Advertisment

உபய லக்னங்களும் திருமண வாழ்க்கையும்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/upaya-lagnas-and-married-life-prasanna-astrologer-i-anandis-magazine

தனுசு

உபய லக்னமான தனுசுக்கு புதன் 7, 10-ஆமதிபதி. லக்னாதிபதி குரு. தனுசிற்கு புதனே பாதகாதிபதி, மாரகாதிபதி மற்றும் கேந்திராதிபதியாவார். இந்த லக்னத்தவரின் ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் திருமணத்தில், திருமண வாழ்க்கையில் பாதகத்தைச் செய்வார். குருவுக்கு புதன் சம கிரகம். ஆனால் புதனுக்கு குரு பகை கிரகமென்பதால் குருவின் 5, 9-ஆம் சிறப்புப் பார்வைகள் புதனுக்கிருந்தால் திருமண வாழ்க்கை தித்திக்கும். குரு, புதன் சம சப்தமப் பார்வையிருந்தாலும், புதனுக்கு சந்திரன், ராகு- கேதுக்கள் சம்பந்தமிருந்தாலும் புதன் தசைக் காலத்தில் மாரகம் ஜாதகரைப் பதம்பார்க்கும். மேலும் இவர் களுக்கு புதன், சுக்கிரன், குரு, புதன் சம்பந்தமிருந்தாலும் திருமண வாழ்க்கை சிறக்காது.

Advertisment

ஏழாமதிபதி புதனுக்கு குரு பகை கிரகம். குருவுக்கு புதன் சம கிரகம். ஏழில் குருவுடன் புதன் இணைந்தால் எளிதில் திருமணம் நடப்பதில்லை. நடந்தாலும் பாதகம், மாரகம் இரட்டிப்பாகிறது. ஏழில் புதன் இருக்கும் தனுசு லக்னப் பெண்களுக்கு 27 வயதிற்கு மேலும், ஆணுக்கு 31 வயதிற்கு மேலும் திருமணம் செய்வது நல்லது.

புதன், சந்திரன் சம்பந்தமிருக் கும் பல தனுசு லக்னத்தினர் நரம்பு, மனநோய் மற்றும் சரும நோயால் மண வாழ்வில் பிரச்சினையை சந்

தனுசு

உபய லக்னமான தனுசுக்கு புதன் 7, 10-ஆமதிபதி. லக்னாதிபதி குரு. தனுசிற்கு புதனே பாதகாதிபதி, மாரகாதிபதி மற்றும் கேந்திராதிபதியாவார். இந்த லக்னத்தவரின் ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் திருமணத்தில், திருமண வாழ்க்கையில் பாதகத்தைச் செய்வார். குருவுக்கு புதன் சம கிரகம். ஆனால் புதனுக்கு குரு பகை கிரகமென்பதால் குருவின் 5, 9-ஆம் சிறப்புப் பார்வைகள் புதனுக்கிருந்தால் திருமண வாழ்க்கை தித்திக்கும். குரு, புதன் சம சப்தமப் பார்வையிருந்தாலும், புதனுக்கு சந்திரன், ராகு- கேதுக்கள் சம்பந்தமிருந்தாலும் புதன் தசைக் காலத்தில் மாரகம் ஜாதகரைப் பதம்பார்க்கும். மேலும் இவர் களுக்கு புதன், சுக்கிரன், குரு, புதன் சம்பந்தமிருந்தாலும் திருமண வாழ்க்கை சிறக்காது.

Advertisment

ஏழாமதிபதி புதனுக்கு குரு பகை கிரகம். குருவுக்கு புதன் சம கிரகம். ஏழில் குருவுடன் புதன் இணைந்தால் எளிதில் திருமணம் நடப்பதில்லை. நடந்தாலும் பாதகம், மாரகம் இரட்டிப்பாகிறது. ஏழில் புதன் இருக்கும் தனுசு லக்னப் பெண்களுக்கு 27 வயதிற்கு மேலும், ஆணுக்கு 31 வயதிற்கு மேலும் திருமணம் செய்வது நல்லது.

