றி பெறுவார்கள்.

* சுண்டுவிரலின் மேடு சற்று வளைந்து காணப் படுபவர்கள், பய உணர்வு கொண்டிருப்பார்கள்.

* சுண்டுவிரல்மீதும் சுண்டுவிரல் நகத்தின்மீதும் திடீரென்று தோன்றும் வெள்ளை மச்சம் வெற்றியைக் குறிக்கும். இதற்கு மாறாக, கருப்பு மச்சம் தோன்றினால் அத்தகையவர்களுக்கு கெடு பலனைக்காட்டும்.

சுண்டு விரல்

அங்குலாஸ்தி பலன்

* முதலாம் அங்குலாஸ்தி நீளமாக அமைந்தால், பொய்சொல்பவர்கலாக இருப் பார்கள். மிகவும் குறைவாக அமைந்தால் தன்னலம் மிக்கவர்கள்.

* இரண்டாம் அங்குலாஸ்தி நீளமாக அமைந்தால், செயல்வீரர்கள்.சொன்ன சொல் தவறாதவர்கள். மிகவும் குறைவாக அமைந்தால், தற்பெருமை பேசி காலத்தை வீணாக்குவார்கள்.

* மூன்றாம் அங்குலாஸ்தி நீளமாக அமைந்தால், தீய பழக்கங்களுக்கு அடிமையாவார்கள். மிகவும் குறைவாக அமைந்தால், குற்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

சுண்டு விரல்

குறியீடு

* முக்கோண குறி இருப்பது நல்லது.

* வெட்டுக்குறி இருந்தால், சட்டத்திற்கு புறம் பான செயலில் ஈடுபட்டு, தண்டனை பெறுவார்.

* செங்குத்து கோடுகள் முன்னேற்றம் தரும்.

* குறுக்குக் கோடுகள், வாழ்வில் தடை உண்டாக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala240125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe