Advertisment

துன்பம் போக்கும் துளசிப் பரிகாரம்

/idhalgal/balajothidam/turbulent-solution

துளசி ஒரு தெய்வீக மூலிகை. துளசிச்செடி அதிக அளவில் பிராண வாயுவை உற்பத்தி செய்யும். வீடுகளில் துளசி மாடம் அமைத்து பெண்கள் அவற்றைச் சுற்றிவரும்பொழுது அதிகமாக பிராணவாயுவை சுவாசிக்க முடிகிறது. இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் உண்டாகாமலும், நோய்கள் வராமலும் துளசி பாதுகாக்கிறது. துளசியில் நாதுளசி, பச்சைத் துளசி, கிருஷ்ண துளசி, சிவ துளசி என நான்கு வகை உண்டு. பெரும்பாலும் துளசி மாடங்களில் கிருஷ்ண துளசியைத்தான் வளர்ப்பார்கள். ஏனென்றால் கிருஷ்ணர்தான் நீலநிறமாக இருப்பார். எனவே கருந்துளசியை கிருஷ்ணதுளசியாக பாவித்து அதை வணங்குகிறோம்.

Advertisment

ஒரு தாவரத்தில் நோய்நீக்கும் தன்மையிருந்தால்

துளசி ஒரு தெய்வீக மூலிகை. துளசிச்செடி அதிக அளவில் பிராண வாயுவை உற்பத்தி செய்யும். வீடுகளில் துளசி மாடம் அமைத்து பெண்கள் அவற்றைச் சுற்றிவரும்பொழுது அதிகமாக பிராணவாயுவை சுவாசிக்க முடிகிறது. இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் உண்டாகாமலும், நோய்கள் வராமலும் துளசி பாதுகாக்கிறது. துளசியில் நாதுளசி, பச்சைத் துளசி, கிருஷ்ண துளசி, சிவ துளசி என நான்கு வகை உண்டு. பெரும்பாலும் துளசி மாடங்களில் கிருஷ்ண துளசியைத்தான் வளர்ப்பார்கள். ஏனென்றால் கிருஷ்ணர்தான் நீலநிறமாக இருப்பார். எனவே கருந்துளசியை கிருஷ்ணதுளசியாக பாவித்து அதை வணங்குகிறோம்.

Advertisment

ஒரு தாவரத்தில் நோய்நீக்கும் தன்மையிருந்தால் அதை மூலிகை என்று கூறுகிறோம்.

மூலிகைகளில் உணவாக சமைத்து உண்டபிறகு மருந்தாகும் தாவரத்தைக் கீரை என்று அழைக்கிறோம்.

tulasi-parigaram

Advertisment

அதேபோன்று சமைக்காமல் பச்சிலையாக மருந்தாகும் தாவரத்தை பச்சிலை மருந்து (சித்த மருந்து) என்று கூறுகிறோம். இந்த வகையான தாவரங்களில் ஒன்றுதான் துளசி. இதன் காற்று பட்டாலே நோய் நீங்கும். துளசி இலையை மட்டும் தனியாக உட்கொள்ளக்கூடாது. நோய்க்குரிய உபபொருட்களை சேர்த்து அதனை உட்கொள்ளும்போது அரிய மருந்தாகிறது துளசி. எனவேதான் பெருமாள் கோவிலில் துளசித் தீர்த்தம் வழங்கப்படுகிறது.

பரிகாரம்-1

துளசி இலைகளை எடுத்து மூன்று மிளகுகள் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். பிறகு அதனை வெள்ளைத்துணியில் வைத்துப் பிழிந்து இரண்டு அல்லது மூன்று துளிகள் மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாரம் ஒருநாள் காலையில் தொடர்ந்து கொடுத்துவந்தால் ஆஸ்துமா போன்ற நோய்கள் வராது.

பரிகாரம்-2

ஐந்து வயதுக்குமேற்பட்டவர்களுக்கு 21 துளசி இலையில் ஒன்பது மிளகு வைத்து அரைத்து தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் பேய்சொறி என்னும் தோல்நோய் நீங்கும்.

பரிகாரம்-3

21 துளசி இலையில் ஐந்து மிளகு வைத்து அரைத்து, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் காலத்தில் 3, 4, 5-ஆவது நாட்களில் சாப்பிட்டால் மாதகால வயிற்று வலியைப் போக்கும்.

பரிகாரம்-4

திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லையென்றால் 21 துளசி இலைகளை எடுத்து, அதில் மூன்று அல்லது ஐந்து மிளகுகளை அரைத்து, மாதம் மூன்று நாட்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு உட்கொண்டால் குழந்தை பாக்கியம் ஏற்படும்.

பரிகாரம்-5

21 துளசி இலையில் ஏழு மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாறு எடுத்து அதனை வெள்ளைத்துணியில் நனைத்து நீண்ட கண்ட ரணம், புண் ஆகியவற்றின்மீது தொடர்ந்து ஐந்து நாட்கள் கட்டிவந்தால் புண் ஆறிவிடும்.

பரிகாரம்-6

உடலில் இனம்தெரியாத விஷக்கடி ஏற்பட்டிருந்தால், 21 துளசி இலைகளுடன் ஒன்பது மிளகு வைத்து அரைத்து காலையில் ஏழு நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர விஷக்கடி முறியும். தோல் வெடிப்பு, தலையில் பொடுகு, தலைப்புண், மீசைமீது ரணம், தாடிப்புண் ஆகியவையும் சரியாகும்.

பரிகாரம்-7

21 துளசி இலையுடன் ஐந்து மிளகு சேர்த்து, அதனுடன் இரண்டு மிளகு அளவுக்கு புதினா உப்பு சேர்த்தரைத்து மூன்று நாட்களுக்குக் கொடுத்துவர ஜன்னி, பக்கவாதம், ஈரம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

பரிகாரம்-8

21 துளசியுடன் ஐந்து மிளகும், மூன்று மிளகு அளவுக்கு மஞ்சள் தூளும் சேர்த்தரைத்து மூன்று நாட்களுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் மூச்சுத்திணறல் நீங்கும். நீருடல் குறையும். இதே அளவு துளசியுடன் மூன்று மிளகு போதிய கற்கண்டுடன் அரைத்து சாப்பிட உடல் பருமன் உண்டாகும்.

இவையனைத்தும் அனுபவத்தில் கண்டவை.

எனவே துளசி ஒரு தெய்வீக மூலிகை.

செல்: 94871 68174

bala051018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe