ரு கிரகம் ராசிக்கட்டத்தில் எந்த வீட்டில் இடம் பெறுகிறதோ, அதே இடத்தில் அம்சத்திலும் வருமேயானால், அது அந்த ஜாதகருக்கு இரட்டிப்புப் பலன்களைத் தரும். அந்த கிரக தசை ஆரம்பிப்பதற்குமுன்பு ஜாதகர் எவ்வளவுதான் கஷ்டத்தில் உழன்றாலும், வர்க்கோத்தம தசையில் வாழ்க்கைத் தரம் பல வழிகளிலும் உயர்ந்துவிடும். அதேபோல ஜாதகரின் மனைவி, பிள்ளைகள் ஜாதகத்தில் வர்க்கோத்தமம் ஆகியிருந்தால், அந்த தசையில் எல்லா நன்மைகளையும் ஜாதகப்படி குடும்பத்தலைவர் அடைவார்.

ராசியிலும், அம்சத்திலும் ஒரு கிரகம் ஒரே இடத்தில் அமைந்தால் அதுவே வர்க்கோத்தம தசை. இறைவன் பெரும்பகுதி ஜாதகர்களுக்கு வர்க்கோத்தம தசையைக் கண்டிப்பாக வைத்திருப்பார்.

வர்க்கோத்தமமாக வருகின்ற ஜென்ம லக்னமும், வர்க்கோத்தம தசையும் அதிக நன்மைகளைத் தரும். இந்த தசை ஒரு ஜாதகருக்கு நடக்கும்போது, அவர் ஒரே நிலையில்- உறுதி யான வாழ்க்கையைப் பெற்று வாழ்வார். நிலையான பொருள் வந்துசேரும். நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். இன்பமும் செல்வமும், அரசாங்கத்தால் மகிழ்ச்சியும் வந்துசேரும். சுகபோகங்களும் நாடிவரும்.

rr

Advertisment

வாக்குப்பிசகு ஏற்படாது. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார். "சொன்னது சொன்னதுதான்' என்று உறுதியாக வாழ்வார். வர்க்கோத்தம தசை நடக்கும்போது சில எளிய பரிகாரங்களைச் செய்துகொண்டால், அவர் அந்த தசையில் கிடைக்கும் நல்ல பலன்களை இரட்டிப்பாகப் பெறுவார்.

பரிகாரம்-1

வர்க்கோத்தம தசை ஒன்பது கிரகங்களுக்கும் உண்டு. எனவே, உங்கள் ஜாதகத்தை நல்ல ஜோ திடரிடம் ஆராய்ந்து, வர்க்கோத்தம தசைக்குரிய கிரகம் எதுவென்பதைத் தெரிந்துகொண்டு, அந்த கிரகம் அமைந்துள்ள ஆலயம் சென்று தரிசித்து வரவேண்டும். தசை முடியும்வரை வருடம் ஒருமுறை தரிசித்தால் நன்மைகள் பல பெறலாம்.

உதாரணமாக, ஒருவருக்கு ராகு வர்க்கோத்தமம் ஆகியுள்ளார் என்றால், அவர் தசை ஆரம்பித் ததுமுதல் ராகு அமைந்துள்ள பேரையூர், திருநாகேஸ்வரம் போன்ற ஏதாவது ஒரு ஆலயத்திற்கு வருடம் ஒருமுறை சென்று தரிசித்து வரவேண்டும்.

பரிகாரம்-2

ஆலயம் சென்று தரிசிக்க முடியாதவர்கள், எல்லா தசை களிலும் ஒன்பது புக்திகள் வருமென்பதால், இருக்குமிடத் திலேயே தினசரி காலையில் இறைவழிபாடு செய்யும்போது-

"ஓம் ஹரீம் ஆதித்யாச சோமாய

மங்களாய புதாய குரு சுக்கிர சனிப்பயச்ச

ராதவே கேதவே நமக'

என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கிவந்தால் வர்க்கோத்தம தசையில் நன்மைகள் பெறலாம்.

செல்: 94871 68174