Advertisment

வெளியூரில் ஏற்றம் சந்திப்பவர்கள்! -முனைவர் முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/those-who-meet-boom-countryside-dr-muruku-balamurugan

ருவருக்குப் பிறந்த ஊரென்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பிறந்த ஊரில் பெயர், புகழ், செல்வாக்குடன், மற்றவர்கள் மதிக்கும்படி வாழவேண்டுமென்ற ஆசையும், எண்ணமும் எல்லாருக்கும் உண்டு. ஆனால் சிலருக்கு இந்த அமைப்பானது சரியாக அமை வதில்லை. ஏனென்று பார்க்கும்பொழுது ஜாதகரீதியாக ஜனன ஜாதகத்தில் அமையும் கிரகங்கள் ஒருவரின் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கிவிடுகிறது.

Advertisment

ஒருவரின் ஜாதகத்தில் தந்தைக்காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் பலமாக அமையப்பெற்று, தந்தை ஸ்தானமான ஒன்பதாம் வீடும், ஒன்பதுக்கு ஒன்பதாம் வீடான ஐந்தாம் வீடும், சூரியன் வீடான சிம்ம ராசி ஆகிய ஸ்தானங்கள் பலமாக இருந்து, அந்த ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருந்தால் பூர்வீக ஊரில் கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு நல்ல நிலையும், பூர்வீக சொத்தின்மூலம் அனுகூலமும், பெயர், புகழ், அந்தஸ்தும் ஏற்படும். பூர்வீகத்தின்மூலமாக ஆதாயம் பெறுவது மட்டுமல்லாமல் வாழ்வில் ஒரு கௌரவமான நிலையை அடைய முடியும்.

Advertisment

அதுபோல

அதுபோல லக்னாதிபதி, 5, 9-க்கு அதிபதிகள் கேந்திர, திரிகோண ஸ்தானங் களில் அமையப்பெற்றாலும் அனுகூலமான அமைப்பானது ஏற்படுகிறது.

yt

சரி; எப்படிப்பட்ட அமைப்பிருந்தால் இதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது என பார்க் கும்பொழுது, எந்தவொரு நபருக்கு லக்னாதி பதி மறையும்பொழுதும், ஜென்ம லக்னத் திற்கு 5, 9-ஆம் அதிபதிகள் பலவீனம் அடையும் பொழுதும் பிரச்சினைகள் உண்டாகின்றன.

ஒருவர் ஜாதகத்தில் தந்தை ஸ்தானமான 9-லும், பூர்வபுண்ணிய ஸ்தானமான 5-ஆம் வீட்டிலும் பாவ கிரகங்கள் என வர்ணிக்கப் படக்கூடிய சனி, ராகு- கேது அமைகின்றபொழுது பூர்வீக ஊரின்மூலம் அடைய வேண்டிய அனுகூலங்களை அடைய இடையூறுகள் ஏற்படுகிறது. 5-ஆமதிபதி நீசம்பெற்றாலோ, வக்ரம் பெற்றாலோ, 9-ஆமதிபதி நீசம் பெற்றாலோ, வக்ரம் பெற் றாலோ பூர்வீகத்தின்மூலமும், தந்தை மூலமும் சாதகமற்ற நிலை உண்டாகிறது.

அடுத்து, சூரியன் வீடான சிம்ம ராசியில் பாவ கிரகங்கள் அமையப்பெற்றாலும், பூர்வீகத்தால் அனுகூலமற்ற நிலையினை அடைய நேரிடுகிறது. அதுபோல எந்த வொரு ஜாதகத்தில் சூரியன் ராகு- கேது, சனி நட்சத்திரத்தில் அமையப்பெற்றா லும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சூரியன்- ராகு அல்லது கேது சேர்க்கைப் பெறுவது நல்ல அமைப்பல்ல. அதிலும் குறிப் பாக சூரியனுக்கு இரண்டு, மூன்று டிகிரிக்குமுன்பு ராகு அல்லது கேது இருப்பது மிகவும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாகும். அதிலும் குறிப்பாக சூரியனுக்குமுன்பு ராகு அமைவது மிகவும் நெருக்கடியைத் தரக்கூடிய அமைப் பாகும். சூரியனுக்கு மிக அருகில் சர்ப்ப கிரகங்கள் அமையப் பெற்றவர்கள் தந்தைவழி உறவினரின்மூலமாக வாழ்வில் வருத்தங்களை சந்திக்க நேரிடும். தீராத பகையை எதிர்கொள்ள நேரிடும். உறவினர் களே இவர்களுடைய வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பார்கள்.

அதுபோல சந்திரனுக்குமுன்பு ராகு- கேது அமையப்பெற்றாலும், சந்திரன் வீடான கடகத்தில் பாவகிரகங்கள் அமையப்பெற்றா லும் தாய்வழி உறவினர்களே ஜாதகரின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பார்கள்.

இப்படிப்பட்ட அமைப்புள்ளவர்கள் என்ன செய்தால் வாழ்வில் வளர்ச்சி ஏற்படுமென்றால் அவர்கள் முடிந்தவரை பூர்வீக ஊரில், பிறந்த ஊரில் முதலீடு செய்யாமல் வேறிடங்களுக்குச் சென்று அவர்களது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும். 5, 9-ல் பாவ கிரகங்கள் அமையப்பெற்றவர்கள், சூரியனின் வீடான சிம்மத்தில் பாவ கிரகங்கள் அமையப்பெற்றவர்கள் எக்காரணத்தைக்கொண்டும் பூர்வீக ஊரில், பிறந்த ஊரில் முதலீடு செய்யும் எண்ணத்தை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

அடுத்து பாரம்பரியத்தைக் குறிக்கக்கூடிய கிரகம் குரு. ஒருவர் ஜாதகத்தில் குரு பலவீனமாக இருந்தால் அவர்களுக்கு பாரம்பரியத்தை வழிநடத்த, பாரம்பரிய முறைப்படி நடக்க இடையூறுகள் ஏற்படுகிறது.

எந்தவொரு ஜாதகத்தில் லக்னாதிபதி, 10-ஆமதிபதி 3, 6-ல் அமையப்பெற்றி ருந்தாலும், அடுத்து நடக்கும் தசை 3, 6-ல் அமையப்பெற்ற கிரகங்களின் தசையாக இருந்தாலும் அவர் களுக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் நல்ல வாய்ப்புகளும் முன்னேற்றங்களும் ஏற்படுகிறது. அது போல லக்னாதிபதி, 10-ஆமதிபதி, நடக்கின்ற தசையின் அதிபதி 9 அல்லது 12-ல் அமையப் பெற்றிருந்தால் அவர்களுக்கு கடல் கடந்து அன்னிய நாடு சென்று வாழ்வில் முன்னேறக்கூடிய நிலை உண்டாகிறது.

ஒருவருக்கு 3, 6, 9, 12-ல் அமையப்பெற்ற கிரகங்களின் ஆதிக்கம் அதிகப்படியாக இருந்து 5, 9-ல் பாவ கிரகங்கள் அமையப்பெற்றால் அவர்கள் கண்டிப்பாக பிறந்த ஊரில் அனுகூலங்கள் அடையாமல் வெளியூர், வெளிநாடுகளில் அனுகூலங்கள் அடையக்கூடிய யோகமானது உண்டாகும். இப்படிப்பட்ட அமைப்புள்ள வர்களுக்கு பூர்வீக ஊரின்மூலம் சாதகமற்ற நிலையும், பங்காளிகள் மற்றும் உறவினர் களுடைய ஆதரவில்லாத நிலையும், குறிப்பாக அவர்கள்மூலம் மனஸ்தாபம், தேவையற்ற பகையும் ஏற்படும்.

ஜாதகம் பார்க்கவருபவர்கள் சிலர், "எனக்கு பூர்வீகத்தின்மூலமாக அனுகூலங்கள் கிடைக்குமா- பூர்வீக ஊரில் சொந்தவீடு கட்டமுடியுமா' என்றெல்லாம் கேட்பார்கள். அப்படிப்பட்ட ஜாதகர்களுக்குக் கூறக் கூடிய கருத்து என்னவென்றால், கிரகங்கள் சாதகமாக இருந்தால்தான் நாம் ஏதாவது செய்யமுடியும். சாதகமற்றிருந்தால் எது நமக்கு சாதகமாக இருக்குமோ அதற்கு ஏற்றாற் போல் நடந்துகொள்வது நல்லது.

bala310323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe