குரு பகவானுக்கு விரதமிருக்க வியாழக்கிழமை உகந்தது.
ஒருவரது வீட்டில் வயதான பெரியவர் இல்லை யென்றால், அவருக்கு ஜாதகத்தில் குரு பலவீனமாக இருக்கிறார் என்று அர்த்தம். பலர் பிறக்கும்போது, அவருக்கு தாத்தா உயிருடன் இருக்கமாட்டார்.
அப்படிப்பட்டவரின் ஜாதகத்தில் குரு பலவீனமாக அல்லது அஸ்தமனமாக அல்லது நீசமாக இருக்கும். அதனால் அவர் தன் வாழ்க்கையில் பல சிக்கல்களை அனுபவிப்பார். பலருக்கு முதுகில் நோய் இருக்கும். வாய்வுத் தொல்லை, கபம் ஆகியவை இருக்கும்.
பலருக்கு உடல் பருமனாக இருக்கும். கை, கால் வீக்கம், உடல் மெலிவு, மலச்சிக்கல், ஈரல் பிரச்சினை, காது நோய் ஆகியவை இருந்தால், அவர்களின் ஜாதகத்தில் குருவின் நிலை சரியில்லை என்று பொருள்.
நீதிபதிகள், ஆசிரியர்கள், மடாதிபதிகள், காசாளர்கள், பெரிய வர்த்தகர்கள், பணக் காரர்கள், கல்லூரிப் பேரா சிரியர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் குருவின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள்.
அரசியல் தலைவர்கள், பூசாரிகள், மருந்து வியா பாரிகள், வட்டிக்குப் பணம் தருப வர்கள், காவல்துறை உயரதி காரிகள், மாவட்ட ஆட்சியர்கள், பொருளாதார திட்டம் தீட்டு பவர்கள், தங்க வியாபாரம் செய்பவர்கள், மஞ்சள்நிறப் பொருட்களை விற்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் குரு பகவானின் அருளைப் பெற்றவர்கள்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னத் தில் குரு இருந்தால், பல தோஷங் கள் நீங்குமென்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், குருவின் நட்சத்திரம் விரய ஸ்தானாதி பதியின் நட்சத்திரமாக இருந் தால் அல்லது 6-ஆம் அதிபதியின் நட்சத்திரத்தில் குரு பகவான் இருந்தால், அவருக்கு குரு நன்மை செய்யமாட்டார்.
ஒரு ஜாதகத்தில் குரு நீச மடைந்து, அந்த நீசகுருவை சனி பார்த்தால், அவர் தன் வாழ்க்கை யில் பல கஷ்டங்களைச் சந்திப் பார். பலருக்கு இறுதி வேளையில் காரியங்களில் தடைகள் உண்டாகும்.
குரு நீசமாக 5-ஆம் பாவத்தில் இருந்தால், அவருக்கு நிறைய பிள்ளைகள் இருந்தாலும், இறுதிக் காலத்தில் அவர்களால் எந்தப் பயனும் இருக்காது. பிள்ளை களால் அவருக்குத் தொல்லைகளே மிஞ்சும்.
5-க்கு அதிபதி குருவாக இருந்து 12-ல் உச்சம் பெற்றால், இத்தகைய அமைப்புடைய பலருக்குப் பிள்ளைகள் இருக்காது. அப்படி இருந்தாலும் அவர்களால் எந்தப் பயனும் கிட்டாது.
ஒரு ஜாதகத்தில் குரு பகவான் பலவீனமாக அல்லது புதனின் வீட்டில் இருந்தால், உயர்கல்விக்குச் செல்லும்போது தடைகள் உண்டாகும். அதனால் பட்டம் வாங்கமுடியாத சூழல் ஏற்படும்.
ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்து 4-ல் இருந்தால், அவருடைய சிற்றன்னைகள் சந்தோஷமாக வாழமாட்டார்கள்.
அவர்களுக்குப் பல பிரச்சினைகள் இருக்கும். குருவும் சனியும் சேர்ந்திருக்கும்போது, பெரிய அளவில் வர்த்தகம் செய்யமுடியாது. சரியான தொடர்புகள் இருக்காது. வீட்டில் தாய்க்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் சாதாரண வேலையில் இருப்பார். அதே ஜாதகத்தில் 12-ல் சூரியன், செவ்வாய் அல்லது 8-ல் சூரியன், செவ்வாய் இருந்தால், திருமண விஷயத்தில் தடை இருக்கும். சிலருக்கு தாமதமாகத் திருமணம் நடக்கும்.
குரு, சனி, சூரியன் 5 அல்லது 9-ல் இருந்தால், அவர் நல்ல படிப்பாளியாக இருப்பார். ஆனால், சிலபல நேரங்களில் அவர் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது.
ஜாதகத்தில் குரு, சனியுடன் 8-ல் இருந்தால், அவருக்கு ரகசியமாக வேறொரு பெண்ணுடன் தொடர்பிருக்கும்.
லக்னத்தில் குரு- அதுவும் உச்ச குரு இருந்தால், ஹம்ஸயோகம் உண்டாகும். அதனால் அவர் மன்னர்போல வாழ்வார். தான் நினைப்பதை தைரியமாகச் செய்வார்.
குரு, சந்திரன், சூரியன் அல்லது குரு, செவ்வாய், சூரியன் 5 அல்லது 9-ல் இருந்தால் அவர் பெரிய படிப்பாளியாக இருப்பார். நல்ல அரசாங்கப் பதவியில் இருப்பார்.
ஒரு ஜாதகத்தில் குரு பகவான் 10-ல் அல்லது சுயவீட்டில் அல்லது உச்சமாக இருந்தால், அவர் பெரிய அரசியல்வாதியாகவோ அல்லது சிறந்த நீதிபதியாகவோ இருப்பார். ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன், 2-ஆம் பாவத்தில் அல்லது 5-ல் இருந்தால், அவர் நன்கு படித்தவராக இருப்பார். நல்ல மருத்துவராக இருப்பார்.
குரு, ராகுவுடன் இருந்தால், குருச் சண்டாள யோகம் உண்டாகும். அதுவும் 5-ஆம் பாவத்திலோ, 8-ஆம் பாவத்திலோ இருந்தால், அவருக்கு வாழ்க்கையில் பல பிரச்சினைகள் உண்டாகும். தசாகாலம் சரியில்லாதபோது காரியங்களில் தடைகள் உண்டாகும். நோய் ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் 5-ல் உச்சமாக இருந்தால், அதை பாவகிரகங்கள் பார்த்தால் அவருக்கு வாரிசு இருக்காது. அல்லது குழந்தை பிறக்கும்போது பிரச்சினை உண்டாகும்.
இவர்கள் அனைவரும் தோஷங்கள் நீங்க வியாழக்கிழமையன்று விரதமிருக்க வேண்டும்.
பரிகாரங்கள்
வியாழக்கிழமையன்று குளித்துமுடித்து, மஞ்சள் அல்லது வெண்ணிற ஆடை அணிந்து, பூந்தி, லட்டு, மஞ்சள் வாழைப்பழம், வெல்லம் ஆகியவற்றை வைத்து குலதெய்வத்தை வழிபட வேண்டும். வளர்பிறையின் முதல் வியாழக்கிழமை ஆரம்பித்து குறைந்தபட்சம் 16 வாரங்களாவது விரதமிருக்கு வேண்டும். குளிக்கும்போது நீரில் மஞ்சள் கலந்து குளிக்கவேண்டும். அல்வா அல்லது சர்க்கரைப் பொங்கலை பகவானுக்கு பிரசாதமாக வைக்கவேண்டும். மாலை நேரத்தில் அரச மரத்திற்குப் பூஜை செய்யவேண்டும். காலையில் வீட்டில் விளக்கேற்றிவைத்து, "ஓம் காம் க்ரீம் க்ரோ ஷ: குருவே நமஹ' என்ற மந்திரத்தை குறைந்த பட்சம் 108 முறை கூறவேண்டும். மாலையில் இனிப்பு, பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். திட்டமிட்ட வாரங்களில் முழுமையாக விரதம் முடிந்தபிறகு, வீட்டில் யாகம் நடத்தி, மஞ்சள்நிறத் துணி, சந்தனம், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை தானமளிக்கவேண்டும்.
செல்: 98401 11534