Advertisment

திருஷ்டி தோஷம் தீர்க்கும் பரிகாரம்!

/idhalgal/balajothidam/trishti-dosha-remedy

ளமான வாழ்வியலில் நமக்குத் துணைநிற்கும் அனைத்து சக்திகளும் நம்மை மேம்படுத்த எத்தனிக்கின்றன. அவற்றின் துணைக்கொண்டு, தற்பொழுதிருக்கும் சூழலிலிருந்து சில படிகள் உயர்த்திக்கொள்ள நாமும் முயன்று, அவற்றுள் சிலவற்றில் வெற்றியும் அடைகிறோம்.

Advertisment

இந்த வெற்றியானது தொடர்ந்து நம்முடன் பயணிக்கிறதா என்றால் இல்லையென்ற பதிலே மிஞ்சிநிற்கிறது.

Advertisment

உழைப்பு, அதிர்ஷ்டம், ஜாதகரீதியான நல்ல தசாபுக்தி போன்றவை இருந்தாலும், சில சமயங்களில் கட்டுண்ட மனநிலை பலருக்கு அமைந்துவிடுகிறது. எதையோ இழக்க நேரிடுமோ என்கின்ற பயமும் அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று சிந்தித்தால், அவ்வளவு சீக்கிரமாக பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத, நம்ப முடியாத, நிரூபிக்க இயலாத கண் திருஷ்டி எனலாம்.

இதற்கு என்ன சான்று என்கின்ற வினாவிற்கு பெரும்பாலானோருக்கு விடை கிடையாது என்றாலும், இந்த திருஷ்டிமூலம் பல இன்னல்களை சந்தித்த அனுபவம் இருந்திருக்கும்.

நல்ல சீரான இயக்கம் திடீரென்று நின்றுவிடும். பணத்தடை, தேவையற்ற வாக்குவாதம், பொருள் இழப்பு, உணவு ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் என்று இவற்றில் எதையாவது ஒன்றை நாம் எல்லாரும் கடந்தே வந்திருப்போம்.

எல்லாவற்றிற்கும் விடையளிக்கும் வள்ளுவப் பெருந்தகை-

"கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்

அஃதின்றேல்

புண்ணென்ற

ளமான வாழ்வியலில் நமக்குத் துணைநிற்கும் அனைத்து சக்திகளும் நம்மை மேம்படுத்த எத்தனிக்கின்றன. அவற்றின் துணைக்கொண்டு, தற்பொழுதிருக்கும் சூழலிலிருந்து சில படிகள் உயர்த்திக்கொள்ள நாமும் முயன்று, அவற்றுள் சிலவற்றில் வெற்றியும் அடைகிறோம்.

Advertisment

இந்த வெற்றியானது தொடர்ந்து நம்முடன் பயணிக்கிறதா என்றால் இல்லையென்ற பதிலே மிஞ்சிநிற்கிறது.

Advertisment

உழைப்பு, அதிர்ஷ்டம், ஜாதகரீதியான நல்ல தசாபுக்தி போன்றவை இருந்தாலும், சில சமயங்களில் கட்டுண்ட மனநிலை பலருக்கு அமைந்துவிடுகிறது. எதையோ இழக்க நேரிடுமோ என்கின்ற பயமும் அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று சிந்தித்தால், அவ்வளவு சீக்கிரமாக பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத, நம்ப முடியாத, நிரூபிக்க இயலாத கண் திருஷ்டி எனலாம்.

இதற்கு என்ன சான்று என்கின்ற வினாவிற்கு பெரும்பாலானோருக்கு விடை கிடையாது என்றாலும், இந்த திருஷ்டிமூலம் பல இன்னல்களை சந்தித்த அனுபவம் இருந்திருக்கும்.

நல்ல சீரான இயக்கம் திடீரென்று நின்றுவிடும். பணத்தடை, தேவையற்ற வாக்குவாதம், பொருள் இழப்பு, உணவு ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் என்று இவற்றில் எதையாவது ஒன்றை நாம் எல்லாரும் கடந்தே வந்திருப்போம்.

எல்லாவற்றிற்கும் விடையளிக்கும் வள்ளுவப் பெருந்தகை-

"கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்

அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்.'

என்கிறார்.

