Advertisment

கன்னி லக்னத்திற்கு 12 பாவங்களில் செவ்வாய்!

/idhalgal/balajothidam/tuesday-12-sins-virgo-luck

ன்னி லக்னத்தில் செவ்வாய் இருந்தால், அஷ்டமாதிபதியான செவ்வாய் தோற்றத்தில் குறையை உண்டாக்குவார். ஆனால் உடன்பிறப்பு களுடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் கம்பீரமாகப் பேசுவார். பிறரை வார்த்தைகளால் குத்திப் பேசுவார். பல கஷ்டங்களைக் கடந்து ஜாதகர் வாழ்க்கையில் வெற்றிபெறுவார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் துலா ராசியில் செவ்வாய் இருந்தால், ஜாதகருக்கு உடன்பிறப்புகளுடன் சுமாரான உறவே இருக்கும். கடுமையாக உழைப்பார். தைரியமாகத் தன் செயல்களைச் செய்வார். எனினும் மனதில் சந்தோஷம் இருக்காது.

3-ஆம் பாவத்தில் செவ்வாய் சுயவீட்டில் விருச்சிக ராசியில் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறப்புகளுடன் சீரான உறவிருக்காது. எனினும் தைரிய குணம் கொ

ன்னி லக்னத்தில் செவ்வாய் இருந்தால், அஷ்டமாதிபதியான செவ்வாய் தோற்றத்தில் குறையை உண்டாக்குவார். ஆனால் உடன்பிறப்பு களுடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் கம்பீரமாகப் பேசுவார். பிறரை வார்த்தைகளால் குத்திப் பேசுவார். பல கஷ்டங்களைக் கடந்து ஜாதகர் வாழ்க்கையில் வெற்றிபெறுவார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் துலா ராசியில் செவ்வாய் இருந்தால், ஜாதகருக்கு உடன்பிறப்புகளுடன் சுமாரான உறவே இருக்கும். கடுமையாக உழைப்பார். தைரியமாகத் தன் செயல்களைச் செய்வார். எனினும் மனதில் சந்தோஷம் இருக்காது.

3-ஆம் பாவத்தில் செவ்வாய் சுயவீட்டில் விருச்சிக ராசியில் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறப்புகளுடன் சீரான உறவிருக்காது. எனினும் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும். முன்னோர்களின் சொத்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

tt

Advertisment

4-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் நிலம், வீடு, வாகனம் வாங்குவதில் பிரச்சினை இருக்கும். உடன்பிறப்புகளுடன் உறவு சுமாராக இருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. திருமண விஷயத்தில் சிறிய தடை இருக்கும்.

5-ஆம் பாவத்தில் செவ்வாய், சனியின் மகர ராசியில் இருந்தால் அங்கு செவ்வாய் உச்சமடைகிறார். அதனால் பிள்ளைகளால் ஜாதகருக்குப் பிரச்சினைகள் ஏற்படும். குழந்தை பாக்கியத்தில் இடையூறு இருக்கும். சிலருக்கு குழந்தையே இருக்காது. ஜாதகர் அறிவாளியாக இருப்பார். பலர் பெரிய வெற்றிகளைக் காண்பார்கள்.

6-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் தன் எதிர்களை வெல்வார். கடுமையாக உழைப்பார். உடன்பிறப்புகளே அவருக்கு எதிராக இருப்பார்கள்.

கடவுள் அருளால் ஜாதகர் வெற்றிபெறுவார். உடல்நலத்தில் குறையிருக்கும். சிலருக்கு ரத்த அழுத்த நோய் இருக்கும். சிலர் சூனியத்தால் பாதிக்கப்படுவார்கள்.

7-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் செவ்வாய் இருந்தால் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படும். வர்த்தகத்தில் சில தடங்கல்கள் இருக்கும். ஜாத கருக்கு உடன்பிறப்புகளுடன் சுமாரான உறவிருக்கும். எனினும் அவர் தைரியசா-யாக இருப்பார். கம்பீரமான தோற்றத்தைக் கொண்டிருப்பார். பணம் சம்பாதிப்பதற்கு கஷ்டப்படுவார்.

8-ஆம் பாவத்தில் தன் சுய வீட்டில், மேஷ ராசியில் செவ்வாய் இருந்தால் உடன்பிறப்புகளுடனான உறவு சுமாராக இருக்கும். ஜாதகர் கடுமையாகப் பேசுவார். தைரியசா-யாக இருப்பார். சில நேரங்களில் வீணான சண்டை களில் ஈடுபடுவார்.

9-ஆம் பாவத் தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் 8-ஆம் பாவத்திற்கு அதிபதியான செவ்வாய் இருந்தால் தர்ம காரியங்களைச் செய்வதில் தடைகள் இருக்கும். ஜாதகருக்கு தந்தையுடன் சுமாரான உறவிருக்கும். அவருக்கு நீண்ட ஆயுள் உண்டு. முன்னோரின் சொத்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

10-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் செவ்வாய் இருந்தால் வர்த்தகத்தில் கடுமையான போட்டி இருக்கும். ஜாதகருக்கு தந்தையுட னான உறவு சுமாராக இருக்கும். உடன்பிறப்புகளுடன் உறவு சரியாக இருக்காது. ஜாதகர் எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அவசரப்படக் கூடாது. நிதானமாக சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்.

11-ஆம் பாவத்தில் சந்திர பகவானின் கடக ராசியில் செவ்வாய் நீசமடைகிறார். அதனால் பணவரவில் பிரச்சினை இருக்கும். சிறிய அளவில் நோய்களின் பாதிப்பிருக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும். ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். அதிக மாகப் பேசுவார்.

12-ஆம் பாவத்தில் சூரிய பகவானின் சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகருக்கு வெளித் தொடர்புகளின்மூலம் பணம் வரும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும். சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருக்கும்.

செல்: 98401 11534

bala270522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe