"காலம் ஒருநாள் மாறும்; நம் கவலைகள் யாவும் தீரும்' என்பது பலரின் நம்பிக்கை. உலகியல் வாழ்வில் மனிதர்களின் கவலைகளைத் தீர்க்கும் சக்தியாக விளங்குவது பணம்.

மனிதன் பணத்தைப் படைத் தானா அல்லது பணம் மனிதனைப் படைத்ததா என்று வியக்கும் வகையில் பணமே உலகை இயக்குகிறது. ஒருவரின் ஜனனகால ஜாதகரீதியாக 2, 5, 11-ஆமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசாபுக்தி நடக்கும்போது பணம் குவியும். எந்த தசாபுக்தியாக இருந்தாலும், கிடைக்கும் பணத்தின் அளவை யும் பயன்பாட்டையும் நிர்ணயிப் பது பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடம்.

ஒருவரின் வாழ்நாளில் அதிர்ஷ்டமோ, கடவுளின் அருளோ, கர்மவினையோ எதுவாக இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடமே தீர்மானம் செய்கிறது. ஏனெனில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்தான் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்து வினைகளும் பதிவாகியிருக்கும்.

ஆழ்மன எண்ணங்களைக் குறிக்கும் ஐந்தாமிடத்தில் பொதிந்திருக்கும் கர்மாக்கள் எதுவானாலும் மனதின் வழியாகத்தான் வெளியில் வந்தாகவேண்டும். மனதின் சக்தியைப் பெருக்கி சரியான வழியில் மனதைப் பயன்படுத்தும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டால் கர்மவினை களை சர்வசாதாராண மாய் வெல்லலாம் என்பது அனுபவ உண்மை.

Advertisment

பிறப்புமுதல் இறப்புவரை அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக்கப் பட்டவை. அப்படியிருக்க உழைப்பு, உழைப்பென்று உண்ண, உறங்க நேரமின்றி உழைப்பவர்களையும் பார்க்கிறோம். அதிர்ஷ் டம், அதிர்ஷ்டம் என உழைக்காமல், அதிர்ஷ்ட குதிரையை நம்பி வாழ்வைத் தொலைப்பவர்களையும் பார்க்கிறோம்.

உழைத்தவர்கள் எல்லாம் உயர்ந்துவிட வுமில்லை. அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர் கள் அதிர்ஷ்டத்தைத் துரத்துவதை ஆயுள் முழுவதும் நிறுத்தப்போவதுமில்லை.

மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின்மேல் தனி ஆர்வமுண்டு. மாடமாளிகையில் வாழ்பவர்கள் முதல் சாலையோரத்தில் வசிப்பவர்கள்வரை அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின்மேல் தனி விரும்பம்... தனி மரியாதை... தனி கவனம் உண்டு.

Advertisment

அதிர்ஷ்டம் என்றால் என்ன? அதை அடைவது எப்படி?

நாம் விரும்பும்போது வருவது அதிர்ஷ்டமா அல்லது எதிர்பார்க்காமல் தேடிவருவது அதிர்ஷ்டமா, அதிர்ஷ்டத்தை ஜாதகத்தால், வாஸ்துவால், அதிர்ஷ்ட எண்களால் அதிர்ஷ்டக் கற்களால் அழைக்க முடியுமா? தேடும் அனைவருக்கும் கிடைக் காமல் ஒருசிலரின் வாழ்வில் மட்டும் அது முகம் காட்டுவதேன் என்னும் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் தருவது ஜாதகத் தில் ஐந்தாமிடம்.

ஒருவரது ஜனன காலத்தில் ஐந்தாமிடம், ஐந்தாமதிபதி மற்றும் ஐந்தாமிடத்துடன் சம்பந்தம்பெறும் கிரகங்களே அதிர்ஷ் டத்தை வரவழைக்கின்றன.

அதேநேரத்தில் பிரபஞ்சத்திடம் நாம் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டத்தைப் பெறக் கூடிய தகுதிகள் நம்மிடம் உள்ளதா என்று நாம் கவனிக்கவேண்டும். பிரபஞ்ச சக்தியை எதிர்பார்க்கும் ஒருவர் அதற்கான தகுதிகளை யடைய பன்னிரண்டு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

1. அவசரமின்மை

விதை விதைத்து தண்ணீர் ஊற்றி சூரிய வெளிச்சம் பட்டவுடன் செடி வளர்ந்து விடாது. நாம் விதைத்த விதையின் தரம், விதைத்த இடம், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பொருத்து செடி வளர குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். அதேபோல் எந்த செயலாக இருந்தாலும் அதன் பலன் கிடைக்க போதிய கால அவகாசம் தேவை. அதிர்ஷ்டம் ஒருவரைத் தேடிவரும்வரை பொறுமையாக, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் உழைக்கவேண்டும். செய்த செயல் வடிவாக்கம் பெறும்வரை பொறுமையுடன் இருக்கவேண்டும்.

கதைகளில் வருவதுபோல் யாராலும் ஒரே நாளில் வாழ்வின் உச்சத்தை அடைந்து விட முடியாது. பல வருட கடுமையான முயற்சி மற்றும் உழைப்பால் மட்டுமே அதிர்ஷ்டத் திற்கு நம்மேல் நம்பிக்கை வந்து பலன் தரத் துவங்கும்.

2. உயர்ந்த எண்ணம்

மனிதனின் எண்ணங்களுக்கேற்பவே அவரது வாழ்வின் உச்சம் அமைகிறது. ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கேற்ப எண்ணங் களின் அளவீடு வரையறை பெற்றிருக்கும். அதாவது ஆழ்மனதில் ஒரு வரைபடம் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவரது உள்ளத்தின் ஆழத்தில், அவரது ஆழ்மனதில், அவரது லட்சியக் கனவுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதுவே அவரது சிகரம். அந்த சிகரத்தைக் கடந்து மேலே செல்ல, அந்த பதிவுகளில் எண்ணங்களை மாற்றம் செய்யும்போது, அவரவர் வாழ்வில் அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்துகொள்கின்றன.

3. வெற்றி

அதீத முயற்சியெடுத்து வாழ்வில் சில வெற்றிகளை உருவாக்கிவிட்டால், அந்த வெற்றி தேவதை மேலும் பல வெற்றிகளை நம்மிடம் கொண்டுவருவாள். எதிர்பாராமல் சில தோல்விகள் நேர்ந்துவிட்டால், சற்று ஓய்வெடுத்து நன்றாக சிந்தனை செய்து, சில சிறிய காரியங்களைக் கையிலெடுத்து சிரத்தையோடு செயலாற்றி சில வெற்றிகளைப் பற்றிக்கொண்டுவிட்டால் அப்போது மீண்டும் வெற்றி முகம் காட்டும். அந்த வெற்றிகள்மூலம் அதிர்ஷ்டம் முகம் காட்டும்.

12

4. மகிழ்ச்சி

அதுபோல வெற்றி மகிழ்ச்சியைத் தருகிறதென்பது உலக விதி. மகிழ்ச்சியான மனநிலை வெற்றியை ஈர்க்கிறது என்பது ஆன்மிக விதி. ஒரு வெற்றிக்காக பிரபஞ்சத்திடம் வேண்டி பின் அது கிடைத்துவிட்டது போன்ற கற்பனை செய்யவேண்டும். அந்த வெற்றி கிடைத்தவுடன் எத்தனை மகிழ்ச்சியோடு இருப்பீர்களோ அத்தனை மகிழ்ச்சியோடு இப்போதே இருங்கள். அந்த மனநிலை வெற்றியை இழுத்துக்கொண்டு வரும். மகிழ்ச்சியான மனநிலை வரும்போது அதிர்ஷ் டத்தின் கதவு திறக்கப் படும்.

5. செயல் திறன்

செல்வம் வேண்டும்; வாழ்வு செழிக்க வேண்டும்; வான்புகழ் பெறவேண்டும்; அது வேண்டும்- இது வேண்டுமென்று பேசிக்கொண்டிருந் தால் போதாது. அதற் கான உற்சாகமும், விடா முயற்சியும் இருந்தால் அதிர்ஷ்டம் வழி கேட்டுக்கொண்டு வரும். விடாமுயற்சி இருக்குமிடத்தில் நற்சக்திகள் முன்நிற்கும்.வெற்றி தேவதை உடனிருந்து அதிர்ஷ்டத்தை சமர்பிக்கும்.

