னித வாழ்வில் அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய கிரகங்கள் பயணிக்கும் 27 நட்சத்திரக் கூட்டமைப்பில் 13-ஆவது நட்சத்திரம் அஸ்த நட்சத்திரமாகும். இது சந்திரனின் நட்சத்திர வரிசையில் இரண்டாவது நட்சத்திரமாக அமையப்பெறுகிறது. இந்த அஸ்தம் கன்னி ராசியில் தனது நான்கு பாதங்களையும் முழுமையாகப் பதித்தமையால் முழு நட்சத்திரமாகப் பிரதிபலிக்கிறது.

இது ஒளிரும் தன்மை குறைந்த ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமாக அமைந்திருக்கிறது.

அஸ்தம் என்பது சமஸ்கிருத மொழியாகும். தமிழில் அத்தம் என்று உச்சரிக்கலாம். அரபில் அஸ்தத்தை "அல்பு வா' என்று அழைக்கின்றனர். இதனை வெறும் கண்களால் காணமுடியும். இது ஒற்றை மயிற்பீ- போன்று காட்சியளிக்கும். இதன் வடிவம் கை. இது புதன் உச்சம்பெறும் நட்சத்திரமாகும்.

இதன் ராசியாதிபதி புதனாகவும், நட்சத்திராதிபதி சந்திரனாகவும், நவாம்ச நாதர்களாக அஸ்தம் ஒன்றாம் பாதமென்றால் செவ்வாய், இரண்டென்றால் சுக்கிரன், மூன்றென்றால் புதன், நான்காக வரும்பொழுது சந்திரனாக அமையப்பெறுகிறது.

Advertisment

சந்திரன் அஸ்த நட்சத்திர கோணத்தில் பயணிக்கும் நேரத்தில் பிறப்பவர்கள் தங்களை அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். புதன் என்னும் அறிவுசார் ராசியில், மனோகாரகனான சந்திரனின் நட்சத்திரம் பயணிப்பதால் புத்திக்கூர்மையில் சிறப்புடன் விளங்கு வார்கள். இது பரிவர்த்தனையாக எடுத்துக்கொள்ளப்படும். சந்திரனின் கடக வீட்டில் ஆயில்யமும் புதன் வீட்டில் அஸ்தமும் பரிவர்த்தனை யோகத்தைத் தரும். இவர்கள் ஆழ்ந்த புத்திக்கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். மேலும் அமைதியாகத் தங்களின் காரியத்தை சாதித்துக்கொள்வார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பரபரப்பின்றிக் கையாளக் கூடியவர்கள்.

astham

Advertisment

அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர்கள். வாழ்க்கையின் முற்பகுதி இவர்களுக்கு பெரும்பாலும் திருப்தி கரமாக இருப்பதில்லை. வாழ்வின் பிற்பகுதியே இவர்களின் எண்ணப்படி அமையும். இவர் களுக்குத் திருமணம் மற்றும் குழந்தைகள் சார்ந்த நெருடல்கள் வாழ்வில் இருக்கும்.

இவர்களின் வம்சாவளிகளில் இறந்து பிறக்கும் குழந்தைகளும், திருமணத்திற்கு முன்பே இறந்திருக்கும் பெண் வாரிசுகளும் பெரும்பாலும் இருக்கும்.

இவர்கள் நகைச்சுவைப் பிரியர்கள். எந்த முடிவையும் எளிதில் எடுக்கமாட்டார்கள். அமைதியை விரும்புவதால் இவர்களுக்கு சத்தமும் சண்டையும் பிடிக்காது. புதன் எப்பொழுதும் ஆட்களுக்கு தகுந்தாற் போல் மாறிக்கொள்ளும் கிரகம். அதே போன்று இவர்களின் குணமும் இருக்கும்.

ஆணாகவே பிறந்திருந்தாலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சற்று நளினமாகவும் நாசுக்காகவும் நடந்து கொள்வார்கள். காசு பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

இவர்களின் ஜாதகத்தில் சந்திரன் பெரும் வலிமையால் இவர்களின் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது. வளர்பிறைச் சந்திரனில் ஜனித்தவர்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் தகுந்தாற்போல் மாற்றிக்கொண்டு முன்னேறுவார்கள். தேய்பிறைச் சந்திரனில் பிறந்தவர்கள் மனரீதியான உளைச்சல்களுக்கும், தாழ்வு மனப் பான்மைக்கும் தள்ளப்பட்டுக் காணப் படுவார்கள்.

இது குருவின் சாபம் பெற்ற நட்சத்திரமாக அறியப்படுகிறது. இவர்கள் குரல்வளம் மிக்கவர்களாகவும் கலைத்துறையில் சாதிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

அஸ்தம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் மேஷ வீட்டில் அமையப்பெறும். இது கன்னி ராசிக்கு எட்டாம் பாவகமாக அமையப் பெறுவதனால், சற்று போராட்டமான வாழ்க்கையை இவர்கள் சந்திக்கக்கூடும். மேலும் செவ்வாயின் வீடென்பதால், தான் நினைத்த விஷயத்தை எடுத்துக்கூறும் மனோ திடமும், தங்களுக்கு வேண்டியதைப் போராடிப் பெற்றுக்கொள்ளும் குணமும் இவர்களிடையே காணப்படும். அஸ்தம் சந்திரனின் நட்சத்திரமாகவே இருந்தாலும், அங்கு செவ்வாயின் வீட்டில் பிரதிபலிப் பதனால் விவேகத்தைவிட வேகம் அதிகமாகக் காணப்படும். இவர்கள் காவல்துறை, காவல்துறை ஆய்வாளர்கள், அதிகாரம் மிக்க இடங்களில் எழுத்து மற்றும் கோப்புகள் பராமரிக்கும் பணி போன்றவற்றில் இருப்பார்கள். கல்வியில் அதீத ஆர்வம் கொண்டவர்களாகவும், கல்வியின் மூலம் தன்னை சிறப்புறச் செய்துகொள்பவர் களாகவும் அமையப் பெற்றிருப்பார்கள். இவர்களின் வம்சாவளிகளின் இரண்டு திருமணம் சார்ந்த நபர்கள் பயணிக்க வாய்ப்புண்டு.

அஸ்தம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் ரிஷப ராசியில் உச்சத்தை நோக்கி அமையப் பெறும். இந்நிலை மனம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் தன்னை முன்னிலைப்படுத்தி சிறப்புறுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் அழகியல், அழகு சார்ந்த துறை, தன்னை நேர்த்தியாக வெளிக்காட்டிக் கொள்வது, வாசனை திரவியம் மற்றும் அலங் காரப் பொருட்களின்மூலம் தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும் அலங் கரித்துக் கொள்வது போன்ற சூழல்களில் பயணிப்பார்கள். பியூட்டிஷியன், விவசாயம், உணவு சம்பந்தப்பட்ட தொழில் போன்ற வற்றின்மூலம் பெரும் சிறப்பினை அடைவார்கள். மேலும் ராகுவின் காரகமான கெமிக்கல், கரன்சி போன்ற துறைகளிலும் இவர்கள் முன்னிலை வகிப் பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

அஸ்தம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் மிதுன வீட்டில் அமையப்பெறும். அங்கு சந்திரன், புதன் என்ற கூட்டமைப்பு நிகழ் கிறது. இந்நிலையானது மனோதிடத்தில் சிறந்தவர்களாகவும், எண்ணிய காரியத்தை எண்ணியபடியே நிகழ்த்திக் காட்டும் வல்லமை பெற்றவர்களாகவும் இருப்பார் கள். கமிஷன், புத்தகம் எழுதுதல், கோப்புகள் பராமரிப்பது, கன்ஸ்ட்ரக்ஷன், ஒப்பந்தம் போன்ற துறைகளில் தங்களை முன்னிலைப் படுத்தி சிறப்புற வாழ்கின்றவர்கள்.மேலும் இசைப் பிரியர்களாகவும், கலைத்துறையில் பயணிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

அஸ்தம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் கடகத்தில் அமையப்பெறும். இந்நிலை யானது சந்திரன்- சந்திரனின் வீட்டிலேயே ஆட்சிபெறும் நிலை. இவர்கள் வட்ட முகமாகவும், அழகியல் தன்மை கூடியவர் களாகவும், எதையும் அமைதியுடனே சகித்துக்கொண்டு செல்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் வம்சா வளிகளிலும் இருதார அமைப்புகள் இருக்கும். மேலும் உணவு, உணவு சம்பந்தப் பட்ட தொழில்கள், ட்ரான்ஸ்போர்ட், கேப்ஸ், விவசாயம், எழுத்துத் துறை, கலைத்துறை போன்றவற்றில் முன்னிலை வகிப்பார்கள். கல்வியில் அதீத ஆர்வமும், அதன்மூலம் தன்னை சிறப்படையைச் செய்வதில் கண்ணும் கருத்துமாகவும் இருப்பார்கள்.

இந்த அஸ்த நட்சத்திரத்தின் வடிவமாக ஐவிரல் நீட்டிய "ஹஸ்த' முத்திரையாகக் காட்டப்படுகிறது. இவர்கள் தொழில் மற்றும் பணிபுரியும் இடங்களில் இந்த சின்னத்தைப் பயன்படுத்துவதன்மூலம் தங்களுக்கு வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளமுடியும் மேலும் ஒற்றை மயிற்பீலியை இவற்றுடன் சேர்த்தும் வைப்பதனால் நல்ல அதிர்வினை இவர்களால் பெறமுடியும்.

இவர்களுக்கு நீர், தோல் வியாதி, கண்கள் மற்றும் உடலில் கெட்ட நீர் சேர்வது போன்ற சூழ்நிலையினால் மருத்துவத்திற்கு செலவிடவேண்டிய சூழ்நிலைகள் உருவாகலாம். இவர்கள் தர்மத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறார் களோ அதைவிட பலமடங்கு செல்வநிலை உயர்வதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. பௌர்ணமி தினங்களில் இரவு உணவினை நிலவொளியில் வைத்து, பின்பு சாப்பிடு வதன்மூலம் பல மனரீதியான பிரச்சினைகளை இவர்களால் தீர்த்துக்கொள்ள முடியும்.

வணங்கவேண்டிய தெய்வம்: திருப்பதி வேங்கடேசப் பெருமாள்.

வணங்கவேண்டிய விருட்சம்: அத்தி.

அணியவேண்டிய ரத்தினம்: முத்து.

(அடுத்த இதழில் சித்திரை)

செல்: 80563 79988