வாக்கியப் பஞ்சாங்க முறைப்படி திங்கட் கிழமை, அமாவாசை திதி, சுவாதி நட்சத்திரம்கூடிய அமிர்த யோக தினத்தில், 28-10-2019 அன்று சாத்வீக காரகத்துவம் கொண்ட குரு பகவான், பராக்கிரம காரகத்துவத்திற்கு அதிபதியான செவ்வாயின் வீடான விருச்சிக ராசியிலிலிருந்து தன்னுடைய ஆட்சி வீடான தனுசு ராசிக்கு கோதண்ட குரு பகவானாகப் பெயர்ச்சியாகி, சனி மற்றும் கேதுவுடன்கூடி அடுத்த ஓராண்டுக்காலம் தனுசு ராசியில் வாசம் செய்கிறார்.
ஒவ்வொரு வருடமும் குரு பகவான் 316 நாட்கள் ஒவ்வொரு ராசியிலும் வாசம்செய்யும் காலமாகவும், பின்னர் அடுத்த ராசிக்குப் பெயர்ச்சியாவது இயற் கையான நிகழ்வாகக் கருதப்பட்டாலும், தனுசு ராசியில் இருக்கும் தன் நண்பர்களான சனி மற்றும் கேதுவுடன் இணைந்து வாசம் செய்யப்போகும் இனி வரும் நாட்கள் சிறப் பானதாகவே அமையும் என்பதில் ஐயமில்லை. திருக்கணிதப் பஞ்சாங்க முறைப்படி 4-11-2019 அன்று பெயர்ச்சியா கிறார். இம்முறை வாக்கியம் மற்றும் திருக் கணிதப் பஞ்சாங்கத்திற்கிடையே, குறுகிய அளவிலான எட்டு நாட்களே இடைவெளி உள்ளதும் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பன்னிரண்டாண்டுக்கு ஒருமுறை இணையும் குரு, சனி
சுபகிரகமான குரு பகவானும் கர்மா வுக்குக் காரகத்துவரான சனி பகவானும் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு ராசியில் சந்தித்துக்கொள்வது இயல்பான ஜோதிட நிகழ்வாகும். இம்முறை 219 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனுசு ராசியில் சந்தித்துக்கொள்வது சிறப் பான நிகழ்வாகும். சுபரான குரு பகவான் தன் ஆட்சி வீடான தனுசு வீட்டில் அமைவ தால், சனி மற்றும் கேது கிரகங்கள் சுபத் தன்மை பெறுகிறார்கள்.
நீசம் மற்றும் வக்ர சனியில் பிறந்தவர்கள் பிராயச்சித்தம் செய்வது உத்தமம்
தற்சமயம் சனி, கேதுவின் தனுசு ராசி சஞ்சாரத்தில் ஏழரைச்சனி பீடிப்புள்ளவர் களுக்கு அசுப நிகழ்வுகள் மிகுதியாக உள்ள நிலையில், குரு பகவானின் தனுசு ராசிப் பெயர்ச்சியால் அசுப நிகழ்வுகள் பெரிதும் குறையும். ஜனன ஜாதகத்தில் சனியின்மூலம் தோஷங்கள் இருப்பின் பலமான பிராயச்சித்தங்கள் செய்துகொள்வது உத்தமம். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனியானவர் தனுசு ராசியில் குருவுடன் மூன்று மாத காலமே வாசம் செய்வார். பின்னர் சனி 24-1-2020-ல் தன் அடுத்தடுத்த இரு ஆதிபத்திய ஆட்சி வீடுகளில் ஒன்றான மகர ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
குட்டை உருவம் கொண்ட சனி பகவான் குறுகிய கால அளவில் சுபத்தன்மை பெறுவதால், எல்லா ஜாதகரும் ஜனன ஜாதகத்தில் ஏழரைச் சனி பீடிப்பு, சனியின் தீவிர பாப சாம்ய தோஷம், காலசர்ப்ப தோஷம் மற்றும் புனர்பூ தோஷம் போன்றவற்றால் பீடிப்படைந்தவர்கள் நல்ல பிராயச்சித்தங்கள், பரிகாரங்கள் செய்வது நல்லது. சனி பகவான் வழிபாடு செய்த தலங் களுக்கு தீர்த்த யாத்திரை செல்வது மற்றும் குலதெய்வ வழிபாடும் சாலச்சிறந்தது.
மகர ராசி சேர்க்கையில் சனியுடன் குரு பகவான் நீசம் பெறுகிறார். மீண்டும் குரு பக வான் செப்டம்பர் 2020-ஆம் ஆண்டு மகர ராசிக்குப் பெயர்ச்சியாகும் தறுவாயில், சனியுடன் இணைந்து ஓராண்டுக்காலம் நீசம் பெறுகிறார். மகர ராசி வாச காலகட்டம் பிராயச் சித்தங்கள் செய்வதற்கு உகந்த காலமல்ல. ஏனெனில் சுபரான குரு பகவான் நீசமடை வதால், பிராயச்சித்தங்கள் மேற்கொள்வது அனைத்து ஜாதகருக்கும் பயனளிக்காது.
தனுசு ராசியில் குரு பகவான் (பிரஹஸ்பதி) சனியுடன் இணைந்து கோதண்ட பிரஹஸ்பதி நள யோகமாக ராஜயோகத்தைத் தோற்று விக்கும் 28-10-2019 முதல் 24-1-2020-க்கு இடைப் பட்ட காலம், சனி பகவானுக்கும் கேதுவுக்கும் சுபத்தன்மையை அளிக்கும் காலமாதலால், இந்த மூன்று மாதகாலம் பிராயச்சித்தத்திற்கு உகந்த காலமாகும். சுபத் தன்மையுடைய குரு சனி, கேதுவின் சேர்க்கையாலும், கன்னி ராசியில் அமைந்த ராகுவையும், 7-ஆம் பார்வை மூலம் சுபத்தன்மை அடையச் செய்வதாலும் இது சிறப்பான காலகட்டம். ஜோதிட சாஸ் திரத்தில் சனி மற்றும் நிழல் கிரகங்கள் சுபத் தன்மை பெறுவது சிறப்பு. நவ கிரகங்களில் சுபத் தன்மைக்கும், பரிகாரம் மற்றும் பிராயச் சித்தத்திற்கும் குரு பகவான் மட்டுமே உகந்தவரா வார். இத்தகைய குரு பகவானின் அருள்நிறைந்த காலகட்டங்களில் அனைத்து ஜாதகரும் பரிகாரம், பிராயச்சித்தம், தீர்த்த யாத்திரை, குல தெய்வ வழிபாடு மேற்கொள்வது அதிக நன்மை பயக்கும்.
தனுசு ராசியில் கோதண்ட பிரஹஸ்பதி நள யோகம் கொண்ட மூன்று மாத காலம் விசேஷமான- உத்தமமான காலமாகும்.
செல்: 98401 96422