மேஷ லக்னத்தில் செவ்வாய் இருந்தால், உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். மனதில் மிகுந்த தைரியத்துடன் இருப்பார். ஆனால், செவ்வாயின் 8-ஆவது பார்வை, 8-ஆவது பாவத்தின்மீது இருப்பதால், ஜாதகருக்கு அவ்வப்போது சிறுசிறு நோய்கள் வரும். தாய், மனைவி ஆகியோருக்கு பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு திருமண விஷயத்தில் தடை இருக்கும்.
2-ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்தால், சுக்கிரனின் ராசியில் இருப்பதால், பணத்தை சேமிப்பதில் சிரமம் இருக்கும். சிறிய அளவில் உடல்நல பாதிப்பு இருக்கும். செவ்வாய் தன் 4-ஆவது பார்வையால் 5-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும்.
பெற்றோருக்கு பிள்ளைகளால் பிரச்சினை இருக்கும். செவ்வாய் 7-ஆம் பார்வையால் எட்டாம் இடத்தையும், 8-ஆம் பார்வையால் 9-ஆம் பாவத்தையும் பார்க்கிறார். அதனால், கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். அனைத்து காரியங்களிலும் தடைகள் இருக்கும்.
3-ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்தால், செவ்வாயின் நண்பரான புதனின் ராசியில் இருப்பதால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். ஆனால், அவரின் சகோதரன்- சகோதரிக்கு பிரச்சினைகள் இருக்கும். எதிரிகளிடம் துணிச்சலாகப் போராடுவார். தந்தையுடன் நல்ல உறவு இருக்கும்.
அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களால் சந்தோஷம் கிடைக்கும்.
4-ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்தால், அவர் நீசமடைகிறார். அதனால் தாய்க்கு உடல்நல பாதிப்பு இருக்கும். 4-ஆம் பார்வையால் 7-ஆம் பாவத்தைப் பார்க்கிறார்.
அதனால், மனைவியுடன் வாக்குவாதம் இருக்கும். ஆனால், 7-ஆம் பார்வையால் 10-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், தந்தையுடன் உறவு நன்றாக இருக்கும்.
அரசாங்கத்தின் உதவி கிடைக்கும். பெயர், புகழ் கிடைக்கும்.
5-ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்தால், குழந்தைகளால் சில பிரச்சினைகள் உண்டா கும். செவ்வாயின் 4-ஆவது பார்வை 8-ஆவது பாவத் தில் இருக்கிறது. அதனால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். 7-ஆவது பார்வை யால் 11-ஆவது பாவத்தைப் பார்ப்பதால், நல்ல ஆதாயம் இருக்கும். ஆனால், 8-ஆவது பார்வையால் 12-ஆவது பாவத் தைப் பார்ப்பதால், அதிக செலவுகள் உண்டாகும். நல்ல வருமானம் இருக்கும்.
6-ஆவது பாவத்தில் செவ்வாய் இருந்தால், ஜாதகர் தன் பகைவர்களுக்கு பயப்படமாட்டார். அவரைப் பார்த்து பகைவர்கள் பயந்து ஓடுவார்கள். 4-ஆவது பார்வையால் செவ்வாய் 9-ஆவது வீட்டைப் பார்க்கிறது. அதனால், கடுமையாக உழைக்கவேண்டியதிருக் கும். 7-ஆவது பார்வையால் 12-ஆவது பாவத்தைப் பார்ப்பதால் அதிக செலவுகள் உண்டாகும். 8-ஆம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பதால், உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் தைரியமாக எதையும் செய்வார்.
7-ஆவது பாவத்தில் செவ்வாய் இருந்தால், மனைவியால் சில பிரச்சினைகள் உண்டாகும். வர்த்தகத்தில் சிறிய தடைகள் உண்டாகும். 4-ஆவது பார்வை யால் 10-ஆவது பாவத்தைப் பார்ப்பதால், வர்த்தகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
அரசாங்கத்தில் நல்ல ஆதரவு கிடைக்கும் .7-ஆவது பார்வையால் லக்னத்தைப் பார்ப்பதால், உடல்நலம் நன்றாக இருக்கும். 8-ஆம் பார்வையால் 2-ஆவது பாவத்தைப் பார்ப்பதால், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். ஈடுபடும் செயல்களில் சிறிய அளவில் வெற்றி கிடைக்கும்.
8-ஆவது பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக் கும். அவர் சுமாரான தோற்றத்தைக் கொண்டி ருப்பார். 4-ஆவது பார்வையால் 11-ஆவது பாவத்தைப் பார்ப்பதால், கடுமையாக உழைத்து வெற்றியைக் காண்பார். 7-ஆவது பார்வையால் 2-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது. ஆனால், 8-ஆம் பார்வையால் 3-ஆவது பாவத்தைப் பார்ப்பதால், உடன்பிறப்புகளுடன் உள்ள உறவு சுமாராக இருக்கும்.
9-ஆவது பாவத்தில் செவ்வாய் இருந்தால், தலையெழுத்து நன்றாக இருக்கும். மனதில் சிறிய சிறிய சலனங்கள் இருக்கும். 4-ஆவது பார்வையால் 12-ஆவது பாவத்தைப் பார்ப்ப தால் அதிக செலவுகள் உண்டாகும். 7-ஆவது பார்வையால் 3-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், ஜாதகர் தைரியத்துடன் இருப்பார். ஆனால், சகோதரர்- சகோதரியுடன் உள்ள உறவு சுமா ராகத்தான் இருக்கும். 8-ஆவது பார்வையால் 4-ஆவது பாவத்தைப் பார்ப்பதால், வாங்கும் பூமி விஷயத்தில் பிரச்சினை இருக்கும்.
10-ஆவது பாவத்தில் செவ்வாய் இருந்தால், தந்தையுடன் ஜாதகருக்கு உறவு சரியாக இருக்காது. ஆனால், பெயர், புகழ் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். பூமி வாங்குவதில் பிரச்சினை இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும்.
11-ஆவது பாவத்தில் செவ்வாய் இருந்தால், பணவரவு நன்றாக இருக்கும். ஆனால், படிப்படியாகத்தான் பணம் வரும். 4-ஆவது பார்வையால் 2-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், குடும்பத்துடன் உறவு சரியாக இருக்காது.
12-ஆவது பாவத்தில் செவ்வாய் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் நிறைய சுற்றுவார். சராசரியான தோற்றத்தைக் கொண்டிருப்பார். 4-ஆவது பார்வை 3-ஆவது பாவத்திற்கு இருப்பதால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். ஆனால், அவருக்கு பகைவர் கள் அதிகமாக இருப்பார்கள். 8-ஆவது பார்வையால் 7-ஆவது பாவத்தைப் பார்ப்பதால், கடுமையாக உழைத்து வெற்றியைக் காண்பார்.
செல்: 98401 11534