Advertisment

திருவின் உருவான திருவோணம்1 (22) -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/thiruvonam1-22-melmaruvathur-s-kalaivani

னித வாழ்வில் அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய கிரகங்கள் பயணிக்கும் 27 நட்சத்திரக் கூட்டமைப்பில் 22-ஆவது நட்சத்திரம் திருவோணம் ஆகும்.

Advertisment

இது மாத்ரு காரகன், மனோகாரர்கள் என்றெல்லாம் போற்றக்கூடிய சந்திரனின் நட்சத்திர வரிசையில் மூன்றாவது நட்சத்திரமாகத் திகழ்கிறது.

Advertisment

வான்வெளியில் சந்திரன் திருவோண நட்சத்திர கோணப் பிரிவுகளில் பயணிக்கும் நேரத்தில் பிறந்தவர்கள் தங்களை திருவோண நட்சத்திரம், மகர ராசி என்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்கள்.

இந்த திருவோணம், கர்ம காரகன், மந்தன் என்று அனைவராலும் அறியப்பட்ட சனிபகவானின் மகர வீட்டில் தனது நான்கு பாதங்களையும் பாங்குடன் பதித்து அமர்ந்துள்ளது.

வேகத்திற்குப் பெயர்பெற்ற சந்திரன், சிகரமாகத் திகழும் சனிபகவானின் வீட்டில் அமையப்பெறுவது புணர்பூ என்கின்ற தோஷத்தை இயல்பிலேயே அமைத்துத் தந்துவிடும்.

இந்த நட்சத்திரம் மஞ்சள் நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாகக் காணப்படும். இது அன்னப்பறவை, அம்பு, மூன்று பாதங்கள், ஏர்க் கலப்பை போன்ற உருவங்களில் காட்சியளிக்கும்.

இது வேங்கடவன், ஏழுமலையான், திருமலைநாதன் போன்ற திருநாமங்களால் போற்றப்படும் பெருமாளின் அவதார நட்சத்திரமாகும். மூன்றடியில் உலகளந்த வாமன அவதாரம் திருவோணத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.

27 நட்சத்திரத் தொகுப்புகளில் இரண்டு நட்சத்திரங் களுக்கு மட்டுமே திரு என்க

னித வாழ்வில் அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய கிரகங்கள் பயணிக்கும் 27 நட்சத்திரக் கூட்டமைப்பில் 22-ஆவது நட்சத்திரம் திருவோணம் ஆகும்.

Advertisment

இது மாத்ரு காரகன், மனோகாரர்கள் என்றெல்லாம் போற்றக்கூடிய சந்திரனின் நட்சத்திர வரிசையில் மூன்றாவது நட்சத்திரமாகத் திகழ்கிறது.

Advertisment

வான்வெளியில் சந்திரன் திருவோண நட்சத்திர கோணப் பிரிவுகளில் பயணிக்கும் நேரத்தில் பிறந்தவர்கள் தங்களை திருவோண நட்சத்திரம், மகர ராசி என்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்கள்.

இந்த திருவோணம், கர்ம காரகன், மந்தன் என்று அனைவராலும் அறியப்பட்ட சனிபகவானின் மகர வீட்டில் தனது நான்கு பாதங்களையும் பாங்குடன் பதித்து அமர்ந்துள்ளது.

வேகத்திற்குப் பெயர்பெற்ற சந்திரன், சிகரமாகத் திகழும் சனிபகவானின் வீட்டில் அமையப்பெறுவது புணர்பூ என்கின்ற தோஷத்தை இயல்பிலேயே அமைத்துத் தந்துவிடும்.

இந்த நட்சத்திரம் மஞ்சள் நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாகக் காணப்படும். இது அன்னப்பறவை, அம்பு, மூன்று பாதங்கள், ஏர்க் கலப்பை போன்ற உருவங்களில் காட்சியளிக்கும்.

இது வேங்கடவன், ஏழுமலையான், திருமலைநாதன் போன்ற திருநாமங்களால் போற்றப்படும் பெருமாளின் அவதார நட்சத்திரமாகும். மூன்றடியில் உலகளந்த வாமன அவதாரம் திருவோணத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.

27 நட்சத்திரத் தொகுப்புகளில் இரண்டு நட்சத்திரங் களுக்கு மட்டுமே திரு என்கின்ற உயர் அடைமொழி அளிக்கப் பட்டுள்ளது. திரு என்றாள் மேன்மை பொருந்திய என்கின்ற பொருள் வரும். ஒன்று சிவபெருமானின் திருவாதிரை, மற்றொன்று மகாவிஷ்ணு அவதரித்த திருவோணம். இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே திரு என்கின்ற அடைமொழி நம் ஜோதிடத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று இவ்விரு நட்சத்திரங்களில் பிறப்பவர்கள் ஒரு மேன்மை பொருந்திய செயலில் ஈடுபடுவார்கள் என்கின்றது ஐதீகங்கள்.

திருவோண நட்சத்திரத்தின் ராசிநாதன் சனியாகவும், நட்சத்திரநாதன் சந்திரனாகவும், நவாம்ச நாதர்களாக திருவோணம் ஒன்றாம் பாதமென்றால் செவ்வாயும், திருவோணம் இரண்டென்றால் சுக்கிரனும், மூன்றென்றால் புதனும், நான்கென்றால் சந்திரனும் அமையப்பெறுவார்கள்.

tt

தமிழ் நிகண்டுகளில் திருவோணத்திற்கு முக்கோல், உலக்கை, மாயோன் நாள் என்ற பெயர்கள் வழங்கப் பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் இஸ்ரவனம் என்னும் பெயருண்டு.

திருவோணம் மற்றும் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒருவேளை அபிசித்து என்று அழைக்கப்படும் நட்சத்திரத்தில் பிறந்தவர் களாகவும் இருக்க வாய்ப்புண்டு. அபிசித்து நட்சத்திரம் என்பது ஒரு தனியான நட்சத்திரம் இல்லை. இது உத்திராடம் மற்றும் திருவோண பாதங்களில் பரவியுள்ள நட்சத்திரமாகவே கருதப்படுகிறது.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முகம் அல்லது தோள்பட்டையில் மச்சம் அல்லது மருக்கள் இருக்க வாய்ப்புண்டு.

இந்த நட்சத்திரக் காரர்கள் சுத்தத்தில் சுகிப்பவர்களாக இருப் பார்கள். சற்று சிக்கன மான செயல்பாட்டு டன் இருப்பார்கள். சில நூல்கள் இந் நட்சத்திரக்காரர்கள் கஞ்சன் என்றும் கூறுகிறது. உறவு களின் மீது இணக்கம் கொண்டது இந்த திருவோண நட்சத்திரம். இவர்கள் வளர்பிறைச் சந்திரனில் பிறந்திருந்தால் இவர்கள் எடுக்கும் முடிவு ஆழ்ந்த அனுபவ அற்புதமான முடிவாக அமையப்பெற்று, அதன்மூலம் உயர்நிலை, உயர்ந்த அந்தஸ்து, உயர்பதவிகளை அடையும் தகுதிகளைப் பெற்றிருப்பார் கள்.

மாறாக தேய்பிறைச் சந்திரனில் இவர்களின் பிறப்பிருந்தால் முடிவெடுப்பதில் குழப்பம், பதட்டம், குழப்பமான முடிவின்மூலம் சில நெருடல்களையும் அவமானங்களையும் சந்திக்கும் சூழலை ஏற்படுத்திவிடுகிறது.

சுக்கிரனின் கர்மப் பதிவுகொண்ட நட்சத்திரம் என்பதனால் இவர்களின் வம்சாவளியில் திருமணமே ஆகாத ஏதோ ஒரு ஜீவன் இருக்கக்கூடும். மேலும் காதல் தோல்வி, சுக போகங்களை அனுபவிக்கமுடியாத சூழ்நிலை, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது போன்ற எதிர்மறையான சிந்தனைத் தூண்டல் இவர்களுக்குள்ளேயே இருப்பதை நிதர்சனத்தில் காணமுடிகிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண்களினால் அவமானம், வலதுபுற சிறுநீரக பாதிப்பு, சுக்கிரனின் காரகமான சர்க்கரை வியாதி, சினிமா துறையில் சறுக்கல், வைரத்தினால் நஷ்டம் போன்றவற்றைக் கடந்து வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

திருவோணம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் செவ்வாயின் வீடான மேஷத்தில் அமையப் பெறும். இங்கு சனி, சந்திரன், செவ்வாய், ஆகிய கிரகங்களின் கூட்டு நிகழும்பொழுது அதிகாரம் மிகுந்த பணி மற்றும் தொழில்கள் அமைய வாய்ப்புகள் உண்டு. மேலும் பொறியியல், கல்வியின்மூலம் உயர்நிலையை அடையும் நபர்களில் இந்த நட்சத்திரக் காரர்களே பெருமளவு வியாபித்துள்ளனர். அரசு பதவி, அரசு சம்பந்தப்பட்ட உயர்நிலை பதவிகளிலும் இவர்கள் தங்களை சிறப்புற அமைத்துக்கொள்கின்றனர்.

திருவோணம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் உச்சவீடான ரிஷபத்தில் அமையப்பெறும். இங்கு சனி, சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங் களின் கூட்டு நிகழும்பொழுது உயர் கல்வி, கல்வியினால் சிறப்புறும் வாய்ப்பு, அழகியல் சார்ந்த கல்வி மற்றும் பணி ஆகியவற்றின்மூலம் சிறப் படைவார்கள், மேலும் அரசாங்கப் பதவி, கலைத்துறையில் சாதனை, பயணம்மூலம் செல்வம் ஈட்டும் தகுதி இவர்களுக்கு அமையப்பெற்றிருக்கும். கவிதை, கட்டுரை போன்ற துறைகளிலும் இவர்கள் மிளிர்வார்கள்.

திருவோணம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் புதனின் வீடான மிதுனத்தில் அமையப்பெற்றிருக்கும். இங்கு சனி, சந்திரன், புதன் ஆகியோரின் கூட்டு நிகழும்பொழுது இவர்கள் தொடர்புகள், ஒப்பந்தம், கதை, கவிதை, கட்டுரை, அச்சகம் சார்ந்த துறைகளில் தங்களை வெளிப்படுத்துவார்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில், சேவை மனப்பான்மையுடன் இயங்கும் தொழில்கள், தகவல் தொடர்பு மற்றும் ஐடி, வருமானத்துறை, கணிதத் துறை என்கின்ற அக்கவுண்ட்ஸ் துறைகளிலும் இவர்கள் உயர்வினை எட்டும் சூட்சுமம் நிறைந்தவர்களாக காணப்படுகி றார்கள்.

திருவோணம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் சந்திரனின் வீடான கடகத்திலேயே ஆட்சிபெற்று அமையப்பெறும். இந்நிலை யானது சனி, சந்திரன், மீண்டும் சந்திரன் என்கிற நிலையை உருவாக்கும். இந்த நிலையானது விவசாயம் கால்நடை, விவசாய விளைப்பொருட்களை சந்தைப்படுத்துவது, விவசாயத்திற்கான இயந்திரங்களை விற்பனை செய்வது, பயணத்திற் கான டிராவலிங் ஏஜென்சியின்மூலம் உயர்நிலை அடைவது, ரசாயனம், நிதி நிறுவனம், வட்டி சம்பந்தப்பட்ட தொழில், பண்ணை விவசாயம், எண்ணெய் வித்துகள் , அரிசியாலை, நீர்ம உணவுப் பொருட்கள் விற்பனை போன்றவற்றின்மூலம் தங்களை உயர்நிலைப்படுத்தி வாழ்வில் சிறப்படைவார்கள்.

இவர்கள் தாங்கள் பணிசெய்யும் இடங்கள் மற்றும் தொழில்புரியும் இடங்களில் அம்பு குறியீட்டினை அமைத்துக்கொள்வது வாழ்வில் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள வழிவகுக்கும்.

வணங்கவேண்டிய தலம்: ஸ்ரீரங்கம்.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள்.

அணியவேண்டிய ரத்தினம்: முத்து.

வணங்கவேண்டிய விருட்சம்: எருக்கு.

(அடுத்த இதழில் அவிட்டம்)

செல்: 80563 79988

bala050523
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe