ரு உயிர் இந்த மண்ணில் ஜனனமாகிறதென்றால் போன ஜென்மத் தில் அந்த உயிர் செய்த பாவ- புண்ணியத் தின் மிச்சத்துடன்தான் இங்கே தோன்றுகிறது.

இந்த ஜென்மத்தில் இவர்களின் வாரிசாகத் தோன்றி அவர்களின் பாவ- புண்ணியத்திற்கேற்ற பலன் களையும், தன்னுடைய பாவ- புண்ணியத் திற்கேற்ற பலன்களையும் அடைந்து அனுபவித்துச் செல்லவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு உயிரின் விதியாகும்.

ஒருவருக்குப் பிறக்கும் பிள்ளைகளால் அடையும் பாக்கியங்களும், சங்கடங் களும்கூட கடந்த ஜென்மத்திற்குரிய பாவ- புண்ணியக் கணக்கின் வினைப் பயன்தான்.

நாளை என்ன நடக்கப்போகிறதென்ற கேள்வியைவிட அடுத்த நிமிடம் நமக்கு எத்தகையதாக இருக்கும் என்பதுகூட எவராலும் யூகிக்கமுடியாத ஒன்றாகவே இருந்துவருகிறது.

Advertisment

ss

உலகியலில் மேடு- பள்ளம், பசுமை- வெப்பம், வளர்ச்சி- வறட்சி, கோடை- வசந்தம் என்றிருப்பதுபோல், ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையும் இரண்டு பக்கங்களை உள்ளடக்கியதாகவே உள்ளது.

இந்த நிலையில்தான் தங்கள் ஜாதகத்தின் வழியாகத் தங்களுக்குரிய பலன்களைத் தெரிந்துகொண்டு அதற் கேற்ப வாழ்க்கையைக் கொண்டு செல்பவர்களாக பலரும் உள்ளனர்.

ஜோதிடம் என்று வருகிறபோது, தசை, புக்தி, அந்தரம், தசா நாதனின் நிலை, புக்தி நாதனின் நிலை, அந்தர கிரகத்தின் நிலை, ராசி நாதனின் நிலை, லக்னாதிபதியின் நிலை, மற்ற கிரகங்களின் நிலை, ஸ்தானபலன், ஜெனமத்தில் தொடங்கி விரயம் முதலான பன்னிரண்டு பாவாதிபதிகளின் நிலை, காரகாதிபதிகளின் தன்மை என்று அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும்போதுதான் அந்த ஜாதகனின் நிலையும், எதிர்காலமும் புலப்படும்.

ஒருவர் ஜாதகம்போல் அடுத்த வரின் ஜாதகம் அமைவதில்லை என்பதுடன், ஒரே நேரத்தில் பிறக்கும் இருவருக்கும் வாழ்க்கை ஒன்றுபோல் இருப்பதில்லை. அதற்குக் காரணம் அவர்களுடைய பூர்வபுண்ணிய பலன் என்பது இருவருக்கும் வெவ்வேறானதாக இருப்பதுதான்.

ஜோதிடரிடம் பலன் கேட்பவர்களின் கேள்விகள் எல்லாம் அவர்களுடைய ஆசைகளின் வெளிப்பாடுகளாக இருக்கிறதே ஒழிய, அவற்றை எல்லாம் வைத்து வாழவும், அனுபவிக்கவும் தங்களுக்கு விதி இருக்கிறதா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள பெரும் பாலனவர்கள் நினைப்பதில்லை.

வாழ்க்கை என்ற பயணத்தில் அடுத்த நிமிடம் என்பதே நமக்குரியதல்ல என்பதுதான் உண்மை. அதன் காரணம்தான் திடீர் மரணங்கள், விபத்துகள், கொள்ளை நோய்கள், மாரடைப்பு என்று எண்ணற்ற விஷயங்கள்.

வாழ்க்கையில் சாதகமானவற்றை அறிந்துகொள்வதற்கு முன்பாக, பாதகங் களையும், எதிர்வரப்போகும் பிரச்சினை களையும் அவசியமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஒவ்வொருவரின் விதி என்பது சுவர் போன்றது. அந்த சுவர் இருந்தால்தான் நம்முடைய ஆசை என்கிற சித்திரங்களை எழுத முடியும்.

அதற்காக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நமக்குரிய பாதகாதிபதியைப் பற்றியும் மாரகாதிபதிகள் பற்றியும்.

ஜோதிட சாஸ்திரத்தில் நமக்குரிய அதிர்ஷ்டங்கள் பற்றி கூறப்பட்டிருப்பது போல் கண்டங்களும் கூறப்பட்டுள்ளன.

மாரகாதிபதியின் தசை, ஆயுள் ஸ்தானாதி பதியின் தசை, மூன்றாமிட அதிபதியின் தசை நடக்கும் காலத்தில் மாரகாதிபதியின் புக்தி நடைபெறும்போது நாம் மிகமிக எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.

அதேபோல், ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு லக்னத்திற்கும் மாரகாதிபதி கிரகங்கள் பற்றியும் பாதாகாதிபதி கிரகம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அந்தந்த கிரகங்களின் தசைகள் நடக்கும் காலத்தில் நாம் எச்சரிக்கையாக இருந்திடவேண்டும்.

சர லக்னங்களுக்கு மாரகலி பாதகாதிபதிகள்

மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு லக்னங்களையும், ராசிகளையும் சரம், ஸ்திரம், உபயம் என்று மூன்று பிரிவுகளாக ஜோதிட சாஸ்திரம் வகுத்துள்ளது.

இதில், மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்கினங்களும் சர லக்னங் களாகும்.

இந்த சர லக்னங்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டாமிடமும், ஏழாமிடமும் மாரகாதிபதிக்குரிய- அதற்கு நிகரான கண்டத்தை வழங்கிடக்கூடிய இடங்கள் என்றும்; அந்த இடத்திற்குரிய அதிபதிகள் அந்த நிலையை உண்டாக்குவார்கள் என்றும்; அதேபோல் பதினொன்றாம் இடத்தின் அதிபதி பாதகத்தை உண்டாக்கக்கூடிய பாதகாதிபதியாக இருப்பார் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அதன் அடிப்படையில், மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, இரண்டிற்கும் ஏழிற்கும் அதிபதியான சுக்கிர தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தையும்; பதினொன்றுக்கு அதிபதியான சனி பகவானின் மகா தசையில் பாதகங்களையும் சந்திக்கவேண்டிய நிலை உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இரண்டிற்கும் ஏழிற்கும் அதிபதிகளான சூரியன் மற்றும் சனி தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தையும் சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும்; பதினொன்றுக்கு அதிபதியான சுக்கிர பகவானின் மகா தசையில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகும் என்றும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இரண்டிற்கும் ஏழிற்கும் அதிபதி யான செவ்வாய் தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தையும்; பதினொன்றுக்கு அதிபதியான சூரிய பகவானின் மகா தசையில் பாதகங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, இரண்டிற்கும் ஏழிற்கும் அதிபதிகளான சனி மற்றும் சந்திர தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தையும்; பதினொன்றுக்கு அதிபதியான செவ்வாய் பகவானின் மகா தசையில் பாதகங்களையும் சந்திக்கவேண்டிய நிலை உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஸ்திர லக்னங்களுக்கு மாரக- பாதகாதிபதிகள் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர லக்னங்களாகும்.

இந்த ஸ்திர லக்னங்கள் ஒவ்வொன்றுக்கும் மூன்றாம் இடமும் எட்டாம் இடமும் மாரகாதிபதிக்குரிய- அதற்கு நிகரான கண்டத்தை வழங்கிடக்கூடிய இடங்கள் என்றும்; அந்த இடத்திற்குரிய அதிபதிகள் அந்த நிலையை உண்டாக்குவார்கள் என்றும்; அதேபோல் ஒன்பதாம் இடத்தின் அதிபதி பாதகத்தை உண்டாக்கிடக் கூடிய பாதகாதிபதியாக இருப்பார் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அதன் அடிப்படையில் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றுக்கும் எட்டிற்கும் அதிபதிகளான சந்திரன் மற்றும் குரு திசை நடைபெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும், ஒன்பதாமிடத்திற்கு அதிபதியான சனிபகவானின் மகா தசையில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகும் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றுக்கும் எட்டிற்கும் அதிபதிகளான சுக்கிரன் மற்றும் குரு தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தையும் ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் பகவானின் மகா தசையில் பாதகங்களையும் சந்திக்கவேண்டிய நிலை உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறகிறது.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றுக்கும் எட்டிற்கும் அதிபதிகளான சனி மற்றும் புதன் தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தையும்; ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியான சந்திர பகவானின் மகா தசையில் பாதகங்களையும் சந்திக்கவேண்டிய நிலை உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றுக்கும் எட்டிற்கும் அதிபதிகளான செவ்வாய் மற்றும் புதன் தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தையும்; ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியான சுக்கிர பகவானின் மகா தசையில் பாதகங்களையும் சந்திக்கவேண்டிய நிலை உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

