வியாழக்கிழமை, சிவனின் அம்ச மான தட்சிணாமூர்த்தியையும், விஷ்ணுவையும், விஷ்ணுவின் வடிவமான அரசமரத்தையும் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உண்டாகக்கூடிய பிரச்சினைகள் தீரும். பணவரவு உண்டாகும்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் 5-க்கு அதிபதியான கிரகம் அஸ்தமனமாக இருந்தால், அந்த ஜாதகருக்கு வாரிசு இருக்காது. 5-ஆம் பாவத்திற்கு அதிபதி 6, 8, 12-ல் இருந் தால்- அதை பாவகிரகம் பார்த்தால், சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சினைகள் இருக்கும். பலருக்கு வாரிசே இருக்காது.

5-ஆவது பாவத்தை, 11-ஆவது பாவத்திலிருந்து பாவகிரகங்கள் பார்த் தால், பலருக்கு வாரிசு இருக்காது. சிலரின் வாரிசுக்கு நோய்கள் இருக்கும்.

sukiஒரு ஜாதகத்தில் 5-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாகவோ அல்லது நீசமாகவோ இருந்தால், அவருக்கு பெயர், புகழ் கிடைக்காது. கடுமையாக உழைத்தாலும் பாராட்டுகள் கிடைக்காது. பலருக்கு பகைவர்கள் இருப்பார்கள். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியும், 5-க்கு அதிபதி யான கிரகமும் 5-ஆவது பாவம் அல்லது 8-ஆவது பாவத்தில் இருந்தால், அவருக்கு பலவித சிக்கல்கள் இருக்கும். பல நோய்களின் பாதிப்பு இருக்கும். 5-க்கு அதிபதியான கிரகம் சரியான நிலைமையில் இல்லையென்றால், பூர்வஜென்ம புண்ணியத்தின் பலன் அவருக்குக் கிடைக்காது. கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும்.

ஒரு ஜாதகத்தில் 5-ஆவது பாவத்தில் குருபகவான் சரியில்லையென்றால், அவர்களுக்கு வாரிசே இருக்காது. 5-ஆம் பாவத்தில் குரு நீசமடைந்தால், அவருக்கு வாரிசு இருந்தாலும் அவரால் எந்தவிதப் பயனும் இருக்காது.

ஒருவரின் வீட்டில் தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால், அவருக்கு ஆண் வாரிசு இருக்காது. சிலருக்கு குழந்தை பிறந்து இறந்துவிடும். அந்த வீட்டின் மத்தியப் பகுதியில் வாசல் இருந்து, அதில் கிணறு இருந்தால், வீட்டிலிலிருக்கும் குழந்தைக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். படிப்பு சரியாக வராது; பணப் பிரச்சினை இருக்கும்.

Advertisment

ஒருவரின் வீட்டில் படுக்கையறை தென்கிழக்கிலிலிருந்து, அதன் கீழ்த்தளத்தில் தென்கிழக்கு வாசல் இருந்தால், கணவன்- மனைவியிடையே பிரச்சினை இருக்கும்.

ஒரு ஜாதகத்தில் 5-ஆம் பாவம் நல்ல நிலைமையில் இருந்தால், அந்த பாவத்திற்கு அதிபதி சுபகிரகத்தால் பார்க்கப்பட்டால், அவர் சந்தோஷமாக வாழ்வார். பிள்ளைகள் ஒன்றாக இருப்பார்கள்.

5-க்கு அதிபதி 9-க்கு அதிபதியுடன் 5, 9, 11-ல் இருந்தால், சுயமுயற்சியால் அவர் பெரிய மனிதராக வருவார். பல வெற்றிகளைக் காண்பார். பெயர், புகழுடன் இருப்பார்.

ஒரு ஜாதகத்தில் 5-ல் சனி, செவ்வாய், ராகு இருந்தால், அவருக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். சில பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராது.

ஒரு ஜாதகத்தில் 5-ல் செவ்வாய், ராகு, 6-ல் சனி இருந்தால், அவரின் வாரிசுகளுக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். பித்தநோய் வரும். 5-க்கு அதிபதியான கிரகம் 12-ல் சூரியன், சனியுடன் இருந்தால் அல்லது சூரியன், சனி, ராகுவுடன் இருந்தால், அவருக்கு பித்ருதோஷம் உண்டாகும். அதனால் 5-ஆம் பாவத்தின் சுபப்பலன்கள் குறைந்துவிடும்.

ஒரு ஜாதகத்தில் குருபகவான் சரியில்லை யென்றால் அல்லது அஸ்தமனமாக இருந்தால் அல்லது பாவகிரகத்துடன் இருந்தால், பலருக்கு குருநாதர், தாத்தா ஆகியோரின் ஆசிர்வாதம் கிடைக்காது. அவர்களை மதிக்காமல் இருந்தால், அவர்களின் சாபத்தால் பல பிரச்சினைகள் உண்டாகும். பணவசதி இருக்காது. பெற்றோரின் வார்த்தைகளை பிள்ளைகள் கேட்கமாட் டார்கள். முதுகுத்தண்டில் பிரச்சினை ஏற்படும்.

பரிகாரங்கள்

வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடவேண்டும். மஞ்சள் வாழைப்பழம், சுண்டல், வெல்லம், மஞ்சள்நிற மலர் வைத்து அவரை வழிபட வேண்டும். "ஓம் நமசிவாய' மந்திரத்தைக் கூறவேண்டும்.

பகவான் விஷ்ணுவை வழிபட வேண்டும். ராமர், கிருஷ்ணர் ஆகிய அவதாரங்களையும் வழிபடலாம். பூந்தி, லட்டு, துளசி வைத்துப் பூஜைசெய்ய வேண்டும். அப்போது "ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ' என்ற மந்திரத்தைக் கூறவேண்டும்.

குழந்தை பிரச்சினை இருந்தால், அரசமரத் திற்கு ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, அதை நான்கு முறை சுற்றிவர வேண்டும். பிறகு, பசுவுக்கு மஞ்சள் வாழைப்பழம் அல்லது வெல்லத்தைத் தரவேண்டும்.

முடிந்தால் வியாழக்கிழமையன்று விரத மிருக்கலாம். அதனால் நற்பலன் மிகும்.

செல்: 98401 11534