ஒன்பது கிரகங்களுக்குள் சற்றே வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தைப் போட்டுக்கொண்டு சுற்றிவருவது சனி கிரகம் மட்டுமே. மனிதர்களின் சாதனைகளுக்கு வித்திடுவதால் சாதனைக்காரகன் என்றும், பெண்களின் கழுத்தில் தாலி கட்டியவரது ஆயுள்பலத்தை நிர்ணயிப்பதால் மாங்கல்ய காரகன் என்றும் வர்ணித்துப் பேசுகிறது ஜோதிடம்.
சனி தசையின் காலம் தொடங்குவதற்கு முன்பே மனிதர்களுக்கு பயம் தொற்றிக்கொள்கிறது- இரும்பால் நட்டம் வருமா? எதிரிகளால் வழக்கு வருமா? கைகால் களில் அடிபடுமா என்று! சனி நமக்கு நன்மைகளை வழங்க சக்தியுடைய பரிகாரங்கள் இருக்கின்றன. பத்தொன்பது வருடங்கள் ஒரு மனிதனை ஆட்டிப்படைக்கும் சனி தசைக் காலத்தை நலமாக்கிக்கொள்ள வழியுள்ளது.
சனியின் தோற்ற விதி
கோனன், மந்தன், அசிதன், சாயாபுத்ரன், நீலன், கரிகலி, காகவாகனன், ஆயுள்காரகன், கதிர்மகன், சாவகன், முதுமகன், சௌரி, முடவன், பங்குபாதன், சந்திலி, மேற்கோள் என்று சொல்லப்படுகிற சனி பகவான் தனது காலத்தில் பலன்களை வழங்குவதில் வல்லவர்.
தனது பிடிப்புக்காலம் வந்துவிட்டால், பணிகளைத் தாமதமாகச்செய்ய வைப்பார். வாயு, வாதரோகம், கோபம், மூடத்தன்மை, மந்தநிலை, கோள்மூட்டல், கொடூரத் தன்மைகளை உண்டாக்குவார்.
நல்லபடியாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இரும்புத் தொழிற்சாலையோ, உணவு தானியப்பொருள் உற்பத்தி நிலையமோ திடீரென்று மூடப்படுவது; பார்ட்னராக இருப்பவர் தன்னைக் கடனாளியாக்கி விட்டு விலகிவிடுவது; வருமான வரி சோதனையில் அகப்படுவது; செய்யாத தவறுக்காக அரசுப்பணியில் உயர்பதவி பறிபோவது; பிறருக்கு ஜாமின் கையெழுத் திட்டு கடன் வாங்கிக் கொடுத்து பரோபகாரம் செய்ததில் எல்லாவற்றையும் இழந்து நிற்பது; மனைவி மக்களைப் பிரிந்து நடுத்தெருவுக்கு வருவது- இவையெல்லாம் ஆண்கள் மூலம் நடப்பது. மேலும் சனி பகவான் பெண்கள் மூலமாகவும் உபத்திரவங்களைச் செய்வார். ஒருவர் அலுவலகத்தில் பணியாளாகச் சேரும் பெண், முதலாளியின் அந்தரங்கங்களை
ஒன்பது கிரகங்களுக்குள் சற்றே வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தைப் போட்டுக்கொண்டு சுற்றிவருவது சனி கிரகம் மட்டுமே. மனிதர்களின் சாதனைகளுக்கு வித்திடுவதால் சாதனைக்காரகன் என்றும், பெண்களின் கழுத்தில் தாலி கட்டியவரது ஆயுள்பலத்தை நிர்ணயிப்பதால் மாங்கல்ய காரகன் என்றும் வர்ணித்துப் பேசுகிறது ஜோதிடம்.
சனி தசையின் காலம் தொடங்குவதற்கு முன்பே மனிதர்களுக்கு பயம் தொற்றிக்கொள்கிறது- இரும்பால் நட்டம் வருமா? எதிரிகளால் வழக்கு வருமா? கைகால் களில் அடிபடுமா என்று! சனி நமக்கு நன்மைகளை வழங்க சக்தியுடைய பரிகாரங்கள் இருக்கின்றன. பத்தொன்பது வருடங்கள் ஒரு மனிதனை ஆட்டிப்படைக்கும் சனி தசைக் காலத்தை நலமாக்கிக்கொள்ள வழியுள்ளது.
சனியின் தோற்ற விதி
கோனன், மந்தன், அசிதன், சாயாபுத்ரன், நீலன், கரிகலி, காகவாகனன், ஆயுள்காரகன், கதிர்மகன், சாவகன், முதுமகன், சௌரி, முடவன், பங்குபாதன், சந்திலி, மேற்கோள் என்று சொல்லப்படுகிற சனி பகவான் தனது காலத்தில் பலன்களை வழங்குவதில் வல்லவர்.
தனது பிடிப்புக்காலம் வந்துவிட்டால், பணிகளைத் தாமதமாகச்செய்ய வைப்பார். வாயு, வாதரோகம், கோபம், மூடத்தன்மை, மந்தநிலை, கோள்மூட்டல், கொடூரத் தன்மைகளை உண்டாக்குவார்.
நல்லபடியாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இரும்புத் தொழிற்சாலையோ, உணவு தானியப்பொருள் உற்பத்தி நிலையமோ திடீரென்று மூடப்படுவது; பார்ட்னராக இருப்பவர் தன்னைக் கடனாளியாக்கி விட்டு விலகிவிடுவது; வருமான வரி சோதனையில் அகப்படுவது; செய்யாத தவறுக்காக அரசுப்பணியில் உயர்பதவி பறிபோவது; பிறருக்கு ஜாமின் கையெழுத் திட்டு கடன் வாங்கிக் கொடுத்து பரோபகாரம் செய்ததில் எல்லாவற்றையும் இழந்து நிற்பது; மனைவி மக்களைப் பிரிந்து நடுத்தெருவுக்கு வருவது- இவையெல்லாம் ஆண்கள் மூலம் நடப்பது. மேலும் சனி பகவான் பெண்கள் மூலமாகவும் உபத்திரவங்களைச் செய்வார். ஒருவர் அலுவலகத்தில் பணியாளாகச் சேரும் பெண், முதலாளியின் அந்தரங்கங்களையும், கணக்கு பாஸ்வேர்டையும் தெரிந்துகொண்டு பணத்தை எடுத்துக்கொண்டுவிடுவதும், வாழ்க்கையில் இணையலாம் என்று ஆசைகாட்டி பிறகு பிரிந்துசெல்வதும் சனி பகவா னது தோற்ற விதிகள் என்று கூறலாம்.
சனி தசையில் புதன் புக்தி, ராகு- கேது புக்திகள் வரும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பது மரபு.
நலம் பெருக்குமா சனியின் அசைவுக் காலம்?
"எனக்கு சனி தசை நடக்கிறது; என்ன செய்யலாம்?' என்று தன் ஜோதிடரிடம் கேட்டார் ஒருவர்.
"நீங்க சும்மா இருந்தாலே போதும்'
என்றார் அவர். அதன் உட்பொருள்- பரிதாபம் காட்டுவது, பிறருக்கு உதவுவதாக வங்கிப்படிவங்களில் கடன் கொடுக்கும்படி கையெழுத்திடுவது ஆகிய செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
எந்தவொரு கிரகத்துக்குரிய அதிதேவதையை மனமுருக வேண்டினாலே அந்த தெய்வத்தின் அருட்பார்வையால் எல்லாம் நன்மையாகவே முடியும். நவகிரகங்களில் சக்தியுள்ள கிரகமாக வலம்வரும் சனீஸ்வரனின் 19 வருட தசாகாலம் மட்டுமல்ல; ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனிக் காலங்களிலும் அவரது அதிதேவதையான எமதர்மராஜனை விதிப்படி வழிபட்டாலே மங்களங்கள் யாவும் உண்டாகும்.
ஒருவர் கடன்தொல்லை கழுத்தை நெரிக்கும் காலம் வந்தபோது தன் மனைவி மக்களோடு தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்குச் சென்றுவிட்டார். அவர் சனி பகவானது விருட்ச வேர் வைத்து வணங்கி குறிப்பிட்ட பரிகார பூஜைகளைச் செய்தபோது விடிவுகாலம் கிடைத்தது.
எனவே, தர்மராஜர் வழிபாட்டை அதன் மந்திர மூலங்களைத் தெரிந்துகொண்டு வழிபட, சனிக் காலத்தை சாதிக்கும் காலமாக மாற்றிக்கொண்டு வாழமுடியும்.
காலதேவனை வணங்கிட...
உயிர்களைக் கவர்ந்து செல்பவன்தான் காலதேவன் என்னும் எமதர்மராஜன் என்றெண்ணி அனைவரும் அவரைக் கண்டு பயம் கொள்கின்றனர். ஆனால் வீடு கட்டுதல், பொது நிகழ்ச்சிகள், மங்களகரமான ஆலய உற்சவங் களில் தென்திசைக்கு அதிபதியாக விளங்கும் எமதர்ம ராஜனுக்கு பலிதானத்தைக் கொடுத்து அவரைத் திருப்திப் படுத்திய பிறகே பணிகளைத் தொடங்குகின்றனர்.
"ஓம் வைஸ்வாநராய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தந்நோ: யம ப்ரசோதயாத்'
என்று சனிக்கிழமை, அமாவாசை தினங்களில் வழிபட, சனிகிரகம் தொடர்புடைய சங்கடங்களை நீக்கிவிடுவார்.
