சனிப்பெயர்ச்சிப் பலன்கள் பரபரத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், என் சிந்தனையில் தோன்றிய சில விஷயங்களை இக்கட்டுரையின்மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
சனிப்பெயர்ச்சி என்றதும் ஏதோ நரகாசுரன் நம் வீட்டிற்கே வந்ததுபோல் ஒரு அலறல் பலரிடம். சனிப்பெயர்ச்சியென்பது பிரபஞ்சத்தில் இயற்கை யாக நடக்கும் சனி கிரகத்தின் நகர்வுதானே. சனி என்னும் கிரகத்தின் நகர்வு எப்படியொரு நரகாசுரன், பத்மாசுரன் அளவுக்கு ஒரு பயத்தை மக்களிடையே உண்டாக்கியது என்பது மிகப்பெரிய ஐயப்பாடு. கிரக நகர்வுகளென்பது தினந்தோறும் நிகழ்ந்துகொண்டுதானே இருக்கிறது? சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் உட்பட அனைத்து கிரகங்களும் தன் பாதையில் அவற்றின் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றன. ஜென்மம், அஷ்டமம், அர்தாஷ்டமம், கண்டம் போன்ற இடங்கள் எல்லா கிரகங்களுக்கும்தானே இருக்கின்றன? சனி என்னும் ஒரு கிரகத்தை மனித குலத்திற்கே எதிரானது என்ற தன்மையை யார் உண்டாக்கியது?
சனியென்பது, நம்முள் மூளையில் சுரந்து முதுகுத் தண்டின்வழியே உள்ளிறங்கி, தண்டுவடத்தை இயக்குகிற ஒரு சக்திவாய்ந்த திரவத்தின் இயங்குநிலை. அவரவர் பிறப்பு நிலையில் சனி இருக்கும் தன்மைக்கேற்றவாறு இப்பொழுது சனி நகர்வு (சனிப்பெயர்ச்சி) தன் வேலையை நம்முள் செய்யும்; அவ்வளவே.
இதேபோல் தினமும் சந்திரன், சூரியன் உட்பட ஒன்பது கிரகங்களும் தன் நகர்வில் ஒரு மாற்றத்தை நம் மனதில், உடலில், எண்ணங்களில் செய்துகொண்டேதான் இருக்கின்றன. மேலும் சனியொன்றும் பகைக்காரகன் அல்ல. சனி தசையில் வாழ்க்கையின் உச்சத்துக்குச் சென்ற எத்தனையோ தொழிலதிபர்களை எனக்குத் தெரியும். அதேபோல் சனிதசையில் ஆன்மிக சிந்தனையில் மேலிடத்திற்குப்போன சிந்தனையாளர்களையும் அறிவேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/saturn_33.jpg)
சனி நட்சத்திரங்களான பூசம் மிகப்பெரிய அர்ப்பணிப்பு குணமும், தெய்வீக சிந்தனையும், சகிப்புத் தன்மையும் கொண்டது. அடுத்து அனுஷம், தீவிரமான செயல்திறன் கொண்டது. கொண்ட கொள்கையில் வெற்றிவாகை சூடும் தன்மையும் கொண்டது. அடுத்து உத்திரட்டாதி, தெய்வீக சிந்தனையும். சனாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பதுமான ஆன்மிக வடிவம். உழைப்புக்கு ஆதாரம், சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்தல் போன்ற உயரிய விஷயங்களை உள்ளடக்கிய உன்னதமான கிரகத்தின் தன்மைகள் கொண்டது. இது எப்படி மக்கள் பயப்படும்படி போனது?
மேற்கூறிய தன்மைகள் கிரக நகர்வில் நம் ஜனனகாலத் தன்மையின் அடிப்படையில் மாறுபாடுகளை உண்டாக்கும் என்பதும் உண்மையே. இருந்தாலும் அது இயற்கைதானே.
சனி மெதுவாக நகரும் கிரகம், ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிக்கும் கிரகம். அதன் தன்மை நம்முள் விதைத்திருக்கும் (ஜனன காலம்) சனி தன்மைக்கேற்றவாறு செயல்படுத்தும்; அவ்வளவே. இதைப் புரிந்துகொண்டால் சனி என்பவர் மிகப்பெரிய வாழ்வியல் அனுபவங்களை நமக்கு வழங்குவார். மேலும் ஜனனத்தில் சனியின் தன்மைகளான இருப்பிடம், எடுத்திருக்கும் ஆதிபத்தியம், ஏறிய நட்சத்திரம், நடப்பு தசாபுக்தி போன்றவை அடிப்படையில்தானே கணக்கிடவேண்டும்?
ஏழரைச் சனியா... முடிந்தாய்;
அஷ்டமச் சனியா அழிந்தாய்;
அர்தாஷ்டமச் சனியா... விளங்காது; சப்தமச் சனியா... கணவன்- மனைவி உறவு "அவுட்' என்ற எண்ணங்களை மக்கள் மாற்றிக்கொள்ளவும், சனி யின் தன்மைகளைப் புரிந்து கொள்ளவும்தான் இக்கட்டுரை.
தேய்பிறை அஷ்டமியில் கால பைரவ வழிபாடும், தியானமும், நல்ல உணவுமுறையும் சனியின் தன்மையின் வீரியத்தைக் குறைத்து, நம்முள் நம்பிக்கையையும் செயல் தீவிரத்தையும் வளர்க்கும்.
மிக துரித கதியில் இயங்கும்- அதாவது இரண்டரை நாள் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் சந்திரன்கூட வாழ்க்கையைப் புரட்டிப்போடும் நிகழ்வுகளை நிகழ்த்தக்கூடிய வல்லமை படைத்த கிரகம்.
நம் வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கக் கூடிய அனைத் தும் ஏற்கெனவே நம் பிறப்பில் தீர்மானிக்கப்பட்ட ஒன்றே.
அதன் சூத்திர வடிவம்தான் ஜாதகம்.
நடப்பவையனைத்தும் நம் பிறப்பில் நமக்கு வழங்கப்பட்ட ஒன்றே. இப்பிறப்பில் என்னென்னவெல்லாம் நமக்குத் தேவையோ அவற்றை நமக்கு வழங்கியே நாம் இங்கே அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறோம். அவற்றை முழுமையாக அனுபவிப்போம்; சனியை வரவேற்போம்; அனுபவிப் போம்.
செல்: 73394 44035
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/saturn-t.jpg)