6. மன அமைதி

நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் மனிதனின் மனதில் இருந்துதான் தோன்று கின்றன. அதாவது எண்ணங்களின் ஆரம்ப ஸ்தானம் மனம். ஆழ்மனதில் அழுத்தமான- அமைதியான எண்ணம் இருந்தால் மட்டுமே மன அமைதி கிட்டும். மன அமைதியே நமக்கு வெற்றியைத் தேடித்தரும். ஒரு தெளிவான மனநிலையில் இருந்து, எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும்போது, வலி-மைவாய்ந்த கட்டளையாக அதைப் பிரபஞ்சத்திற்குக் கொடுக்கிறீர்கள். அந்த கட்டளைக்கேற்ப இந்த பிரபஞ்சப் பேராற்றல் உங்களை வழிநடத்தும்.

7. சமுதாய நன்மை

நாம் எந்தச் செயலைச் செய்தாலும்- எதைப் பற்றிப் பேசினாலும் அதன்மூலம் நமக்கோ பிறருக்கோ சமுதாயத்திற்கோ ஒரு நன்மையாவது இருக்கவேண்டும். நாம் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். பிறரின் உணர்வை மதித்து ஒரு செயலைச் செய்யும்போது அதிர்ஷ்ட வாசல் தென்படும்.

8. விழிப்புணர்வு

நாம் அதிர்ஷ்டத்தைத் தேடி அலைகிறோம். அதுவோ நம்மைத் தேடி வருகிறது. அப்படி வருகிற அந்த அதிர்ஷ்டத்தைக் கண்டுகொள்ளும் விழிப் புணர்வு நமக்கு இருப்ப தில்லை. விழிப்புணர் வோடு இருப்பவர்கள், திட்டமிட்டு செயலாற்று பவர்கள் அதிர்ஷ்ட வாசலைக் கண்டு கொள்கிறார்கள்.

9. தீய பழக்கங்கள்

அலட்சியமான சில தீய பழக்கங்கள் மனித வாழ்வில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தீவிர முயற்சி எடுத்து தீய பழக்கத்திலி-ருந்து வெளியே வரும்போது அதிர்ஷ்டம் தென்றல் காற்றாக வீசும்.

10. எல்லாம் நன்மைக்கே

நல்லதும் கெட்டதும், சாதகங்களும் பாதகங்களும் நிறைந்ததே வாழ்க்கை. நல்ல விஷயங்களை ஆனந்தமாக ஏற்பதுபோல் துன்பம் வந்தாலும் துவளக்கூடாது. எந்த சூழ்நிலையையும் எதார்த்தமாக எடுத்துக் கொண்டு வாழ்பவர்கள் புத்திசாலி-கள். தோல்வியைக் கண்டு பயந்து பின் வாங்குவோரால் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாது. மனம் தளராமல் மீண்டும் முயற்சிக் கும்போது வெற்றிக்கனி அதிர்ஷ்டமாக கைக்கு எட்டும்.

11. தடைகள்

நம்முள் நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு போன்றவை இருக்குமானால், பிரபஞ்சம் நமக்குணர்த்தும் முக்கிய எச்சரிக்கை செய்தியை நம்மால் உணரமுடி யாது. எத்தனை பெரிய பலமான தடைகள் வந்தாலும் மனம் கலங்காமல், துணிச்சலோடு தடைகளைத் தகர்த்து சாதனைகள் படைக்க வேண்டும்.

