ரிஷப லக்னத்தில் செவ்வாய், சுக்கிரனின் வீட்டில் இருப்பதால், ஜாதகர் பலசா-யாக இருப்பார். வெளித்தொடர்புகளை தைரியமாகக் கையாள்வார். செவ்வாய் 12-க்கும் 7-க்கும் அதிபதியாக இருப்பதால், ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் வரக்கூடும். சிலருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கும்.

2-ஆம் பாவத்தில் செவ்வாய், புதனின் மிதுன ராசியில் இருந்தால், இளம்வயதில் சில பிரச்சினைகள் உண்டாகும். செலவுகள் அதிகமாக இருக்கும். படிப்பில் தடைகள் ஏற்படும். குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை இருக்கும். வியாபாரத்தில் சிக்கல்கள் உருவாகும். ஜாதகர் வெளித்தொடர்புகளைக்கொண்டு பணம் சம்பாதிப்பார். தர்மச் செயல்களின்மூலம் மன அமைதி கிடைக்கும். சிலர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.

3-ஆம் பாவத்தில் செவ்வாய் நீசமடைவார். எனவே உடன்பிறப்புகளுடன் உறவு சரியாக இருக்காது. சிலருக்கு தம்பி- தங்கை இருக்கமாட்டார்கள். பகைவர்கள் அழிவார்கள். ஜாதகர் தர்மச் செயல்களில் ஈடுபடுவார். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சினை இருக்கும்.

dd

Advertisment

4-ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் தாய்க்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். வீடு, மனை வாங்குவதில் பிரச்சினை ஏற்படும். சிலருக்கு திருமண விஷயத்தில் தடை உண்டாகும். திருமணத்திற்குப்பிறகு வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். தந்தையுடன் உறவு சுமாராக இருக்கும். கடுமையாக உழைத்தால்தான் லாபம் கிடைக்கும்.

5-ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் படிப்பு விஷயத்தில் பிரச்சினை உண்டாகும். குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு திருமண வாழ்க்கையில் தொல்லைகள் ஏற்படும். வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும்.

6-ஆம் பாவத்தில் சுக்கிரனின் வீட்டில் செவ்வாய் இருந்தால் பகைவர்கள் அதிகமாக இருப் பார்கள். செலவுகள் அதிகரிக்கும். மனதில் அதிக சிந்தனைகள் தோன்றும். சிலருக்கு வியாபாரத் தில் நஷ்டம் உண்டாகும். தர்மச் செயல்களால் புகழ் கிடைக்கும். சிலருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கும். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும்.

7-ஆம் பாவத்தில் சுயவீட்டில் செவ்வாய் இருந்தால், மனைவி தைரியசா-யாக இருப்பார். வர்த்தகத்தில் கடுமையான போட்டி நிலவும். வெளித்தொடர்பால் அதிக செலவுகள் உண்டாகும். ஆனால் வெற்றி கிடைக்கும். உட-ல் சிறுசிறு நோய்கள் வரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் உறவு சரியாக இருக்காது.

8-ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் திருமண விஷயத்தில் தடை உண்டாகும். வர்த்தகத்தில் சிக்கல்கள், நஷ்டம் ஏற்படக்கூடும். சிலர் தங்களுடைய இடத்தைவிட்டு வெளியே சென்று வாழ்க்கை நடத்துவார்கள். வெளிமாநிலம், வெளிநாட்டுத் தொடர்பால் பணவரவு கிட்டும். உறவினர்களுடன் பிரச்சினை இருக்கும். சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது.

9-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் செவ்வாய் உச்சமடைவார். அதனால், மனைவியால் சந்தோஷம் உண்டாகும். ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். தர்மத்தைக் கடைப் பிடிப்பார். பூமி, வாகனம் வாங்குவதில் பிரச்சினை இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

10-ஆம் பாவத்தில் கேந்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால், தந்தையுடன் பிரச்சினை, அரசாங்க விஷயத்தில் பிரச்சினை இருக்கும்.

ஜாதகர் மனைவியின் வார்த்தைகளைக் கேட்பார். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் வரும். பிள்ளை களுடன் பிரச்சினை இருக்கும். வீடு, பூமி வாங்குவதில் இடையூறுகள் ஏற்படும்.

11-ஆம் பாவத்தில் தன் நண்பர் குருவின் வீட்டில் செவ்வாய் இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும். மனைவியால் மகிழ்ச்சி கிட்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கிடையே சிக்கல்கள் தோன்றும். ஜாதகர் சுயநலவாதியாக இருப்பார்.

12-ஆம் பாவத்தில் செவ்வாய் சுயவீட்டில் இருந்தால் அதிக செலவுகள் உண்டாகும். வெளி உறவு களால் புகழ் கிடைக்கும். கணவன்- மனைவி உறவு சுமாராக இருக்கும். பகைவர்கள் இருப்பார்கள். சிலருக்கு மனைவியால் பிரச்சினை உண்டாகும்.

செல்: 98401 11534