இதற்கு கலைஞர் உரை எழுதுகையில், கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண்; மற்றவையெல்லாம் புண் என்று எழுதியுள்ளார்.

ss

சக மனிதன் மற்றும் ஜீவராசிகளின்மீது கருணைகொண்டு பார்க்கும் பார்வை தீமையை அளிக்காது. மாறாக பொறாமையுடன் அணுகும் பொழுது அந்தப் பார்வையானது அவர்களை பலவீனப்படுத்தி, பல இடர்களை அனுபவிக் கும் சூழலை உருவாக்கிவிடும் என்கிறது இந்தக் குறள்.

அதுமட்டுமல்லாமல், ஒரு மாபெரும் மதத்தைக் கட்டமைத்தவர் நபிகள் நாயகம் அவர்கள்.

ஹஜ்ரத் ஜிபரத் அலியிஸ்லாம் அவர்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலேகிவசுளாம் அவர்களிடம் உரையாடுகையில், "அல்லா வின் பெயரால், உங்களுக்கு கண் திருஷ்டி நேர்ந்திருந்தால் அதுவும் இறையருளால் நீங்கட்டும்' என்று கூறியதாக தலில்லுசலில் என்கின்ற அரேபிய நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

மகா பெரியவராகிய காஞ்சிப் பெரியவர் அவர்களும், திருஷ்டி சம்பந்தமான நிறைய பரிகாரங்களை மானுடம் உயர அளித்தது நம் அனைவருக்கும் தெரியும்.

ஒரு சக மனிதனின் பார்வையானது பல இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும் அளிக்க வல்லது. அது எப்படி முடியும் என்கின்ற ஐயம் ஏற்பட்டாலும், இதுதான் உண்மை.

"ஆன்மாவின் திறவுகோல் கண்' என்கின்றது தமிழ். "மண்ணைத் தின்றாலும் மறைவாகத் தின்' என்கிறது மூத்தோர் மொழி. இவையெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் அல்ல என்பதை நிச்சயமாக நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இன்றைய நவீன விஞ்ஞான உலகில் கதிர்வீச்சுக்களைப் படம் பிடிக்கும் கிரில்லியன் (ஏழ்ண்ப்ப்ண்ர்ய்) கேமரா பயன்பாட்டில் உள்ளது.

இதன் துணைக்கொண்டு ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்துப் புகைப்படம் எடுத்த பொழுது, அதில் நேர்மறையை உணர்த்தும் ஊதாநிறக் கதிர்கள் அதிகமாகக் காணப் பட்டது.

அதே எலுமிச்சம் பழத்தை ஒரு மனிதனின் தலையைச் சுற்றி வைத்துப் படமெடுத்த பொழுது, சுற்றியிருந்த அனைவருமே அதிர்ச்சிக் குள்ளாகினர். ஏனென்றால் அதில் ஏற்கெனவே காணப்பட்ட ஊதாநிறக் கதிர்கள் மறைந்து எதிர்மறையைப் பறைசாற்றும் சிவப்புநிறக் கதிர்களாக மாறி காட்சிப்படுத்தப்பட்டு படம் எடுக்கப்பட்டிருந்தது.

இது திருஷ்டி தோஷம் இருப்பதைப் புறக்கணிக்கும் சிலருக்கு சான்றாக அமைந்துள்ளது. இதுபோன்ற பல நிகழ்வுகள் மறைமுகமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

"நுணலும் தன் வாயினால் கெடும்' என்கின்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். தவளை சத்தமிட்டு பாம்பிற்கு இரையாகிவிடும் என்று நமக்கு தெரியும். ஆனால் இதில் நமக்கு புலப்படாத உண்மை என்னவென்றால், பாம்பின் பார்வை தவளையின்மீது படும் பொழுது, அந்தத் தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனக்கு சாதகமாக செயல்படும் சூழ் நிலையை மறந்து, பாம்பிற்கு இரையாகி விடுகிறது.

எதற்கு கண்ணிற்கு இத்தனை வல்லமை என்றால், இது பஞ்சபூதத் தத்துவத்தில் நெருப்பு தத்துவத்தை சார்ந்ததால்தான். மற்றவரின் சூழ்நிலையை எரிக்கத்தக்க வல்லமை பெற்றுள்ளன கண்கள்.

