மிதுன லக்னத்தில் செவ்வாய், புதனின் ராசியில் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைத்துப் பணத்தை சம்பாதிப்பார். தைரியசாலியாக இருப்பார். பகைவர்களை வெல்வார். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். முன்னேர்களின் சொத்து கிடைக்கும். ஜாதகர்கோபகுணம் நிறைந்தவர்.
2-ஆம் பாவத்தில் செவ்வாய், சந்திரனின் வீட்டில் நீசமடைகி றார். அதனால் குடும்பசுகம் குறையும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். சிலர்சூதாட்டத்தில் பணத்தை இழப்பார்கள். ஜாதகர்தன் மனைவியுடன் வாதம் செய்வார். பணம் சம்பாதிப்பதற்குக் கடுமையாக உழைப்பார்.
3-ஆம் பாவத்தில் செவ்வாய், சூரியனின் சிம்ம ராசியில் இருந்தால், உடன்பிறப்பு களுடன் பிரச்சினை இருக்கும். ஜாதகர் நன்கு பணம் சம்பாதிப்பார். பெயர், புகழ் கிடைக்கும். கம்பீரமான தோற்றத் தைக் கொண்டவர். அதைவைத்து ஆதாயம் காண்பார்.
4-ஆம் பாவத்தில் செவ்வாய், புதனின் கன்னி ராசியில் இருந்தால், ஜாதகருக்கு தாயுடன் கருத்து வேறுபாடு இருக்கும். பலருடன் வீணாக சண்டையிடுவார். நிறைய அலைந்து பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கும்.
5-ஆம் பாவத்தில் செவ்வாய், சுக்கிரனின் துலா ராசியில் இருந்தால், ஜாதகருக்கு பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு இருக்கும். அவர்தன் அறிவைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். கடுமையாக உழைப்பார். சிலருக்கு வயிற்றில் நோய் இருக்கும்.
6-ஆம் பாவத்தில் ரோக ஸ்தானத் தில் செவ்வாய், சுய வீட்டில் இருந்தால் பகைவர்கள் குறைவார்கள். எதிரிகள் ஜாத கரைக் கண்டு பயப்படுவார்கள். ஜாதகர்பல சிக்கல்களைக் கடந்து வெற்றிபெறுவார். தாய்மாமனால் லாபம் கிட்டும்.
7-ஆம் பாவத்தில் கேந்திர ஸ்தானத்தில் குருவின் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் வியாபாரத்தில் பல பிரச்சினைகளைக் கடந்து ஜாதகர்வெற்றிபெறுவார். மனைவிக்கு சில நோய்கள் இருக்கும். சிலருக்குத் திருமண விஷயத்தில் தடை ஏற்படும்.
8-ஆம் பாவத்தில் செவ்வாய், சனியின் மகர ராசியில் உச்சமடைவதால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. பகைவர்களுடன் போராடி வெற்றி காண்பார். உடன்பிறப்புகளுடன் உறவு படிப்படியாக சரியாகும். ஜாதகர்கடுமையாகப் பேசக் கூடியவர். நன்கு பணம் சம்பாதிப்பார்.
9-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் தர்ம காரியங்களில் தடைகள் உண்டாகும். அதிர்ஷ்டம் உண்டாவதில் தடை ஏற்படும். தந்தையுடன் உறவு சுமாராக இருக்கும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். பூமி, வாகனம் வாங்கும்போது பல பிரச்சினைகளைக் கடக்கவேண்டியிருக்கும்.
10-ஆம் பாவத்தில் நண்பர் குருவின் வீட்டில் செவ்வாய் இருந்தால் தந்தையுடன் உறவு நன்றாக இருக்கும். கடுமையாக உழைத்து பெயர், புகழ் பெறுவார். பகைவர்கள் ஜாதக ரைக் கண்டு அஞ்சுவார்கள்.
பிள்ளைகளால் மனக் கஷ்டங்கள் உண்டாகும். படிப்பு விஷயம் நன்றாக இருக்கும்.
ஜாதகர் நன்கு பணம் சம்பாதிப் பார். சிலர்மருத்துவராக இருப்பார்கள்.
11-ஆம் பாவத்தில் தன் சுயவீட்டில் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு நிரந்தர வருமானம் உண்டு. பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். அதனால் சில இழப்புகள் ஏற்படும். ஆனால் ஜாதகர் பகைவர்களை வெல்வார்.
12-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் செவ்வாய் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர்தன் சக்தியைத் தேவையற்ற விஷயங்களில் வீணடிப்பார். வெளித் தொடர்புகளின்மூலம் ஆதாயம் இருக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும். சிறுநீர் கழிக்கும் உறுப்பில் நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
செல்: 98401 11534