சிம்ம லக்னத்தில் செவ்வாய் தன் நண்பரான சூரியனின் வீட்டில் இருந்தால், ஜாதகர் பலசாலியாக இருப்பார். மற்றவர் களிடம் தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார். அதிர்ஷ்டசாயாக இருப்பார். தர்மத் தைக் கடைப்பிடிப்பவராக இருப்பார். ஜாதகருக்கு அவருடைய தந்தையுடன் சிறிய கருத்து வேறுபாடிருக்கும். ஜாதகர் கோபகுணம் கொண்டவராக இருப்பார்.
2-ஆம் பாவத்தில் செவ்வாய் புதனின் கன்னி ராசியில் இருந்தால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். தாயுடன் உள்ள உறவில் ஜாதகருக்கு சிறிய குறையிருக்கும். பூமி வாங்குவதில் சில தடங்கல்கள் இருக்கும். ஜாதகர் தர்மச் செயல்களைச் செய்வார். கடுமையாக உழைத்து பணத்தை சம்பாதித்து சந்தோஷமாக வாழ்வார்.
3-ஆம் பாவத்தில் சுக்கிர னின் துலா ராசியில் செவ்வாய் இருந

3-ஆம் பாவத்தில் சுக்கிர னின் துலா ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாத கருக்கு உடன்பிறப்புகளுடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் தைரிய சாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். தாயார் நல்ல உடல்நலத்துடன் இருப்பார். பெயர், புகழுடன் வாழ்வார். வீடு வாங்குவார்.
4-ஆம் பாவத்தில் செவ்வாய் சுயவீட்டில் விருச்சிக ராசியில் இருந்தால், ஜாதகரின் அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். வீடு, பூமி, சுகமிருக்கும். நல்ல வருமானம் இருக்கும். பல விஷயங்களில் வெற்றிகள் கிடைக்கும். கணவன்- மனைவிக்கிடையே வாக்குவாதம் நடக்கும்.
5-ஆம் பாவத்தில் மூலத் திரிகோணத்தில் குரு பகவானின் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். பூமி வாங்குவார். குழந்தை பாக்கியம் இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். ஜாதகர் புகழுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்.
6-ஆம் பாவத்தில் எதிரியான சனியின் மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெறுவதால், ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளில் பிரச்சினை உண்டாகும்.
ஜாதகர் நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார். பலசாலியாக இருப்பார்.
7-ஆம் பாவத்தில் சனி பகவானின் கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். வியாபாரத்தில் பிரச்சினைகள் இருக்கும். இல்வாழ்க்கையில் தொல்லைகள் இருக்கும். ஜாதகர் பணம் சம்பாதிப்பார். அதிகமாகப் பயணிப்பார்.
8-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். உடன்பிறப்பு களுடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் நல்ல தோற்றத்துடன் இருப்பார்.
9-ஆம் பாவத்தில் மூலத் திரி கோணத்தில் சுய வீட்டில்... மேஷ ராசியில் செவ்வாய் இருந்தால், ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். அவர் பல வெற்றிகளைப் பார்ப்பார். வெளித் தொடர்புகளில் பிரச்சினை உண்டாகும். தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் பூமி வாங்குவார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
10-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் செவ்வாய் இருந் தால் பல வெற்றிகளை ஜாதகர் பார்ப்பார். புகழிருக்கும். நிறைய பணத்தை ஜாதகர் சம்பாதிப்பார். தாய்- தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். படிப்பில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும்.
11-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் செவ்வாய் இருந் தால் ஜாதகருக்கு நல்ல வருமானம் இருக்கும். தாயாரால் சந்தோஷம் கிடைக்கும். பூமி பாக்கியம் இருக் கும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். படிப்பில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் தன் பகை வர்களை வெல்வார். அவர் பிறரை ஈர்க்கும் வகையில் இருப்பார். பெற் றோரால் சந்தோஷம் கிடைக்கும்.
12-ஆம் பாவத்தில் கடக ராசியில் செவ்வாய் நீசமடைகிறார்.
அதனால் வீண் செலவுகள் உண்டா கும். வெளித் தொடர்புகளில் பிரச் சினை ஏற்படும். பூமி வாங்குவதில் தடங்கல் இருக்கும். சிலருக்கு திருமணத் தடையிருக்கும். வியா பாரத்தில் லாபம் கிடைப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டிய திருக்கும்.