நமது ராசிகளுக்கும், நாம் பிறந்த நட்சத்திரங்களுக்கும், நம்முடைய லக்னங்களுக்கும் நவ கிரகங்களே காரகத்துவமாகின்றன. தசாபுக்திகளும் நவ கிரகங்களால்தான் நமக்கு உண்டாகின்றன. அத்தகைய நவ கிரகங்களின் ஆதிக்கம் நம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாக மேலோங்கி இருக்கும். அத்த கைய நிலையில் ஒவ்வொருவருடைய ராசி யாதிபதியைக்கொண்டும் அவரவர்களுடைய பொதுப்பலன்களை நம்மால் அறியமுடியும்.
அந்தவகையில் மிதுன ராசியில் பிறந்த வர்களின் பொதுப் பலன்களை இப்போது பார்ப்போம்.
புத்திக்கூர்மையும், அறிவாற்றலும், சாதுரியமும், நிர்வாகத் திறமையும் கொண்ட வர்களாக இருப்பார்கள்.
அடுத்தவரை உற்சாகப்படுத்தி, ஊக்கப் படுத்தி அவர்கள் வெற்றியடைவதற்கு வழிகாட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் சிந்தனைகளும் செயல்களும் மற்றவர்களுக்கும் மேலோங்கியதாகவே இருக்கும். வல்லமை மிக்கவர்களான இவர்களின் ஒவ்வொரு செயல்களும் வெற்றிக்குரியதாகவே இருக்கும்.
பொதுநலனில் நாட்டமுடையவர்களாக இருப்பார்கள். "யான் பெற்ற இன்பத்தை இவ்வையமும் பெறவேண்டும்' என்று எண்ணக் கூடியவர்கள்.
எதிலும் நிரந்தரமான ஈடுபாடு கொள்ளாத வர்களான இவர்களை மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ளமுடியாது. அதே நேரத்தில் இவர்களுக்கு ஒரு விஷயத்தில் பிடிப்பு ஏற்பட்டுவிட்டால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள்- என்ன நினைப்பார் கள் என்பது பற்றியெல்லாம் வருத்தப்படவும் மாட்டார்கள்; யோசிக்கவும் மாட்டார்கள். அதில் முழுமையாக இறங்கி வெற்றியை எட்டி விடுவார்கள். தன்னம்பிக்கையும் பரிபூரண சிந்தனையும் இவர்களை வெற்றியாளராக்கி விடும்.
எல்லாரும் உயர்வடையவும், தாழ்ந்து கிடப்பவரை உயர்த்தவும் எண்ணி வாழ்பவர் கள் என்றே இவர்களைச் சொல்லவேண்டும். பேச்சு, எழுத்து, சிந்தனை, செயல் என எல்லா வற்றிலும் சிறந்து விளங்கிடக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டு வதிலும் சிறந்து விளங்குவார்கள். கல்வி மற்றும் இலக்கியத் துறைகளில் முதன்மை யான இடத்தில் இருப்பார்கள். துன்ப மில்லா வாழ்க்கையையே இவர்கள் மனம் விரும்பும். எல்லாரும் மகிழ்ச்சியுடனும், நலமுடனும் வாழ்ந்திட வேண்டு மென்றே இவர்களுடைய மனம் எண்ணிக் கொண்டிருக்கும். இருந்தாலும், சந்தேகப் படுவதும் சஞ்சலப்படுவதும் இவர்களின் மறுபக்கமாகவும், இவர்களின் பலவீனமாகவும் இருக்கும்.
ஞாபகசக்தி அதிகமுடையவர்கள் என்பதால் வேண்டாத விஷயங்களைத் தங்கள் மனதில் பதியவைத்துக் கொண்டிருப் பார்கள். அதன்காரணமாக இவர்களுடைய முன்னேற்றத்தில் தடைகள் உண்டாகலாம்.
தங்களிடம் பழகுபவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். எல்லாவற்றையும் யூகித்தறிவதிலும் திறமைசா-யாக இருப்பார்கள். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளவேண்டும்- எல்லா வற்றிலும் தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட வேண்டுமென்ற எண்ணமுடையவர்களான இவர்களை "மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்' என்றே சிலர் அழைப்பார்கள். ஈடுபடும் செயல்களில் வெற்றியை அடையும் யோகமுடைய இவர்களுக்கு சமத்துவமும் சகோதரத்துவமுமே கொள்கையாக இருக்கும். மற்றவர்களின் குற்றம் குறைகளையும், பலவீனத்தையும் தெரிந்துகொள்ளும் இவர்கள், அவர்கள் செய்யும் சிறு தவறுகளை யும் பெரும் குற்றமாகவே எண்ணுவார்கள்.
துக்கம், துயரம், சங்கடம் என்பதெல்லாம் இவர்களால் தாங்கமுடியாத ஒன்று. அதே போல் கடினமான உழைப்பிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள். தங்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் செயல் களை சுலபமாக்கி சாதகமாக்கிக் கொள்வார் கள். ஒரு நிலையான இடத்தில் அமர்ந்து கடின மான வேலைகளை உடல் உழைப்பின் மூலமாகச் செய்வது இவர்களுக்குப் பிடிக்காது. என்றாலும், மூளை சம்பந்தப்பட்ட, அறிவு நுட்பமான வேலைகளை இருந்த இடத்தி-ருந்தே திறமையுடன் செய்துமுடிப்பார்கள். இவர்களுடைய வேலையாகட்டும் தொழி லாகட்டும்- அது வாக்கு சாதுரியத்துடனும், மூளை உழைப்புடனும் சம்பந்தபட்டதாகவே இருக்கும்.
உளவுத்துறையில் பணியாற்றுவதற்கு மிகவும் பொருத்தமானவர்களாக இருப்பார் கள். வேவு பார்த்தல், பிறர் செய்யும் குற்றங் களைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துதல், சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவராக இருத்தல் என இவர்களுடைய பணி சிறப்படையும். தங்கள் செய-ல் மற்றவர்கள் தலையிடுவதை எப்போதும் விரும்பமாட்டார்கள். அப்படி யொரு தலையீடு நடந்தால் அந்தச் செயலை அதற்குமேல் தொடரமாட்டார்கள்.
பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் இவர்களுக்கு, நரம்புத் தளர்ச்சி ஏற்படவும் வாய்ப்புண்டு என்பதால், நேரம் கிடைக்கும்போது ஓய்வெடுத்துக் கொள்வது இவர்களுடைய உடல்நலனுக்கு நல்லது. உலகத்திலுள்ள எல்லாமும் தங்களுக் குத் தெரியுமென்ற எண்ணம் இவர்கள் மனதில் இருக்குமென்றாலும், எதையும் முழுமையாகத் தெரிந்திருக்க மாட்டார்கள். ஆனால், தங்களுக்குத் தேவையானவற்றை மிகத் தெளிவாக உணர்ந்திருப்பார்கள். ஆலோசனைகள் சொல்வதில் கெட்டிக் காரர்களான இவர்கள் தைரியத்தில் குறைவானவர்கள் என்றே சொல்லவேண்டும். ஒருசில கெட்ட பழக்கங்களுக்கு அடிமை யாகும் நிலையும் இவர்களில் சிலருக்குண்டு.
இவர்களில் பலர் கடன் வாங்குவதற்கு அஞ்சுவார்கள். அப்படியே வாங்கினாலும் அதை அடைத்துவிட முயல்வார்கள். இவர் களுக்கு சுய சிந்தனைதான் முக்கியம் என்பதால், அதைக்கொண்டு சொந்த வியாபாரம் செய்தால் ஆதாயம் கிடைக்கும். மற்றவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு லாபம் கொழிக்கும். பொருள்வளம் அதிகரிக்கும்.
எதிர்காலத்தைப் பற்றிய இவர்களுடைய எண்ணம் உலகிற்கும் மக்கள் வாழ்வுக்கும் ஏற்றவாறு இருக்கும். இவர்களுடைய மனமும் கனவும் எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பதை இவர்களுக்கு உணர்த்தும். பழமைகளை வெறுக்கக் கூடியவர்களாக இருந்தாலும், இன் றைய நிலைக்கேற்ப பழமையை மாற்றக் கூடிய, மெருகேற்றக் கூடிய ஆற்றல் இருக்கும். தங்களு டைய முயற்சிகள் எடுத்த எடுப்பிலேயே வெற்றியடையாது என்பதால், மனம் தளராது ஒவ்வொரு முயற்சியையும் தொடர்வார்கள். இவர்கள் எண்ணங்களும் விருப்பங்களும் கண்டிப்பாக நிறைவேறும்.
யாரை எதற்குப் பயன்படுத்த வேண்டு மென்ற அறிவு பெற்ற இவர்கள் மற்றவர் களைப் பயன்படுத்தி வெற்றிகளை அள்ளிக் குவிப்பார்கள். இவர்கள் மனம் தளரும் நேரங்களில், இவர்களுடன் தொழில்துறையில் ஈடுபட்டிருப்பவர்களின் ஆலோசனைகள் கிடைக்கப்பெறும். அதனால் வெற்றியும் ஆதாயமும் உண்டாகும்.
வா-ப வயதி-ருந்தே இவர்களுக்குப் பணம் சம்பாதிக்கும் ஆற்றலும், வாய்ப்பும், வெற்றிகளும் உண்டாகிவிடும். அதிர்ஷ்டங் களின்மீது அதிக அளவில் நம்பிக்கை இருக்காது. எனவே உழைக்காமல் வரும் வருமானத்தின்மீதும் இவர்களுக்கு ஆசை இருக்காது. முதலீடு செய்வதில் எப்போது லாபம் உண்டாகும்? எப்போது நஷ்டம் ஏற்படும் என்பதையும், இவர்களுடன் தொழி -ல் ஈடுபட்டுள்ளவர்களின் நிலைகளையும், செயல்களையும் வைத்துத் தெரிந்துகொண்டு எச்சரிக்கையாகி விடுவார்கள்.
இவர்களுக்குப் பகைவர்களின் தொல்லைகள் இருக்காது. கடுமையான விரோதங்களும் ஏற்படாது. என்றாலும், இவர்களுடைய மனநிலையின் வெளிப்பாடு களால் நட்பில் விரிசல்களும் பகையும் உண்டாகும். துலாம், கும்ப ராசியினருடன் பழகுவதும், நட்பு கொள்வதும், திருமண பந்தம் கொள்வதும் இவர்களுக்கு மகிழ்ச்சி யையும் நன்மைகளையும் வாரிவழங்கும்.
குடும்ப வாழ்க்கையில் அழுத்தமான ஈடுபாடு இல்லாமல் போனாலும், தங்கள் குடும்பத்தின்மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவே இருப்பார்கள். பொதுவாகவே நவீன பேச்சுகளால் எதிர்பா-னரை ஈர்க்கச்செய்யும் திறமை பெற்ற இவர்களுக்கு, அதுவே அந்த விஷயத்தில் சந்தோஷம் காணக்கூடிய நிலையை உண்டாக்கும் என்றாலும், எல்லாம் சிலகாலம் என்பதுபோல் விரைவில் ச-ப்பும் அடைவார்கள். மயக்கம் தீர்ந்ததும் மன நிலையும் மாறிவிடும்.
இவர்கள் ராசிநாதன் புதன், வித்யாகாரகன் என்பதால், கல்வி கேள்விகளில், ஞானத்தில், அறிவில் வல்லவர்களாக விளங்குவார்கள். தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பாடமாக எடுத்துக்கொண்டு முன்னேறுவார்கள். தங்கள் கருத்துக்கு எதிர்கருத்து இல்லையென்ற விதத்தில் வாதம் புரிவதில் வல்லவர்களாக விளங்குவார்கள். தனக்கு இருக்கிறதோ இல்லையோ- பிறருக்கு வழங்கவேண்டுமென்ற எண்ணம் எப்போதும் இவர்களுக்கிருக்கும். பேச்சையே மூலதனமாகக்கொண்டு செயல்படும் இவர்களுக்கு ஆசிரியப்பணி, வழக்கறிஞர் பணி, ஆலோசகர், லீகல் அட்வைசர், பிரச்சாரகர், ஷேர் மார்க்கெட் என்பனவற்றில் ஈடுபட லாபம் உண்டாகும்.
வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் பணம் சம்பாதிக்கவேண்டும், புகழ் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் மேலோங்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் இவர்கள், நேரத்திற்கேற்ப தங்கள் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மாற்றிக்கொண்டு, தங்களுக்கு சரியெனபட்ட பாதைக்கு மாறிவிடுவார்கள். பிறரால் சாதிக்க முடியாதவற்றை சாதிக்கும் திறனும், மனதில் பட்டவற்றை மறைக்காமல் சொல்லுகின்ற தைரியமும் இவர்களுக்குண்டு. எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் இவர்கள் வாங்கிவந்த வரம் என்றுகூட சொல்லலாம்.
அடுத்த இதழில் கடகம்...
செல்: 99406 86060