ஒருவரின் எண்ணமானது பொறாமையானா லும் வஞ்சகமானாலும், அவரின் பார்வை பாதிப்பையளிக்கும் என்பது மாபெரும் உண்மை.

சரி; ஒருவருக்கு திருஷ்டி பாதிப்பு உள்ளதென்பதை எவ்வாறு அறியமுடியும்?

முதலில் சோம்பலும், இனம்புரியா பயமும், உடல் சோர்ந்து விடும் தன்மையும், உடல் முழுக்க வலியும் பாடாய்ப்படுத்திவிடும்.

மேலும் உணவு சரிவர சாப்பிட இயலாது. அடுத்த செயல்பாடுகளை மறந்துவிடும் தன்மை இவர்களுக்கு மேலோங்கி இருக்கும்.

வீட்டிலுள்ள பொருட்கள் அடிக்கடி பழுதாகிவிடும். வருமானம் தடைப்பட்டு, வரவைவிட வீண் விரயங்கள் மேலோங்கி நிற்கும்.

இந்த சூழல் ஒருவருக்கு நடப்பில் இருந்தால், அவர்களுக்கு நிச்சயமாக திருஷ்டி என்கின்ற தன்மை உள்ளதென்பதை நூறு சதவிகிதம் எடுத்துக்கொள்ளலாம்.

நம் முன்னோர்கள் ஒவ்வொரு கிழமைக் கும் ஒரு விதமான திருஷ்டி கழிக்கும் தன்மையை உருவாக்கி வைத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று ஊமத்தங்காயை சுற்றிப்போட பாதிப்பு குறையும்.

திங்கட்கிழமையில் கல் உப்பு மட்டுமே எடுத்து தலையைச் சுற்றி நீரில் கரைத்துவிட வேண்டும்.

செவ்வாய்க்கிழமை செங்கல் எடுத்து தெரு முக்கூட்டில் நின்று தலையைச் சுற்றி உடைக்க வேண்டும்.புதன்கிழமை வீடு கூட்டுகின்ற பூந்துடைபத்தில் சில குச்சிகளை எடுத்து, அதில் நெருப்பைக் காட்டி தலையைச் சுற்றி ஒருமூலையில் சாற்றிவிட வேண்டும்.

வியாழக்கிழமைகளில் கல் உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சுற்றி நெருப்பில் போடவேண்டும்.

வெள்ளிக்கிழமையில், வெறும் கற்பூரத்தை மட்டும் சுற்றி வாசலில் வைத்துவிட வேண்டும்.

இவ்வாறு செய்யும்பொழுது திருஷ்டி தகர்க்கப்படும்.

சனிக்கிழமை திருஷ்டி சுற்றிப்போடுவதைத் தவிர்தல் நன்று.

மேலும் ஒவ்வொரு நாளின் முடிவிலும் உறங்கச் செல்வதற்கு முன்பு வெறும் கற்பூரத்தை வாசலில் நின்றுகொண்டு தலை, உடல் ஆகியவற்றைச் சுற்றிவிட்டு வாசலில் வைத்து பின்பு ஏற்றவேண்டும். இது அன்றன்றைய திருஷ்டியை அன்றே கழிக்கும் வல்லமை வாய்ந்தது.

வீட்டின் வாசலில் கம்பளிக் கயிறால் சுற்றப் பட்ட படிகாரக் கல்லை வாங்கிக் கட்டி வைப்பது சிறப்பு.

அமாவாசை தினங்களில் நிச்சயமாக ஒரு எலுமிச்சம் பழம், ஒரு தேங்காய், ஒரு பூசணிக்காய் ஆகியவற்றை வீட்டைச் சுற்றிவிட்டு உடைக்க, பல பிரச்சினைகளிலிருந்து விடிவு கிடைக்கும்.

அவரவரின் ஜாதகத்தில் இரண்டாமிடம் மற்றும் சூரியன், சந்திரன் ஆகியவை கண்களைக் குறிக்கும்.

இவை சுட்டிக்காட்டும் நட்சத்திரங்களின் விருட்சங்களை சேர்த்து செய்யப்படும் பஞ்சகவ்ய விளக்கு வாங்கி வீட்டின் முற்றத்தில் ஏற்றிவர, சகல திஷ்டியும் தீர்ந்து சிறப்பான வாழ்க்கை அமையும்.

செல்: 80563 79988

bala011124
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe