Advertisment

இராமயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (29) சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/truths-sin-and-curse-ramayana-says-29-siddhardasan-sunderji-jeevanadi

ராசரர்: மைத்ரேயரே, கிருஷ்ணாவதாரத்தின் நோக்கம் இரண்டு நிலையாகும். மகாவிஷ்ணு தனது முந்தைய அவதாரங்களான, மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமர் என ஏழு பிறவிகள் இந்த பூமியில் பிறந்து, தனக்கு சம்பந்தமேயில்லாத பலரைக் கொன்றதனால் ஏற்பட்ட சாபங்களைத் தீர்த்து, நிவர்த்திசெய்ய எட்டாவது அவதாரமான கிருஷ்ணாவதாரம் எடுத்து, தன்னையறிந்து வாழ்ந்து, முற்பிறவி பாவ- சாபங்களுக்கு உண்டான விதிப்பலன்களை, தன் நடைமுறை வாழ்வின் செயல்கள்மூலம் அனுபவித்துத் தீர்த்து நிவர்த்தி செய்தார்.

Advertisment

கிருஷ்ணாவதாரத் திற்கு மற்றொரு காரணமும் உண்டு. இந்த பூமியின் காலஅளவு, கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நான்கு நிலைகளில், கணக்கீடு செய்து கூறப் பட

ராசரர்: மைத்ரேயரே, கிருஷ்ணாவதாரத்தின் நோக்கம் இரண்டு நிலையாகும். மகாவிஷ்ணு தனது முந்தைய அவதாரங்களான, மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமர் என ஏழு பிறவிகள் இந்த பூமியில் பிறந்து, தனக்கு சம்பந்தமேயில்லாத பலரைக் கொன்றதனால் ஏற்பட்ட சாபங்களைத் தீர்த்து, நிவர்த்திசெய்ய எட்டாவது அவதாரமான கிருஷ்ணாவதாரம் எடுத்து, தன்னையறிந்து வாழ்ந்து, முற்பிறவி பாவ- சாபங்களுக்கு உண்டான விதிப்பலன்களை, தன் நடைமுறை வாழ்வின் செயல்கள்மூலம் அனுபவித்துத் தீர்த்து நிவர்த்தி செய்தார்.

Advertisment

கிருஷ்ணாவதாரத் திற்கு மற்றொரு காரணமும் உண்டு. இந்த பூமியின் காலஅளவு, கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நான்கு நிலைகளில், கணக்கீடு செய்து கூறப் பட்டுள்ளது.

Advertisment

ram

இந்த பூமியில் ஒவ்வொரு யுக காலத்திலும் பிறந்து வாழும் மனிதர்களின் மனம், எண்ணம், குணம், வாழ்வின் நடைமுறை செயல்கள் மாறிக்கொண்டே வரும். அல்லது மனிதர்கள் செயல்களை, மாற்றிக்கொண்டே வாழ்வார்கள். மச்ச அவதாரம்முதல் கிருஷ்ணாவதாரம்வரை உள்ள எட்டு அவதாரங்கள், முதல் மூன்று யுகங்களில் உண்டானது.

நான்காவது யுகமான கலியுகத்தில், வாழப்போகும், மனிதர்களின் வாழ்க்கை முறை, முற்றிலும் மாறுபட்டு இருக்குமென் பதால், கலியுகத்தில் ஒரு மனிதன், தன் வாழ்வில் அனுபவிக்கும், சிரமம், தடைகளை எவ்வாறு தன் நடைமுறை செயல்கள்மூலம் தடுத்துக்கொண்டு, வாழ்வில் நன்மை, உயர்வை அடையலாம் என்பதை கலிகால மக்கள் அறிந்துகொள்ள, தானே வாழ்ந்து காட்டியது கண்ணனின் வாழ்க்கையாகும்.

மைத்ரேயர்: பராசர மகரிஷியே, மகாவிஷ்ணு, தனது ஏழு அவதாரங்களில், செய்த செயல்களையும், அதனால் அடைந்த பாவ- சாபங்களையும் யார் யாருக்குச் செய்தாரோ, அதனைத் தனது எட்டாவது அவதாரமான கிருஷ்ணாவதாரத்தில், அவரவர்களுக்கே, தன் நடைமுறை செயல்கள்மூலமும், பிரார்த்தனையாலும் எவ்வாறு நிவர்த்திசெய்து தீர்த்தார் என்பதைக் கூறினீர்கள்.

குருநாதரே, அதேபோன்று, கலியுகத்தில், வாழப்போகும் மக்களின், மனம், எண்ணம், குணம், செயல்கள், வாழ்க்கை நிலை பற்றியும் நான் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். பராசரர்: மைத்ரேயனே, கலியுகத்தின் விஸ்வரூபத்தைக் கூறுகின்றேன், அறிந்துகொள்.

கலியுகத்தில் ஆசான், மாணாக்கன் என்ற நிலை இருக்காது. அறிவு போதிக்கும் குருவை, சீடன் அலட்சியப்படுத்துவான்; அவமானப்படுத்துவான். கலியுக ஆச்சாரியனும், குறையுள்ளவனாக, குதர்க்க குணமுள்ளவனாக இருப்பான். ஆசிரியன் பணம், பொருளையே விரும்பி, குறிக்கோளாகக் கொண்டிருப்பான். கற்கும் கல்வியும், மனிதர்களை நெறிபடுத்தி, அறிவை சீர்படுத்தும் பாடமாக இருக்காது.

கலியுகத்தில் வேதம், சாஸ்திரம், பக்தி, ஆயகலைகள் அறுபத்து நான்கும், மற்ற வித்தைகளைக் கூறும் கல்வியும், பணம், பொருள், சம்பாதிப்பதற்கே பயன்படுத்திக்கொள்வார்கள். அறிவை வளர்த்துக்கொள்ள கல்வி கற்கமாட்டார்கள். ஆச்சாரியனும் கற்றுத் தரமாட்டார்கள். பணம் உள்ளவர்களுக்கே பள்ளியில் ஆச்சாரியாரின் அனுமதி இருக்கும். கல்வி வியாபாரப்பொருளாகவும், கல்விக்கூடங்கள் வணிகத் தலமாக இருக்கும்.

வேத சாஸ்திர ஆகமங்கள் வியாபாரப் பொருளாகி, வீதியெங்கும் பணம், பொருளிற்காக விற்கப்படும். அதனால் கலிகாலத்தில், வேத மந்திரங்கள், சக்தி யிழந்து கோரிய பலனைத் தராது. வேத சாஸ்திர ஆகமங்களைக் கற்பவர்களும், வேத மோதும் பண்டிதர் களும், முறையான விரதங்களைக் கடைப்பிடிக்காமல், அனுஷ்டானமின்றியே வேத அத்தியாயனம் செய்வார்கள். அதனால், கலியுகத்தில் இவர் களால் செய்யப்படும் பூஜை, ஹோமாதி, யாகங்கள் பலனைத் தராது. புணருத்தாரனம் செய்யும் கோவில்களில் தெய்வ சக்தி இல்லாமல் போகும். தெய்வங்களும், தேவர்களும் அவிர் பாகத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மந்திர தேவதைகள் சக்தியிழந்துவிடும்.

கலிகாலத்தில், கர்மவினை பாவ- சாபங் கள் நிவர்த்தியாக சரியான, முறையான பரிகாரங்களைச் செய்ய மாட்டார்கள். எதை யாவது செய்து விட்டு அதை பரிகாரம் என்று கூறிக் கொள்வார்கள்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala140423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe