Advertisment

செவ்வாய் தோஷ விளக்கம்! சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்)

/idhalgal/balajothidam/tuesday-dosha-description-siddharthasan-sundarji-jeevanadi-astrologer

செவ்வாய் தோஷம் பற்றிய குழப்பம் பலருக்கும் உள்ளது. செவ்வாய் தோஷம் என்பது என்ன? உண்மையில் அந்த தோஷம் உள்ளவர்கள் யார்? திருமணத்திற்குப்பின் செவ்வாய் தோஷம் தரும் பலன்கள் என்ன என்பது போன்ற சந்தேகங்களுக்கு வேதமுறை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளவற்றை அறிவோம்.

Advertisment

"தோஷம்' என்பதற்கு குறைபாடு என்பதே பொருளாகும். செவ்வாய் தோஷம் என்றால், செவ்வாய் தரும் நற்பலன்களில் ஏற்படும் குறைபாடாகும்.

Advertisment

ஒருவரின் பிறப்பு ஜாதகத் தில் லக்னம் அல்லது சந்திர ராசி அல்லது சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 2, 4, 7, 8, 12-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம்.

லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தால் அது முழுமையான செவ்வாய் தோஷம் என்றும்; சந்திரன் இருக்கும் ராசிக்கு மேற்கண்ட ராசிகளில் செவ்வாய் இருந்தால் அது அரைப்பங்கு தோஷம் என்றும்; சுக்கிரன் இருக்கும் ராசி

செவ்வாய் தோஷம் பற்றிய குழப்பம் பலருக்கும் உள்ளது. செவ்வாய் தோஷம் என்பது என்ன? உண்மையில் அந்த தோஷம் உள்ளவர்கள் யார்? திருமணத்திற்குப்பின் செவ்வாய் தோஷம் தரும் பலன்கள் என்ன என்பது போன்ற சந்தேகங்களுக்கு வேதமுறை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளவற்றை அறிவோம்.

Advertisment

"தோஷம்' என்பதற்கு குறைபாடு என்பதே பொருளாகும். செவ்வாய் தோஷம் என்றால், செவ்வாய் தரும் நற்பலன்களில் ஏற்படும் குறைபாடாகும்.

Advertisment

ஒருவரின் பிறப்பு ஜாதகத் தில் லக்னம் அல்லது சந்திர ராசி அல்லது சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 2, 4, 7, 8, 12-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம்.

லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தால் அது முழுமையான செவ்வாய் தோஷம் என்றும்; சந்திரன் இருக்கும் ராசிக்கு மேற்கண்ட ராசிகளில் செவ்வாய் இருந்தால் அது அரைப்பங்கு தோஷம் என்றும்; சுக்கிரன் இருக்கும் ராசிக்கு மேற்கண்ட ராசி களில் செவ்வாய் இருந்தால் கால்பங்கு தோஷம் என்றும் கூறுகின்றனர்.

இந்த விதிமுறைகளைக் கொண்டு ஆண்- பெண் ஜாதகங்களை ஆய்வுசெய்து பார்த்தால், ஏறக்குறைய இந்த உலகிலுள்ள அனை வரும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களாகத்தான் இருப்போம்.

ஆண்- பெண் இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷமிருந்து, மற்றவருக்கு இல்லையென்றால், அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கக்கூடாது என்றும்; செய்துவைத்தால் செவ்வாய் தோஷம் இல்லாத வருக்கு மரணமோ அல்லது மரணத்திற்கு ஒப்பான கண்டமோ, கஷ்டங்களோ, இருவரில் யாராவது ஒருவருக்கு குணப்படுத்த முடியாத கொடிய நோய்களோ ஏற்பட்டு சிரமம் தரும் என்கின்றனர்.

இந்த முறையில் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன.

tt

அதாவது தோஷமுள்ள ஒருவரை தோஷமில்லாதவருக்குத் திருமணம் செய்துவைத்தால் மேற்சொன்ன தீமைகள் விளையுமென்றால், தோஷமுள்ள இருவருக்கும் திருமணம் செய்துவைத்தால் தோஷம் எப்படி நீங்கும்? அதிகமான தோஷமுள்ளவர், குறைவாக உள்ளவரை பாதிப்படையச் செய்துவிடுவார். இது முறையான பரிகாரமாகாது.

