ஒரு ஜாதகத்தின் பலனை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை படைத்த யோகங்களில் ஒன்று பரிவர்த்தனை யோகமாகும்.
ராசிக் கட்டத்தில் ஏதேனும் இரண்டு கிரகங்கள் தங்களுக்குள் தமது ஆட்சி வீடுகளை மாற்றிக் கொண்டு நின்றால் அது பரிவர்த்தனை யோகமாகும். பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் பலம் மிக்கவைகள். கிரகங்கள் மாறி அமரும்போது அவற்றின் சக்தியும் வலிமையும் கூடும். அந்த கிரகங்களுக்கு ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தும் வல்லமை யுண்டு. சுபகிரகங்கள் பரிவர்த்தனைப் பெற்றால் சுபயோகத்தையும், அசுப கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவதால் அசுப பலன்களையும் தரும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yogam_18.jpg)
கிரகங்களின் பரிவர்த்தனையை இரண் டாக வகைப்படுத்தலாம்.
1. ராசிப் பரிவர்த்தனை கிரகங்கள் தங்களுக்குள் வீடுமாறி அமர்வது ராசிப் பரிவர்த்தனையாகும். இந்த பரிவர்த்தனையால் ஏற்படும் மாற்றங்கள் எளிதில் வெளியில் தெரியும். இதனை மறைக்க முடியாது. ரகசியம் காக்கமுடியாது. பரிவர்த்தனை பெற்ற கிரகங்களின் காரகம் சார்ந்த ரகசியங்கள் எது நடந்தாலும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
2. நட்சத்திர சாரப் பரிவர்த்தனை இரு கிரகங்கள் தங்களுக்குள் நட்சத்திரங் களில் மாறி அமர்ந்திருப்பது நட்சத்திர சாரப் பரிவர்த்தனை எனப்படும். இந்த நட்சத்திர பரிவர்த்தனையில் நடக்கும் சம்பவம் எளிதில் வெளியில் தெரியாது. இதனை ஜாதகர் மறைத்து வைக்கவும் ரகசியம் காக்கவும் முடியும். சாரப் பரிவர்த்தனை பெற்ற காரக கிரகங்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பது கடினம். பரிவர்த்தனை பலன் தரும் விதம் பரிவர்த்தனை பெற்ற கிரகத்தின் தசா புக்திக் காலங்களில் திடீர் திருமணம், நல்ல வேலைவாய்ப்பு அல்லது ஏதேனும் இழப்பு போன்ற சுப- அசுப சம்பவங்களை நடத்தும். பரிவர்த்தனையான கிரகத்தின் பலன் தசையில் மட்டுமே செயல்படுத்தும் புக்திக் காலங்களில் எந்த பலனும் ஏற்படுத்தாது. முதலில் நின்ற வீட்டுப்பலனை சிறிது செய்துவிட்டு பிறகு பரிவர்த்தனையான வீட்டின் பலனைத் தரும். பெரும்பாலும் நீச கிரகங்களின் பரிவர்த்தனை நல்ல பலனைத் தருவதில்லை. பரிவர்த்தனையான கிரகங்கள் தனது காரக, ஆதிபத்திய விஷயங்களை நடத்தும். யோகம் தரும் பரிவர்த்தனைகள் பரிவர்த்தனை அடைந்த கிரகங்கள் சுப கிரகங்களாக இருந்தால் யோகங்கள் மிக உயர்வானதாக இருக்கிறது. இந்த அமைப்பு டையவர்கள் வசதியின் உச்சத்தில் வாழ்கிறார் கள்.
1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களுக்குரிய அதிபதிகளில் எவரேனும் இருவர் இடம்மாறி இருந்தால், ஜாதகருக்கு சொந்த வீடு, நிலபுலன்கள் அமையப் பெற்று செல்வாக்கோடு திகழ்வார்.
மூன்றாமதிபதி 1, 2, 4, 5, 7, 9, 10, 11-ஆமிடத்தில் நின்று 1, 2, 4, 5, 7, 9, 10, 11-ஆமிடங்களுக்குரிய கிரகம் 3-ஆமிடத்தில் அமர்ந்தால் உபஜெய ஸ்தானமான 3-ஆமிடத்தின் காரகத் துவமான தைரியம், வெற்றி ஜாதகருக்குக் கிடைக்கும். இதனால், ஜாதகர் பல வெற்றிகளை அடைவார். ஒன்றுக்கு மேற்பட்ட முயற்சியில் உயர்வுண்டு.
2-ஆமதிபதியும் 11-ஆமதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், ஜாதகருக்கு பல வழிகளிலும் பணம் வரும். பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் செலவழிப்பார்.
2-ஆமதிபதியும் 9-ஆமதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகரை அதிர்ஷ்டம் தேடிவரும். சகல சௌபாக்கி யங்களையும் அனுபவிப்பார்.
லக்னாதிபதியும் 5-ஆமதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், ஜாதகருக்குப் பெயரும் புகழும், கௌரவப் பதவியும் நிலைத்திருக்கும்.
லக்னாதிபதியும் 10-ஆமதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் ஜாதகர் அரசியலில் பெயர் புகழ் பெற்றுத் திகழ்வார்.
9-ஆமதிபதியும் 10-ஆமதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் ஜாதகருக்கு அதிகாரம், புகழ் தேடிவரும். கோவில், பள்ளிக்கூடம் ஆகியவற்றைக் கட்டி சிறந்த முறையில் நிர்வகிப்பார்.
1, 2, 5, 9, 10-ஆமதிபதிகளின் பரிவர்த்த னையால் தாராளமான பணப்புழக்கம் இருக்கும். அரசு, அரசியலைச் சார்ந்த நபருடன் நெருங்கிய தொடர்பு, பலவிதமான ஆடை, ஆபரணச் சேர்க்கை, அடுத்தவர்களின் சொத்தை அனுபவிப்பது, அடுத்தவர்க்கு பினாமி யாக இருப்பது, வண்டி, வாகன யோகம், வருமானம் என அனைத்தும் சுகமாக அமையும்.
பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள், ஒன்றையொன்று பார்க்கும்போது சுபகிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் சுபப் பலனைத் தரும்.
பன்னிரு ஸ்தானங்களின் 5, 9-ஆமிடங்கள் புண்ணியம் தரும் ஸ்தானங்கள். வலிமையாக தீமை செய்யும் பாவங்கள் 6, 8, 12 எனும் மறைவு ஸ்தானங்கள்.
பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி, பாக்கியாதிபதி எந்த பாவத்தில் அமர்ந் தாலும், அந்த பாவத்திலுள்ள அழுக்குகளைத் தூய்மைசெய்து விடுவார்கள். உதாரணமாக 5-ஆமதிபதி 6-ஆமிடத்தில் அமர்ந்தால், 6-ஆம் பாவக தீய பலன்கள் வெகுவாகக் குறையும். நோய் உண்டானாலும் உடன் குணமாகும். எதிர்ப்பு ஏற்பட்டாலும் அது உடனே மறையும். கடன் இருப்பினும் அவை அதிகம் தொல்லை தராது எனலாம்.
ஆனால் 6 , 8, 12-ஆமதிபதிகள் எங்கே அமர்ந்தாலும் அந்த ஸ்தானத்திற்கு கடும் தொல்லையைக் கொடுப்பார்கள்.
ஆக, தொல்லையை கடுமையாகக் கொடுக்கும் மறைவு ஸ்தானாதிபதிகள் தொல்லைகள் செய்யும் ஸ்தானங்களில் அமரும் நிலை உண்டானால் அதுவே வெற்றி தரும் விபரீத ராஜயோகமாகும். இதைத்தான் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' எனச் சொல்கிறோம்.
6, 8, 12-ஆமதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை அடைவது மகாயோகத்தைத் தருகிறது. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு போன்ற இடங்களுக்குச் செல்லவைக்கிறது. அங்குதான் அந்த யோகத்தைத் தருகிறது.
இந்த அமைப்பைப் பெற்றவர்கள் குறுகிய காலத்தில் வசதியான வாழ்க்கை யைப் பெறுகிறார்கள். இந்த சமுதாயத்தில் தங்களையும் கோடீஸ்வரர்களாக நிலை நிறுத்துகிறார்கள்.
உத்திரகாலாமிர்தம் சொல்வது என்னவெனில்-
8-ஆமதிபதி, 6 அல்லது 12-ல், 6 ஆமதிபதி 8 அல்லது 12-ல்; 12-ஆமதிபதி 6 அல்லது 8-ல் என இவ்விதம் அமர்வது அல்லது பார்வை, இணைவு, பரிவர்த்தனை தொடர்புகள்மூலம் ஒன்றுபடுவது ஆகியவை ராஜயோகத்திற்கு சமமான யோகம் செய்யும். ஆனால் மற்ற பாவக அதிபதிகள் யாரும் பரிவர்த்தனை கிரகத்துடன் தொடர்பு கொள்ளக்கூடாது. 6, 8, 12-ஆமதிபதிகள் இணைவு மட்டுமே அமையவேண்டும்.
அவயோகம் தரும் பரிவர்த்தனைகள்
ஒரு நன்மையான பாவகாதிபதியும், ஒரு தீமையான பாவகாதிபதியும் பரிவர்த்தனை பெறுவது முதல்தர அவயோகமாகும். உதாரணமாக ஆறாமதிபதி ஏழாமதிபதியுடன் பரிவர்த்தனை எனில் திருமணம் சம்பந்தமான சிக்கல்களை உண்டாக்கும். 6-ஆமதிபதி நான்காமதிபதியுடன் பரிவர்த்தனை எனில் வண்டி, வாகனம், வீடு, மனை, தாய் சுகம் இவற்றில் வில்லங்கம் உண்டுபண்ணும். 6-ஆமதிபதி ஒன்பதாம் அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றால் தந்தை, அயல்நாடு சம்பந்தமான விஷயங்களில் சிக்கல்களை உண்டுபண்ணும். லக்னத்திற்கு மறைவு ஸ்தானாதிபதிகளில் பரிவர்த்தனையான கிரகம் ராகு- கேதுவுடன் இணைவது பிரச்சினைகளைத் தரும்.
6-ஆமதிபதியும் 11-ஆமதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், ஜாதகர் தனது செல்வத்தையெல்லாம் இழக்கவேண்டிய நிலை வரும்.
அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, தேய்பிறைச் சந்திரன் ஆகியோர் பரிவர்த்தனை பெற்று ஒன்றையொன்று பார்க்கும்போது அசுபப் பலன்களையே தருவார்கள். குறிப்பாக செவ்வாய், சனி ஒன்றையொன்று பார்ப்பது, சூரியன், சனி ஒன்றையொன்று பார்க்கும்போது அளவுகடந்த அசுபப் பலன் உண்டாகும்.
திறம்பெற்ற ஒரு ஜோதிடரையும் பல நேரங்களில் தடுமாற வைக்கும் ஒரு யோகம் பரிவர்த்தனை யோகமாகும். நடக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடக்கும். இதுதான் பரிவர்த்தனை யோகமாகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/yogam-t.jpg)