ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
7-4-2019 முதல் 13-4-2019 வரை
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
8-4-2019- ரிஷபம்.
10-4-2019- மிதுனம்.
12-4-2019- கடகம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரேவதி- 2, 3, 4.
செவ்வாய்: ரோகிணி- 1, 2.
புதன்: பூரட்டாதி- 3, 4,
உத்திரட்டாதி- 1.
குரு: மூலம்- 1.
சுக்கிரன்: சதயம்- 4, பூரட்டாதி- 1, 2, 3.
சனி: பூராடம்- 2.
ராகு: புனர்பூசம்- 3.
கேது: உத்திராடம்- 1.
கிரக மாற்றம்:
8-4-2019- மீன புதன்.
10-4-2019- குரு வக்ரம் ஆரம்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல்- சந்திரன் சாரத்தில் (ரோகிணி) இருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் ராசிக்கு 11-ல், லாப ஸ்தானத்தில் நின்று சனியின் பார்வையைப் பெறுகிறார். அதுமட்டுமல்ல; பாக்கியாதிபதி குருவும், கர்மாதிபதி (ஜீவனாதிபதி) சனியும் ஒன்றுகூடி பாக்கியத்தில் நிற்பது தர்மகர் மாதிபதி யோகமாகும். அத்துடன், குருவும் உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே தர்மசிந்தனையோடும் கருணை உள்ளத் தோடும் நேர்மையாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவும் உயர்ந்த மனதோடு திகழ்வீர்கள். அவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள் உங்கள் வளர்ச்சிக்கு வழியமைக்கும். திருமணம் அல்லது பிறந்த நாள் அல்லது விசேஷ காலங்களில் குரு, உற்றார்- உறவினர், உடன்பிறப்பு, நல்ல உள்ளம் படைத்தோரை வணங்கி, வாழ்த்துப் பெறுவது ஏனென்றால், அவர்களின் ஆசியும் அன்பும் நமக்கு முன்னேற்றத்தை உருவாக்கும் என்பதற்காகவே! குருவருள் இருந்தால் திருவருள் பெறலாம். குருபார்வையும் தர்மகர்மாதிபதி யோகமும் அதனைப் பெற்றுத்தரும். பணிகளில் ஆர்வமும் அக்கறை யும் இருக்கும். அதனால் உங்கள் திறமை வெளிப்படும். திறமைக் கேற்ற பெருமையும் சிறப்பும் உண்டாகும். மற்ற வர்களால் முடியாத காரி யங்களையும் நீங்கள் சாதா ரணமாக செயல்படுத்தி சீரும்சிறப்பும் அடைய லாம். சோதனைகளை ஜெயித்து சாதனைகளைப் படைக்கலாம். செவ்வாய் 2-ல் நின்று 9-ஆம் இடத்தை யும், 9-ல் உள்ள குரு- சனியையும் பார்ப்பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் சிக்கல் நிவர்த்தியாகி, நீங்கள் விரும்பியதுபோல எல்லாம் இனிதே நிறைவேறும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து (9-க்குடைய குரு 12-க்கும் அதிபதி என்பதால்), பூர்வீகத்தில் ஆகாத- போகாத- பயனற்றுக் கிடக்கும் சொத்துகளை விற்று, புதியதாக மாற்றம் செய்யலாம் அல்லது பரிவர்த்தனை செய்யலாம். தேக ஆரோக் கியத்தில் தெளிவு ஏற்படவும்- பூமி, கட்டடம் சம்பந்தப்பட்ட திட்டங்கள் வெற்றிய டையவும் செவலூர் பூமிநாதசுவாமியை வழிபடவும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ல் 2, 5-க்குடைய புதனோடு சேர்க்கை. 10-ஆம் இடத்துக்கு அந்த புதன் 5, 8-க்குடையவர். அதுமட்டுமல்ல; அந்த 10-க்குடைய சனியும் 10-க்கு 11-ல் நின்று 10-ஆம் இடத்தையும், சுக்கிரன்- புதன் இருவரையும் பார்க்கிறார். எனவே தொழில் செய்கிறவர்களாகட்டும் அல்லது அரசுப்பணியில் இருக்கிறவர்களா கட்டும் அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறவர்களாகட்டும் எல்லாருக் கும் இக்காலம் பொற்காலம். அதிர்ஷ்ட யோகத்தை சந்திக்கலாம். பேச்சிலும், செயலிலும் எண்ணத்திலும் வாய்மை யும் தூய்மையும் வெளிப்படும். கலைஞர் சொன்னமாதிரி, "செய் வதைத்தான் சொல்வீர்கள்- சொல்வதைத்தான் செய்வீர் கள்!' வாழ்க்கையில் வளமை யான திட்டங்களை வகுத்து செயல்படலாம். நீண்ட காலமாக தீராமல் தலைவலி தந்துவரும் பிரச்சினைகளை எளிதாகத் தீர்த்து இன்பமடையலாம். வள்ளுவர் சொல்லிய மாதிரி- யாரைக் கொண்டு இந்தக் காரியத்தைச் செயல் பட்டால் வெற்றி கிட்டுமோ, அப்படி அவரைக் கொண்டு அந்தக் காரியத்தை செய்து முடிப்பீர்கள். ரிஷப ராசிக்கு 2020 வரை அட்டமச்சனி நடக்கிறது. அதனால் சில காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறலாம். சில காரியங்கள் கொஞ்சம் தாமதமாக நிறைவேறலாம். சில காரியங்கள் நிலுவையில் கிடந்தாலும், பிறகு நிறைவேறிவிடும். இது அட்டமச்சனியால் ஏற்படும் தடை என்றா லும், குரு சம்பந்தப்படுவதால் தோல்விக்கு இடமிருக்காது. வெற்றி நிச்சயம்! படிக்கும் மாணவர்கள் விளையாட்டு புத்தியை விலக்கி வைத்துவிட்டு, ஆர்வத்தோடும், அக்கறை யோடும், விடாமுயற்சியோடும் படிக்க வேண்டும். சனி பகவான் டி.வி. மோகம், செல்போன் விளையாட்டு, நண்பர்களுடன் வெட்டிப் பேச்சு, வீண் பொழுதுபோக்குகளில் கவனத்தை திசை திருப்பச்செய்வார். அதற்கு இடம் தராமல் கவனத்தை ஒருநிலைப்படுத்த வேண்டும். அவரவர் வயதுடன் ஒன்றுசேர்த்து அத்தனை எண்ணிக்கை மிளகுகளை ஒரு சிவப் புத்துணியில் பொட்டலமாகக் கட்டி நெய
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
7-4-2019 முதல் 13-4-2019 வரை
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
8-4-2019- ரிஷபம்.
10-4-2019- மிதுனம்.
12-4-2019- கடகம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரேவதி- 2, 3, 4.
செவ்வாய்: ரோகிணி- 1, 2.
புதன்: பூரட்டாதி- 3, 4,
உத்திரட்டாதி- 1.
குரு: மூலம்- 1.
சுக்கிரன்: சதயம்- 4, பூரட்டாதி- 1, 2, 3.
சனி: பூராடம்- 2.
ராகு: புனர்பூசம்- 3.
கேது: உத்திராடம்- 1.
கிரக மாற்றம்:
8-4-2019- மீன புதன்.
10-4-2019- குரு வக்ரம் ஆரம்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல்- சந்திரன் சாரத்தில் (ரோகிணி) இருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் ராசிக்கு 11-ல், லாப ஸ்தானத்தில் நின்று சனியின் பார்வையைப் பெறுகிறார். அதுமட்டுமல்ல; பாக்கியாதிபதி குருவும், கர்மாதிபதி (ஜீவனாதிபதி) சனியும் ஒன்றுகூடி பாக்கியத்தில் நிற்பது தர்மகர் மாதிபதி யோகமாகும். அத்துடன், குருவும் உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே தர்மசிந்தனையோடும் கருணை உள்ளத் தோடும் நேர்மையாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவும் உயர்ந்த மனதோடு திகழ்வீர்கள். அவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள் உங்கள் வளர்ச்சிக்கு வழியமைக்கும். திருமணம் அல்லது பிறந்த நாள் அல்லது விசேஷ காலங்களில் குரு, உற்றார்- உறவினர், உடன்பிறப்பு, நல்ல உள்ளம் படைத்தோரை வணங்கி, வாழ்த்துப் பெறுவது ஏனென்றால், அவர்களின் ஆசியும் அன்பும் நமக்கு முன்னேற்றத்தை உருவாக்கும் என்பதற்காகவே! குருவருள் இருந்தால் திருவருள் பெறலாம். குருபார்வையும் தர்மகர்மாதிபதி யோகமும் அதனைப் பெற்றுத்தரும். பணிகளில் ஆர்வமும் அக்கறை யும் இருக்கும். அதனால் உங்கள் திறமை வெளிப்படும். திறமைக் கேற்ற பெருமையும் சிறப்பும் உண்டாகும். மற்ற வர்களால் முடியாத காரி யங்களையும் நீங்கள் சாதா ரணமாக செயல்படுத்தி சீரும்சிறப்பும் அடைய லாம். சோதனைகளை ஜெயித்து சாதனைகளைப் படைக்கலாம். செவ்வாய் 2-ல் நின்று 9-ஆம் இடத்தை யும், 9-ல் உள்ள குரு- சனியையும் பார்ப்பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் சிக்கல் நிவர்த்தியாகி, நீங்கள் விரும்பியதுபோல எல்லாம் இனிதே நிறைவேறும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து (9-க்குடைய குரு 12-க்கும் அதிபதி என்பதால்), பூர்வீகத்தில் ஆகாத- போகாத- பயனற்றுக் கிடக்கும் சொத்துகளை விற்று, புதியதாக மாற்றம் செய்யலாம் அல்லது பரிவர்த்தனை செய்யலாம். தேக ஆரோக் கியத்தில் தெளிவு ஏற்படவும்- பூமி, கட்டடம் சம்பந்தப்பட்ட திட்டங்கள் வெற்றிய டையவும் செவலூர் பூமிநாதசுவாமியை வழிபடவும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ல் 2, 5-க்குடைய புதனோடு சேர்க்கை. 10-ஆம் இடத்துக்கு அந்த புதன் 5, 8-க்குடையவர். அதுமட்டுமல்ல; அந்த 10-க்குடைய சனியும் 10-க்கு 11-ல் நின்று 10-ஆம் இடத்தையும், சுக்கிரன்- புதன் இருவரையும் பார்க்கிறார். எனவே தொழில் செய்கிறவர்களாகட்டும் அல்லது அரசுப்பணியில் இருக்கிறவர்களா கட்டும் அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறவர்களாகட்டும் எல்லாருக் கும் இக்காலம் பொற்காலம். அதிர்ஷ்ட யோகத்தை சந்திக்கலாம். பேச்சிலும், செயலிலும் எண்ணத்திலும் வாய்மை யும் தூய்மையும் வெளிப்படும். கலைஞர் சொன்னமாதிரி, "செய் வதைத்தான் சொல்வீர்கள்- சொல்வதைத்தான் செய்வீர் கள்!' வாழ்க்கையில் வளமை யான திட்டங்களை வகுத்து செயல்படலாம். நீண்ட காலமாக தீராமல் தலைவலி தந்துவரும் பிரச்சினைகளை எளிதாகத் தீர்த்து இன்பமடையலாம். வள்ளுவர் சொல்லிய மாதிரி- யாரைக் கொண்டு இந்தக் காரியத்தைச் செயல் பட்டால் வெற்றி கிட்டுமோ, அப்படி அவரைக் கொண்டு அந்தக் காரியத்தை செய்து முடிப்பீர்கள். ரிஷப ராசிக்கு 2020 வரை அட்டமச்சனி நடக்கிறது. அதனால் சில காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறலாம். சில காரியங்கள் கொஞ்சம் தாமதமாக நிறைவேறலாம். சில காரியங்கள் நிலுவையில் கிடந்தாலும், பிறகு நிறைவேறிவிடும். இது அட்டமச்சனியால் ஏற்படும் தடை என்றா லும், குரு சம்பந்தப்படுவதால் தோல்விக்கு இடமிருக்காது. வெற்றி நிச்சயம்! படிக்கும் மாணவர்கள் விளையாட்டு புத்தியை விலக்கி வைத்துவிட்டு, ஆர்வத்தோடும், அக்கறை யோடும், விடாமுயற்சியோடும் படிக்க வேண்டும். சனி பகவான் டி.வி. மோகம், செல்போன் விளையாட்டு, நண்பர்களுடன் வெட்டிப் பேச்சு, வீண் பொழுதுபோக்குகளில் கவனத்தை திசை திருப்பச்செய்வார். அதற்கு இடம் தராமல் கவனத்தை ஒருநிலைப்படுத்த வேண்டும். அவரவர் வயதுடன் ஒன்றுசேர்த்து அத்தனை எண்ணிக்கை மிளகுகளை ஒரு சிவப் புத்துணியில் பொட்டலமாகக் கட்டி நெய் தீபமேற்றி வழிபட வேண்டும். சனிக்கிழமை தோறும் காலபைரவர் சந்நிதியில் அட்ட மச்சனி முடியும் வரை ஏற்றவேண்டும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசியில் ராகு நிற்பதும், ஏழில் கேது நிற்பதும் உங்கள் முயற்சிகளில் தளர்ச் சியை உருவாக்கி வளர்ச்சியைத் தடுக்கலாம். ஆனால், கேதுவுடன் குருவும் சனியும்கூடி ராசியையும் ராகுவையும் பார்ப்பதால், விடா முயற்சியும் வைராக்கியமும் இருந்தால், சோதனைகளைக் கடந்து சாதனைகளைப் படைக்கலாம். இதை வள்ளுவர் "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்று சொன்னார். அரச போகத்திலே ஆனந்தமாக இருந்த கௌசிகச் சக்கரவர்த்தி- போரிலே வென்று, வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு விருந்தாளியாக- வெறுங்கையனாக திரும்பியபோது, ஆயிரக் கணக்கான படைவீரர்களுக்கு வசிஷ்ட மகரிஷி காமதேனுவின் கருணையால் மாபெரும் விருந்து படைத்தார். மன்னன் அந்தப் பசுவைக் கேட்க- வசிஷ்டர் தர்ம உபகாரமாக இருக்கும் காமதேனுவை தரமறுக்க- சக்கரவர்த்தி தன் படைவீரர் களைக்கொண்டு அதைச்சிறைப்படுத்தி அபகரித்துச் செல்ல முயற்சிக்க, காமதேனு உடல்சிலிர்த்ததும், அதன் உடலிலிருந்து கௌசிக மன்னனின் படைவீரர்களைப்போல பல மடங்கு போர் வீரர்கள் உதயமாகி அவர் களை ஓடஓட விரட்டியடித்தனர். வீரத்தால் முடியாததை விவேகத்தால் சாதிக்க, மன்னன் நாட்டைத் துறந்து, காட்டில் தவமிருந்து விசுவாமித்திர ரிஷியானார். இந்திராதி தேவர்கள் அவர் கவனத்தை திசைதிருப்ப பலவிதமான யுக்திகளைக் கையாண்டார்கள். விசுவாமித்திரர் வைராக்கியத்தாலும், விடாமுயற்சியாலும் முடிவில் தவவலிமை பெற்றார். ஆகவே, உங்களுடைய விடா முயற்சிக்கும், வைராக்கியத்துக்கும் பரிசாக வெற்றித் திருமகள் உங்களைத் தேடிவந்து கட்டியணைப்பது உறுதி! அதனால் எண்ணியது ஈடேறும். நினைத்தது நிறைவேறும். ஆசைப்பட்டதை அடையலாம். (நியாயமான ஆசைகள்).
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 12-ல் ராகு. 6-ல் குரு, சனி, கேது. 8-ல் புதன், சுக்கிரன். இப்படி எல்லா கிரகங்களும் 6, 8, 12-ல் மறைவாக இருப்பது தோஷம்தான். அதனால் கையளவு இதயத்தில் கடல் அளவு ஆசைகள் உருவாகும். ஆனால், முறையாக எதையும் செயல்படுத்த முடியாதபடி புல்வெளியில் சிந்திய தவிடாக (பொறுக்கி எடுக்கமுடியாதபடி) வீணாகலாம். உங்கள் மனதுக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் படும் பல திட்டங்களும், காரியங்களும் மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்பதால் திசைமாறிப் போகலாம்; ஏமாற்றமாகலாம்; எதிர்மறைப் பலனாக மாறலாம். எனவே கவியரசர் பாடிய மாதிரி, "ஏற்றதென எனதுள்ளம் எடுத்துரைத் தால் அக்கருத்தை சாற்றுவேன்; சாதிப் பேன்; எவர் எதிர்த்தாலும் மாற்றிக் கொள்ள மாட்டேன்; மற்றவர் யோசனைக்கு இடம் கொடேன்' என்ற முறையில் செயல்படுவதை லட்சிய மாகக் கொள்ளவேண்டும். அதாவது போகாத ஊருக்கு பத்துப்பேரிடம் வழிகேட்கக்கூடாது. அதேபோல தலைவலிக்கு மருந்தும் பரிகாரமும் கேட்கக்கூடாது. ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்லி, உங்களைக் குழப்பிவிடுவார்கள். புறப் பட்ட இடத்துக்கே ஊரைச் சுற்றி திரும்ப வும் வந்துசேரும் நிலையாகிவிடும். எனவே, மற்றவர் யோசனைகளுக்கு முக்கி யத்துவம் கொடுக்காமல், உங்கள் மனம் ஆணையிடுவது மாதிரி அதற்கேற்றது போல நடந்தால் வெற்றி நிச்சயம்! தோல்வியை தூரமாக துரத்திவிடலாம். அதற்குக் காரணம் 11-ல் உள்ள செவ்வாய் தான்! சூரபத்மனை வெற்றிகொண்ட முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம் தான்!
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் தன் ராசிக்கு 8-ல் மறைந்தாலும், அவருக்கு வீடு கொடுத்த குரு 5-ல் நின்று சிம்ம ராசியைப் பார்க்கிறார். அதேபோல சூரியனுக்கு சாரம் கொடுத்த புதன் (ரேவதியில் சூரியன்) ராசிக்கு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். எந்த ஒரு கிரகமும் 6, 8, 12-ல் மறைந்தாலும், அந்த கிரகத்துக்கு வீடு கொடுத்த கிரகமும், சாரம் கொடுத்த கிரகமும் அந்த கிரகத்துக்கு கேந்திர திரிகோணம் பெற்றாலும், ராசிக்கு கேந்திரம், திரிகோணம் பெற்றாலும் மறைவு தோஷம் விலகி, நிறைவுப் பலனாக மாறிவிடும். எனவே ராசிநாதன் 8-ல் மறைகிறார் என்ற குற்றம் நீங்கிவிடுகிறது. "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' என்று "தில்லானா மோகனாம்பாளி'ல் பத்மினி பாடிய மாதிரி, அதிலும் ஒரு மர்மம் அல்லது ரகசியம் உண்டு. வாலியுடன் போரிட்டு வெற்றிபெற்ற ஸ்ரீராமன் மறைந்திருந்துதான் தாக்கி வெற்றிபெற்றார். மறைந்திருந்து எதிரிகளைத் தாக்குவதும் ஒரு ராஜதந்திரம். அதனை "கொரில்லா போர் முறை' என்பார்கள். இரண்டாவது உலகப் போரில், ஹிட்லர் இப்படிப்பட்ட ராஜதந்திரப் போர் முறைகளைப் பின்பற்றிதான் உலகத் தையே வளைத்து, கைப்பற்றி வெற்றி கொள்ளும் நிலைக்கு வந்தார். ரஷ்யாவைக் கைப்பற்ற நெருங்கும்போது குளிர்காலம்- பனிக்காலம் என்ற பருவநிலையால், ஜெர்மானி யர்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்றுப்போனார். அவர் வெற்றிக்கு இன்னொரு வகையில் துணைபுரிந்தது "ஸ்வஸ்திக்' அடையாளம். இது வெற்றியின் சின்னம். லட்சுமியின் அம்சம். ஆனால் இதையே ஹிட்லர் என்று எதிர்மறையாக சின்னம் பொறித்துக் கையாண்டார். வெற்றி என்பது நேர்வழியில் பெறுவது ஒருவகை. குறுக்குவழியில் அடைவது ஒருவகை. மகா பாரதப் போரில் பத்மவியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளேபோன அபிமன்யுவை- நிராயுதபாணியாகநின்றவனை ஜயத்ரன் கொன்றான். அதனால் மாயகிருஷ்ணனும் சூரியனை சக்கரத்தால் மறைத்து, அர்ஜு னனுக்கு பயந்து மலையில் ஒளிந்திருந்த ஜயத்ரதனை வெளிவரச்செய்து அர்ஜுனனின் அம்புக்கு இறையாக்கினார். (ராஜதந்திரம்).
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன், தன் ராசிக்கு 6-ல் மறைந்திருந்தாலும், 8-ஆம் தேதி மீன ராசிக்கு மாறுவார். மீன ராசியில் புதன் நீச நிலை என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த குரு 4-ல் ஆட்சி பெறுவதால், புதன் நீசபங்க ராஜயோகத்தை அடைவார். ஆகவே, ஆரம் பத்தில் தடையாக விளங்கும் பல காரி யங்கள், உங்கள் விடாமுயற்சியால் பிறகு வெற்றிப்பாதையில் பயணிக்கும். வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்கும். 5, 6-க்குடைய சனி 4-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். (10-ஆம் பார்வை). ராசிநாதன் புதனையும் 3-ஆம் பார் வைப் பார்க்கிறார். அதுமட்டுமல்ல; 9-க்கு டைய சுக்கிரனும், 10-க்குடைய புதனும் கும்பத்தில் சேர்ந்திருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அது எல்லாவிதமான கிரக தோஷங்களையும் போக்கவல்லது. அதாவது, புராணத்தில் தேவர்கள் சாகாவரம் அருளும் அமிர்தத்தை உண்டு சிரஞ்சீவியாக இருந்ததுபோல! காயகல்பம் என்று சித்த வைத்தியத்தில் சொல்லுவதுண்டு. என்றும் இளமையாக வைத்திருக்கும் மருந்து அதுபோல, தர்மகர்மாதிபதி யோகமும், பரிவர்த்தனை யோகமும் ஒரு ஜாதகத்தில் இருந்தால், இழந்த சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் அடைவதுபோல! அதற்கு உதாரணம், காலஞ் சென்ற இந்திராகாந்தியும், கலைஞர் கருணா நிதியும். குறிப்பிட்ட சில காலம் பதவியில்லா மல் இருந்தாலும், மீண்டும் இந்திராகாந்தி பிரதமர் ஆனார். கலைஞர் முதல்வர் ஆனார். அவர்கள் ஜாதகங்களில் பரிவர்த்தனை யோகம் இருந்ததுதான் அந்த பதவி யோகத்துக்குக் காரணம். இப்போதும், இழந்த பதவியை மீண்டும்பெற, இழந்த வேலையை மீண்டும்பெற, இழந்த செல்வத்தை மீண்டும் பெற "கார்த்தவீர்யார்ஜுன மந்திரத்தை' ஜெபிக்கலாம். சேங்காலிபுரம் தத்தாத்ரேயர் கோவிலில் கார்த்தவீர்யார்ஜுன யந்திரம் உண்டு. அதையும் வழிபடலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 5-ல் கும்ப ராசியில் புதனோடு சேர்க்கை. புதன் ராசிக்கு 9-க்குடையவர். 9-ஆம் இடம் திரிகோண ஸ்தானம். 5-ஆம் இடமும் திரிகோண ஸ்தானம். ஒரு திரிகோணாதிபதி மற்றொரு திரிகோணம் ஏறுவது, பருத்தி, புடவையாய்க் காய்த்த மாதிரி! பழம் நழுவிப் பாலில் விழுந்து, அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரி! கும்பிடப்போன தெய்வம் எதிரில் வந்து தரிசனம் கொடுத்தமாதிரி! இதன் உள்ளர்த்தம் என்னவென்றால், எதிர்பாராத அதிர்ஷ்டம் எதிர்கொண்டு வந்து அர வணைக்கும்! காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த நிலை! 6-ல் சூரியன். லாபாதிபதி மறைந்தாலும்- அதாவது (11-க்குடையவன் தன் ஸ்தானத்துக்கு 6-ல் மறைந்தாலும்) 10-ஆம் இடத்துக்கு 9-ல் திரிகோணம் என்பதால், தொழில், வாழ்க்கை, வேலை, பதவி ஆகிய வற்றில் பிரச்சினைகளும், தடைகளும் இருந்தாலும், அவற்றைக் கடந்து முன்னேறி வெற்றிபெறலாம். 5-ல் உள்ள புதனும் சுக்கிரனும் நீங்கள் நினைத்ததை நிறைவேற்று வார்கள். எண்ணியதை ஈடேற்றுவார்கள். புதன் விரயாதிபதி என்பதால், ஒருசில காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறி விடும். வேறுசில காரியங்கள் ஒருமுறைக்கு இருமுறை முயற்சிசெய்து அல்லது செலவு செய்து நிறைவேறும். ஒருசிலர் இடப்பெயர்ச் சியை சந்திக்கலாம். குடியிருப்பு மாறல், பதவி மாற்றம், தொழில், மாறுதல், வேலைமாற்றம் போன்றவற்றை சந்திக்கலாம். சிலர் வெளிநாடு போகலாம். எந்த மாறுதலானாலும், அந்த மாறுதல் ஆறுதலான மாறுதலாக அமையும். அதில் சந்தேகம் வேண்டாம். ஒருசிலர் மேற்கண்ட திட்டங்களுக்காகவும், காரியங் களுக்காவும் கடன் வாங்கும் சூழ்நிலையும் உருவாகும். அந்தக் கடன் சுபக்கடன் அல்லது விருத்திக்கடன் எனப்படும். அப்படிப்பட்ட கடன் மனதுக்கு சஞ்சலமாகத் தெரிந்தால் கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று கடன் நிவர்த்தீஸ்வரரை (சாரபரமேஸ்வரரை) வழிபடலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய், தன் ராசிக்கு 7-ல் ரிஷபத்தில் நின்று ராசியைப் பார்ப்பதோடு, 2-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். பொதுவாக, குரு எந்த இடத்தில் இருந்தாலும் அல்லது எந்த இடத்தைப் பார்த்தாலும் அந்த இடத்துக்கு ஒரு சிறப்பு உண்டாகும். அங்கு எந்த பாவகிரகங்கள் இருந்தாலும், அதன் கெடுபலன் மாறி நற்பலனாக மாறிவிடும். பாவத்தன்மை நீங்கி புனிதத் தன்மை உருவாகிவிடும். அதேபோல திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்போருக்கு திருமணம் கூடும். திருமணமானவர்களுக்கு ஒருமனதான நிறைவாழ்வு அமையும். "காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்' என்ற கவிமணியின் வாக்குப்படி இன்பம் துய்க்கலாம்- வாரிசு யோகத்தை அடையலாம். விருச்சிக ராசிக்கு 2020 டிசம்பர் வரை ஏழரைச்சனியின் கடைசிக்கூறு பாதச் சனி நடக்கும். இதுவரை மங்குசனியாக தங்கு தடைகளைச் சந்தித்தவர்களுக்கு, இனிமேல் பொங்குசனிப் பலனாக பொலிவையும் பூரிப்பை யும் சந்திக்கலாம்! 2-ஆம் இடத்துக் கேதுவும், 8-ஆம் இடத்து ராகுவும் சிறுசிறு இடையூறுகளையும், பிரச்சினைகளையும் உருவாக்கினாலும், அவற்றைக் கடந்து ஸ்பீடு பிரேக் இல்லாத ஹைவேஸ் ரோட்டில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் பயணம் போவது போல போகலாம்- பயணிக்கலாம்! அதற்குக் காரணம் கேதுவும் ராகுவும் குரு சம்பந்தம் பெறுவதே! "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பதுபோல ஏழரைச்சனியின் பலனால் இதுவரை பாதிப்பைச் சந்தித்தவர்கள் எல்லாம், இனிமேல் வேதனைகளை விலக்கி, சாதனைகளைப் படைக்கலாம். அரைகுறை யாக நின்றுபோன கட்டடவேலைகள் முழுமை யடையும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதிர்பார்க்கலாம். ஏழரைச்சனியின் இடை யூறுகளை தவிர்க்க, சனிக்கிழமைதோறும் அவரவர் வயதுடன் ஒன்றுசேர்த்து, அந்த எண்ணிக்கையளவு மிளகை சிவப்புத்துணி யில் பொட்டலம் கட்டி நெய்யில் நனைத்து காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. 2020 டிசம்பர்வரை ஜென்மச்சனி! 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இது முதல் சுற்று! 30 வயதைத் தாண்டியவர்களுக்கு இரண்டாம் சுற்று! 55 வயதைக் கடந் தவர்களுக்கு மூன்றாம் சுற்று! முதல் சுற்று மங்குசனி என்றும், இரண்டாம் சுற்று பொங்குசனி என்றும், மூன்றாம் சுற்று மரணச்சனி என்றும் சொல்வார்கள். அதனால், மூன்றாம் சுற்று நடக்கிறவர்களுக்கெல் லாம் மரணம் வரும் என்று அர்த்தமல்ல! தொன்னூறு வயது- நூறு வயது வாழ்ந் தவர்களும், வாழ்கிறவர்களும் நான்கு சனியைச் சந்தித்தவர்கள்தான்! ஆகவே இவையெல்லாம் ஜோதிடப் பழமொழி கள்தான்! எல்லாருக்கும் பொருந்தும் என்று கூறமுடியாது. சிலருக்குப் பொருந்தும்- பலருக்குப் பொருந்தாது! ஜென்மச்சனியாக இருந்தாலும், ராசிக்கு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால், தொழில்- வாழ்க்கை இரண்டிலும் எந்தக் குறையும் ஏற்படாது. புதிய தொழில் அல்லது புதிய வேலை அல்லது வெளிநாட்டு வேலை அல்லது புதிய வீடு மாற்றம் போன்ற பலன்கள் உண்டாகும்! 4-க்குடைய குரு ஜென்ம ராசியில் ஆட்சி என்பதால், தேக ஆரோக் கியத்திலும் தெளிவான நிலையும் முன்னேற்ற மும் உண்டாகும். அதேபோல, தாயார்- பிள்ளைகள் உறவில் நல்ல திருப்தி நிலவும். 7-ஆம் இடம் கணவன் அல்லது மனைவி ஸ்தானம் எனப்படும். அங்கு ராகு- கேது சம்பந்தம் இருப்பதால், ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால், சிறுசிறு குழப்பங் களும் பிரச்சினைகளும் உருவானாலும், ராசிநாதன் குரு பார்வை இருப்பதால், அவை சூரியனைக்கண்ட பனிபோல விலகிவிடும். "நீரடித்து நீர் விலகாது', "குற்றம்பார்க்கின் சுற்றம் இல்லை' என்ற பழமொழிப்படி சலசலப்பு நீங்கி கலகலப்பு உருவாகிவிடும். ஏழரைச்சனியின் வேகம் தணிய பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுவதுபோல, ஆஞ்சனேயருக்கு நெய் தீபமும், துளசிமாலை, வெண் ணெய்க் காப்பும் சாற்றலாம். (சனிக்கிழமை).
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. ஆனால், அவருக்கு வீடு கொடுத்த குரு அவருடன் இணைவதால் மறைவு தோஷம் விலகும். ஏற்கெனவே கூறியபடி ஒரு கிரகம் மறைந்தாலும், 6, 8, 12-ல் இருந்தாலும், அந்த கிரகத்துக்கு சாரம் கொடுத்த கிரகமும், வீடு கொடுத்த கிரகமும் பலமாக இருந்தாலும், அவருடன் சம்பந்தப்பட்டாலும் அந்த தோஷம் பலமிழந்துவிடும். சில மருந்துகள் எக்ஸ்பயரி ஆவதுபோல! அதேபோல, ஒரு புரோநோட்டு குறிப்பிட்ட வருடம் வரைதான் பலம்! பிறகு செல்லாததாகிவிடும். காசோலை யும் குறிப்பிட்ட காலம்தான். அதன்பிறகு அதுவும் செயலற்றுவிடும். செக்- மூன்று மாதம், டிராப்ட்- ஆறுமாதம் என்று எல்லா வற்றுக்கும் ஒரு காலக்கெடு உண்டு. ஒருவர் வாடகை வீட்டில் 12 வருடம் குடியிருந்து தன் பேரில் 12 வருடம் வீட்டுவரி- மின்வரி- குழாய்வரி எல்லாம் செலுத்தி வந்தால், அந்த வீட்டு உரிமையாளரைவிட அவருக்கு அனுபவ பாத்தியதை உண்டாகிவிடும். இவையெல்லாம் விதிவிலக்கு- ஸ்பெஷல் ரூல். அதுமாதிரிதான் கிரக மறைவு தோஷத்துக்கு விதிவிலக்கு உண்டு! இருந்தாலும் ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதால், சில செலவுகள் தவிர்க்கமுடியா தவையாக அமையும். உதாரணமாக, வெளி யூருக்கு பஸ் அல்லது ரயிலில் போவதைவிட, ஒரு வாடகைக்காரில்- டாக்ஸியில் போவது செலவு அதிகம்தான். இருந்தாலும், உடல்நல சௌகர்யம்- லக்கேஜ் ஆகியவற்றை அனுசரித்து டாக்ஸியில் போவதுதான் சௌகர்யம் என்றால், செலவைப் பற்றி சிந்திக்க மாட்டோம் அல்லவா! அப்படி, இப்போது சில செலவுகள் அத்தியாவசியமாக ஏற்படும். சில செலவுகள் சுபச்செலவுகளாக அமையும். சில செலவுகள் கோவில் வழிபாடு, மங்களச் செலவுகளாக இருக்கும். செலவு அல்லது விரயத்தில் வீண்விரயம், வீண்செலவு என்றும்; சுபவிரயம், சுபச்செலவு என்றும் இருவிதம் உண்டு. சனி குருவோடு சேர்ந்த காரணத்தால் எல்லாம் சுபச்செலவுதான்! சந்திர தசை அல்லது சந்திர புக்தி நடந்தால் திங்கள்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்யவேண்டும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் குரு வீட்டில், குருவோடு சம்பந்தம்! அதனால், உங்களுடைய முயற்சிகளிலும் காரியங்களிலும் முழுவெற்றி கிட்டும். அதேசமயம் சனியும் குருவும் கேது- ராகு சம்பந்தம் பெறுவதால், சிறுசிறு தடை களும் குறுக்கீடுகளும் காணப்படலாம். ஆனால், அவையெல்லாம் ஒரு பொருட் டாக இருக்காது. ஊருக்குள் உள்ள பாதை களில் வேகத்தடை (ஸ்பீடு பிரேக்கர்) இருக்க லாம். ஹைவேஸ் ரோட்டில் வேகத்தடை இருக்காது. ஒருபுறம் தார்ரோடு போடுவ தால், மற்றொரு புறம் (ஒரே ரோட்டில்) போவதும் வருவதுமாக போக்குவரத்து காணப்படும்போது வேகம் தடைப் படுமல்லவா! அதுமாதிரி சில தடைகள், தாம தங்களை உருவாக்கலாம். அவை உங்கள் பயணத்தைத் தடுக்காது. ஆனால் தாமத மாக்கலாம். அதுபோல உங்கள் முயற்சிகளில் தளர்ச்சி காணப்படலாம். ஆனாலும் ராசிநாதன் 11-ல் 11-க்குடையவரோடு சேர்க்கை என்பதால், தோல்விக்கு இடமில்லை. ஏமாற்றத்துக்கும் இடமில்லை. 7-க்குடைய சூரியன் 2-ல். எனவே கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம், ஒற்றுமை, உறவு, உடன் பாடு எதிலும் குறையில்லை. "குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா' என்ற வாசகம் உங்களுக்கே பொருந்தும். என்றாலும், ஐந்தா மிடத்து ராகு மனதில் தேவையற்ற சந்தேகங் களையும் கற்பனை பயங்களையும் ஏற்படுத்த லாம். என்றாலும் 5-ஆம் இடத்தை தனுசு குரு பார்ப்பதும், 5-க்குடைய புதன் 8-ஆம் தேதிமுதல் குரு வீட்டில்- மீனத்தில் நீசபங்கம் அடைவதும் தோஷ நிவர்த்தியாகும். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ராகு- கேது பாம்பு கிரகம். அந்த பாம்பு விஷமில்லாத தண்ணீர்ப் பாம்பு என்றால், கொத்தினாலும் தீங்கு ஏற்படாத மாதிரி, உங்கள் பய உணர்வு மாறிவிடும். கிராமத்தில் பாம்புப் புற்றுக்கு பாலும் முட்டையும் வைக்க லாம். நகரத்தில் உள்ளவர்கள் நாகராஜா கோவிலிலில் நெய் தீபமேற்றி வழிபடலாம் அல்லது நவகிரகத்தில் ராகுவுக்கும், கேதுவுக்கும் தீபமேற்றலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
கோட்சாரரீதியாக 12 ராசிக்காரர்களில் மீன ராசிக்காரர்களுக்குத்தான் தற்போது எல்லா வகையிலும் யோகமான கிரக அமைப்பு காணப்படுகிறது. அதாவது 9-க்குடைய செவ்வாய் ரிஷபத்தில் நின்று 10-ஆம் இடம் தனுசுவையும், 10-க்குடைய குருவையும் பார்க்கிறார். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. அதுமட்டுமல்ல; 11-க்குடைய சனியும், 10-க்குடைய குருவும் 10-ல் பலம்பெறு கிறார்கள்! எனவே தொழில், வாழ்க்கை, உத்தியோகம், வேலை எல்லாவற்றிலும் உங்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. அதேசமயம் 12-க்குடைய சனி 10-ல் கேது- ராகு சம்பந்தம் பெறுவதால், சிலருக்கு ஊர்மாற்றம் ஏற்படலாம். மனைவிக்கு வெளியூரில் வேலை- பிள்ளைகளுக்கு வெளியூரில் படிப்பு- தனக்கு வெளியில் தொழில்- இப்படி வெளியூர்வாசம் ஒளிமய மான தெளிவை உருவாக்கும். ஒருசிலர் நாரதர் சஞ்சாரம் செய்துகொண்டே இருப் பதுபோல, பயணங்களையே வாழ்க்கையாக ஓட்டுவார்கள். பெரும்பாலும் டிரைவர்கள், கண்டக்டர்கள், ரயில் பயண அதிகாரிகள், விமானிகள் போன்றவர்கள் எல்லாம் மீன ராசி அல்லது மீன லக்னத்தாராக இருப் பார்கள். இப்படி ஊர்விட்டு ஊர்மாறுவதும் ஆறுதலாகவும் அமையும். தேறுதலாகவும் அமையும். தெளிவாகவும் அமையும். சனி 10-ல் இருப்பது புதிய தொழில் யோகங்களையும் உருவாக்கும். நடந்துவரும் தொழில்துறையில் முன்னேற்றத்தையும திருப்தியையும் தரும்! 4-ல் ராகு ஒருசிலருக்கு தனக்கோ அல்லது மனைவிக்கோ சிறுசிறு உடல் நலக்குறைவைக் கொடுத்தாலும், எளிய வைத்திய சிகிச்சை முறையில் தெளிவாகிவிடும். சிலருக்கு தாயார் அல்லது தகப்பனார் வகையில் தேகசு கக்குறைவு ஏற்பட இடமுண்டு. அப்படிப் பட்டவர்கள் தன்வந்திரி மந்திரத்தை ஜபிக்க லாம். தன்வந்திரி சந்நிதி சென்று ஆராதனை (பூஜை) செய்யலாம்!