புதன், சந்திரன் சம்பந்தமிருக் கும் பல தனுசு லக்னத்தினர் நரம்பு, மனநோய் மற்றும் சரும நோயால் மண வாழ்வில் பிரச்சினையை சந்திக்கிறார்கள். 7, 10-ஆமதிபதி குரு 4-ல் நீசம்பெற்றவர்கள் வாழ்க் கையிழந்த ஒருவரைத் திருமணம் செய்தால் நல்ல எதிர்காலம் அமையும். புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் ஏழாமதிபதி ஆட்சி, உச்சம்- சுபப் பலன் என்றே பலர் பலன் கூறுகிறார்கள்.

மாரகாதிபதி ஆட்சி, உச்ச மென்று பலனுரைத்து அதற் குரிய வழிபாட்டு முறைகளைப் பரிந்துரைக்கும்போது பாதகத்தை சாதகமாக்க முடியும். உபய லக்னத்தினருக்கு பாதகாதிபதிகள் வலுப்பெறக் கூடாது. புதன் ஆட்சி, உச்சம்பெற்ற தனுசு லக்னத்தினர் திருமணத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பின்றி வரன் பார்த்தால் திருமணம் சுலபமாக நடை பெறும். திருமணத்திற்குப் பிறகும் தம்பதிகள் அனுசரித்து, விட்டுக்கொடுத்துச் சென்றால் வாழ்நாள் இனிமையாகும்.

Advertisment

மேலும் இவர்களுக்குப் பிறக்கும் இரண்டா வது குழந்தை இரட்டைக் குழந்தையாக இருந் தால் பாதக, மாரக தோஷத்தால் பாதிப்பிருக் காது. புதன் நீசம், அஸ்தமனம் பெற்ற தனுசு லக்னத்தினர் கமிஷன் அடிப்படையிலான சொந்தத் தொழில் செய்வது சிறப்பான பலன் தரும்.

பரிகாரம்

மதுரை மீனாட்சியம்மனை புதன் கிழமை களில் வழிபாடு செய்வது சிறப்பு.

ff

மீனம்

உபய லக்னமான மீனம் காலபுருஷ பன்னிரண்டாமிடம். இதன் அதிபதி குரு. நான்கு, ஏழாமதிபதி புதன் பாதகாதிபதி, கேந்திராதிபதி மற்றும் மாரகாதிபதியாவார். மீனத்தில் உச்சம்பெறும் கிரகம் சுக்கிரன். நீசம்பெறும் கிரகம் புதன். பாதக ஸ்தானமான கன்னியில் புதன் உச்சம்பெறுகிறார். சுக்கிரன் நீசம்பெறுகிறார். புதன் புத்தி, அறிவுக்குக் காரக கிரகமாகும். சுக்கிரன் ஆசைக்குக் காரக கிரகமாகும் புத்தி தெளிந்த இடத்தில் காமத்திற்கு இடமில்லை. அளவில்லாத ஆசையே மனிதர் களின் துன்பத்திற்குக் காரணமென்பதை உணர்த்துகிறது. லக்னம் மற்றும் களத்திர ஸ்தானம் இரண்டுமே உபய லக்னமென்ப தால் தம்பதிகளிடையே புரிதலின்மை மிகுதியாக இருக்கும். லக்னத்தில் சுக்கிரன் உச்சம் பெறுவ தால், கணவனுக்கு அழகு, ஆடம்பரம் மற்றும் இல்வாழ்க்கை நாட்டம் மிகுதியாக இருக்கும். ஏழாமிடத்தில் சுக்கிரன் நீசம்பெறுவதால் மனைவி எளிமையாகவும் கணவரின் உணர்வு களைப் புரிந்துகொள்ளும் தன்மை குறைந்த வராகவும் இருப்பார். லக்னத்தில் புதன் நீசம் பெறுவதால் கணவனுக்கு முடிவெடுக்கும் திறன், திட்டமிட்டு செயல்படும் தன்மை, புத்திக் கூர்மை, கல்வி அறிவின்மை போன்ற குறைபாடுகள் இருக்கும்.

ஏழில் புதன் உச்சம் பெறுவதால் மனைவிக்கு கல்வியறிவு, எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை, திட்டமிட்டு செயல்படும் புத்திக் கூர்மை, சிறப்பான முடிவெடுக்கும் திறனிருக் கும். தம்பதிகளுக்கு வாழ்க்கைத் துணையைப் பற்றிய எதிர்பார்ப்பு, மனக் கற்பனை அதிகமிருக் கும். ஒருவரின் எதிர்பார்ப்பை மற்றவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது தம்பதிகளுக்குள் இணக்கமற்ற மனநிலையை உருவாக்கும். லக்னத் தில் சுக்கிரன் உச்சம்பெற்றவர்களுக்கும், புதன் நீசம்பெற்றவர்களுக்கும் காலதாமத திருமணம் அல்லது திருமணமற்ற நிலை இருக்கும். அதே போல் புதன் சுக்கிரன், புதன் சூரியன் சம்பந்தம் எந்தவிதத்தில் இருந்தாலும் திருமண முறிவு ஏற்படும். புதன், சனி சம்பந்தமிருந்தால் தம்பதி கள் ஒருவருவரையொருவர் நம்பவைத்து ஏமாற்றுவார்கள்.

புதன், சந்திரன் சாரத்தில் நின்றால் காதல் திருமணம் நடக்கும். செவ்வாய் சாரத்தில் நின்றால் புத்திர தோஷம் உண்டாகும்.

இதுபோன்ற காரணங்களால் சிலருக்குத் திருமணம் காலதாமதமாகும். அதேபோல் மீன லக்னம் காலபுருஷ பன்னிரன்டாமிடம் என்பதால் பல தம்பதிகள் தொழில், உத்தியோக ரீதியாக அடிக்கடி பிரிந்துவாழ்கிறார்கள். அல்லது கால், பாதம் தொடர்பான உடல் உபாதைகளால் பிரிகிறார்கள்.

மிகச் சுருக்கமாக, உபய லக்னங்களுக்கு ஏழாமதிபதி ஏழில் இருப்பது நல்லதல்ல. ஏனெனில் உபய லக்னங்களைப் பொருத்தவரை ஏழாமதிபதியே பாதகாதிபதியாகவும் கேந்திராதிபதியாகவும் மாரகாதிபதியாகவும் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற அமைப்பிருப்பதால் உபய லக்னங்களுக்கு ஏழாமதிபதி, 7-ல் நின்று தசை நடத்தும்போது வாழ்க்கைத்துணை வகையில் ஜாதகர் பாதிப்பைச் சந்திப்பார். வாழ்க்கைத் துணையால் ஜாதகருக்கு மனவேதனை, பிரிவு, ஆரோக்கியக் கேடு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். இது போன்ற தருணங்களில் வாழ்க்கைத்துணை உயிர்ரீதியாக பாதிக்கப் படுவரா அல்லது பொருள்ரீதியாக பாதிக்கப்படுவாரா என்பது வாழ்க்கைத் துணையின் ஜாதகத்தில் லக்னம், லக்னாதி பதி, அட்டமாதிபதி மற்றும் இவர்களின் நிலையைப் பொருத்தது. அதேபோல் உபய லக்னங்களுக்கு ஏழாம் வீட்டதிபதி ஏழில் நின்று தொடர்புடைய தசை வராதபொழுது ஜாதகர் அதுகுறித்து கவலைப்பட வேண்டிய தில்லை.

திருமணப் பொருத்ததில் மேற்கண்ட அமைப்பிருக்கும்பொழுது, ஏழாமதிபதி பாவர்களின் தொடர்பைப் பெற்றிருந்தால் திருமணம் செய்யக்கூடாது. ஏழாமதிபதி ஆட்சிபெற்றிருந்து, தொடர்புடைய தசை வராத நிலையில் தாராளமாகத் திருமணம் செய்யலாம். உபய லக்னங்களுக்கு ஏழாமதிபதி ஏழில் ஆட்சி பெற்றிருக்கிறார் என்ற விதியின் அடிப்படையில் மேற்கண்ட விஷயங்களை ஆராயாமல் திருமணப் பொருத்தத்தில் ஜாதகத்தை இணைப்பது தவறு.

இதுபோன்ற அமைப்புகள் இருந்தால் ஏழாமதிபதியின் தசாபுக்திக் காலங்களில் வாழ்க்கைத் துணையை குறிப்பிட்ட சுயபுத்தி முடியும்வரையாவது அனுசரித்துச்செல்வது நல்லது.

செல்: 98652 20406

bala060522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe