சில ஆண்களும் பெண்களும், உரிய வயது வந்தும் "திருமணமே வேண்டாம்' என்று மறுத்து விடுகிறார்கள். அதனால் பலருக்குத் திருமணமே நடக்காமல் போய்விடுகிறது.

திருமணத்தடை ஏற்படுவதற்கு செவ்வாயும் சுக்கிரனும்தான் முக்கிய காரணம்.

ஒரு ஆண் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், திருமணத்திற்குப் பெண் பார்க்கும்போதெல்லாம் ஏதாவது குறை கூறி திருமணத்தை மறுப்பார். அதேபோல்தான் பெண்ணும்.

marriage

Advertisment

ஒரு ஜாதகத்தில் 8-ல் ராகு, 9-ல் சூரியன், புதன் இருந்து, சந்திரன் நீசமாக இருந்தால், அந்த ஜாதகர் ஆணாக இருக்கும்பட்சம், தனக்கு வரக்கூடிய மனைவி மிக அழகியாக இருக்கவேண்டுமென்று எதிர் பார்ப்பார். அதனால் எந்தப் பெண்ணைப் பார்த்தா லும், அவர் நிராகரிப்பார். ஜாதகர் பெண்ணாக இருந்தாலும் இதுவேதான் நடக்கும்.

7-ல் சனி இருந்து, 7-க்கு அதிபதி 11-ல் உச்சமாக இருந்தால், மிகவும் வசதிபடைத்த பெண்ணோ ஆணோ தங்களுக்கு வாழ்க்கையைத்துணையாக வர வேண்டுமென்று நினைத்துக் கொண்டு, வருபவர்களையும் நிராகரித்து திருமணத்தைத் தள்ளிப் போடுவார் கள்.

லக்னத்தில் செவ்வாய், சூரியன், 10-ல் சனி, 12-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகரின் இளம்வயதில் நண்பர் களோ தோழிகளோ திருமணத்தைப் பற்றி ஒருவித பயத்தை உண்டாக்கி யிருப்பார்கள். அதனால் அவர்கள் திருமணமே வேண்டாமென்று கூறுவார்கள்.

Advertisment

3-ல் ராகு, 4-ல் செவ்வாய், 5-ல் சனி, 11-ல் சந்திரன் இருந்தால், சரியான வருமானமில்லாத காரணத்தால் அந்த ஜாதகர் திருமணம் செய்துகொள்ள பயப்படுவார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், வருமானக் குறை காரணமாக வாழ்க்கையில் சிக்கல்கள் உண்டாகிவிடுமோ என்று அஞ்சி, திருமணத்தை மறுப்பார்கள்.

சந்திரன், சுக்கிரன் 11-ல் இருந்து, 5-ல் சனி, 6-ல் சூரியன் இருந்தால், காதல் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால், பெற்றோர் ஜாதகப் பொருத்தம் சரியில்லை என்று கூறிவிடும்பட்சம், திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தையே விட்டுவிடுவார்கள்.

12-ல் சூரியன், செவ்வாய், லக்னத் தில் புதன், 2-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகர் வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்திருப்பார். தன்னைப் போலதான் பிறரும் இருப்பார்கள் என்று, ஆணோ பெண்ணோயாராக இருந்தாலும் பிறரிடம் குறைகளைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால், அவர் களின் ஜாதகத்தைப் பார்க்கும்போது, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரிந்துவிடும். அதன்காரண மாக திருமணம் நடப்பதில் தடை உண்டாகும்.

லக்னத்தில் புதன், சுக்கிரன், 2-ல் ராகு, 4-ல் சனி, குரு, 6-ல் செவ்வாய், 12-ல் சூரியன் இருந்தால், அந்த ஜாதகர் அதிகமாகப் பேசுவார்.

"எனக்கு அனைத்தும் தெரியும்' என்பார். பிறரிடம் குறைகண்டுபிடிப்பதே அவரின் வழக்கமாக இருப்பதால், அவருக்குத் திருமணம் நடக்காது.

ஒருவேளை நடந்தாலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், வாழ்க்கைத் துணையிடம் ஏதாவது குறை இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்துக்கொண்டிருப் பார்கள்.

லக்னத்தில் ராகு, 2-ல் செவ்வாய், சூரியன், புதன், 4-ல் சனி இருந்தால், ஆணாக இருந்தால் தனக்கேற்ற மணப்பெண் கிடைக்கவில்லை என்றும், பெண்ணாக இருந்தால் தனக் கேற்ற மணமகன் கிடைக்கவில்லை என்றும் கூறிக்கொண்டு, அந்த கவலை காரணமாக தங்களின் வேலைகளைக்கூட ஒழுங்காகச் செய்யாமல் இருக்கிறார்கள்.

லக்னத்தில் செவ்வாய், 3-ல் சந்திரன், கேது, 7-ல் சூரியன், சுக்கிரன் இருந்தால், அந்த ஜாதகர்கள் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை காதல் திருமணம் செய்துகொள்ள நினைப்பார்கள். அதனால் தேடிவரும் வாய்ப்புகளை மறுத் துக்கொண்டே இருப்பார்கள்.

7-ல் ராகு, 8-ல் சனி, புதன், 9-ல் செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகர் எப்போதும் கோப குணத்துடன் இருப்பார். எல்லாரிடமும் சண்டையிடுவார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கோடீஸ்வர குடும்பத்திலிலிருந்து தங்களுக்கு வாழ்க்கைத்துணை கிடைக்கவேண்டுமென்று கூறிக்கொண்டிருப்பார்கள். அதனால் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டிருக்கும்.

சூரியன் லக்னாதிபதியாகி 3-ல் நீசமடைந்து, 5-ல் ராகு, 6-ல் குரு, 9-ல் செவ்வாய் இருந்தால், கோப குணம் காரணமாக தங்கள் வாழ்க்கை யைக் கெடுத்துக் கொள்வார்கள். வரக்கூடிய திருமண ஆலோசனைகளை மறுத்துக் கொண்டேயிருப்பார்கள்.

11-ல் சந்திரன், சனி, கேது, லக்னத்தில் நீச சூரியன், 7-ல் செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகரால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். அதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் அவர் களுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பா மல் இருப்பார்கள்.

பரிகாரங்கள்

வருடத்திற்கு ஒருமுறையாவது குல தெய்வத்தை வழிபடவேண்டும். சிவ வழிபாடு நன்று. 5-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணிய லாம். பெண்ணாக இருந்தால் செவ்வாய்க் கிழமை விநாயகரை நான்குமுறை சுற்றி வர வேண்டும். ஆணாக இருந்தால் ஆஞ்சனேயரை அல்லது முருகனை நான்குமுறை சுற்றிவர வேண்டும். பெண்கள் வெள்ளிக்கிழமை துர்க் கையை வழிபடவேண்டும். எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றக்கூடாது.

செல்: 98401 11534