தன் வாயால் கெடுபவர்கள்! -மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/those-who-are-corrupted-by-his-mouth-makesh-verma

சிலர், வாய்க்கு வந்தவற்றையெல்லாம் பேசி பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார்கள். அதனால் அவர்களின் குடும்ப வாழ்க்கையே கெடுகிறது. பொதுவாழ்க்கையில் இருக்கும் பலர் மனதில் தோன்றியதையெல்லாம் பேசி, ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இதற்கு ஜோதிடரீதியான காரணங்கள் என்ன?

ஜாதகத்திலுள்ள 2-ஆம் பாவமும், 2-ஆம் பாவாதிபதியும், செவ்வாயுமே இதற்கு முக்கிய காரணம்.

2-ஆம் பாவாதிபதி பாவகிரகத்துடன் இருக்கும்போது, ஒருவர் தன் குடும்பத்தில் தேவையற்றதைப் பேசுவார்.

vv

ஜாதகத்தில் 2-ஆம் பாவாதிபதி செவ்வாயுடனோ சூரியனுடனோ சேர்ந்து 2-ஆம் பாவத்தில் இருந்தால்- அதை பாவகிரகம் பார்த்தால், அவர் தேவையற்றதைப்பேசித் தன் பெயரைக் கெடுத்துக்கொள்வார். அதனால் அவருடைய குடும்ப வாழ்க்கை கெடும். பலருடன் அவர் பழகவேண்டிய சூழலே இல்லாமல் போய்விடும். அவரை மற்றவர்கள் தவிர

சிலர், வாய்க்கு வந்தவற்றையெல்லாம் பேசி பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார்கள். அதனால் அவர்களின் குடும்ப வாழ்க்கையே கெடுகிறது. பொதுவாழ்க்கையில் இருக்கும் பலர் மனதில் தோன்றியதையெல்லாம் பேசி, ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இதற்கு ஜோதிடரீதியான காரணங்கள் என்ன?

ஜாதகத்திலுள்ள 2-ஆம் பாவமும், 2-ஆம் பாவாதிபதியும், செவ்வாயுமே இதற்கு முக்கிய காரணம்.

2-ஆம் பாவாதிபதி பாவகிரகத்துடன் இருக்கும்போது, ஒருவர் தன் குடும்பத்தில் தேவையற்றதைப் பேசுவார்.

vv

ஜாதகத்தில் 2-ஆம் பாவாதிபதி செவ்வாயுடனோ சூரியனுடனோ சேர்ந்து 2-ஆம் பாவத்தில் இருந்தால்- அதை பாவகிரகம் பார்த்தால், அவர் தேவையற்றதைப்பேசித் தன் பெயரைக் கெடுத்துக்கொள்வார். அதனால் அவருடைய குடும்ப வாழ்க்கை கெடும். பலருடன் அவர் பழகவேண்டிய சூழலே இல்லாமல் போய்விடும். அவரை மற்றவர்கள் தவிர்ப்பார்கள்.

ஒரு ஜாதகத்தில் 4-ல் கேது, 6-ல் சூரியன், 7-ல் செவ்வாய், 12-ல் சந்திரன் இருந்தால், அவர் அதிகமாகப் பேசுவார். எதையும் சிந்திக்காமல் பேசுவார். ஏனென்றால், 7-ல் இருக்கும் செவ்வாய் தன் 8-ஆவது பார்வையால் 2-ஆம் பாவத்தைப் பார்க்கும். அதேநேரத்தில் சந்திரன் 12-ல் இருந்தால், அவர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பிரச்சினையில் சிக்கிக்கொள்வார்.

லக்னத்தில் செவ்வாய், 2-ல் கேது, 3-ல் நீசச் சந்திரன், 7-ல் சனி இருந்தால், அந்த ஜாதகர் பேசக்கூடாததையெல்லாம் பேசுவார். பிறரைக் குறைகூறிக்கொண்டே இருப்பார். ஏனென்றால், லக்னத்தில் இருக்கும் செவ்வாய் 7-ல் இருக்கும் சனியைப் பார்க்கும். அதனால் அதிக கோபத்துடன் பேசுவார். செவ்வாயின் 8-ஆவது பார்வை ராகு வின்மீது இருப்பதால், அந்த ஜாதகர் எப்போதும் ஊசி குத்துவதைப்போல பேசுவார். அதன்காரணமாக சண்டை வரும்.

