பலர் அதிக சிந்தனைகள் காரணமாக இரவில் சரியாகத் தூங்காமல் இருப்பார்கள். அந்த சிந்தனைகளுக்குக் காரணம், அவர்களுடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருக்கும் கிரகமும் சந்திரனும்தான்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், புதன் இருந்து, அந்த புதன் அஸ்தமனமாக இருந்தால், அந்த ஜாதகர் எப்போதும் சிந்தனையில் மூழ்கியிருப்பார். அதன் காரணமாக அவருக்கு சரியாகத் தூக்கம் வராது. இரவு முழுவதும் படுக்கையில் புரண்டுகொண்டிருப்பார்.
ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக- தேய்பிறைச் சந்திரனாக இருந்தால் 22 வயதுக்குமேல் அவர் தன் எதிர்காலம் குறித்த சிந்தனையிலேயே இருப்பார். அதனால் நிம்மதியாக இருக்கமாட்டார். சரியாகத் தூங்கமாட்டார்.
ஜாதகருக்கு சுக்கிரன் சரியில்லாமல் இருந்து, சுக்கிர தசையில் ராகு புக்தி வரும்போது அவர் நிறைய பயத்துடன் இருப்பார். சரியாகத் தூங்கமாட்டார்.
ஒருவருக்கு கோட்சாரத்தில் ஏழரைச் சனி நடக்கும்போது, ராகு 2 அல்லது ராசியில் வந்தால், அவரின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கும். அதைப் பற்றிய சிந்தனையிலேயே எப்போதும் இருப்பார். அவரால் ஒருமணி நேரத்திற்குமேல் தூங்கமுடியாது.
ஒருவருக்கு அஷ்டமச்சனி வரும்போது, அவருக்கு பணப்பிரச்சினை உண்டாகும். அதை எப்படி சரி செய்வதென்ற சிந்தனையிலேயே எப்போதும் இருப்பார். அதனால் சரியாகத் தூங்கமாட்டார்.
அஷ்டமத்திலுள்ள சனி தன் 3-ஆவது பார்வையை 10-ஆவது வீட்டிலும், 7-ஆவது பார்வையை 2-ஆவது வீட்டிலும் வைத்திருக்கும்போது, அந்த மனிதர் கடுமையாக உழைப்பார். எனினும், ஒழுங்காகப் பணம் வராது. அந்த கவலையிலேயே எப்போதும் இருப்பதால், அவர் சரியாகத் தூங்காமல் படுக்கையில் புரண்டுகொண்டே இருப்பார்.
ஒருவருக்கு கோட்சாரத்தில் குரு பகவான் 3-ஆவது இடத்திற்கு வரும்போது, அவருடைய வீட்டில் தேவையற்ற விவாதங்கள் நடக்கும்.
அவருடைய தம்பி, மகன் ஆகியோர்கூட அவரிடம் அவசியமற்ற விஷயங்களைப் பேசுவார்கள். அதனால் அவர் மிகுந்த மனக்கஷ்டத்திற்கு ஆளாகி சரியாகத் தூங்கமாட்டார்.
ஒருவருக்கு ஜென்மச்சனி நடக்கும் போது (அதற்குப் பெயர் விஷ யோகம்) அவருக்குப் பல பிரச்சினைகள் ஏற்படும். அதேநேரத்தில் கோட்சாரத்தில் ராகு 2 அல்லது 8-ல் இருந்தால், அவருடைய வீட்டில் தேவையற்ற விவாதங்கள் நடக்கும். அதன்காரணமாக அவருக்கு சரியாகத் தூக்கமே வராது.
ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், சனி, புதன், 12-ல் சந்திரன் இருந்தால், ஜாதகருக்கு சனி தசையோ சூரிய தசையோ நடக்கும்போது சரியாகத் தூக்கம் வராது. அதிகமாக சிந்திப்பார். வீட்டில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். தன் உடல்நலத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பார். தூக்கத்தில் புலம்புவார். அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிப்பதற்குச் செல்வார்.
லக்னத்தில் செவ்வாய், 3-ல் நீசச் சந்திரன், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அவர் சரியாகத் தூங்க மாட்டார். எப்போதும் சிந்தனை யிலேயே மூழ்கியிருப் பார். மனபயம் அதிகமாக இருக்கும்.
ஒருவர் தன் வீட்டில் வடமேற்கு திசையில் படுத்தால், மேற்கில் தலைவைத்தி ருந்தால் சரியாகத் தூக்கம் வராது. எப்போதும் சிந்தித் துக் கொண்டேயிருப் பார். எதைப் பார்த்தா லும் பயப்படுவார்.
