ஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கிழமை, நட்சத்திரம், யோகம் என ஐந்து பிரிவுகளைக் கொண்டது. வாரம் என்பது அனைவருக்கும் தெரியும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்கள் ஆட்சி செய்யும் ஏழு நாட்கள் வாரம் என்றழைக்கப்படுகின்றது.

மற்ற இரண்டு கிரகங்களுக்கு நாட்கள் இல்லையா? ஆட்சி செலுத்தவில்லையா என்ற கேள்வி எழுவது இயற்கையே. சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங் களுக்கு வார நாட்கள் பிரித்துத் தந்தவர் பிரம்மா ஆவார்.

ராகு- கேது ஆகிய இரண்டும் நிழல் கிரகங்கள். இதனால் அவை பிரம்மாவை நோக்கித் தவமிருந் தன. அவற்றின் தவத்திற்கு மனமி ரங்கிய பிரம்மா அவர்கள்முன் தோன்றினார். ராகு- கேது கிரகங் கள் பிரம்மாவை நோக்கி, ""வாரம் என்பதை ஒன்பது நாட்களாக நிர்ணயித்து, கிழமைகள் ஒதுக்கி எங்களுக்கும் அதிகாரம் செலுத்தும் பாக்கியத்தைத் தாருங்கள்'' என்றனர்.

அதற்கு பிரம்மா, ""நீங்கள் இருவரும் இரண்டு கிரகங்கள் அல்ல. ஒரே கிரகம்தான். பாம்பின் தலையும் உடலின் பகுதியும் கொண்டவர்கள். எனவே உங் களுக்கு நாட்கள் ஒதுக்கவில்லை. அப்படியே ஒரு நாளை ஒதுக்கி னாலும், வார நாள் எட்டு ஆகும். 52 வாரங்களைக் கொண்ட ஓர் ஆண்டுக் கணக்கில் சிக்கல் எழும்.

Advertisment

உங்கள் விருப்பத்தை வேறுவித மாகப் பூர்த்தி செய்யலாம். ஒவ் வொரு நாளிலும் ஒன்றரை மணிநேரம் உங்களுக்கு ஒதுக்கப் படும்'' என்று கூறினார்.

இதன்படி ராகுவுக்கு ஒன்றரை மணி நேரம் ராகு காலமும், கேதுவுக்கு ஒன்றரை மணிநேரம் எமகண்ட காலமும் நிர்ணயிக்கப்பட்டது.

எமகண்டம் எமனுக்குரியது- ஆபத்துக்காலம் என்றெல் லாம் அஞ்சத் தேவையில்லை. ராகு காலத்தில் புதிய காரியங்களை மட்டுமே தொடங்கக்கூடாது. மற்றபடி வழக்கமான கடமைகளை மேற்கொள்ளலாம்.

Advertisment

எனவே, ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு கிரகநாதனும், அதிதேவதையும் உண்டு. அந்தந்த நாட்களுக்குரிய அதிதேவ தைகளை வணங்கிவர நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.

ppp

கிழமைகள் கிரகநாதன் அதிதேவதை

ஞாயிறு சூரியன் சிவபெருமான்

திங்கள் சந்திரன் அம்மன்

செவ்வாய் அங்காரகன் முருகன்

புதன் புதன் மகாவிஷ்ணு

வியாழன் குரு பிரம்மா, தட்சிணாமூர்த்தி

வெள்ளி சுக்கிரன் இந்திரன், அம்பாள்

சனி சனி எமன், ஈஸ்வரன்

மேற்கண்ட நாட் களுக்குரிய தெய்வங் களை வீட்டில் வைத்தோ, ஆலயங்கள் சென்றோ வழிபட்டுவரலாம். அவ்வாறு வழிபாடு மேற்கொள்ளும் போது கிரக தோஷங்கள் நீங்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதுமட்டுமின்றி அந்தந்த நாட்களுக்குரிய நவதானியங் களை உணவுகளில் சேர்த்துக் கொள்வது மிகவும் உத்தமம். இதன்படி ஞாயிற்றுக்கிழமை கோதுமை, (சர்க்கரைப் பொங்கல்); திங்கட்கிழமை நெய்யரிசி (பாயசம்); செவ்வாய்க்கிழமை துவரம் பருப்பு கலந்த உணவு (நெய் அன்னம்); புதன்கிழமை பச்சைப்பயறு (பால் கலந்த அரிசி மாவு); வியாழக்கிழமை கொண்டைக்கடலை கலந்த உணவு (தயிர் சாதம்); வெள்ளிக்கிழமை மொச்சை கலந்த உணவு (நெய் அன்னம்); சனிக்கிழமை எள் கலந்த உணவு (எள்ளன்னம், எள், வெல்லம் கலந்த உருண்டை). இவைதவிர ராகு- கேதுவுக்கு உளுந்து, கொள்ளு.

ஒவ்வொரு நாளும் தானிய வகை உணவு உட்கொண்டு வந்தால் மிகவும் நன்மை அளிப்பதாகும். மேலும் அடைப்புக்குறியில் உள்ள உணவை அந்த கிரக தேவதை களுக்கு நெய்வேத்திய மாகப் படைத்தால் அனைவரும் நோய், கடன், எதிரி தொல்லைகள் இல்லாமல் வாழலாம் என்பது சித்தர் களின் வாக்காகும்.

இந்தப் பரிகாரம் செய்து நலமுடனும் வளமுடனும் வாழ்வோம்.

செல்: 98944 94915