லக்னாதிபதி நீசமடைந்து 3-ல் இருக்க, அதை செவ்வாயோ சனியோ பார்த்தால், அவர் தேவையற்றதைப் பேசி பிரச்சினைகளை உண்டாக்குவார். தன் மரியாதையை அவரே குறைத்துக்கொள்வார்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன், சனி, கேது லக்னத்தில் இருந்து, 5-ல் நீசச் சூரியன், 7-ல் ராகு, 11-ல் செவ்வாய் இருந்தால், அவர் தன் குடும்பத்தில் பிரச்சினைகளை உண்டாக்குவார். கண்டபடி பேசி மனைவியுடன் சண்டை போடுவார். பதவியில் இருந்தால், தேவையற்றதைப் பேசி, மரியாதையைக் கெடுத்துக் கொள்வார்.

3-ல் நீசச் சூரியன், 5-ல் ராகு, 6-ல் நீச குரு, 11-ல் சந்திரன், சனி, கேது இருந்தால், அந்த ஜாதகர் ஒரு பதவிக்கு வந்தவுடன் பிறரைத் தாழ்வாகப் பேசுவார். அதன்காரணமாக அந்த பதவியைத் துறக்கவேண்டிய நிலை உண்டாகும்.

லக்னத்தில் நீசச் செவ்வாய், 2-ல் சனி, 2-க்கு அதிபதியான சூலிரியன் நீசமடைந்து 4-ல் இருந்தால், அவர் தன் சகோதரர்கள், உறவினர்களிடம் தேவையற்றதைப் பேசித் தன் பெயரைக் கெடுத்துக்கொள்வார்.

லக்னத்தில் செவ்வாய், 3-ல் சுக்கிரன், ராகு, 12-ல் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் கண்டபடி பேசி, தன் மரியாதைக்கு பங்கம் உண்டாக்கிக் கொள்வார். சிலர் பதவியையே இழக்கவேண்டியதிருக்கும். சிலர் சிறைக்குப் போகவேண்டிய சூழல்கூட உண்டாகும்.

5-ல் ராகு, 11-ல் சந்திரன், கேது, 12-ல் சனி, செவ்வாய் இருந்தால், அவர் தேவையற்றதைப் பேசி, குடும்பத்தில் பிரச்சினையை உண்டாக்கிக் கொள்வார்.

4-ல் கேது, 8-ல் சூரியன், செவ்வாய், புதன், 10-ல் ராகு, 11-ல் சனி இருந்தால், அவருக்கு சரியான இல்வாழ்க்கை அமையாது. அப்படியே அமைந்தாலும் தன் வாயால் அதைக் கெடுத்துக்கொள்வார். ஏனென்றால், சனி- செவ்வாயைப் பார்க்க, செவ்வாய், சனியைப் பார்க்கிறது. அந்த செவ்வாய் 2-ஆம் பாவத்தைப் பார்க்கிறது. 8-ல் இருக்கும் சூரியன், செவ்வாயுடன் இருப்பதால், அவர் அதிகமாகப் பேசி சந்தோஷத்தைக் கெடுத்துக்கொள்வார்.

பரிகாரங்கள்

தினமும் சிவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். தெற்கு அல்லது கிழக்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும். குலதெய்வ வழிபாடு அவசியம். லக்னாதி பதியின் ரத்தினத்தை அணியலாம். தினமும் சூரிய வழிபாடு நலம்தரும். வீட்டில் சிவப்பு, பச்சை, நீல நிறங்களைத் தவிர்க்கவும். கருப்புநிற ஆடையைத் தவிர்ப்பது நன்று. ஞாயிற்றுக்கிழமை பைரவர் ஆலயத்திற்குச் சென்று, தீபமேற்றி வழிபடுதல் கூடுதல் நன்மை தரும். வருடத்திற்கு ஒருமுறை நூறு பசுக்களுக்கு உணவளிக்கவேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் பசுவுக்கு வாழைப்பழம் கொடுப்பது நன்று. தெற்கில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கக்கூடாது.

செல்: 98401 11534

bala210220
இதையும் படியுங்கள்
Subscribe