உபய லக்னங்களுக்கு மாரக- பாதகாதிபதிகள்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு உபய லக்னங்களாகும்.

இந்த உபய லக்னங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏழாம் இடமும் பதினொன்றாம் இடமும் மாரக ஸ்தானங்களாகும்.

உபய லக்னங்களுக்கு ஏழாம் அதிபதியே பாதகாதிபதியும் ஆவார்.

அதன் அடிப்படையில் மிதுன லக்னத் தில் பிறந்தவர்களுக்கு ஏழிற்கும் பதினொன் றுக்கும் அதிபதிகளான குரு மற்றும் செவ்வாய் தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும், ஏழாம் அதிபதியான குரு பகவானே இவர்களுக்குப் பாதகாதிபதியாகவும் மாறுவதால் குரு மகாதசையில் பாதகங்களை சந்திக்கவேண்டிய நிலையும் உருவாகும் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழிற்கும் பதினொன்றுக்கும் அதிபதிகளான குரு மற்றும் சந்திரன் தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தையும்; ஏழாம் அதிபதியான குரு பகவானே இவர்களுக்குப் பாதகாதிபதியாகவும் மாறுவதால் குரு மகா தசையில் பாதகங்களையும் சந்திக்கவேண்டிய நிலை உருவாகும்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழிற்கும் பதினொன்றுக்கும் அதிபதிகளான புதன் மற்றும் சுக்கிர தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தையும்; ஏழாம் அதிபதியான புதன் பகவானே இவர்களுக்குப் பாதகாதிபதியாகவும் மாறுவதால் புதன் மகா தசையில் பாதகங்களையும் சந்திக்கவேண்டிய நிலை உருவாகும்.

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழிற்கும் பதினொன்றுக்கும் அதிபதிகளான புதன் மற்றும் சனி தசை நடைபெறும் காலத்தில் கண்டத்தையும்; ஏழாம் அதிபதியான புதன் பகவானே இவர்களுக்குப் பாதகாதிபதியாகவும் மாறுவதால் புதன் மகா தசையில் பாதகங்களையும் சந்திக்கவேண்டிய நிலை உருவாகும்.

இவற்றுடன் ஒவ்வொரு லக்னத்திற் கும் அந்த லக்னத்திற்கு இரண்டாம் இடத் திற்குரியவரின் தசை நடைபெறும் காலத்தி லும் கண்டங்களை சந்திக்கவேண்டி வரும் என்ற ஒரு கருத்தும் ஜோதிட உலகில் உண்டு.

இவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதால் ஒவ்வொரு லக்னத்தினரும் அந்த அந்த தசை நடைபெறும் காலத்தில் உடல்நிலையில் எச்சரிக்கையாக இருப்பதுடன் பயணங் களிலும் கவனமாக இருக்கமுடியும்.

மாரக தசை, பாதகாதிபதி தசை என்று வருகின்றபோது மாரகம்தான் நிகழும் என்பதல்ல; அதற்கு நிகரான கண்டங்களும் உண்டாகலாம். பூர்வ ஜென்ம புண்ணியங்களின் அடிப்படையிலும் ஆயுள் காரகன், ஆயுள் ஸ்தானாதிபதிகளின் நிலைகளினாலும் மீண்டு வரலாம் என்றா லும், நாம் ஒவ்வொருவரும் நமக்குரிய மாராகாதிபதிகள் தசை, பாதகாதிபதி தசை நடைபெறும் காலத்தில் ஒவ்வொன்றிலும் மிகுந்த எச்சரிக்கையாக இருந்திடவேண்டும்.

செல்: 94443 93717