ஒருவரின் ஜாதகத் தில் 7-ல் சூரியன், சுக்கிரன், புதன், 8-ல் செவ்வாய், சனி இருந்து, அவரின் வீட்டின் மத்திய பகுதியில் கிணறு அல்லது நீர்த்தொட்டி இருந்தால், அவரு டைய பிள்ளைகள் சரியாக இருக்கமாட்டார்கள்.
அவர் எப்போதும் அவர்களைப் பற்றிய கவலையிலேயே இருப்பார். அதனால் தூக்கம் வராது.
பரிகாரங்கள்
தெற்கு திசையில் அல்லது கிழக்கு திசையில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.
வீட்டில் பச்சை, அடர்த்தியான நீலம், அடர்த்தியான சிவப்பு வண்ணங்கள் கூடாது.
தினமும் காலையில் குளித்து முடித்து, அரச மரத்திற்கு நீர் வார்க்கவேண்டும்.
மதிய உணவில் தயிர் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இரவில் படுப்பதற்குமுன்பு, சிறிது வெல்லம் சாப்பிடுவது நல்லது.
வீட்டின் வடகிழக்கும், தென்மேற்கும் சுத்தமாக இருக்கவேண்டும்.
வீட்டின் வடக்கில் குளியலறை, கழிவறை இருக்கக்கூடாது.
இரவில் படுப்பதற்குமுன்பு குலதெய்வத்தை அல்லது தன் விருப்பத்திற்குரிய கடவுளை மனதில் நினைத்து வணங்கவேண்டும்.
தலையணைக்குக்கீழே நான்கு பூண்டுத் துண்டுகளை வைத்துவிட்டுத் தூங்க வேண்டும்.
செல்: 98401 11534
ஆறு கிரகச் சேர்க்கை தோஷங்கள், சூரிய கிரகணத் தாக்கம் குறைய சிறப்பு யாகங்கள்!
டிசம்பர் 25 இரவு முதல் டிசம்பர் 27 இரவு வரை சூரியன், சந்திரன், சனி, குரு, புதன், கேது ஆகிய ஆறு கிரகங்கள் ஒன்றாக தனுசு ராசியில் இணைந்திருக்கும். அதன்பிறகு சந்திரன் மகர ராசிக்கு நகர்ந்துவிட்டாலும், ஐந்து கிரகங்களின் கூட்டணி ஜனவரி 13-ஆம் தேதிவரை நீடிக்கிறது. இதில் 26-12-2019 அன்று சூரிய கிரகணமும் நிகழவுள்ளது. இவற்றை முன்னிட்டு 12 ராசிக்காரர்களுக்கும் பரிகாரம் செய்துகொள்ளும் விதத்தில் வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மாபெரும் பரிகார ஹோமங்கள், பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள், ஆதித்ய ஹோமம், காலச்சக்கர பூஜை போன்றவை காலை, மாலை இருவேளையும் நடைபெறவுள்ளன.
இந்த ஆண்டு இறுதிவரை தனுசு ராசியில் சனி, கேது, குரு சஞ்சரிக்கின்றன. இந்த சூழ்நிலையில்தான் சூரியன், சந்திரன், புதன் தனுசுவில் இணையப் போகின்றன. சூரியன், வியாழன் சேர்க்கை பற்றிய பயம் வேண்டாம். இந்த கிரகச் சேர்க்கையினால் பேரழிவு எதுவும் வராது. சூரியனும் சனியும் சேர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் இணைவதால், பிறக்கும் குழந்தைக்கு யோகங்கள் வரும்.
காலபுருஷ தத்துவப்படி 9-ஆம் வீட்டில்- அதாவது தனுசில் குரு ஆட்சி பெற்றிருப்பது மிகச்சிறந்த ஒன்று. டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் இரண்டரை நாட்களில் ஆறு கிரகச் சேர்க்கை அமையும். இதனால் சில யோகங்கள், கிரக யுத்தம் மற்றும் தோஷங்கள் நடைபெறும். ராகுவின் பார்வையும் இந்த காலகட்டத்தில் இடம்பெறும்.
இதனால் சில அரசியல் மாற்றங்கள், சட்டங்கள் இயற்ற முற்படுவார்கள். இத்தகைய சூழ்நிலையில் கர்மாவைப் போக்கிக்கொள்ள தானதர்மம் செய்வதும், ஆன்மிக செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதும் மிக முக்கியமான ஒன்றாகும்.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513. ராணிப்பேட்டை மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274. அலைபேசி: 94433 30203.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-12/verma.jpg)