"நீறில்லா நெற்றி பாழ்' என்பது முதுமொழி.

அதன்படி திருநீறு அணியா நெற்றி பாழாய்ப்போகும் என்பது விதி. ஈசனைத் தலைவனாக ஏற்று நிற்பவர்கள் சைவர்கள். இவர்களின் புனிதக் குறியீடாக திருநீறு விளங்குகிறது. திருநீற்றின் மகிமை சொல்லி−ல் அடங்காது. மன்னன் கூன் பாண்டியனின் வெப்புநோயை நீக்க திருஞானசம்பந்தரின் திருநீற்றுப்பதிகப் பாடல்கள்தான் அருள்புரிந்தன.

மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் விபூதியானது கல்ப விதிமுறையில் தயாரிக்கப்படுகிறது. கல்ப விபூதியானது சகல வல்லமையும் பொருந்தியது என புராணங்கள் கூறுகின்றன. திருநீற்றுக்கு பல பெயர்கள் இருக்கின்றன. செல்வத்தை அளிப்பது விபூதி. நம்மையெல்லாம் காத்து ரட்சிப்பதால் அதற்கு ரட்சை எனும் பெயரும் உண்டு.

muruganவினைகளை அழித்து பொடிபடச்செய்வதால் அதனை திருநீறு என்று சொல்கிறோம். ஐஸ்வர்யத்தை அளிப்பதால் அதனை விபூதியென்றும் அழைக்கிறோம்.

Advertisment

ஐந்தெழுத்து மந்திரம் "நமசிவாய' என்று ஓதித் தருவதால் இதனைப் பஞ்சாட்சரம் என்றும் கூறுவதுண்டு. சாதாரண விபூதியைவிட முறைப்படி தயார் செய்த விபூதிக்கு உடனடி பலன் கிடைக்கும். திருநீறானது கல்பம், அனுகல்பம், உபகல்பம், அகல்பம் என நான்கு வகைப்படும்.

கல்பம் என்பது, கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தை பூமியில் விழும் முன்பாக தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி, பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்னியில் எரித்தெடுப்பது. இதனை கல்பத் திருநீறு என்பார்கள். வைத்தீஸ்வரன் கோவி−ல் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தன்று கல்பவிபூதி விற்பனைக்குக் கிடைக்கும். காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அனுகல்ப திருநீறு எனப்படும். மாட்டுத்தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களிலி−ருந்து எடுத்த சாணத்தை காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்னியில் எரித்தெடுக்கப்படுவது உபகல்பத் திருநீறாகும். அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தை சுள்ளிகளால் எரித்தெடுக்கப்படுவதற்கு அகல்பத் திருநீறு என்று பெயர். இந்த நான்கு வகை விபூதிகளில் கல்பம் எனச் சொல்லப்படும் விபூதி மிகச்சிறப்பான அருள்சாதனமாகக் கருதப்படுகிறது. சாதாரண கடைகளில் விற்கப்படும் விபூதி கல்பமாகக்கூட இருக்கலாம்.

வியாபார நோக்கத்தில் எருமை போன்ற விலங்குகளின் சாணத்தையும் விபூதி தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இந்த விபூதியைப் பயன்படுத்துவதால் எந்த நற்பலனையும் எதிர்பார்க்க முடியாது.

Advertisment

விபூதியில் வேறு எந்த பொருளும் கலக்காமல் இருப்பதே நல்லது. உண்மையான மிகச்சிறந்த மகானால் தொட்டுக் கொடுக்கப்படும் விபூதி எந்த ஒரு நறுமணப் பொருளும் கலக்காமலேயே சிறந்த வாசனையைத் தரும்.

நோயை குணமாக்கும் எளிய பரிகாரம்

கார்த்திகை தினத்தன்று திருச்செந்தூர் முருகன் கோவிலி−லும், வைத்தீஸ்வரன் கோவி−லும் கல்ப விபூதி கிடைக்கும். மற்ற முருகன் ஆலயங்களிலுள்ள திருநீறையும் வாங்கிப் பயன்பெறலாம். அதை அணிவதால் நோய்கள் அற்றுப் போகும். இது முற்றிலும் உண்மை.

செல்: 94871 68174