ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி,மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மகரம்.
2-7-2018- கும்பம்.
4-7-2018- மீனம்.
7-7-2018- மேஷம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: திருவாதிரை- 3, 4, புனர்பூசம்- 1.
செவ்வாய்: திருவோணம்- 4.
புதன்: பூசம்- 3, 4.
குரு: விசாகம்- 1.
சுக்கிரன்: ஆயில்யம்- 3, 4, மகம்- 1.
சனி: மூலம்- 2.
ராகு: பூசம்- 3.
கேது: திருவோணம்- 1.
கிரக மாற்றம்:
குரு வக்ரம்.
சனி வக்ரம்.
4-7-2018- குரு வக்ரநிவர்த்தி.
5-7-2018- சிம்ம சுக்கிரன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அத்துடன் பாக்யாதிபதி குருவும் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பது உங்களுக்கே தெரியும். ராசிநாதன் ராசியைப் பார்ப்பதும் அதைவிட பல மடங்கு நன்மை! பலம்! இதனினும் இன்னொரு சிறப்பு- 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்ம கர்மாதிபதியோகம்! எனவே இந்த வாரம் முழுவதும் மட்டுமல்ல; செவ்வாய், சனி, குரு மூவரும் மாறும்வரை உங்களை யாரும் அசைச்சுக்க முடியாது! அசைச்சுக்க முடியாது! குடும்பத்தில் உள்ளவர்களும், உற்றார்- உறவினர்களும், பழகும் நண்பர்களும் உங்களுக்கு ஆதரவாக, அனுகூலமாக செயல்படுவதோடு முழு ஒத்துழைப்பும் தருவார்கள். 4-ல் உள்ள ராகு சிலசமயம் தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு குறைகளை ஏற்படுத்தினாலும், உச்சம்பெற்ற ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதாலும், அவர் 4-க்குடைய சந்திரன் சாரம் (திருவோணம்) பெறுவதாலும், பாதிப்புக்கு இடமில்லாத வகையில் குணம் ஏற்படும். 6-க்குடைய புதனும், 2-க்குடைய சுக்கிரனும் 4-ல் இணைந்திருப்பதால் சிலருக்கு வீடு, மனை, கட்டட சீர்திருத்தம் அல்லது வாகனம் சம்பந்தமான சுபச் செலவுகளும் அதற்காக கடன் வாங்கும் அவசியமும் ஏற்படும். என்றாலும் அது சுமையில்லாத கடன்தான். கோடீஸ்வரர்கள்கூட தொழில் விருத்திக்கும் சொத்து வாங்கவும் வங்கியில் கடன் வாங்குகிறார்கள். மல்லையா போன்றவர்கள் இருப்பதை எடுக்காமல் கோடிக்கணக்கில் கடன் வாங்கி கேடி லிஸ்டில் இடம்பெறுகிறார்கள். அதைவிட நாடே (அரசே) இன்னொரு நாட்டிடம் கடன் வாங்குகிறது. மாநில அரசு மத்திய அரசிடம் கடன் வாங்குகிறது. ஆக கடன் வாங்குவதைக் கேவலமாகவோ கவலைக்குரிய பிரச்சினையாகவோ கருதவேண்டாம்! வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக திருப்பி அடைத்து நாணயத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதை லட்சியமாகக் கடைப்பிடித்தால் போதும்! குரானில் ஒரு வாசகம் வரும்- வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று மனதார நினைப்பவனுக்கு அல்லா வசதி வாய்ப்பைத் தருவார். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கக்கூடாது என்று நினைப்பவனுக்கு அவன் அத்தியாவசிய செலவுக்கே வழிவகை இல்லாமல் போய்விடும்.
பரிகாரம்: கடன் அடைவதற்கும், நாணயம் காப்பாற்றப்படுவதற்கும் கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று சாரபரமேஸ்வரரை வழிபடலாம். தொடர்புக்கு: சுந்தரமூர்த்தி குருக்கள், செல்: 94426 37759. திருவாரூர் சிவன் கோவிலிலிலும் கடன் நிவர்த்தீஸ்வரர் சந்நிதி உண்டு.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் புதன்- ராகுவுடன் சம்பந்தமாக இருக்கிறார். அவரை 7, 12-க்குடைய செவ்வாயும், கேதுவும் பார்க்கிறார்கள். 8, 11-க்குடைய குரு 6-ல் மறைகிறார். பொதுவாக எந்த ஒரு ராசிக்கும் லக்னத்துக்கும் குரு மறையக்கூடாது. குரு நல்ல ஆதிபத்தியம் பெற்றவரோ- கெட்ட ஆதிபத்தியம் பெற்றவரோ என்ற கணக்கே கிடையாது. குரு பார்வை இருந்தால் போதும். அதேபோல ராசிநாதனோ லக்னநாதனோ சம்பந்தம் இருந்தாலும் போதும். (சேர்க்கை அல்லது பார்வை). அந்த ஜாதகன் கீழே விழுந்தாலும் காயம்படாமல் எழுந்து செயல்படுவான். வீழ்ச்சி பெற்றாலும் தாழ்வடையாமல் எழுச்சிபெற்று வளர்ச்சியடைவான். கங்கையில் அசுத்தங்கள் கலந்தாலும் கங்கையின் புனிதம் கெடாது! பஞ்சகவ்யம் தயாரித்து வீட்டைப் புண்யாஹ வாசம் செய்வதுபோல! கிறிஸ்துவர்கள் ஞானஸ்நானம் பெறுவதுபோல! அல்லது பாவமன்னிப்பு கேட்பது போல! எனவே உங்களுக்கு சரீரத்திலும், மனதிலும், பொருளாதாரத்திலும் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், கையுறை (கிளவுஸ்) மாட்டிக்கொண
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி,மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மகரம்.
2-7-2018- கும்பம்.
4-7-2018- மீனம்.
7-7-2018- மேஷம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: திருவாதிரை- 3, 4, புனர்பூசம்- 1.
செவ்வாய்: திருவோணம்- 4.
புதன்: பூசம்- 3, 4.
குரு: விசாகம்- 1.
சுக்கிரன்: ஆயில்யம்- 3, 4, மகம்- 1.
சனி: மூலம்- 2.
ராகு: பூசம்- 3.
கேது: திருவோணம்- 1.
கிரக மாற்றம்:
குரு வக்ரம்.
சனி வக்ரம்.
4-7-2018- குரு வக்ரநிவர்த்தி.
5-7-2018- சிம்ம சுக்கிரன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அத்துடன் பாக்யாதிபதி குருவும் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பது உங்களுக்கே தெரியும். ராசிநாதன் ராசியைப் பார்ப்பதும் அதைவிட பல மடங்கு நன்மை! பலம்! இதனினும் இன்னொரு சிறப்பு- 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்ம கர்மாதிபதியோகம்! எனவே இந்த வாரம் முழுவதும் மட்டுமல்ல; செவ்வாய், சனி, குரு மூவரும் மாறும்வரை உங்களை யாரும் அசைச்சுக்க முடியாது! அசைச்சுக்க முடியாது! குடும்பத்தில் உள்ளவர்களும், உற்றார்- உறவினர்களும், பழகும் நண்பர்களும் உங்களுக்கு ஆதரவாக, அனுகூலமாக செயல்படுவதோடு முழு ஒத்துழைப்பும் தருவார்கள். 4-ல் உள்ள ராகு சிலசமயம் தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு குறைகளை ஏற்படுத்தினாலும், உச்சம்பெற்ற ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதாலும், அவர் 4-க்குடைய சந்திரன் சாரம் (திருவோணம்) பெறுவதாலும், பாதிப்புக்கு இடமில்லாத வகையில் குணம் ஏற்படும். 6-க்குடைய புதனும், 2-க்குடைய சுக்கிரனும் 4-ல் இணைந்திருப்பதால் சிலருக்கு வீடு, மனை, கட்டட சீர்திருத்தம் அல்லது வாகனம் சம்பந்தமான சுபச் செலவுகளும் அதற்காக கடன் வாங்கும் அவசியமும் ஏற்படும். என்றாலும் அது சுமையில்லாத கடன்தான். கோடீஸ்வரர்கள்கூட தொழில் விருத்திக்கும் சொத்து வாங்கவும் வங்கியில் கடன் வாங்குகிறார்கள். மல்லையா போன்றவர்கள் இருப்பதை எடுக்காமல் கோடிக்கணக்கில் கடன் வாங்கி கேடி லிஸ்டில் இடம்பெறுகிறார்கள். அதைவிட நாடே (அரசே) இன்னொரு நாட்டிடம் கடன் வாங்குகிறது. மாநில அரசு மத்திய அரசிடம் கடன் வாங்குகிறது. ஆக கடன் வாங்குவதைக் கேவலமாகவோ கவலைக்குரிய பிரச்சினையாகவோ கருதவேண்டாம்! வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக திருப்பி அடைத்து நாணயத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதை லட்சியமாகக் கடைப்பிடித்தால் போதும்! குரானில் ஒரு வாசகம் வரும்- வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று மனதார நினைப்பவனுக்கு அல்லா வசதி வாய்ப்பைத் தருவார். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கக்கூடாது என்று நினைப்பவனுக்கு அவன் அத்தியாவசிய செலவுக்கே வழிவகை இல்லாமல் போய்விடும்.
பரிகாரம்: கடன் அடைவதற்கும், நாணயம் காப்பாற்றப்படுவதற்கும் கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று சாரபரமேஸ்வரரை வழிபடலாம். தொடர்புக்கு: சுந்தரமூர்த்தி குருக்கள், செல்: 94426 37759. திருவாரூர் சிவன் கோவிலிலிலும் கடன் நிவர்த்தீஸ்வரர் சந்நிதி உண்டு.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் புதன்- ராகுவுடன் சம்பந்தமாக இருக்கிறார். அவரை 7, 12-க்குடைய செவ்வாயும், கேதுவும் பார்க்கிறார்கள். 8, 11-க்குடைய குரு 6-ல் மறைகிறார். பொதுவாக எந்த ஒரு ராசிக்கும் லக்னத்துக்கும் குரு மறையக்கூடாது. குரு நல்ல ஆதிபத்தியம் பெற்றவரோ- கெட்ட ஆதிபத்தியம் பெற்றவரோ என்ற கணக்கே கிடையாது. குரு பார்வை இருந்தால் போதும். அதேபோல ராசிநாதனோ லக்னநாதனோ சம்பந்தம் இருந்தாலும் போதும். (சேர்க்கை அல்லது பார்வை). அந்த ஜாதகன் கீழே விழுந்தாலும் காயம்படாமல் எழுந்து செயல்படுவான். வீழ்ச்சி பெற்றாலும் தாழ்வடையாமல் எழுச்சிபெற்று வளர்ச்சியடைவான். கங்கையில் அசுத்தங்கள் கலந்தாலும் கங்கையின் புனிதம் கெடாது! பஞ்சகவ்யம் தயாரித்து வீட்டைப் புண்யாஹ வாசம் செய்வதுபோல! கிறிஸ்துவர்கள் ஞானஸ்நானம் பெறுவதுபோல! அல்லது பாவமன்னிப்பு கேட்பது போல! எனவே உங்களுக்கு சரீரத்திலும், மனதிலும், பொருளாதாரத்திலும் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், கையுறை (கிளவுஸ்) மாட்டிக்கொண்டு மின் கம்பியைத் தொட்டால் "ஷாக்' அடிக்காது என்பதுபோல எந்த சிக்கலும் அணுகாது! 6-ஆமிடத்து குரு கடனை உருவாக்கினாலும், போட்டி பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அதனாலும் சில நன்மைகள் உண்டாகும். எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற கொள்கைப்படி வேண்டாதவர்களும் இக்காலகட்டத்தில் வேண்டியவர்களாக மாறிவிடுவார்கள். கொள்கையில் வேறுபட்டவர்கள் தேர்தல் சமயம் தற்காலிலிகக் கூட்டணி அமைத்துக் கொள்வதுபோல, பலம்கொண்ட பொது எதிரியை சந்திக்க தற்காலிலிக நட்பு கொண்டாடுவார்கள். குருவின் பார்வை 10-ஆமிடம், 12-ஆமிடம், 2-ஆமிடங்களுக்குக் கிடைப்பதால் தொழில், வேலை, உத்தியோக ரீதியாக புதுமுயற்சிகள் வெற்றியடையும். வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடிவரும்.
பரிகாரம்: போட்டி, பொறாமைகளைச் சந்திக்கவும் வெற்றி கொள்ளவும் சரபேஸ்வரர் அல்லது பிரத்தியங்கரா தேவியை வழிபடலாம். கும்பகோணம் அருகில் திருபுவனத்திலும், அய்யாவாடியிலும் மேற்கண்ட ஆலயங்கள் உள்ளன.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசியில் 3-க்குடைய சூரியன் நிற்க, அவரை 5-ஆமிடத்து குருவும், 7-ஆமிடத்துச் சனியும் பார்க்கிறார்கள். குரு 7, 10-க்குடையவர். சனி 8, 9-க்குடையவர். குரு பார்வை நல்லதையே செய்யும். ஆனால் 8-க்குடைய சனி பார்வை நல்லது செய்யுமா- கெட்டது செய்யுமா என்ற சந்தேகம் எழலாம். சனி 9-க்குடைய திரிகோணாதிபத்தியம் பெற்று, 7-ஆமிடத்துக் கேந்திராதிபத்தியம் பெறுவதால் அட்டமாதிபத்திய கெட்ட பலன் விட்டு விலகிவிடும். அதேபோல கேந்திராதிபத்தியம் பெற்ற குரு திரிகோணத்தில் நிற்பதும் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக- எல்லாம் அதிர்ஷ்டவசமாக நிறைவேறும். தேடிவரும் அதிர்ஷ்டத்தை வரவேற்றுத் தக்கவைத்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். பொதுவாக கேந்திராதிபத்தியமும் திரிகோணாதிபத்தியமும் சேர்கிறபோது ராஜயோகம் ஏற்படும். ராசிக்கு 8-ஆம் இடத்தில் செவ்வாய், கேது மறைவதாலும் 2-ஆமிடத்தில் புதன், சுக்கிரன், ராகு நிற்பதாலும், ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். அதிர்ஷ்டம் என்பது அது இஷ்டமாகத்தான் வரும். அதற்குப் பூர்வபுண்ணிய யோகமும் பலமும் வேண்டும். 5-ஆமிடம், 9-ஆமிடம் பூர்வபுண்ணிய பாக்கிய ஸ்தானங்கள். அதற்கு குரு, சனி பார்வை கிடைப்பதால் உங்களுக்குப் பூர்வபுண்ணிய பலம் சிறப்பாக உள்ளது. அதனால் அதிர்ஷ்டத்தின் பட்டியலிலில் உங்கள் பெயர் இடம்பெறும்.
பரிகாரம்: அதிர்ஷ்டம் பெருக சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு அவசியம். அந்த மந்திரங்களை ஜெபிக்கலாம். அல்லது அப்படிப்பட்ட தலங்கள் சென்று பூஜை செய்யலாம். சொர்ணாகர்ஷண பைரவ ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம் செய்யலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் புதன், சுக்கிரன், ராகு நிற்க, அவர்களை செவ்வாய், கேது பார்ப்பது ஒருவகையில் மைனஸ் பாயின்ட் என்றாலும், 9-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். அத்துடன் 10-க்குடைய செவ்வாயும் உச்சம் பெற்று 10-ஆமிடத்தைப் பார்ப்பது அதிபலம். எனவே கழுவின மீனில் நழுவின மீனைப்போல எத்தனை இடையூறுகள் சூழ்ந்தாலும், எத்தனை பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றை எளிதாக சமாளித்து முன்னேறலாம். தந்தைவழி உதவிகளும் ஒத்தாசைகளும் எதிர்பார்த்தபடி அமையும். அதேபோல உடன்பிறப்புக்களின் ஆதரவும் சலுகைகளும் நன்மைகளும் எதிர்பார்க்கலாம். தொழில்துறையில் புதுமுயற்சிகள் கைகூடும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். 2-க்குடைய சூரியன் 12-ல் நின்று அட்டமாதிபதி சனியின் பார்வையைப் பெறுவதால், தவிர்க்கமுடியாத பயணங்களும் அலைச்சல்களும் இருக்கத்தான் செய்யும். சிலருடைய அனுபவத்தில் ஊர்மாற்றம், இடமாற்றம், குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம். ஒரு மாற்றம் என்பதை 12-ஆம் இடத்தை வைத்துக் கணிக்க வேண்டும். 10-க்கு 12- தொழில் மாற்றம். 4-க்கு 12- வாகன மாற்றம், குடியிருப்பு மாற்றம். 2-க்கு 12- குடும்ப மாற்றம். இவற்றை தசாபுக்திகளோடு இணைத்துப் பார்க்க வேண்டும். உங்கள் கிரக அமைப்புக்கு 10-க்கு 12-க்குடையவர் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். ராசிக்கு 12-ஆம் இடத்தை குருவும் சனியும் பார்க்கிறார்கள்.
பரிகாரம்: மேற்படி மாற்றங்கள் சுபமான மாற்றங்களாக அமைய லட்சுமி நரசிம்மரை வழிபடவும். மேட்டூர் அருகில் நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மர் கோவில் பிரசித்தி பெற்றது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் இருக்கிறார். அவரை சனி பார்க்கிறார். குருவும் பார்க்கிறார். சிம்ம ராசிக்கு குரு 5, 8-க்குடையவர். சனி 6, 7-க்குடையவர். சிலருக்குத் திருமணத்தடை ஏற்படலாம். சில கணவன்- மனைவிக்குள் பிரச்சினைகள் உருவாகலாம். அல்லது ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படலாம். வைத்தியச் செலவுகள் வரலாம். பொதுவாக ராசி அல்லது ராசிநாதன், லக்னம் அல்லது லக்னநாதன் இவற்றுக்கு குரு சம்பந்தம் கிடைத்தால் எல்லா தோஷங்களும் விலகும் என்பது உறுதி. அதுமட்டுமல்ல; எந்த ஒரு ஜாதகத்திலும் 11-ல் உள்ள சூரியன் எல்லா வெற்றிகளையும் நன்மைகளையும் தேடித்தரும். ஒரு தொழில் ஆரம்பத்திற்கோ அல்லது கிரகப் பிரவேசத்திற்கோ, எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கோ 11-ல் சூரியன் இருக்கும்படி லக்னம் அமைத்துக்கொடுத்தால் அந்தக் காரியம் தங்கு தடையில்லாமல், சீரும் சிறப்புமாக அமையும் என்பது ஜோதிடவிதி. அந்த விதிப்படி ராசிநாதனே 11-ல் இருப்பதால் உங்களுக்கு எந்தக் குற்றம் குறைகளுக்கும் இடமில்லை. கேடு கெடுதிகளுக்கும் இடமில்லை. சிம்ம ராசிக்கு 9-க்குடைய செவ்வாய் உச்சம் பெற்று 10-க்குடைய சுக்கிரனைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே கட்டபொம்மன் கட்டிய பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப்போல் உங்களுக்கு பலமான பாதுகாப்பு உண்டாகும்.
பரிகாரம்: கோவில்பட்டி- தூத்துக்குடி பாதையில் பாஞ்சாலங்குறிச்சி சென்று ஜக்கம்மா தேவியை வழிபடலாம்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 11-ல் பலம் பெறுகிறார். அவருடன் 2, 9-க்குடைய சுக்கிரனும் இணைகிறார். புதன், சுக்கிரன் சேர்க்கை தர்மகர்மாதிபதி சேர்க்கையாகும். அதனால் அவர்களுடன் ராகு-கேது சம்பந்தப்படுவதால் உண்டாகும் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகிறது. ராகுவும் கேதுவும் 11-ஆம் இடத்தில் சம்பந்தப்படுவதால் (11-ல் ராகு நிற்க, 11-ஆம் இடத்தைக் கேது பார்க்கிறார்) போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறு எல்லாவற்றையும் கடந்து வெற்றி பெறலாம். "எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி, எங்கெங்கு காணினும் சக்தி தரும் வெற்றி' என்று பாரதியார் பாடினார். மேலும் ராகு- கேதுக்களுக்கு 11-ஆமிடம் சிறப்பான இடம். 12-க்குடைய சூரியன் 10-ல் நின்று சனியின் பார்வையைப் பெறுவதால் முயற்சிகளில் தளர்ச்சியும் வளர்ச்சியில் தடைகளும் காணப்பட்டாலும், குருவும் சூரியனைப் பார்ப்பதால் தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் தடைகள் களையெடுக்கப்பட்டு தூய்மையடையும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். தொழிலதிபர்களுக்கு உபதொழில் ஏற்படலாம். தனியார் பணிகளில் இருப்பவர்களுக்கு முதலாளியாகும் பாக்கியம் உண்டாகலாம். முதலீடு குறைவாக இருந்தால் கூட்டுத்தொழிலில் ஈடுபடலாம். தொழில் வகைக்கு கடனும் கிடைக்கும். வங்கிக்கடன் அல்லது தனியார் கடன் இரண்டுக்கும் வாய்ப்புண்டு. ஒருசிலருக்குத் திருமணத்தடையும் ஒருசிலருக்கு வாரிசுத்தடையும் ஏற்பட இடமுண்டு.
பரிகாரம்: கும்பகோணம்- குடவாசல்வழி சேங்காலிலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபட்டால் திருமணத்தடையும் விலகும். வாரிசும் உருவாகும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் இருக்கிறார். அவருடன் 9-க்குடைய புதன் சேர்ந்திருக்கிறார். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. எந்த ஒரு ஜாதகத்திலும் தர்மகர்மாதிபதி யோகமும், பரிவர்த்தனை யோகமும் அமைந்துவிட்டால் அந்த ஜாதகருக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருக்கும். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் குருவருளும் திருவருளும் இருந்தால் அந்தப் பிரச்சினையை எளிதாக சமாளிக்கலாம். இது பரீட்சை எழுதப்போகும் மாணவனுக்குப் படித்த பாடத்திலேயே கேள்விகள் கேட்பதற்குச் சமம். மயங்காமல், தயங்காமல் கிடுகிடுவென்று பதில்களை எழுதிவிடலாம் அல்லவா! 5-ல், 10-ல் உள்ள கிரகங்கள் எல்லாம் உங்கள் எண்ணங்களை ஈடேற்றிக் காரியங்களை கைகூடச் செய்யும். 2-ல் உள்ள குரு "நன்றே விளைகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றுமில்லை; உனக்கே பரம் எனக்குள்ளன எல்லாம் அன்றே உனதென்று அளித்துவிட்டேன்' என்று அபிராமி பட்டர் பாடியதுபோல உங்களுக்கு மனப்பக்குவத்தை வழங்கி சமாதானப்படுத்துவார்கள். வெற்றியைக் கண்டு இன்பமும் இல்லை; தோல்வியைக் கண்டு துன்பமும் இல்லை என்ற நிலையில் இரண்டையும் சமமாக ஏற்றுக்கொண்டால் எந்த பாதிப்பும் இல்லைதானே! அந்த சூழ்நிலை அமைந்துவிட்டால் நீங்களும் ஒரு ஞானிதான். ஞானிகளையும் சித்தர்களையும் நவகிரகங்கள் அணுகாது. 3-ஆமிடத்துச் சனியும் ஜென்ம குருவும் உங்களுக்கு இந்த பக்குவத்தைத் தருகிறார்கள். 7-ஐ குரு பார்ப்பதால் களஸ்திர தோஷம் நீங்கும். 5-ஐ சனி பார்ப்பதால் புத்திர தோஷம் என்றாலும் சனி 5-க்குடையவர் என்பதால்- 5-ஆமிடத்தை குருவும் பார்ப்பதால் புத்திர தோஷம் இல்லை.
பரிகாரம்: நவகிரக தோஷம் விலக, இடைக்காட்டூர் (சிவகங்கை மாவட்டம்) சென்று வழிபடவும். இடைக்காடர் என்ற சித்தர் வாழ்ந்த இடம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி கடைசிக்கட்டமாக இருக்கிறது. இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு இது பொங்கு சனியாகும். முதல் சுற்று நடந்தாலும் குருவின் வீட்டில் சனி இருப்பதால் பாதிக்காது. 10-க்குடைய சூரியன் 8-ல் மறைவதால் தொழில்துறையில் பிரச்சினைகளும், கவலைகளும், சஞ்சலம், சங்கடங்களும் வரலாம். ஆனாலும் சூரியனை குரு பார்ப்பதால் தோஷம் விலகும். பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம். ஒரு காலத்தில் ஜாதகங்களை ஏடுகளில் எழுதினார்கள். பிறகு பேப்பரில் எழுதினார்கள். இப்போது கம்ப்யூட்டரிலும் செல்போன்களிலும் ஜாதகம் கணிக்கப்படுகிறது. இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி. அதேபோல தொழில்துறையிலும் குறிப்புப் பேரேடு வழக்கம்மாறி எல்லாம் கம்ப்யூட்டரிலேயே கணிக்கும்படி வந்துவிட்டது. அதுமாதிரி உங்கள் தொழில்துறையிலும் முயற்சிகளிலும் நவீனமான யுக்திகளைக் கடைப்பிடித்து செயல்படுவீர்கள். பெண் பார்ப்பதும் மாப்பிள்ளை பார்ப்பதும் திருமணம் நிச்சயிப்பதும் எல்லாம் ஆன்லைன் நெட்வொர்க் மூலமாகவே வந்துவிட்டது. காலத்திற்கேற்ப சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் மாறிவிடுவதால் அதற்கேற்ப நாமும் மாறித்தான் ஆகவேண்டியுள்ளது. ராசிநாதன் உச்சம் பெறுவதால் தைரியம் உண்டாகும். நண்பர்கள், உடன்பிறப்புகள் வகையில் சகாயமும் அனுகூலமும் உண்டாகும்.
பரிகாரம்: மதுரை அருகில் திருப்பரங்குன்றத்தில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியும், சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியும், அருகில் சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதியும் உள்ளது. அங்கு சென்று வழிபடலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. அவருக்கு வீடு கொடுத்த குரு 4-க்குடையவராகி 11-ல் பலம்பெறுகிறார். தேக ஆரோக்கியத்தில் தெளிவு கிடைக்கும். பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான முயற்சிகளிலும் உங்கள் விருப்பம்போல் மாற்றங்களும் ஏற்றங்களும் உண்டாகும். 7, 10-க்குடைய புதன் 8-ல் மறைவதால் தொழில்துறையில் போட்டிகளும் பொறாமைகளும் காணப்பட்டாலும் அவற்றை ஜெயித்துவிடலாம். சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்களுக்கு (பணியாளர்களுக்கு) பணிச்சுமை அதிகமாக இருக்கும். என்றாலும் அதை இனிமையாக ஏற்று செயல்படுவதால் நிர்வாகத்தில் பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியவராகலாம். ஜென்மச்சனி சிலரை உத்தியோக ரீதியாக அலைச்சலையும் திரிச்சலையும், வெளியூர் வாசத்தையும் ஏற்படுத்தலாம். அதையும் ஆனந்தமாக ஏற்றுக்கொள்ளலாம். 9-க்குடையவர் 7-ல் நின்று ராசிநாதன் பார்வையைப் பெறுவதால் ஒருசிலருக்கு- பெண்கள் என்றால் கணவர் வகையிலும், ஆண்கள் என்றால் மனைவி வகையிலும் அசையும் சொத்து, அசையாச் சொத்துகளும் கிடைக்க யோகமுண்டு. அல்லது அவரவர் சுயசேமிப்பு மூலமாகவும் அந்த நன்மைகள் உண்டாகும். ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை, பொருளாதார வசதி எல்லாவற்றிலும் நல்லது நடக்கும்.
பரிகாரம்: ஜென்மச்சனி தோஷம் விலக அவரவர் வயதுடன் ஒன்று சேர்த்து, அந்த எண்ணிக்கைப்படி மிளகை சிவப்புத்துணியில் கட்டி, சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்யில் நனைத்து தீபமேற்றவும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் நிற்பது ஒருவகையில் பலக்குறைவுதான். என்றாலும் அவருக்கு வீடு கொடுத்த குரு 10-ல் நிற்பது பலமாக மாறிவிடுகிறது. குடும்ப வாழ்க்கையிலும், தொழில்துறையிலும் தவிர்க்கமுடியாத விரயச்செலவுகள் காணப்படும். சிலசமயம் வரவுக்கு மீறிய செலவுகளும் எற்படும். அதை சமாளிக்க வெளியில் கடன் வாங்கவும் நேரும். ஒருசில ஜாதக அமைப்பின்படி நூறு, இருநூறு என்று வாங்கிய கடன் ஆயிரம் இரண்டாயிரம் என்று அதிகரித்து லட்சக்கணக்கில் மாறுவதற்கும் இடமுண்டு. ஆனால் எதுவானாலும் அத்தியாவசியமான செலவுக்கு வாங்கும் கடனே தவிர, வீண்விரயமோ செலவோ இல்லை. சிலர் தொழில் வகைக்காக கடன் வாங்கலாம். சிலர் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக கடன் வாங்கலாம். சிலர் படிப்பு சம்பந்தமாக கடன் வாங்கலாம். அதற்கும் மேலாக சிலர் பழைய கடனை அடைக்க புதிய கடனும் வாங்கலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் வருமானம் அனைத்தையும் பெரும்பாலும் வட்டிக்கடனுக்காகவே செலவழிக்க நேரும். என்றாலும் மதிப்பு, மரியாதை, கௌரவம் பாதிக்காது. நாணயமும் கெடாது. தெளிவாகச் சொன்னால் ரொட்டேஷனிலேயே நாளும் பொழுதும் ஓடும். தேவைகள் பெருகும்போது வரவுகள் சுருங்கினாலும் இந்த அவலம்தான். இதுதான் விரயச்சனியின் வேலை.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருவிசைநல்லூர் சதுர்யுக பைரவர் சந்நிதி சென்று வழிபடவும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார். 2, 11-க்குடைய குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். பொதுவாக கும்ப ராசிக்காரர்களும் கும்ப லக்னத்துக்காரர்களும் அனுதாபத்துக்குரியவர்கள் என்று எழுதுவேன். அதற்குக் காரணம் ராசிநாதனே 12-க்குடையவர் என்பதுதான். என்றாலும் சமீபகாலமாக நடக்கும் கோட்சாரம் அந்த நிலையை மாற்றியமைத்து உங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றிவிடுகிறது. 11-ஆமிடத்துச் சனியும் 9-ஆமிடத்து குருவும் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். நீண்டநேரம் ரேஷன் கடையில் வரிசையில் நிற்பவர்களுக்கு குறிப்பிட்ட கார்டுதாரர்களுக்கு மட்டுமே பொருட்கள் விநியோகம் ஆகும் என்று சொல்லும்போது, உங்களுக்கு முன்னால் இருப்பவர்கள் கலைந்து போனவுடன் நீங்கள் முன்னேறிச் சென்று விரைவாக பொருட்களை வாங்கிச் செல்வதுபோல, குருவும் சனியும் உங்களுக்கு அதிர்ஷ்டவசமாக நன்மைகள் செய்வார்கள். 4-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவி உறவு நிலையிலும் பிரச்சினைகள் உருவாகி மறையும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உறவினர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் எல்லாம் இப்போது மாறிவிடும். தாராளமான பணவரவும் ஏராளமான செல்வச் செழிப்பும் உண்டாகி உங்கள் மனதை ஆனந்தமயமாக்கும். நாணயம் காப்பாற்றப்படும்.
பரிகாரம்: சிங்கம்புணரியில் முத்துவடுகச்சித்தர் (வாத்தியார் அய்யா) ஜீவசமாதி சென்று வழிபடவும். அமாவாசை, பௌர்ணமிக் காலங்களில் அபிஷேகம், பூஜை நடைபெறும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 8-ல் மறைவது ஒருவகையில் குற்றம்தான். அதே குரு உங்கள் ராசிக்கு 10-க்குடையவர் ஆவார். 10- தொழில், வாழ்க்கை, ஜீவிதம் இவற்றைக் குறிக்கும் இடம். 10-ல் சனி கேந்திர பலம் பெறுகிறார். அவரை 6-க்குடைய சூரியன் 4-ல் நின்று பார்க்கிறார். இயற்கையிலேயே சனியும் சூரியனும் பகை கிரகங்கள். இவர்களின் பார்வை 6, 12-க்குடைய பார்வை என்று எடுத்துக்கொண்டால் சிக்கல்தான். எதையும் திட்டமிட்டபடி செய்ய முடியாமல் காலதாமதமாகும். ஒத்திவைக்கக்கூடும். ஆனாலும் குரு சூரியனைப் பார்ப்பதும், குருவின் வீட்டில் சனி நிற்பதும் ஒரு பரிகாரமாகிவிடுகிறது. பின் தேதியிட்ட காசோலையை கையில் வைத்திருப்பதுபோல உங்கள் காரியங்களும் கடமைகளும் தள்ளிப்போகலாம். இது தாமதமே தவிர தடையல்ல. அந்தக் காசோலையைக் காட்டி அவரசத்தேவைக்கு வெளியில் டிஸ்கவுண்ட் செய்து ரொக்கமாக்கி காரியங்களை செயல்படுத்துவதுபோல மற்றவர்களின் உதவிகளோடு அல்லது ஆதரவோடு உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். இந்த வாரம் ஜூலை 4-ல் குரு வக்ரநிவர்த்தி ஆனவுடன் இந்த தடை, தாமதம் எல்லாம் விலகிவிடும். உங்களுக்கும் நம்பிக்கையும் தைரியமும் உருவாகிவிடும். பணவரவுக்கும் பஞ்சம் இருக்காது. புதுமுயற்சிகள் கைகூடும். அடுத்து அக்டோபர் 4-ல் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நீங்கள் லட்சாதிபதிதான். கோடீஸ்வரர்தான்.
பரிகாரம்: திருவாரூர் மடப்புரம் பகுதியில் குரு தட்சிணாமூர்த்தி மடம் (ஜீவசமாதி) சென்று வியாழக்கிழமை வழிபடவும். அல்லது வியாழக்கிழமைதோறும் சிவன் கோவிலிலுள்ள தட்சிணாமூர்த்திக்குக் கொண்டைக்கடலை மாலை சாற்றவும்.