ஆண்- பெண் இருவருக்கும் செவ்வாய் தோஷம் உள்ளது என திருமணம் செய்துகொண்டவர்கள். எந்தக் குறையுமில்லாமல், மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்று அனுபவரீதியாக ஆய்வுசெய்து பாருங்கள். உங்களுக்கே உண்மை தெரியும்.

செவ்வாய் தோஷம் பார்க்கும் வழக்கம் நமது முன்னோர் காலத்தில் கிடையாது. தமிழ்நாட்டில் செவ்வாய் தோஷம் பார்க்கும் வழக்கம் எவ்வாறு வந்தது?

கேரள தேசத்திலுள்ள ஜோதிடர்கள் ஆண்- பெண்ணுக்குப் பொருத்தம் பார்க்கும் போது, ஒருவரின் ஜாதகத்தில் களத்திர பாவத்தில் உண்டான தோஷங்களை சமநிலைப்படுத்தி சரி செய்யும் வலிமை, மற்றொருவரின் ஜாதகத்திலுள்ள தோஷங்களுக்கு உண்டென்று கூறுகின்றனர்.

எனவே கேரளத்தில் ஆண்- பெண் ஜாதகங்களை இணைக்கும்போது, அதில் பாவதோஷம், அதற்கு பாவ சமனம் ஆகியவற்றை முக்கியமாக கவனித்துக் கூறுகின்றனர்.

கேரள ஜோதிட முறையில், ஜென்ம லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12-ஆவது ராசிகளில் இயற்கை பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இருந்தால் அதனை பாவ தோஷம் என்று கூறுகிறார்கள்.

ஒரு ஆணின் ஜாதகத்தில், லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12-ஆவது ராசிகளில் இந்த பாவ கிரகங்கள் இருந்தால், பெண் ஜாதகத்திலும் லக்னத்திற்கு மேற்கண்ட ராசிகளில் இந்த கிரகங்கள் இருக்கவேண்டும். இதுதான் பாவ சமனமாகும்.

உதாரணமாக ஒரு பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆவது ராசியில் செவ்வாய் இருந்தால், ஆண் ஜாதகத்திலும் லக்னத் திற்கு 7-ஆவது ராசியில் செவ்வாய் இருக்கவேண்டும்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னத் திற்கு 8-ஆவது ராசியில் செவ்வாய் இருந்தால், பெண்ணின் ஜாதகத்திலும் லக்னத்திற்கு 8-ஆவது ராசியில் செவ்வாய் இருக்கவேண்டும். அப்போதுதான் பாவம் சமனாகும்.

செவ்வாயின் 7, 8-ஆம் பாவதோஷம், அதற்கு பாவசமனம் என இந்த விதிகளைக் கடைப்பிடித்தே, செவ்வாய் தோஷப் பரிகாரம் என்று கூறி திருமணம் செய்யலாம் என்கிறார்கள். கேரள ஜோதிடத்தில் செவ்வாய் கொடிய கிரகமாகப் பார்க்கப்படுவதால், செவ்வாய் தோஷத்திற்கு அங்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.

கேரள ஜோதிடர்களால் கடைப் பிடித்துவந்த இந்த செவ்வாய் தோஷத்தை கொஞ்ச காலத்திற்கு முன்பிருந்து தமிழ்நாட்டு ஜோதிடர்களும் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, பலன்கூறி அதற்குப் பரிகாரம் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

கேரள ஜோதிட முறையைக் கடைப் பிடித்து, பாவதோஷம் கூறும் பெரும் பாலான தமிழக ஜோதிடர்கள், ஒரு ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் 7-ஆமிடத்தில் செவ்வாய் இருந்தால், மற்றவருக்கும் லக்னத் திற்கு 7-ஆவது ராசியில் செவ்வாய் இருக்கவேண்டும் என்ற கேரள ஜோதிட விதியை பின்பற்றி, பாவசமனம் அறிந்து சொல்வதில்லை.

செவ்வாய் தோஷம் பற்றி இன்னும் சில விளக்கங்களை அடுத்த இதழில் அறிவோம்.

செல்: 99441 13267

bala101221
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe