உடலுறுதிக்கும், மனவுறுதிக்கும் காரணமானவர் செவ்வாய் பகவானே. இவர் பூமிதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர். மின்னலைப் போன்ற ஒளியுடையவர். குமாரன். சக்தி ஆயுதம் படைத்தவர். மங்களன். முதல் வரிசையில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இராணுவத் தளபதிகள், அமைச்சர்கள், நீதிபதிகள், பொறியியல் வல்லுநர்கள் ஆகியோரின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம் இருந்தே தீரும். மாவீரர்களை- புரட்சியாளர்களைத் தோற்றுவிப்பவர் செவ்வாயே.
பெருந்தன்மை- அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை வெல்லும் பராக்கிரமம் போன்றவற்றை அளிப்பவர் செவ்வாய். ரத்தத்திற்குக் காரகன். ரத்த சம்பந்த சகோதரர்களுக்குக் காரணமான இவர் எலும் பினுள் ஊனும் ஆவார். இந்த பூமிக்குக் காரணமான இவர் உஷ்ணமானவர். கோபமானவர். ராஜதந்திரி. அரச இனத் தவர். அமைச்சரும் இவரே.
செந்நிறத்தோன். அழகன். கடும் பார்வை, தற்பெருமை உடையவர். ஆட்டப்பிரியன். வேட்டைப்பிரியனும் ஆவார். துணிச்சல்காரர். எப்பொழுதும் மேல்நோக்கிப் பார்ப்பவர். பூமி முதலானவற்றில் பற்றுள்ளவர். இவரது ரத்தினம் பவளம். நெருப்புக்கூடத்தில் உலவு பவர். தென் திசைக்குரியவர். நான்குவித உபாயங்களில் தண்ட உபாயத்திற்குரியவர். வியாழன், சந்திரன், சூரியன் இவருடைய நண்பர்கள். புதனைப் பகையாகக் கொண்டவர். மேஷம், விருச்சிகம் சொந்த வீடுகள். கடகம் நீச வீடு. மகரம் உச்ச வீடு. மிதுனம், கன்னி பகை வீடுகள். சிம்மம், தனுசு, மீனம் ஆகியவை நட்பு வீடுகள். மற்றவை சமமாகும்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரங்களுக்கு நாயகர். ஜாதகத்தில் உச்ச மடைந்த அங்காரகன் ஒரு கேந்திரத்தில் இருந்தால், அந்த ஜாதகரை வாழ வைத்தே தீருவார்- அவரு டைய தசை வரும்போது! வீரபத்திரருடைய அம்சம் செவ்வாய் என்று கூறப் படுகிறது. இவரது ஆயுதம் கத்தி, கதை, சூலம் ஆகிய வையாகும். தீட்சிதர், "அகில நலத்தைத் தருபவர் செவ்வாய். வழிபடுவோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்பவர். எளியோரை ரட்சிப்பவர்' என்று புகழ்கிறார்.
முக்கோண மண்டலத்தில் அமரும் இயல்புடையவர். வைத்தீஸ் வரன்கோவில் இவரது உறைவிடம் என்று தீட்சிதர் கூறுகிறார்.
தேசத்தைப் பரிபாலனம் செய் வோருக்கும், நால்வகைப் படைகளை முன்னின்று நடத்துவோருக்கும், தீப்பிழம்புபோல் அசுத்தத்தை சுட்டெரித்து தூய்மையை நிலைநாட்டுவோருக்கும், யாருக்கும் தலைவணங்காமல் தன்மானத் தோடு வாழ்வோருக்கும் மூலமாக உள்ளவர் செவ்வாய். அவரது அருள் கிட்டினால் எல்லாம் சிறப்பே.
கீழுள்ள பரிகாரங்களைச் செய்வதன்மூலம் நன்மை பெறலாம்.
பரிகாரம்-1
சித்திரை மாதம் முதலாவது செவ் வாய்க்கிழமையில் வீரபத்திரரை வழிபட்டால் செவ்வாயின் அருள் கிடைக்கும். அந்த நாளில் வழிபடு வோருக்கு எல்லா வளத்தையும் செவ்வாய் அருள்வார்.
பரிகாரம்-2
வசதியுள்ளவர்கள் கும்ப கோணம் அருகேயுள்ள வைத்தீஸ் வரன்கோவில் சென்று, அங்குள்ள செவ்வாயை வணங்கிவர நன்மை யுண்டு.
பரிகாரம்-3
எங்கும் செல்ல முடியாதவர்கள் கீழுள்ள பாடலை தினமும் பாடுவதன் மூலம் சிறப்பு பெறலாம்.
"சிறப்புறு மணியே, செவ்வாய் தேவே, குறைவிலாதருள்வாய் குணமுடன் வாழ; மங்களன் செவ் வாய் மலரடி போற்றி' என்னும் துதியை தினசரி 18 முறை ஒரே நேரத்தில் சொல்லி வணங்க செவ் வாயின் பலம் கூடும்.
செல்: 94871 68174