ஒரு ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரனிலிருந்து 12, 2, 4, 7, 8 ஆகிய பாவங்களில் ராகு, சூரியன், சனி, செவ்வாய் ஆகியோரில் ஒருவரோ, ஒன்றுக்கும் மேலானவர்களோ இருந்தால் மணவாழ்வில் தோஷத்தை உண்டாக்கும். இதற்குச் சமமான தோஷம் ஆணின் ஜாதகத்தில் இருப்பது அவசியம். அப்போதுதான் அந்த தோஷம் நிவர்த்தியாகும். இதுவே தோஷ சாம்யம் எனப்படுகிறது.
மேற்சொன்ன நான்கு கிரகங்களில் மிகவும் குறைந்த தோஷமுள்ளது ராகு ஆகும். அதைவிட இருமடங்கு தோஷமுள்ளது சூரியன்; மூன்று மடங்கு தோஷமுள்ளது சனி; ராகுவைப்போல் நான்கு மடங்கு தோஷமுள்ளது செவ்வாய்.
அதேபோல் அவையிருக்கும் ஸ்தானங்களுக்கும

அதேபோல் அவையிருக்கும் ஸ்தானங்களுக்கும் தோஷ மதிப்பீடு உண்டு. ஒரு பாவகிரகம் 12-ஆம் இடத்திலிருக்க ஒரு பங்கு தோஷமென்றால், 2-ல் மூன்று பங்கு, லக்னத்தில் ஐந்து பங்கு, அட்டமத்தில் ஆறு பங்கு தோஷமெனக் கணக்கிடவேண்டும்.
தோஷம் செய்யும் கிரகங்கள் இருக்கும் இடத்திற்குத் தக்கவாறு தோஷங்களை ஈடுசெய்து சமன்படுத்த வேண்டும். நிகர தோஷம் கணக்கிட்டு, ஆண்- பெண் ஜாதகங்களில் ஏற்படும் தோஷ அளவை நிர்ணயித்து அவை சமமாக உள்ளதா எனப் பார்க்கவேண்டும். ஆண் ஜாதகத்தில் தோஷ அளவு அதிகமிருந்தால் பரவாயில்லை.
எந்தவொரு தோஷம் தரும் பாவகிரகமும் இந்த 12, 2, 4, 7, 1 மற்றும் 8-ஆம் இடங்களில் நிற்க, அந்த வீடு அந்த கிரகத்தின் உச்சவீடானால் முழுதோஷமும் நீங்கும். மூலத்திரிகோணமெனில் முக்கால் தோஷம், சுயவீடானால் அரைப் பங்கு, அதிக நட்பு என்றால் 3/8 பங்கு, நட்பு எனில் கால் பங்கு, சமம் எனில் அரைக்கால் பங்கு தோஷம், பகை எனில் 1/16 பாகம் இவற்றிலிருந்து குறைக்கப்படவேண்டும். வக்ர கிரகத்திற்கு முழுதோஷமும் குறையும். நீச கிரகங்களுக்கு முழுதோஷமும் உண்டு.
ராகுவுக்கு இடங்கொடுத்தவன் தோஷநிலையை எடுத்துக்கொள்ளவேண்டும். இதுவே தோஷசாம்யம் செய்யவேண்டிய முறையாகும்.
தோஷசாம்யம் சரியில்லையென்றால், தம்பதி களுக்கு உடல்நலக் குறைவு, சந்தோஷமின்மை, ஒற்றுமையின்மை மற்றும் கஷ்டங்களை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.
இவ்வாறாக லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரனுக்கு எங்ஙனம் ராகு, சூரியன், சனி, செவ்வாய் ஆகியவை தோஷம் தருகின்றன என்பதையும் கணக்கிட்டு, பெண் ஜாதகத்தில் இதற்கு நிகரான அல்லது சற்று குறைவுள்ள தோஷமாக இருந்தால் தோஷசாம்யம் சமமாகிவிவிடும். மேலும் பெண் ஜாதகத்தில் 12, 2, 4 ஆகிய இடங்களிலுள்ள கிரகங்களின் தோஷங் களை, ஆண் ஜாதகத்தில் 12, 2 அல்லது 4-ல் உள்ள கிரகங்களின் நிலை சமப்படுத்திவிடும். லக்னத் திலுள்ள கிரக தோஷத்தை, ஆணின் எட்டாமிட கிரக தோஷம் சமன்செய்யாது. ஆனால் ஆணின் எட்டாமிட தோஷத்தை பெண்ணின் எட்டாமிட தோஷம் சமன்செய்துவிடும்.
இவ்வாறு சமமாகாத வீட்டின் காரகங்கள் பாதிக்கப்படும். உதாரணமாக 2-ஆம் வீடு சமமாகவில்லையெனில் மணவாழ்வில் சுகமிருக்காது. சொத்துகளும் நிலைத்திருக்காது. லக்ன தோஷம் சமமாகவில்லையெனில் தாம்பத்தியத்தில் உடல் மற்றும் மனோநிலை பாதிப்படையும். ஏழாமிட தோஷம் சமமாகாவிடில் தாம்பத்திய உறவில் திருப்தியற்ற நிலை ஏற்படும். எட்டாமிட சமமற்ற தோஷம் அகால மரணம் தரும். 12-ஆமிடம் கஷ்ட- நஷ்டங்கள், ஏக்கம் மற்றும் விருப்பம் நிறைவேறாமையை ஏற்படுத்தும்.
எனவே, பொருத்தம் பார்க்கும்போது தோஷ சாம்யத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று சாத்திரங்கள் வலியுறுத்துகின்றன.
செல்: 94888 62923