12. திட்டமிடுதல்

நாம் செய்யும் செயல்கள் பெரியதோ சிறியதோ- சரியாக திட்டமிடுதல் மிகவும் அவசியம். முறையான திட்டமிடுதலுடன் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் மிக முக்கியம். என் முயற்சி பலி-க்குமா என்ற அவ நம்பிக்கை ஏற்பட்டாலே பலி-தமாகாது. நம்பிக்கையும் முறையான திட்டமிடுதலுமே வெற்றின் ரகசியம்; அதிர்ஷ்டத்தின் வாயிற்கதவு. மேலே கூறிய பன்னிரண்டு விதிகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு பிரபஞ்சத்திட மிருந்து வரும் சுப- அசுபச் செய்திகளை உணரும் நேர்மறையாற்றல் அதிகரிக்கும். அத்துடன் ஐந்தாமிடத்தை வலிமைப்படுத்தும் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க அதிர்ஷ்டம் நம் ஆன்மாவில் குடியேறும். மனிதர்கள் இந்த பிறவியில் படும் துன்பங்களுக்குக் காரணம் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமே என்று ஜோதிடம் கூறுகிறது. நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களைப் போக்க ஐந்தாமதிபதியை வணங்கவேண்டும்.

இனி பன்னிரண்டு லக்னத்தினருக்கும் பூர்வபுண்ணியத்தை அதிகரிக்கச் செய்யும் வழிபாட்டு முறைகளைக் காணலாம்.

மேஷம்

இவர்களின் ஐந்தாமதிபதி சூரியன் என்பதால் குங்குமப்பூ கலந்த தீர்த்தத்தை தினமும் அருந்தவேண்டும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதுடன் ஆதித்ய ஹ்ருதயம் கேட்கவேண்டும். மேலும் மலைமேலமர்ந்த சிவனை வழிபடுவது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபட ஆன்மபலம் அதிகரிக்கும்.

ரிஷபம்

இவர்களின் ஐந்தாமதிபதி புதனால் ஏற்படும் தோஷங்கள் விலக துளசி தீர்த் தத்தை அடிக்கடி பருகவேண்டும். வருடம் ஒருமுறை திருவெண்காடு புதன் ஸ்தலம் சென்று வரவேண்டும்.புதன் கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் பச்சைப் பயறு தானம் தர, ஐந்தாமிட குறைபாடுகள் அகலும்.

மிதுனம்

இவர்களின் ஐந்தாமதிபதி சுக்கிரன் என்பதால் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் , லவங்கம் கலந்த தீர்த்தத்தை தினமும் பயன் படுத்தவேண்டும். வருடத்திற்கு இரண்டு முறை திருமயிலை கபாலீஸ்வரர் சமேத கற்பகாம்பாளை வழிபட பூர்வஜென்ம குற்றம் குறையும். வெள்ளிக் கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து பஞ்சாட்சர மந்திரம் சொல்லி- வணங்கவேண்டும்.

கடகம்

கடகத்திற்கு ஐந்தாமிடம் விருச்சிகம். இதன் அதிபதி செவ்வாய் என்பதால் அடிக்கடி பீட்ரூட் சாறு தேன் கலந்து சாப்பிடவேண்டும். வருடத்திற்கு இரண்டுமுறை இராமேஸ்வரம் சென்று ஸ்ரீ ராமநாத சுவாமியை வழிபட வேண்டும்.செவ்வாய்க்கிழமையும் பிரதோஷ மும் இணைந்த நாளில் சிவனுக்கு பாலாபிஷே கம் செய்யவேண்டும்.

சிம்மம்

சிம்ம லக்னத்திற்கு ஐந்தாமதிபதி குரு என்பதால் பச்சைக் கற்பூரம், கற்கண்டு, ஏலக்காய் கலந்த பாலை தினமும் அருந்த வேண்டும். அமாவாசை, பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் சித்தர்கள் ஜீவசமாதி யில் வழிபாடு நடத்த ஆன்மபலம் பெருகும். வியாழக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்கு கரும்புச்சாறால் அபிஷேகம் செய்து வழிபடவேண்டும்.

கன்னி

மகர ராசியின் அதிபதி சனியை ஐந்தாம் அதிபதியாகக் கொண்ட கன்னியினர் தினமும் குளிர்ந்த நீரில் ஒரு துளி வில்வ இலைப் பொடி கலந்து சாப்பிடவேண்டும். சந்தர்ப்பம் சாதகமாக இருக்கும் காலங்களில் திருவிடை மருதூர் மகாலி-ங்கேஸ்வரரை வழிபட பல ஜென்மப் பாவம் கழியும். சனிப் பிரதோஷ நாட்களில் சிவனுக்கும் நந்திக்கும் வஸ்திரம் சாற்றி வழிபடவும்.

துலாம்

துலாம் லக்னத்தின் ஐந்தாமதிபதி சனி பகவான் என்பதால், சனிக்கிழமை பசுவுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுக்க வேண்டும். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபாடானது மாற்றத்தையும் ஏற்றத்தையும் அதிகரிக்கும். சனிப் பிரதோஷ நாட்களில் தயிர்சாதம் தானம் தரவேண்டும்.

விருச்சிகம்

குருவை ஐந்தாமதிபதியாகக் கொண்ட நீங்கள் புனித நதி மற்றும் கடலி-ல் அடிக்கடி நீராடவேண்டும். திருச்செந்தூர் முருகனை சரணடைந்து ஆத்மார்த்த வழிபாடு செய்யவேண்டும்.வியாழக்கிழமையில் வரும் பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடவேண்டும்.

தனுசு

தனுசு லக்னத்தினரின் ஐந்தாமதிபதி செவ்வாய் என்பதால் அடிக்கடி மாதுளம் பழச்சாறு அருந்தவேண்டும். இயன்றபோது பழநி ஸ்ரீ பாலதண்டாயுதபாணியை ராஜ அலங்காரத்தில் தரிசிக்கவேண்டும். செவ்வாய்க் கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவபெருமானுக்கு அரளிமாலை அணிவித்து வழிபடவேண்டும்.

மகரம்

மகரத்தின் ஐந்தாமதிபதி சுக்கிரன் என்பதால் தினமும் பச்சைக் கற்பூரம் மற்றும் ஏலக்காய் கலந்த புனிதநீரை சிறிது அருந்தவேண்டும். வெள்ளிக்கிழமை ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை தரிசிக்கவேண்டும். பிரதோஷம், வெள்ளிக் கிழமை வரும்பொழுது சிவனுக்கு தாமரை மாலை அணிவித்து வழிபடவேண்டும்.

கும்பம்

உங்களின் ஐந்தாம் அதிபதி புதன் என்பதால் தினமும் நெல்லிக்காய்ச் சாறு அருந்த வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் மற்றும் சொக்கநாதரை புதன்கிழமை தரிசிக்கவேண்டும். புதன் கிழமையும் பிரதோஷமும் சேர்ந்த நாளில் வெண்பொங்கல் நிவேதித்து தானம் தரவேண்டும்.

மீனம்

சந்திரன் உங்களின் ஐந்தாமதிபதி என்பதால் அடிக்கடி புனித நீராடல் செய்ய ஆத்மசுத்தி ஏற்படும். திருப்பதி ஸ்ரீ வேங்கடாசலபதியை வியாழக்கிழமை பகல் 11.00-12.00 மணிக்குள் நேத்திர தரிசனம் செய்யவேண்டும். திங்கட் கிழமை பிரதோஷம் வரும்போது சிவனுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்ய பிறவிப்பிணி தீரும். அதிர்ஷ்டத்தால் பணக்காரராக வேண்டு மென்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே அதிர்ஷ்டசாலி-யாக- அதிக பணமுடையவர் களாக வாழவேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்கிறது. ஏனோ, சிலருக்கு பணத்தை சேர்க்கும் தந்திரவித்தை கடைசிவரை தெரியாம லேயே போகிறது. மேலே கூறிய வழிபாட்டு முறையைப் பயன்படுத்தினால், ஒரு ரூபாயைக் கூட எதிர்காலத்திற்காக சேமித்துவைத்துக் கொள்ளாதவர்கள் கையில் பணம் சேரும். வருமானம் இல்லாதவர்களுக்கு வருமானம் தானாகத் தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் இல்லாதவர் களுக்கு, தொழிலி-ல் நல்ல முன்னேற்றமடைந்து அதிக லாபத்தைப் பெறமுடியும். இந்த பரிகாரத்தோடு சேர்ந்து உங்களுடைய விடா முயற்சியும் இருந்தால், பணத்தை வைப்பதற்கே இடமிருக்காது, அந்த அளவிற்கு பணம் நிரம்பி வழியும். அதற்கான இந்த சூட்சும முறையைப் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகள்.

செல்: 98652 20406