சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி மற்றும் விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள் துலா ராசியில் அடங்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு செவ்வாய் தசையும், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசையும், விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு குரு தசையும் ஆரம்ப தசையாக வரும்.
சித்திரை நட்சத்திரம், துலா ராசியில் பிறந்தவர்கள் செல்வம் மிகுந்த குடும் பத்தில் செல்வாக்குடன் இருப்பார்கள். தன தானியங்களையும், நிலங்கள், வீடு போன்ற சொத்துகளையும், மாடு, கன்றுகளுடன் பால் பாக்கியத்தையும் பெற்றிருப் பார்கள்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் தாய்- தந்தைக்கு எதிராகச் செயல் படுபவர்கள். ஏனிப்படி செயல்படு கிறார்கள் என்றால், பிரம்மஹத்தி தோஷம்- அதாவது முன்னோர்கள் செய்த பாவம் இருக்கும். இவர்கள் ஜாதகத்தில் பிரம்ம ஹத்தி தோஷம் உள்ளதா என்று பார்த்த பிறகுதான் தோஷநிவர்த்தி செய்து கொள்ளவேண்டும்.
சுவாதி நட்சத்திரக்காரர்கள் பேச்சில் ஆணித்தரமாக இருப்பார்கள். சிலருக்கு (ஆண்களுக்கு) இரண்டு மனைவிகள் இருக்கலாம். தங்கள் குடும்பத்தைத் தவிர மற்றவர்களின் விவகாரத்தில் தலையிடமாட்டார்கள். சரியான முடிவுக்கு வரமாட்டார்கள். எனவே இவர்கள் பிரம்மஹத்தி தோஷம் அடைந்திருக்கக்கூடும். ஆகவே தோஷநிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
பெரும்பாலும் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறைந்த கல்வியும், வெகுதி றமையான அறிவும் ஆற்றலும் உடைய வர்களாக இருப்பார்கள். வாகனங்கள் பல இருக்கும். குடும்பத்திலும் அதிகமான நபர்கள் இருப்பார்கள். செல்வாக்கு, அதிகாரம், உயர் பதவி கொண்டவர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் ஆதரவுடன் இருப் பார்கள். தார்மீக குணங்களும், தெய்வ வழிபாடு களும் நிறைந்து விளங்கும். குழந்தை களிடம் அதிகம் நட்பு கொண்ட வர்கள்.
பரிகாரங்கள்
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் திருவாரூர் சென்று அங்குள்ள ராஜதுர்க்கையை வணங்கிவர வேண்டும். மேலும் அருகிலுள்ள அம்மன் கோவில் களுக்கு வாரம் ஒருமுறை சென்று பூஜித்து வரவேண்டும். ஜாதகத்தை நல்ல ஜோதிடர் களிடம் காண்பித்து வாழ்க்கையில் இடர்ப்பாடுகளுக்குக் காரணமென்ன என்பதைக் கண்டறியவேண்டும். அவர்கள் ஆலோசனைப்படி நடந்தால் வறுமை, பகை, பிணி நீங்கி மேன்மையுறலாம்.
சுவாதி நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் ஒருமுறையாவது திருவானைக்கா சனீஸ்வரரை வணங்கிவரவேண்டும். மற்றபடி சனிக்கிழமைகளில் கீழுள்ள சுலோகத்தை 16 முறை சொல்லிலி வணங்கிவர, வாழ்வில் வறுமை, பகை, பிணி நீங்கி மேன்மையுறலாம்.
"மந்தனாம் சனியே உந்தன்
மகத்துவம் அறிந்து கொண்டேன்
வந்ததோர் துயரம் நீக்கு
மனதினில் அமைதி கூட்டு.'
பிரம்மஹத்தி தோஷம் இருந்தாலும் இல்லா விட்டாலும் இவர்கள் பிரம்ம ஹத்தி தோஷநிவர்த்தி செய்து கொள்ளவேண்டும். கும்ப கோணம் அருகே திருவிடை மருதூர் மகாலிலிங்கேஸ்வரர் கோவிலிலில் எல்லா நாட் களிலும் காலை 7.00 மணி முதல் 9.00 மணிக்குள் தோஷ நிவர்த்தி செய்வதுண்டு.
விசாக நட்சத்திரத்தினர் மதுரை அருகே சோழவந் தானில் அமைந்துள்ள சனீஸ் வரரை வாழ்வில் ஒருமுறை யாவது சென்று வணங்கிவர வேண்டும். மேலும் சனிக் கிழமைதோறும் அருகிலுள்ள சனீஸ்வரர்ஆலயத்திற்குச் சென்று வணங்கிவர வேண்டும். சுவாதி நட்சத்திரத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள சனி ஸ்தோத்திரத்தைச் சொல்லிலி வணங்கிவர நன்மையே ஏற்படும். பிரம்மஹத்தி தோஷநிவர்த்தியும் செய்துகொள்ளவேண்டும்.
செல்: 94871 68174