வேதமுறை ஜோதிடத்தில், ஆண்- பெண் இருவருக்கும் லக்னத்திற்கு 7-ஆவது ராசி களத்திர பாவம் என்றும், ஆண்கள் ஜாதகத்தில் 8-ஆவது ராசி ஆயுள் ஸ்தானம் என்றும், பெண்கள் ஜாதகத்தில் 8-ஆமிடம் மாங்கல்ய ஸ்தானம் என்றும் கூறப்படுகிறது.

லக்னத்திற்கு 7-ஆவது ராசி, 8-ஆவது ராசி களில் செவ்வாய் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் செவ்வாய் தோஷம் என கூறிவிடுகிறார்கள்.

ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா? இல்லையா என்பதை அறிந்துகொள்ள ஜோதிடத் தில் நான்கு விதிமுறைகள் கூறப்படுகின்றன.

1. செவ்வாயின் காரகத்துவ முறையில் ஆய்வு செய்தல்.

Advertisment

2. செவ்வாயின் ஆதிபத்திய அடிப்படையில் ஆய்வு செய்தல்.

3. ஜாதகத்தில் செவ்வாயின் சுபத்தன்மை, பாவத்தன்மைகளின் அடிப்படையில் ஆய்வு செய்தல்.

4. செவ்வாயின் பார்வைமூலம் தோஷம் அறிதல்.

Advertisment

கிரக காரகத் தத்துவ அடிப் படையில் செவ்வாய் லக்னத்திற்கு 7-ஆவது ராசியில் இருந்தாலோ அல்லது அந்த பாவத்தைப் பார்த்தாலோ அது தோஷத்தைத் தருமென்று கூறப்படுகிறது. ஆணின் ஜாதகத்தில் 7-ல் செவ்வாய் இருந்து, பெண்ணின் ஜாதகத்திலும் 7-ல் செவ்வாய் இருந்து, அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தால் செவ்வாய் தோஷம் பாதிப்பைத் தராது. ஒருவருக்கு 7-ல் செவ்வாய் இருந்து மற்றவருக்கு இல்லை யென்றால், இருவருக்கும் திருமணம் செய்யக்கூடாது. திருமணம் செய்துவைத்தால் குடும்ப வாழ்வு மகிழ்ச்சியாக இராது என்பார்கள்.

காலபுருஷ தத்துவப்படி, செவ்வாய் கிரக ஆதிபத்தியரீதியாக ஆய்வு செய்யும்போது, பலன்கள் மாறுபட்டுக் கூறப்படுகிறது. காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு செவ்வாய் அதிபதி.

மேஷமும், விருச்சிகமும் செவ்வாய்க்கு ஆட்சி வீடுகள்; ரிஷபமும், துலாமும் சம வீடுகள்; கடகம் நட்பு வீடாகும்.

ஒரு கிரகம் தன் ஆட்சி வீட்டிலோ, நட்பு வீட்டிலோ இருந்தால் அந்த கிரகத்திற்கு அதிகபலம் உள்ளது. ஆகவே 1, 2, 4, 7, 8-ஆவது ராசிகளான மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம் ராசிகளில் வலிமைபெற்று தோஷத்தை தருமென்பது ஜோதிடவிதி. செவ்வாய் தன் பகை கிரகங்களின் வீட்டில் இருந்தாலோ, பகை கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ அதன் வலிமை குறைந்து விடும் என்பதும் ஒருவிதி.

செவ்வாயின் பகை வீடுகள் மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகியவை. இதன் ஆட்சி கிரகங்களான சனியும், புதனும் செவ்வாய்க்கு பகை கிரகங்களாகும். ஜாதகத்தில் செவ்வாய் இந்த ராசிகளில் இருந்தாலும் அல்லது புதன், சனியால் பார்க்கப்பட்டாலும் அதன் வலிமை குறைந்துவிடுகிறது. எனவே செவ்வாய் தோஷ பாதிப்புகளைத் தராது என்று கிரக ஆதிபத்தியரீதியில் கூறப்படுகிறது.

கிரகங்களின் சுபத்தன்மை, பாவத் தன்மை களைக்கொண்டு லக்னரீதியாக ஆய்வு செய்வோம்.

ஜாதகருக்கு ஜென்ம லக்னம் எதுவாக இருந்தாலும் லக்னாதி பதி மற்றும் திரிகோணாதிபதி கிரகங்கள் 1, 4, 7, 10 என்ற கேந்திரங்களில் இருந்தால், ஜாதகருக்கு நன்மையே செய்யும் என்பது விதி.

இதன் அடிப்படையில் மேஷம், கடகம், சிம்மம், தனுசு, விருச்சிகம், மீன ராசிகளுக்கு செவ்வாய் லக்னாதிபதியாக வும், லக்னத்திற்கு திரிகோணாதி பதியாகவும் உள்ளது. எனவே இந்த ஆறு லக்னங்களுக்கு 1, 4, 7, 10-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தால் தோஷ பாதிப்பைத் தராமல் நன்மைகளையே தருவார்.

ss

ரிஷபம், துலாம் லக்னங் களுக்கு செவ்வாய் களத்திர ஸ்தானாதிபதி. எந்த ஒரு பாவத்தின் அதிபதியும் அந்த பாவத்தில் இருந்தாலும், அந்த பாவத்தைப் பார்த்தாலும் அந்த பாவம் வலுப்பெறும். இதன் அடிப்படையில் லக்னத்திற்கு 1, 4, 7, 12-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தால், தன் பார்வைமூலம் அந்த பாவத்தை வலுப் பெறச் செய்துவிடும் என்ற விதிபடி ரிஷபம், துலாமிற்கு 1, 4, 7, 12-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தால் நன்மை தரும்.

இனி செவ்வாய் கிரகம் தன் பார்வை யி னால் உண்டாக்கும் தோஷம் பற்றி அறிவோம். செவ்வாய்க்கு 4, 7, 8-ஆம் பார்வை உண்டு.

லக்னத்தில் செவ்வாய் இருந்தால், அது 7-ஆவது ராசியைத் தன் 7-ஆம் பார்வையால் பார்க்கும். 8-ஆம் வீட்டை 8-ஆம் பாவையால் பார்க்கும்.

லக்னத்திற்கு 2-ஆவது ராசியில் செவ்வாய் இருந்தால், 8-ஆம் வீட்டைத் தன் 7-ஆவது பார்வையால் பார்க்கும்.

லக்னத்திற்கு 4-ல் செவ்வாய் இருந்தால் 7-ஆம் வீட்டை 4-ஆம் பார்வையால் பார்க்கும்.

லக்னத்திற்கு 7, 8-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தால் அது தோஷம் என கருதப்படுகிறது.

லக்னத்திற்கு 12-ல் செவ்வாய் இருந்தால் 7-ஆவது ராசியைத் தன் 8-ஆம் பார்வையால் பார்க்கும்.

வேத ஜோதிடமுறை யில், செவ்வாய் இருக்கும் ராசி, அதன் பார்வைமூலம் என பல வழிகளில் தோஷம் கணக்கிடப்படுகின்றன. பாவ கிரகங்களில் கொடிய கிரகம் என கேரள ஜோதிடர்கள் கூறுகி றார்கள். இந்த தோஷம் ஜாதகத்திலேயே பாவ சமனம் ஆகின்றது என கூறப்படுகிறது.

பாவகிரகங்கள் வலிமைபெற்றால் தோஷம் தருமென்றும், அவை வலிமை குறைந்திருந்தால் நன்மை தருமென்றும் கூறுகிறார்கள். இதனால்தான் கெட்ட கிரகம் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்கிறார்கள்.

செவ்வாய் தோஷ நிவர்த்தி ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷ நிலையிலிருந்தாலும், இருக்கும் ராசி, அதன் பார்வைநிலை, கேந்திர, திரிகோணநிலை, ஆதிபத்தியம், பாவ சமனம் ஆகியவற்றைக் கொண்டு ஜாதகத்திலேயே தோஷம் நிவர்த்தியடைந்து விடுகிறது என்றும் ஜோதிட விதியில் கூறப்படுகின்றது.

* கடகம், சிம்ம லக்ன ஜாதகர்களுக்கு எந்த ராசியில் செவ்வாய் இருந்தாலும் தோஷ பாதிப்பைத் தராது.

* சூரியன், குரு, சனி ஆகிய கிரகங்களுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் தோஷமில்லை.

* ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு (மகரம்) 7-ஆவது ராசி கடக ராசியானால் தோஷமில்லை.

* செவ்வாயுடன் சந்திரன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை.

* செவ்வாய் நின்ற ராசிக்கு 4-ஆவது ராசி மேஷம், விருச்சிகமானால் தோஷமில்லை.

* செவ்வாய் நின்ற ராசிநாதன் லக்னத் திற்கு 1, 4, 7, 10-ஆவது ராசிகளான கேந்திரத் திலோ அல்லது 1, 5, 9-ஆவது திரிகோண ராசிகளில் இருந்தாலோ தோஷமில்லை.

* செவ்வாய் நின்ற ராசிக்கு 8-ஆவது ராசி தனுசு, மீனமாக இருந்தால் தோஷமில்லை.

* செவ்வாய் மகரம், மேஷம், ரிஷபம் ஆகிய ராசிகளில் இருந்தால் தோஷமில்லை.

* சிம்மம், கடகம், மீனம், தனுசு ராசிகளில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

வேதமுறை ஜோதிடத்தில் பல கோணங் களில் செவ்வாய் தோஷநிலை பற்றிக் கூறப் படுகிறது. இதனைக் காணும்போது ஒன்றுக் கொன்று முரண்பாடாகத் தெரியும். சுபத் தன்மை, பாவத்தன்மை, ராசி, லக்ன கணக்கீடு முறையில் ஆய்வு செய்யும்போது செவ்வாய் தோஷம் இருப்பதுபோல் தோன்றும்.

செவ்வாய் தோஷம் பார்க்கும்போது, ஜாதகங்களை நன்கு ஆய்வு செய்து தோஷம் நிர்ணயம் செய்யவேண்டும். பஞ்சாங்கம், செவ்வாய் தோஷம் பற்றிய புத்தகங்களைப் படித்துவிட்டு, அவசர கோலத்தில் பொது வாகக் கூறிவிடக்கூடாது.

ஆண்- பெண் திருமண சமயத்தில் நிறைய பெற்றோர் இதுபோன்ற பொதுவான நிலை யில், 1, 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் என்று கூறி, தங்கள் பிள்ளைகளுக்கு வரும் நல்ல சம்பந்தத்தைத் தவறவிட்டு விடுகிறார்கள். ஜோதிடப் பெருமக்களில் சிலர், பொருத்தம் பார்க்க வருபவர்களிடம் நன்கு ஆய்வு செய்யாமல் செவ்வாய் தோஷமென்று கூறி திருமணம் நடக்காமல் செய்துவிடுகிறார்கள்.

செவ்வாய் தோஷம் பற்றி சித்தர் பெருமக்கள் தமிழ்முறை ஜோதிடத்தில் கூறியுள்ள விவரங்களை அடுத்த இதழில் அறிவோம்.

செல்: 99441 13267