ஜோதிடத்தில் பரிவர்த்தனை யோகமென்று ஒன்றுள்ளது. உதாரணமாக, விருச்சிக லக்னாதிபதி செவ்வாய் ஏழாம் வீடான ரிஷபத்தில் இருக்க, ரிஷப ராசிக்குரிய சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்தால் பரிவர்த் தனை யோகம் என்று பெயர். பரிவர்த்தனையடைந்த இரு கிரகங்கள் இடம்மாறி இருந்தாலும், தன் சொந்த வீட்டில் இருப்பதாக அர்த்தம் என்று சொல்லப்படுகிறது. இந்த யோகம் சுபப் பரிவர்த்தனை, அசுபப் பரிவர்த் தனை, சுப- அசுபப் பரிவர்த்தனை, சாரப் பரிவர்த்தனை என நான்கு பிரிவுகளாக உள்ளன.

சுபப் பரிவர்த்தனை யோகம்

லக்னத்திற்கு 1-2, 2-4, 4-7, 7-10, 5-9, 11-10-ஆம் அதிபதிகள் என பல்வேறு சுப ஆதிபத்தியம் பெற்று மாறியிருப்பது சுபப் பரிவர்த்தனை யோகம். இந்த யோகம் வாழ்க்கையில் பல விதங்களில் முன்னேற்றம் தரும்.

அசுபப் பரிவர்த்தனை யோகம்

Advertisment

3-6, 8-12-ஆம் அதிப திகள், ஆதிபத்தியம் சம்பந்தப் படுவது. இந்தவிதப் பரிவர்த் தனை எதிர்பாராத நிலையில் விபரீத ராஜயோக அடிப் படையில் திடீரென்று பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்தும். 6-ஆம் அதிபதி 8-ல், 8-ஆம் அதிபதி 12-ல், 12-ஆம் அதிபதி 6-ல், 3-ஆம் அதிபதி 12-ல், 8-ஆம் அதிபதி 3-ல் என மாறியிருப்பது அசுபப் பரிவர்த்தனை யோகமாகும்.

சுப- அசுபப் பரிவர்த்தனை யோகம்

லக்னத்திற்கு 1-2, 4-5, 7-9, 10-11-ஆம் அதிபதிகள் 3, 6, 8, 12-ஆம் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டு மாறி யிருப்பது சுப- அசுபப் பரிவர்த் தனை யோகம். இந்தப் பரிவர்த் தனையால் நன்மையும் தீமையும் கலந்தே பலன்கள் நடக்கும்.

Advertisment

இதில் நீசப் பரிவர்த்தனை, பகைப் பரிவர்த்தனை, நட்புப் பரிவர்த்தனை என உள்ளன. கடகத்தில் செவ்வாய் நீசம்பெற்று, செவ்வாய் வீடான விருச்சிகத்தில் சந்திரன் நீசம்பெற்று மாறியிருப்பது நீசப் பரிவர்த்தனை எனப்படும்.

yyy

பகைப் பரிவர்த்தனை என்பது, உதாரண மாக மகரத்தில் சந்திரன் பகை பெற்றும், கடகத்தில் சனி பகை பெற்றும் மாறியிருப்பது.

நட்புப் பரிவர்த்தனை என்பது, உதாரண மாக தனுசில் சூரியன் நட்பு பெற்றும், சிம்மத்தில் குரு நட்பு பெற்றும் மாறியிருப்பது.

ஆட்சி, உச்சம், நட்பு, பகைபெற்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று மாறிப் பரிவர்த் தனை அடைவதுண்டு.

இங்கு தரப்பட்டுள்ள உதாரண ஜாதகப் படி, தனுசு லக்னத்திற்கு 1, 5 ஆதிபத்தியம் பெற்ற குரு, செவ்வாய் சுபப் பரிவர்த்தனை அடைந்து நட்புப் பரிவர்த்தனை அடைந்துள் ளார்கள்.

தனுசு லக்னத்திற்கு 2, 8-க்குடைய சனி, சந்திரன் பகைப் பரிவர்த்தனையடைந்து சுப-அசுப ஆதிபத்தியம் பெற்று பரிவர்த்தனை அடைந்துள்ளனர்.

சுப ஆதிபத்தியம் பெற்று பரிவர்த்தனையடைந்த கிரகங்கள் தங்களுடைய தசாபுக்திக் காலங்களில் நன்மையே செய்வார்கள்.

அசுப ஆதிபத்தியம் பெற்று பரிவர்த்தனையடைந்த கிரகங்கள் தங்களுடைய தசா புக்திக் காலங்களில் விபரீத ராஜயோக அடிப் படையில் திடீரென்று பலன்களை வாரிவழங்கும்.

சுப- அசுப ஆதிபத்தியப் பரிவர்த்தனையடைந்த கிரகங்கள் தங்களுடைய தசாபுக்திக் காலங்களில் நன்மையும் தீமையும் கலந்து இரண்டாம் கட்ட பலன்களைக் கொடுக்கும்.

மேற்கண்ட உதாரண ஜாதகப்படி, தனுசு லக்னத்திற்கு குருவும் செவ்வாயும் சுப ஆதிபத்தியம் பெற்று பரிவர்த்தனை அடைந்து, தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் குரு தசையில் நன்மையே செய்துகொண்டிருக்கிறார். அடுத்துவரும் சனி தசையில் சுப- அசுப ஆதிபத்தியம் பெற்று பரிவர்த்தனை அடைந்துள்ளதால் நன்மையும் தீமையும் கலந்து பலன்கள் கொடுக்கும்.

ஒரு ஜாதகத்தில் பரிவர்த்தனை யோகம்

சிறப்பானதென்று சொல்லப்பட்டாலும், அது பெற்றிருக்கும் ஆதிபத்தியத்தைப் பொருத்தே பரிவர்த்தனை யோகம் நன்மையா? தீமையா என்று ஒரு முடிவுக்கு வரமுடியும்.

பரிவர்த்தனையடைந்த கிரகங்கள் சொந்த வீட்டில் இருப்பதாக அர்த்தம் என எடுத்துக் கொண்டாலும், நீசப் பரிவர்த்தனையடைந்தால் நீசம் வலுவாக இருப்பதாகப் பொருள். பகைப் பரிவர்த்தனையடைந்தால் பகை வலுவாக இருப்பதாக அர்த்தம்.

நட்பு பெற்ற கிரகம் பரிவர்த்தனை யடைந்தால் நட்பு வலுவாக இருப்பதாகப் பொருள்.

மேற்கண்ட உதாரண ஜாதகப்படி, குருவும் செவ்வாயும் நட்பு பெற்று பரிவர்த்தனை அடைந்துள்ளதால் நட்பு வலுவாக இருப்பதாகப் பொருள். சனியும் சந்திரனும் பகைபெற்று பரிவர்த்தனையடைந்துள்ள தால் பகை வலுவாக இருப்பதாக அர்த்தம்.

சாரப் பரிவர்த்தனை யோகம்

இரு கிரகங்கள் தங்களுக்குள் தங்கள் சுய சாரங்களைப் பரிமாறிக் கொள்வதாகும். உதாரணமாக, சூரியன் பரணி சாரம்பெற்று சுக்கிரன் சாரத்திலும், சுக்கிரன் கிருத்திகை சாரம்பெற்று சூரியன் சாரத்திலும் இருப்பது சாரப் பரிவர்த்தனை யோகம் என்று பெயர்.

பொதுவாக ஜோதிட விதிப்படி, ஒரு கிரகம் நல்ல யோக இடத்தில் இருந்தாலும், அது பெற்றிருக்கும் நட்சத்திரம் லக்னத்திற்கு சுப சாரத்தில் இருந்தால்தான் சுபப் பலன்கள் அதிகரிக்கும். லக்னத்திற்கு அசுப நட்சத்திரத்தில் இருந்தால் நன்மைகள் குறையும். அதுபோல் சாரப் பரிவர்த்தனை அடைந்த கிரகம் அது பெற்றிருக்கும் ஆட்சி, உச்சம், பகை, நீசம் மற்றும் ஆதிபத்தியம் பொருத்து சாரப் பரிவர்த்தனைப் பலன்களை நிர்ணயம் செய்யவேண்டும்.

ஒரு கிரகம் ராகு- கேது சாரத்தில் இருக்கும் பொழுது, ராகு- கேது இருக்கும் இடத்தைப் பொருத்து பலன்களைக் கொடுக்கும்; மாறும். ராகு- கேதுவுக்கு ஆட்சி, உச்சம், நீசம் என்பதை விட ஸ்தான பலம்தான் முக்கியமாக வேலை செய்யும்.

செல்: 98403 69513