தர்மராஜரைப் பற்றிய சுவடி நூலில் "மூர்த்திரகஸ்யம்' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"க்ருதாந்தம் மகிஷாரூடம்
தண்டஹஸ்தம் பயானகம்
காலபாச தரம் க்ருஷ்ணம்
த்யாயேத் தக்ஷிணதிக்பதிம்.'
க்ருதாந்தர் என்று அழைக்கப்படுபவரும், மகிஷத் தின்மீது அமர்ந்திருப்பவரும், தண்டத்தைக் கையில் வைத்திருப்பவரும், பயங்கர உருவமாய்க் காட்சி தருபவரும், காலபாசத்தைக் கையில் கொண்டு கருமை நிறமாய்க் காட்சி தருபவரும், தென்திசைக்கு அதிபதியாக உள்ளவருமான எமதர்மராஜனை தியானிக்க வேண்டும் என்பதுவே இந்த சக்தி வாய்ந்த தியானத்தின் பொருள். இப்படி திக்பாலகர்கள் அனைவருக்குமே, மற்ற தெய்வங்களுக்கு இருப்பதுபோல மூர்த்தி ரகசியங்கள் உள்ளன.
சனிக்கும் தர்மராஜனுக்குமான தொடர்பு காலதேவனை வழிபடுவதால் சனி பகவான் எப்படி நன்மை தருவார்? இதற்கு பவிஷ்ய புராணத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாவின் மானச புத்திரர்களில் ஒருவரா கிய தட்சப்ரஜாபதியின் மகள் அதிதியை காஸ்ய பர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகனாக சூரியன் பிறந்திட, அவர் விஸ்வகர் மாவின் மகளான சமிக்ஞாவை மணந்தார். அவர் களுக்கு எமதர்மனும் யமுனாவும் பிறந்தனர்.
பிற்காலத்தில் எமன் காலதேவனாக உருவெடுத்தான். யமுனா நதியாக மாறி விட்டாள். சில காலங்கள் சென்றபின் சூரியனது ஒளியைத் தாங்கமுடியாத சமிக்ஞா தன்னைப் போல ஒரு நிழல் வடிவத்தை ஏற்படுத்தி, அவளுக்குச் சாயாதேவி என்று பெயரிட்டு சூரியனிடம் விட்டுச்சென்றுவிட்டாள். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் ச்ருதசர்மா என்ற மகன் பிறந்து சனிகிரகமாக வடிவெடுத் தான். பிற்காலத்தில் அவன் பலருக்கும் நன்மை செய்து ஈசனிடமிருந்து ஈஸ்வரப் பட்டத்தைப் பெற்று உயர்ந்தான். சூரிய வம்சத்தில் பிறந்து தர்மத்தைக் கடைப்பிடிப்பதாலும், தவறுகளைக் கேட்டு தண்டிப்பதாலும் காலதேவன் சனி பகவானுக்கு அதிதேவதையானான்.
"தர்ம' என்பதற்கு வழிகாட்டல் என்றும், "தேவ'
என்பதற்கு உயர்வான இறைவன் என்றும் பொருளுண்டு. காலன் என்றால் உயிர்களைக் கவர்பவன் என்று பொதுவாகப் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் நமக்கு வருகிற சுபகாலங்களை அடையாளம் காட்டுபவன் என்றும் அறியவேண்டும்.
சனிக்கு காலக்கிரகம் என்ற சிறப்புப் பெயரும் இவரைப் பற்றிய ஆராய்ச்சியிலிருந்து வெளிவந்ததே. சனி பகவானைக் கோள் நிலையில் ஆராய்ச்சி செய்தவர்கள் பன்னிரு பாவங்களிலும் அவர் அமரும்போது 1, 2, 4, 5, 6, 8, 10, 12 பாவங்களில் வரும் தீமைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். சனி தசையில் சர்வ மங்களங்களையும் தரும் அதிசூட்சுமங்களும் 12 ராசி பீடங்களுக்கு உள்ளன.
காலதேவனின் கடோபநிடதம்
சனி பகவானின் தசாகாலக் கஷ்டங்களை அகற்றுவதற்குப் பரிகார கற்பமாக அமைவதில் ஒன்று கடோபநிடதம். இரண்டாவதாகத் துதி வடிவில் உள்ள காலதேவாஷ்டகம். இந்த உபநிடதக்கதையை வீட்டில் சனிக்கிழமை ராகு காலத்திலும், அமாவாசையன்றும் பூஜையறையில் படிக்கலாம். கடோபநிடதத்தின் முக்கிய சாரத்தை இங்கே அறிவோம்.
சிறுவன் நசிகேதன் என்பவன், தன் தந்தை வாஜசிரவஸ் ஒரு யக்ஞம் செய்தபோது தானங்கள் செய்வது குறித்து பல கேள்விகளைக் கேட்க, அவர் சலிப்படைந்துவிட, "என்னை யாருக்கு தானம் தரப்போகிறீர் தந்தையே?' என்று கேட்க, "உன்னை எமனுக்குத் தானம் தந்தேன் போ' என்று கோபத்துடன் கூறி விட்டார். அவர் வாக்கைக் காப்பாற்றிட எமலோகம் சென்ற நசிகேதன் தவமிருந்து எமனை சந்தித்து, தந்தை கோபம் தணிதல், அக்னியைப் பற்றிய சிறந்த விளக்கம், இறப் புக்குப் பிறகு ஆன்மாவின் நிலை ஆகியவை பற்றிக் கேட்க, மெய்யறிவு உபதேசமாக எமதர்மன் உரைத்ததே கடோபநிடதம்.
1. அன்யச்ரேயோ- வ்ருணீதே- மேலான இன்பமே விரும்பப்படுகிறது. சிற்றின்பமும் விரும்பப்படுகிறது. இரண்டும் வெவ்வேறு பலன்களைத் தருகின்றன. பேரின்பத்தை எடுப்பவனுக்கு நன்மை உண்டாகிறது. சிற்றின் பத்தை எடுத்துக்கொள்பவன் லட்சியத்தை அடையாமல் பாதாளத்தில் விழுகிறான்.
2. அவித்யாநாம்- யதாந்தா: அறியாமை எனும் கடலில் சிக்கி, எல்லாம் அறிந்த அறிவாளி கள்போல தங்களை நினைத்துக்கொண்டு உண்மை அறியாது தவறான வழிகளில் வளைய வந்துகொண்டுள்ளனர். குருடர்களால் வழி காட்டப்படும் குருடர்களைப் போன்றதே இவர் களது பரிதாப நிலையிலான வாழ்க்கை.
3. தம் துர்தர்சம் ஜஹாதி: எளிதாக அணுக முடியாத, புத்தியுள் மறைந்திருக்கின்ற, துன்பங் களைக் காணும் இடமான உடம்பினுள் ஒளிந் திருக்கிற மெய்ப்பொருளை உணர்பவன் உலக இன்பங்களை அடைகிறான். இந்த கடோப நிஷதத் துதிகள் தொடக்க வரியும் இறுதிச் சொல்லும் இங்கே உதாரணத்திற்காகக் கொடுக் கப்பட்டு பொருள் கூறப்பட்டுள்ளது.
காலதேவாஷ்டகம்
சாவித்ரி தேவி அருளிய இந்த அஷ்டகம் சனி தோஷங்களை அகற்றக்கூடியது. எமாஷ்டகம், தர்மராஜ அஷ்டகம் என்ற பெயரும் கொண்டது இந்த அரும்பெரும் பொக்கிஷம்.
தபஸா கர்ம மாராத்ய புஷ்கரே பாஸ்கர; புரா
தர்மம் சூர்ய ப்ரபம் தர்மராஜம் நமாம்யஹம்
ஸமதா சர்வ பூதேஷு யஸ்ய சர்வஸ்ய சாட்சிண:
அதோ யந்நாம சமகம் இதிதம் ப்ரணமாம்யஹம்
யேநாத்தங்க க்ருதோ விச்வே சர்வேஷாம் ஜீவினாம்
கர்மாதி ரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம்
பிபர்த்தி தண்டாய பாபீனாம் சுத்தி ஹேதவே
நமாமி தம் தண்டதரம் யச்சாஸ்தா சர்வஜீவினாம்
விச்வம் சகல யத்யேவ யச்சர்வேஷு ஸந்ததம்
அதீவதுர்நீ வார்யம்ச தம்காலம் ப்ரண
மாம்யஹம்
தபஸ்வீ ப்ரம்ம நிஷ்டாய: சம்யமீ சஞ்சிதே த்ரிய:
ஜீவானாம் கர்ம பலத: தம்யமம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாத: மாராமஸ்ச சர்வக்ஞோ மித்ரம் புண்யக்ருதோம் பவேத்/
பாபினாம் க்லேசதோ யஸ்தம் புண்ய மித்ரம் நமாம்யஹம்//
யஜ்ஜன்ம ப்ரம்ஹணம் சேந ஜ்வயந்தம் ப்ரம்ம தேஜஸா/
யோத்யாயதீ பரம் ப்ரும்ம தமீசம் ப்ரண
மாம்யஹம்//
யமாஷ்டக மிதம் நித்யம் ப்ராத: உத்தாய ய: படேத்/
யமாத் தஸ்ய பயம் நாஸ்தி சர்வ பாபாத் விமுச்யதே//
காலதேவ தர்மராஜ அஷ்டகம் சம்பூர்ணம்.
செல்: 91765 39026